நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNSC Current Affairs 01 February 2020

TNPSC Current Affairs 01-02-2020

தமிழ்நாடு

  • தமிழக வேளாண் துறைக்கு நான்கு 'ஸ்காச்' விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு,
    • கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் களர் மற்றும் உவர் தன்மை உள்ள வளம் குன்றிய 2717 ஏக்கர் நிலப் பரப்பில் உற்பத்தி திறனை மீட்க 2016 - 17ம் ஆண்டு நில சீர்திருத்த பணிகள் 67 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டன. இதை பாராட்டி சிறந்த திட்டங்களுக்கான 'ஸ்காச்' வெள்ளி விருது வேளாண்மை பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.
    • அனைத்து மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் 10 ஆயிரம் பண்ணை குட்டைகள் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.கடந்த 2018 - 19ம் ஆண்டு முதல் இதுவரை 5800 பண்ணைக் குட்டைகள் ௧௦௦ சதவீத மானியத்தில் அமைக்கப்பட்டன.இதை பாராட்டி 'ஸ்காச்' வெள்ளி விருது வேளாண்மை பொறியியல் துறைக்கு வழங்கப்பட்டது.
    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் 30 கோடி ரூபாயில் 3000 பண்ணைக் குட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டு இதுவரை 1526 குட்டைகள்அமைக்கப்பட்டுள்ளன.இதற்காக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு 'ஸ்காச்' வெள்ளி விருது வழங்கப்பட்டது.
    • நுண்ணீர் பாசனதிட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தோட்டக்கலை துறைக்குஸ்காச் வெள்ளி விருது வழங்கப்பட்டது.
  • ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாய்வு தொடக்கம் : துாத்துக்குடி மாவட்டத்தில்  தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ளத  ஆதிச்சநல்லுாரில்,  1876ல் ஜெர்மன் நாட்டின் ஜாகோர், 1904ல் இங்கிலாந்தின் தொல்லியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் ரே ஆய்வு செய்தனர். 2004ல் இந்திய தொல்லியல் துறை அதிகாரி சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார். அங்கு முதுமக்கள் தாழிகளில் இருந்து கிடைத்த பொருட்கள் கி.மு.., ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என தெரியவந்தது.
    • தற்போது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் அண்மையில் நடந்த ஆய்வுகள் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்ததால் மீண்டும் தாமிரபரணிக்கரையில் ஆய்வு செய்யப்படும், என தமிழக அரசு அறிவித்ததன்படி 31-01-2020 அன்று தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் ஆதிச்சநல்லுாரில் களஆய்வினை துவக்கினர்.
    • இந்த ஆய்வில் தொல்லியல் துறையுடன் இணைந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக பேராசிரியர் அன்பழகன் தலைமையில் 5 பேரும், புதுச்சேரி மத்திய பல்கலை வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜன், தொல்லியல் அலுவலர்கள் பாஸ்கர், பிரபாகரன், தங்கதுரை, பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் 114 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.
  • 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள், எந்த ரேஷன் கடையிலும், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம், துாத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 1-2-2020 அன்று முதல் சோதனை முறையில்  நடைமுறைக்கு வந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வந்த மாநிலமாக, தமிழ்நாடு விளங்கியது என, 2019-2020 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா மூலம் அந்நிய செலாவணி வருவாய் பெறும் நாடுகளின் பட்டியலில், உலக அளவில், இந்தியா, 13வது இடத்திலும், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில், ஏழாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

  • 2020 - 21ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 - 6.5% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் தொழில்துறை வளர்ச்சியானது 5% ஆகவும், வேளாண் துறையின் வளர்ச்சியானது 2.8% ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2019 - 20ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருந்த நிலையில், 2020 - 21ம் நிதியாண்டில் இது 6% - 6.5% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பாக தேசிய வேலைவாய்ப்பின்மை பதிவேட்டை  காங்கிரஸ் கட்சி 30-01-2020 அன்று தொடங்கியுள்ளது.  ஜெய்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இதனை தொடங்கி வைத்தார்.
  • 2023ஆம் ஆண்டுக்குள்ளாக நாடு முழுவதும் புல்லட் ரயில் சேவையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை உள்பட 6 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளார்.
    • இதன்மூலம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழித்தடங்களில் அதிவிரைவு (300 கி.மீ. வேகம்) அல்லது மித அதிவிரைவு (160 முதல் 250 கி.மீ. வரையிலான வேகம்) புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
      • தில்லி - நொய்டா - லக்னௌ - வாராணசி (865 கி.மீ.)
      • தில்லி - ஜெய்பூர் - உதய்பூர் - ஆமதாபாத் (886 கி.மீ.)
      • மும்பை - நாசிக் - நாகபுரி (753 கி.மீ.)
      • மும்பை - புணே - ஹைதராபாத் (711 கி.மீ.)
      • சென்னை - பெங்களூரு - மைசூரு (435 கி.மீ.)
      • தில்லி - சண்டிகர் - லூதியானா - ஜலந்தர் - அமிர்தசரஸ் (459 கி.மீ.)
    • முதல்கட்டமாக மும்பை - ஆமதாபாத் இடையிலான வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் 90 சதவீதம் எளிதில் முடிவடையும் என ரயில்வேத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்பணிகள் முழுவதும் முடிவடைந்த அடுத்த 6 மாதங்களுக்குள்ளாக புல்லட் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 508 கி.மீ. பயண தூரம் 2 மணிநேரமாகக் குறையவுள்ளது. இது விமானப் போக்குவரத்துக்கு இணையான பயண நேரம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • 31-1-2020 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், திருக்குறளை மேற்கோள் காட்டி, நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிற விவசாயிகளை பாராட்டி பேசினார். அந்த திருக்குறள் வருமாறு,
‘‘உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து’’.
இந்த குறளுக்கு பொருள், ‘‘உழவுத்தொழில் செய்யாமல், பிற தொழில்களை செய்வாரைத் தாங்குவதால் உழுகின்றவர் உலகத்தார் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்’’ என்பதாகும்.
  • ஒரே நாளில் 78 ஆயிரத்து 500 பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 31-1-2020 அன்று விருப்ப ஓய்வு பெற்றனர்
  • 12 வது தெற்காசிய மாநாடு (South Asia Conference) 28-29 ஜனவரி 2020 தினங்களில் புது தில்லியில் ’அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை’ ( “Neighbourhood First” Policy: Regional Perceptions.) எனும் மையக்கருத்தில்  நடைபெற்றது.
  • நகோபா ஜாத்ரா’ (Nagoba Jatra) என்ற பெயரிலான மலைவாழ் மக்களின் பாரம்பரியத் திருவிழா தெலுங்கானாவில் 24-1-2020 அன்று கொண்டாடப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள்

  • நேபாள நாட்டிற்கான இந்தியாவின் தூதராக வினய் மோக குவாத்ரா (Shri Vinay Mohan kwatra) நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

  • ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா(57) நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கொரோனா வைரஸை’ (Coronavirus) உலக சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் 31-1-2020 அன்று அறிவித்துள்ளது.

விருதுகள்

  • டாக்டர் வி.சாந்தாராம் வாழ்நாள் சாதனையாளர் விருது 2020,  தமிழகத்தை சேர்ந்த மூத்த ஆவணப்பட இயக்குனர், டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்டது.
கூ.தக்.
  • இவர், 'சிந்துவெளி முதல் இந்திராகாந்தி வரை' என்ற பொருளில், 'ப்ரம் இண்டஸ் வால்லி டூ இந்திராகாந்தி' என்ற, நான்கு மணி நேர ஆவணப் படத்தை, 1976ல் இயக்கினார். இந்த படம், 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் கலை, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட, இந்தியர்களின் செழுமையான வாழ்வியலை சொல்வதாக அமைந்திருந்தது.

அறிவியல் தொழில்நுட்பம்

  • IMEI (International Mobile Equipment Identity) எனப்படும் 15 இலக்க , சர்வதேச மொபைல் ஃபோன்களுக்கு  அடையாள எண் வழக்கும் பொறுப்பை,  MSAI (Mobile Standard Alliance of India) எனும் தனியார் நிறுவனத்திடமிருந்து  மத்திய தொலைத் தொடர்புத் துறை  தன்வசமாக்கியுள்ளது. இனிமேல்,   IMEI  எண்ணானது,  மத்திய தொலை தொடர்புத் துறையின்  ஆராய்ச்சி  அமைப்பான    Centre for Development of Telematics (C-DOT) தயாரித்துள்ள   “Indian Counterfeited Device Restriction (ICDR)”எனும் முறைமையின் மூலம் வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுகள்

  • ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹங்கேரியைச் சோ்ந்த டிமியா பாபோஸ் பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா இணை ,   பாா்போரா (செக் குடியரசு)- ஹிஸியா (தைவான்) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முக்கிய தினங்கள்

  • கடலோர காவல்படை தினம் - பிப்ரவரி 1

புத்தகங்கள்

  • செபாஸ்டியன் அண்டு சன்ஸ்’ என்ற புத்தகத்தை இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ளார்.
  • “Calcutta Nights” எனும் புத்தகத்தின் ஆசிரியர் -  ராஜத் சவுத்ரி ( Rajat Chaudhri)

பொருளாதாரம்

  • பொருளாதார ஆய்வறிக்கை 2019-20-ன் முக்கிய அம்சங்கள் (நன்றி : nic.in)
நாடாளுமன்றத்தில் 2019-20-ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கை 2019-20-ல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை கீழே காணலாம்:
  • பொருளாதார ஆய்வறிக்கை 2019-20-ன் நோக்கம் : 'சந்தைகளை  தகுதிப்படுத்துதல் , வர்த்தகக் கொள்கைகளை மேம்படுத்தல், நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை வலிமைப்படுத்துதல் (Enable Markets, Promote 'Pro-Business' Policies and Strengthen 'Trust' in the Economy)
  • 2014-18 காலகட்டத்தில் அமைப்புசார்ந்த புதிய நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதம் என்பது 2%-ஆக உள்ளது. இது 2006-2014 காலகட்டத்தில் 3.8%-ஆக இருந்தது.
  • 2018-ம் ஆண்டில் 24 லட்சம் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டில் 70,000-மாக இருந்த நிலையில், 80% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • மாவட்ட அளவில் புதிய நிறுவனங்களின் பதிவு 10% அதிகரித்திருப்பதன் மூலம், மாவட்ட ஒட்டுமொத்த உற்பத்தியை 8% அளவுக்கு அதிகரித்துள்ளது.
  • சீனாவைப் போன்ற, தொழிலாளர் அடிப்படையிலான, ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு ஏராளமான வாய்ப்புகளை இந்தியா பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில், “உலகுக்காக இந்தியாவில் தொகுத்து வழங்குவோம்” என்ற திட்டத்தை இணைப்பதன் மூலம், இந்தியாவால்:
    • ஏற்றுமதி சந்தை மதிப்பை 2025-ம் ஆண்டில் 5%-ஆகவும், 2030-ம் ஆண்டில் 6%-ஆகவும் அதிகரிக்க முடியும்.
    • நல்ல ஊதியத்துடன் கூடிய 4 கோடி வேலைவாய்ப்புகளை 2025-ம் ஆண்டிலும், 8 கோடி வேலைவாய்ப்புகளை 2030-ம் ஆண்டிலும் ஏற்படுத்த முடியும்.
  • 2025-ம் ஆண்டில் இந்தியாவை 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இந்தியாவின் முயற்சியில், இணைய மென்பொருட்களின் ஏற்றுமதியானது நான்கில் ஒரு பங்கு மதிப்பை அளிக்கும்.
  • இறக்குமதியைப் பொருத்தவரை, உற்பத்தி துறை பொருட்கள் அளவு 7% அதிகரித்துள்ளது மற்றும் ஒட்டுமொத்த வர்த்தகம் 8.6% அதிகரித்துள்ளது.
  • எளிதாக தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த உலக வங்கியின் தரவரிசையில், 2014-ம் ஆண்டில் 142—வது இடத்தில் இருந்த இந்தியா, 2019-ம் ஆண்டில் 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், 79 இடங்கள் முன்னேற்றம் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் கப்பல்கள் பயணம் மேற்கொள்ளும் கால அளவு, கடந்த 2010-11-ம் ஆண்டில் 67 நாட்களாக இருந்தது. இது 2018-19ம் ஆண்டில் பாதியாக குறைந்து 2.48 நாட்களாக மாறியது.
  • 2019-ம் ஆண்டில், பொதுத்துறை வங்கிகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூபாய் முதலீட்டுக்கும் 23 காசுகள் இழப்பு ஏற்பட்டது. அதுவே, தனியார் வங்கிகளைப் பொருத்தவரை, 9.6 காசுகள் லாபம் பெற்றன.
  • 2015-16 முதல் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம்.
    • விலை குறைந்ததால், சைவ உணவு சாப்பிடும் ஒவ்வொரு குடும்பத்தினரும், சராசரியாக ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000ஐ சேமித்துள்ளனர்.
    • அதே காலகட்டத்தில், அசைவ உணவு சாப்பிடுவோர் சராசரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.12,000-ஐ சேமித்துள்ளனர்.
  • 2006-07 முதல் 2019-20 வரை:
    • சைவ உணவுப் பொருட்கள் கிடைக்கும் திறன் 29% அதிகரித்துள்ளது.
    • அசைவ உணவுப் பொருட்கள் கிடைக்கும் திறன் 18% அதிகரித்துள்ளது.
  • 2019-20-ல் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடு
    • 2019-20-ம் நிதியாண்டின் முதலாவது பாதியில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8%-ஆக இருந்தது. சர்வதேச அளவிலான உற்பத்தி, வர்த்தகம், தேவை ஆகியவை குறைந்தபோதும் இந்தியா வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
    • உண்மையான நுகர்வு வளர்ச்சி, 2019-20-ன் இரண்டாவது காலாண்டில் மீட்டெடுக்கப்பட்டது. அரசின் முயற்சியால் இது ஊக்குவிக்கப்பட்டது.
    • 20180-19ம் நிதியாண்டின் இரண்டாவது பாதி காலத்தைவிட, 2019-20ம் நிதியாண்டின் முதல் பாதியில் வேளாண்மை மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகள், பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் பிற சேவைகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.
    • 2018-19-ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%-ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2019-20-ம் நிதியாண்டின் முதல் பாதியில் 1.5%-ஆக குறைந்தது.
    • சிஎஸ்ஏ-வின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2019-20-ல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    • 2020-21-ல் பொருளாதாரம் வலுவான நிலையில் மீண்டெழுவதற்காக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிவேகமாக செயல்படுத்தப்படும்.
  • பட்டுவாடாக்கள் நிலுவை (BoP):
    • இந்தியாவின் BoP நிலைமை 2019 மார்ச் இறுதியில் அன்னியச் செலாவணி கையிருப்பு 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் இருந்து, 2019 செப்டம்பர் இறுதியில் 433.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.
    • (CAD) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 2018-19ல் 1 சதவீதத்தில் இருந்து, 2019-20 முதலாவது அரையாண்டில் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
    • 2020 ஜனவரி 10 ஆம் தேதி நிலவரப்படி அன்னியச் செலாவணி கையிருப்பு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • உலக வர்த்தகம்:
    • 2019ல் உலகளவில் 9 சதவீத வளர்ச்சி காண்பது என உத்தேசிக்கப்பட்ட நிலையில், 2017ல் அது உச்சபட்சமாக 5.7 சதவீதத்தை எட்டியதற்குப் பிறகு, உலக வர்த்தகம் 1.0 சதவீதம் வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் உலக பொருளாதார செயல்பாடுகள் மீட்சி பெறும் போது 2020ல் இது 2.9 சதவீதம் அளவுக்கு மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இந்தியாவின் பொருள் வணிக வர்த்தகம் 2009-14 முதல் 2014-19 வரையில் மேம்பட்டிருக்கிறது. 2016-17ல் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்த பின்னணியில், இதன் பிற்பாதி காலகட்டத்தில் வணிகம் உயர்ந்துள்ளது.
    • அமெரிக்கா, சீனா, ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் இந்தியாவின் முதல் ஐந்து வர்த்தக பங்காளர் நாடுகளாக தொடர்கின்றன.
  • ஏற்றுமதிகள்:
    • அதிகம் ஏற்றுமதியாகும் பொருள்கள்: பெட்ரோலியப் பொருட்கள், விலைமதிப்புமிக்க கற்கள், ரசாயன மருந்து கூட்டு பொருள்கள் & உயிரியல் சார்ந்த பொருள்கள், தங்கம் மற்றும் இதர விலைமதிப்புள்ள உலோகங்கள்.
    • 2019-20 (ஏப்ரல் - நவம்பர்) -ல் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகள்: அமெரிக்கா, அதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம், சீனா மற்றும் ஹாங்காங்.
    • பொருள் வணிக ஏற்றுமதி, ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இது BoP நிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • அதிகம் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்: கச்சா எண்ணெய், தங்கம், பெட்ரோலியப் பொருள்கள், நிலக்கரி, கற்கரி & எரிபொருள் கட்டிகள்.
    • சீனாவில் இருந்து அதிகபட்ச அளவுக்கு பொருள்களை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதற்கடுத்தபடியாக அமெரிக்கா, ஐக்கிய அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
  • வர்த்தக ஊக்குவிப்பு விஷயத்தில், 2016ல் 143வது இடத்தில் இருந்த இந்தியா, 2019ல் 68வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தொழில் செய்வதற்கு உகந்த நாடு என உலக வங்கி கண்காணிப்பில் தயாரிக்கப்படும் ``எல்லைகளுக்கு அப்பால் வர்த்தகம்'' என்ற குறியீட்டில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • உலக வங்கியின் சேமிப்புக் கிடங்கு செயல்பாட்டு குறியீட்டின்படி, உலக அளவில் இந்தியா 2018ல் 44வது இடத்தில் இருந்தது. 2014ல் 54 வது இடத்தில் இருந்து, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகையின் அளவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2019-20ல் முதல் அரையாண்டு காலத்தில் இந்த வகையில் இந்தியாவுக்கு 4 பில்லியன் டாலர் அளவுக்கு பணம் வந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகம்.
  • வெளிநாட்டுக் கடன்:
    • 2019 செப்டம்பர் இறுதி நிலவரப்படி ஜிடிபியில் 1 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில் நீடிக்கிறது.
  • கடன் வளர்ச்சி:
    • வங்கிக் கடன் வளர்ச்சி (முந்தைய ஆண்டுடன் ஒப்பீட்டளவில்) 2019 ஏப்ரலில் 9 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2019 டிசம்பர் 20 ஆம் தேதி நிலவரப்படி 7.1 சதவீதமாகக் குறைந்தது.
  • விலைகள் மற்றும் பணவீக்கம் (Prices and Inflation)
    • நுகர்வோர் விலை குறியீட்டெண் (சி.பி.ஐ.) பணவீக்கம் 2018-19ல் (2018 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 7 சதவீதம் என்பதில் இருந்து 2019-20ல் (2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை)  4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    • மொத்த விலைக் குறியீட்டெண் 2018-19ல் (2018 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) 7 சதவீதத்தில் இருந்து 2019-20ல் (2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை)  1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • வேளாண்மை மற்றும் உணவு மேலாண்மை(Agriculture and Food Management)
    • இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தொகையினர் வேலைவாய்ப்புகளுக்கு மற்ற துறைகளைவிட வேளாண்மைத் துறையை அதிகம் சார்ந்துள்ளனர்.
    • நாட்டில் ஒட்டுமொத்த மதிப்பு கூட்டுதலில் (ஜி.வி.ஏ.) வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளின் பங்களிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. வேளாண்மை அல்லாத துறைகளின் வளர்ச்சி அதிகரிப்பால் இவ்வாறு நடக்கிறது.
    • 2019-20 ஆம் ஆண்டுக்கு அடிப்படை விலைகளில் `வேளாண்மை, வனம் மற்றும் மீன்பிடி தொழில்' மூலமான ஜி.வி.ஏ. அளவு 8 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • இயந்திரமயமாக்கல் குறைவாக உள்ளதால் வேளாண் உற்பத்தியும் குறைந்துள்ளது. இந்தியாவில் இயந்திரமயமாக்கல் 40 சதவீத அளவில் உள்ளது. சீனா (5%), பிரேசில் (75%) ஆகியவற்றைவிட இது மிகவும் குறைவாக உள்ளது.
    • கால்நடை பராமரிப்புத் துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 9 சதவீத அளவில் வளர்ந்து வருகிறது.
  • தொழில் துறை மற்றும் கட்டமைப்பு வசதிகள்
    • தொழில் உற்பத்தி குறியீட்டின்படி, தொழில் துறை 2019-20-ல் (ஏப்ரல் - நவம்பர்) 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2018-19 (ஏப்ரல் - நவம்பர்) ல் இது 5.0 சதவீதமாக இருந்தது.
    • 2019-20ல் (ஏப்ரல் - நவம்பர்) உரங்கள் துறை 0 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2018-19ல் (ஏப்ரல் - நவம்பர்)  இது மைனஸ் 1.3 சதவீதமாக இருந்தது.
    • ஸ்டீல் உற்பத்தித் துறை 2019-20ல் (ஏப்ரல் - நவம்பர்) 2 சதவீதம் வளர்ந்துள்ளது. 2018-19ல் (ஏப்ரல் - நவம்பர்) அது 3.6 சதவீதமாக இருந்தது.
    • ஒட்டுமொத்த தொலைபேசி இணைப்புகள் எண்ணிக்கை 2019 செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 43 கோடியாக இருந்தது.
    • மின் உற்பத்தி நிறுவு திறன் அளவு 2019 மார்ச் 31ல் 3,56,100 மெகாவாட் என்ற நிலையில் இருந்து, 2019 அக்டோபர் 31ல் 3,64,960 மெகாவாட்டாக உயர்ந்தது.
    • 12.2019ல் வெளியிடப்பட்ட தேசிய கட்டமைப்பு உருவாக்கல் பணிக் குழு அறிக்கையின்படி 2020 முதல் 2025 நிதியாண்டு வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.102 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • சேவைகள் துறை(Services Sector)
    • பொருளாதார மற்றும் ஜி.வி.ஏ. வளர்ச்சியில் சுமார் 55 சதவீதம்
    • இந்தியாவுக்கு வரும் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மூன்றில் இரண்டு பங்கு.
    • மொத்த ஏற்றுமதியில் சுமார் 38 சதவீதம்
    • மொத்தம் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக.
    • ஜி.வி.ஏ. வளர்ச்சி அளவு 2019-20ல் மிதமாக இருந்தது. விமான பயணிகள் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்து, வங்கிக் கடன் போன்ற முக்கிய துறைகளின் செயல்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டது.
    • நம்பிக்கை தரும் வகையில், 2019-20ல் ஆரம்பத்தில் சேவைகள் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு மீட்சி பெறத் தொடங்கியது.
  • சமூக கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் மனிதவள மேம்பாடு( Social Infrastructure, Employment and Human Development)
    • சமூக சேவைகள் (சுகாதாரம், கல்வி மற்றும் பிற துறைகள்) வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவு ஜிடிபியுடன் ஒப்பீட்டளவில் 2014-15ல் 2 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2019-20ல் (BE) 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    • 34 சதவீதம் என்ற வருடாந்திர மனிதவள வளர்ச்சி நிலையில், மனிதவளம் வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
    • நடுநிலை, உயர்நிலை மற்றும் கல்லூரிக் கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
    • சம்பளப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை 2011-12ல் 18 சதவீதத்தில் இருந்து 2017-18ல் 23 சதவீதம் என்ற நிலையை அடைந்து 5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
    • குறிப்பிடத்தக்க வகையில் 62 கோடி புதிய வேலை வாய்ப்புகள், கிராமப் பகுதிகளில் 1.21 கோடியும், நகர்ப்புறங்களில் 1.39 கோடியும், உருவாகியுள்ளன.
    • பொருளாதாரத்தில் அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு 2011-12ல் 8 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2017-18ல் 98 சதவீதம் என்று வளர்ச்சி அடைந்துள்ளது.

-------------------------------------------------------------------------
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!