நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பிரதம மந்திரி பாரதீய மக்கள் மருந்தக திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP))

பிரதம மந்திரி  பாரதீய மக்கள் மருந்தக  திட்டம்   (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP)) பற்றி :   

  • பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள  மக்களுக்கு  தரமான மருந்துகளை மிகக் குறைந்த விலையில் வழங்குவதற்காக, நவம்பர் 2008 ல் மத்திய வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தினால்  ’மக்கள் மருந்தக திட்டம்’ ('Jan Aushadhi Scheme' ) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.   
  • முதலாவது  ’மக்கள் மருந்தகம்’ ('Jan Aushadhi' )   அமிர்தசரஸ் (Amritsar) பொது மருத்துவமனையில் 25-11-2008 அன்று தொடங்கப்பட்டது. 
  • இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக,  மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் இந்திய பொதுத்துறை  நிறுவங்களின் கூட்டமைப்பு (Bureau of Pharma PSUs of India (BPPI))  ஒன்று  மத்திய மருந்துப்பொருட்கள் துறையினால் (Department of Pharmaceuticals) டிசம்பர் 2008 ல் அமைக்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டில்  ஒரு சொசைட்டியாக  பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 2015 ல் ’மக்கள் மருந்தக திட்டம்’ ('Jan Aushadhi Scheme' ) , ‘பிரதம மந்திரி  மக்கள் மருந்தக  திட்டம்’ (Pradhan Mantri Jan Aushadhi Yojana) என மாற்றியமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இந்த திட்டமானது , மேலும் மேம்படுத்தப்பட்டு, பிரதம மந்திரி  பாரதீய மக்கள் மருந்தக  திட்டம்   (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP)) எனப்பெயரிடப்பட்டது.  இந்த திட்டத்தின்  மூலம், மக்களுக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. “நாடு முழுவதும் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளின் விலை, சந்தை விலையைவிட 50% முதல் 90% வரை குறைவாக  உள்ளது. 
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!