ஆதாரம் : pib.nic.in/
கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை மறுகட்டமைப்பு செய்ய ரூ.20 இலட்சம் கோடியில் (இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இணையான வகையில்) சுயசார்பு பாரதம் திட்டம் (ஆத்ம நிர்பார் பாரத் அபியான் ) (“Atmanirbhar Bharat Abhiyaan” / self-reliant India Movement)) என்ற பெயரில் விரிவான தொலை நோக்கு திட்டத்தை பிரதமர் மோடி 12-05-2020 அன்று அறிவித்தார். தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான ஐந்து தூண்களாக பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான நிர்வாகம், துடிப்புள்ள ஜனநாயகம் மற்றும் தேவைகள் ஆகியவற்றை பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியா தற்சார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் இந்த திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் வருமாறு.
பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தின் கீழ் நிவாரணங்கள்
- கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஏழைகளுக்கு உதவுவதற்கு பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா திட்டதீதின் கழ் ரூ.1.70 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டத் தொகுப்பு .
- சுகாதாரப் பணியாளருக்கு தலா ரூ.50 லட்சத்துக்குக் காப்பீட்டு வசதி.
- அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு நபருக்கு. கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்குவதால் 80 கோடி ஏழை மக்களுக்குப் பயன்.
- ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் ஒரு கிலோ வீதம் அடுத்த 3 மாதங்களுக்கு பருப்பு வகைகள் இலவசம்.
- வங்கிகளில் ஐன் தன் கணக்கு வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு . 3 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500 கிடைக்கும்.
- 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள்.
- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் ஒரு நாள் ஊதியம் ரூ./82-இல் இருநீது ரூ.202 ஆக உயரத்தப்பட்டதால் /3.62 கோடி குடும்பங்களுக்குப் பயன்.
- ஏழைகள், மூத்த குடிமக்கள் ஏழை விதவையர் மற்றும் ஏழை மாற்றுத் திறனாளிகள் கோடி பேருக்கு கருணைத் தொகை ரூ.1000.
- இப்போது அமலில் உள்ள பிரதமரின் கிசான் திட்டத்தின் &ழ் 8.7 கோடி விவசாயிகளுக்கு தவணைத் தொகை ரூ.2,000 முன்கூட்டியே வழங்கப்பட்டது.
- கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நல நிதியை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
- 100 தொழிலாளர்களுக்கும் கீழ் உள்ள தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ./5000-கீகும் கழ் ஊதியம் பெறுவோருக்கு அடுத்த 3 மாதங்களுகீகான வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளில் சம்பளத்தில் 24சதவீதம் செலுத்தப்பட்டது.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டததில் பதிவு செய்துள்ள 53 கோடி தொழிலாளர்கள்கதிரும்பி செலுத்தும் கட்டாயம் இல்லாமல் தங்கள் பங்களிப்பில் 75சதவீதம் அல்லது 3 மாத ஊதியத்தை, இதில் எது குறைவோ அந்தத் தொகையை தங்கள் கணகீகில் இருநீது எடுதீதுக் கொள்ள அனுமதி.
- 85 கோடி குடும்பங்களுக்கு உதவிகள் அளித்து வரும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிணைத் தொகை இல்லாமல் கடன் வழங்குவதற்கான வரம்பு ரூ.10 லட்சதீதில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.
- மருத்துவப் பரிசோதனை, மேலோட்டமான பரிசோதனை போன்ற செயல்பாடுகளுக்கு உதவிகரமான செயல்களுக்கு மாவட்ட கனிம நிதியைப் (District Mineral Fund) பயன்படுத்தத் திட்டம்.
- கோவிட்டுக்குப் பிந்தைய விவசாயிகள் & ஊரகப் பொருளாதாரத்துக்கு நேரடி உதவி
- ரூ.4.22 லட்சம் கோடி வேளாண்மைக கடன் கொண்டுள்ள3 கோடி விவசாயிகளுக்கு, கடனைத் திருப்பிச் செலுத்தும் அவகாசம் 3 மாதங்கள் நீட்டிப்பு.
- மார்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன்களை உரிய காலத்தில் செலுத்துவதற்கான ஊக்கத் தொகை மற்றும் வட்டி தள்ளுபடி சலுகைகள் 31 மே 2020 வரையில் நீட்டிப்பு.
- 25,000 கோடி கடன் வரம்புடன் 25 லட்சம் புதிய விவசாயிகள் கடன் அட்டைகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
- 1-3-2020 முதல் 30.04.2020 வரையில் வேளாண்மைக்கு ரூ.86,600 கோடிக்கு 6.3 இலட்சம் கடன்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
- . கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகளுக்கு மார்ச் 2020-இல் தேசிய வேளாண்மை மறறும் ஊரக வளர்சசி வங்கி (நபார்டு வங்கி) ரூ.29,500 கோடி மறுநிதியளிப்பு செய்துள்ளது.
- ஊரக கட்டமைப்பு வசதிகளுக்காக மார்ச் 2020-இல் மாநிலங்களுக்கு ஊரக கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.4,200 கோடி உதவி.
- வேளாண் விளை பொருள்கள் கொள்முதலுக்கு மார்ச் 2020இல் இருந்து மாநில அரசு நிறுவனங்களுக்கு ரூ.6,700 கோடி நடைமுறை மூலதன வரம்புக்கு அனுமதி.
புலம் பெயர்ந்தவர்கள் மறறும் நகரப்புற ஏழைகள்
- புலம் பெயரந்தவர்களுக்குத் தங்குமிடம் ஏற்படுத்துதல் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்டவை வழங்குவதற்கு, மாநில பேரழிவு நிவாரண நிதியை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
- மாநில பேரழிவு நிவாரண நிதித் தொகுப்பில் நிதியை அதிகரிப்பதற்காக தனது பங்களிப்பு ரூ.1002 கோடியை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியது.
- புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் எந்த மூலையிலும் இருக்கும் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பண்டங்களை வாங்குவதற்கு வசதியாக அடுத்த ஆண்டு (2021) மார்ச் முதல் அமலுக்கு வரும் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தொழில்நுட்ப முறையை உருவாக்குதல்.நாடு முழுதும் ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குக் குடிபெயர்வோர் குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களைப் பெற இது உதவும்.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய வாடகை வீட்டுவசதிக் குடியிருப்புகள் திட்டம் தொடங்கப்படும்.புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள் ஆகியோர் கட்டுப்படியாகக் கூடிய வாடகையில் வசிப்பதற்கு மத்திய அரசு திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், மாணவர்கள் ஆகியோருக்குக் கட்டுப்படியாகும் வாடகை வீட்டுக்குடியிருப்பு வளாகங்கள் அளிக்கப்படும். அது அவர்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமூகப் பாதுகாப்பையும் அளிக்கும். இது தொடர்பான விரிவான விளக்கம் கொண்ட விவரத்தை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும்.
- நகர்ப்புற வீடற்றவர்களுக்கான முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு தினமும் 3 வேளை உணவு சுகாதார முறைப்படி முடகீகநிலை காலத்தில் மார்ச் 26 2020 முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- 12,000 சுய உதவிக் குழுக்கள்3 கோடி முககீ்கவச உறைகள் மற்றும் 1.20 லட்சம் லிட்டர்
- கிருமிநாசினி தயாரித்துள்ளன. இதனால் நகர்ப்புற ஏழைகளுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது.
- சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி முன்னோட்ட அடிப்படையில் குஜராதீதில் ஏப்ரல் 2020-இல் PAiSA முனையம் மூலம் செலுத்தப்பட்டது. இப்போது மே 2020ல் அனைத்து மாநிலங்களுக்கும் அந்த நடைமுறை பின்பற்றப் படுகிறது.
- 15 மார்ச் 2020-ல் இருநது நகர்ப்புற ஏழைகளுக்கு 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
- திரும்பி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் உதவி வழங்கும் வகையில், 13 மே2020 வரையில் 14.62 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கம். இதுவரையில் சுமார் ரூ. 10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் வழங்கிய ஊதியம் ரூ.182இல் இருந்து ரூ.202 ஆக உயர்வு.
- திரும்பிவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் பெயர்களைப் பதிவு செய்ய நடவடிக்கை.
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு வேலைகள் வழங்க மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்.
- மழைக்காலத்திலும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகளைத் தொடரத் திட்டம்: தோட்ட வேலைகள், தோட்டக் கலைத் துறை வேலைகள், கால்நடைகளுக்கான கூடங்கள் அமைக்கும் பணிகள்
- மாநிலங்களுக்கு இடையிலான புலம் பெயர்ந்த தொழிலாளருக்கான வரையறை மாற்றம்.
- ஒப்பந்ததாரர் மூலம் வேலை பார்த்த புலம் பெயர்நீத தொழிலாளர்களுடன் வேறு இடத்தில் நேரடியாக வேலை பார்த்தவர்கள் அங்கிருநீது நேரடியாக வநீத தொழிலாளர்களும் இதில் சேர்க்கப்படுவார்கள்.
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் நலத் திட்ட உதவிகளைப் பெறும் வசதி.
- அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் மாநில ஈட்டுறுதித் திட்டம் (ஈ.எஸ்.ஐ. திட்டம்) அமலாக்கம். 10 அல்லது அதற்கும் மேற்பட்ட அலுவலர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இது அமல் செய்யப்படும். அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்கள்/ பகுதிகளுக்கு மட்டும் என இருநீத நிலை மாறும். 10க்கு.ம் குறைவானவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் விருப்ப அடிப்படையில் தொழிலாளர்
- மாநில ஈட்டுறுதித் திட்டம் (ஈ. எஸ்.ஐ. திட்டம்) விரிவாக்கம். 10க்கும் குறைவான தொழிலாளர்கள் இருந்தாலும் ஆபத்தான பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் மத்திய அரசின் அறிவிக்கை மூலம் கட்டாயமாக தொழிலாளர் மாநில ஈட்டுறுதித் திட்டம் (ஈ.எஸ்.ஐ. திட்டம்) அமல்.
- ஒப்பந்த அடிப்படையில் நேரடியாகப் பணிபுரிவோர் மறறும் இணையவழி மூலம்
- பணிபுரிவோருக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம்
- ஆட்குறைப்புக்கு ஆளான தொழிலாளர்களுக்கு மறு-திறன் வளர்ப்பு நிதி அறிமுகம்
- அனைத்துப் பணிகளிலும் மகளிருக்கு அனுமதி, உரிய பாதுகாப்புடன் இரவு ஷிப்டுகளிலும் பணிபுரிய அனுமதி.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு நிதிக்கு ஏற்பாடு.
- நிர்ணயித்த காலப் பணிக்கு பணிக்கொடை - 5 ஆண்டு பணி செய்திருக்க வேண்டும் என்ற விதி ஓராண்டு பூர்த்தி என மாற்றுவதற்குத் திட்டம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
- சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ 3 லட்சம் கோடி அவசர பணி மூலதன வசதி.
- அழுத்தத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ 20,000 கோடி துணைக் கடன்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிதியத்தின் நிதி மூலம் ரூ 50,000 கோடி பங்கு உட்செலுத்துதல்.
- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய விளக்கம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதர நடவடிக்கைகள்.
- ரூ 200 கோடி வரையிலான அரசு ஏலங்களுக்கு சர்வதேச ஏலங்கள் நடத்தப்பட மாட்டாது.
- ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு 2020 ஆகிய அடுத்த 3 மாதங்களுக்கு தொழில்கள் மற்றும் அமைப்பு சார்ந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ஆதரவு நீட்டிப்பு.
- வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்துள்ள அனைத்து நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிப் பங்களிப்பு.
- வங்கி சார நிதி நிறுவனங்கள்/வீட்டுக் கடன் நிறுவனங்கள்/சிறு கடன் நிறுவனங்களுக்கு ரூ 30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம்.
- வங்கி சார நிதி நிறுவனங்கள்/ சிறு கடன் நிறுவனங்களின் கடன்களுக்கு ரு 45,000 கோடி பகுதி கடன் உத்தரவாதத் திட்டம் 2.0.
- மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ 90,000 கோடி நிதி உட்செலுத்துதல்.
- பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் (EPC) மற்றும் சலுகை ஒப்பந்தங்கள் உள்ளிட்ட ஒப்பந்தப் பொறுப்புகளை முடிக்க ஆறு மாதங்கள் வரை கால நீட்டிப்பு வழங்கி ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம்.
- ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிவராணம்- பதிவு செய்த அனைத்துத் திட்டங்களுக்கும் பதிவு மற்றும் பணி முடிப்புத் தேதி ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு.
- தொழில்களுக்கு வரி நிவாரணம்- தொண்டு நிறுவனங்கள், பெரு நிறுவனம் அல்லாத தொழில்கள் மற்றும் இதர தொழில்களுக்கு நிலுவையில் உள்ள வருமான வரி திரும்ப செலுத்த வேண்டியத் தொகை உடனடியாக வழங்கப்படும்.
- 2020-21 நிதி ஆண்டின் மிச்சமுள்ள காலகட்டத்துக்கு TDS மற்றும் TCS ஆகிய வரி பிடித்த விகிதங்களில் 25% குறைப்பு.
- வரி தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு காலக்கெடு நீட்டிப்பு.
- சிசு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்களுக்கு 12 மாதத்துக்கு 2 சதவீத வட்டி குறைக்கப்படும். இதன் மூலம் ரூ. 1,500 கோடி அளவுக்குப் பலன் கிடைக்கும்.
- முத்ரா சிசு திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்கள் தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்தியவர்களின் கடனுக்கான வட்டியில் 12 மாதங்களுக்கு 2 சதவீதம் சலுகை தரப்படும். இது ரூ. 50 ஆயிரத்துக்கும் கீழே கடன் பெற்றவர்களுக்குக் கிடைக்கும். முத்ரா சிசு கடனுதவி மொத்தம் ரூ. 1.62 லட்சம் கோடி அளவுக்கு அளிக்கபடுகிறது. இந்த வட்டிச் சலுகை மூலம் மொத்தம் ரூ. 1,500 கோடி அளவுக்கு சலுகை கிடைக்கும்.
- தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 5000 கோடி கடனுதவி. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பகட்ட மூலதனமாக ரூ. 10 ஆயிரம் கடனுதவி தரப்படும். இதன் மூலம் நாட்டில் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மொத்தம் ரூ. 5000 கோடி கடனுதவி அளிக்கப்படும்.
- வீட்டுவசதித் துறை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் மேம்பாட்டுக்காக ரூ. 70,000 கோடி ஒதுக்கப்படும். இது பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் (PMAY-Urban) நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு (MIG) வழங்கப்படும் கடனுதவித் திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படும்.இத்திட்டத்தின் மூலம் 2020-21ஆம் ஆண்டில் இரண்டரை லட்சம் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலனடைவர். இதன் மூலம் வீட்டுவசதித் துறையில் ரூ. 70 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படும்.
- காடு வளர்ப்பு இழப்பீட்டு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையகத்தின் (CAMPA) நிதியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ. 6,000 கோடி.காடு வளர்ப்புக்கான இழப்பீட்டு மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையகத்தின் (CAMPA) கீழ் ரூ. 6000 கோடி நிதி காடுகளை வளர்ப்பது, நகர்ப்புறம் உள்பட தோட்டத் தொழில்கள், செயற்கை மற்றும் இயற்கை மீளுருவாக்கம் (Artificial regeneration, assisted natural regeneration), வன மேலாண்மை (Forest management), மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்புப் பணிகள் (soil & moisture conservation works), வனப் பாதுகாப்பு (Forest protection), வன மற்றும் வனவிலங்கு தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடு (forest and wildlife related infrastructure development), வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை (wildlife protection and management) ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும்.மத்திய அரசு இத்திட்டங்களுக்காக உடனடியாக ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யும். இது நகர்ப்புறங்கள், புறநகர்ப்புறங்கள், கிராமப்புறங்களிலும் பழங்குடியினர் பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
- விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலமாக ரூ.30,000 கோடி கூடுதல் அவசர பணி மூலதனம் (Additional Emergency Working Capital) வழங்கப்படும்.இது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான சிறிய, நடுத்தர விவசாயிகள் உள்பட 3 கோடி விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். ராபி பருவம் நிறைவடைந்த வேளாண் பணிகளுக்கும், நடப்பு காரீப் பருவத்தின் தேவைகளுக்கும் உதவும்.
- கிசான் கடனுதவித் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் கோடி கடனுதவி. இதன் மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்குப் பலன்.மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பிரிவினருக்கும் மொத்தம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்குக் கடனுதவி அளிக்கப்படும். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள இரண்டரை கோடி விவசாயிகள் பலன் பெறுவர்.
விவசாயம், மீன்வளம் உணவுப் பதனிடுதல்
- 2 லட்சம் நுண் உணவு நிறுவனங்கள் என்ற இலக்கினை அடைய ரூ.10,000 கோடியில் திட்டம்செயல்படுத்தப்படும்.
- பிரதமரின் மத்சய சம்பட யோஜ்னா மூலம் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி உதவி. இதில், கடல்வளம், உள்நாட்டு மீன்வளங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புச்
செயல்பாடுகளுக்கு ரூ.11,000 கோடி மற்றும் கட்டமைப்புகளுக்கு ரூ.9000 கோடி (மீன்பிடித் துறைமுகங்கள், குளிர்ப்பதன வசதி, மார்க்கெட்கள் போன்றவை) செலவிடப்படும். இத்திட்டத்தின் நோக்கம், 5 ஆண்டு காலத்தில் 70 லட்சம் டன்கள் கூடுதல் மீன் உற்பத்தி நிலையை எட்டுதல் மற்றும் 55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு: ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி ரூ.1,00,000 கோடியை எட்டுதலாகும்.
- 15000 கோடி ரூபாய் செலவில் கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும்.
- மூலிகை சாகுபடி மேம்பாட்டிற்காக ரூ.4,00 கோடி : அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4,000 கோடி மதிப்பில் 10,00,000 ஹெக்டேர் பரப்பு மூலிகை சாகுபடியின் கீழ் கொண்டுவரப்படும். இதன்மூலம், விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடி வருமான உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். கங்கை நதி கரை ஓரத்தில் மருத்துவ தாவரங்கள் வளாகச் சாலை உருவாக்க, தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் 800 ஹெக்டேர் நிலம் அளிக்கும்.
- தேனீ வளர்ப்புக்கான முயற்சிகள் - ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தேனீ வளர்க்கும் 2 லட்சம் பேரின் வருமானம் அதிகரிக்கவும், நுகர்வோருக்குத் தரமான தேன் கிடைக்கவும் உதவியாக இருக்கும்.
- தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடிக்கு ரூ 500 கோடி. நிதியுதவி.
- அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955 ல் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
- ரபி பருவ அறுவடைக்கு பிந்தைய மற்றூம் கரிப் பருவ செலவுகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக ஊரகக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளுக்கு கூடுதல் அவசர கால பணி மூலதன வசதியாக ரூ 30,000 கோடி நபார்ட் மூலம் வழங்கப்படும்.
- திட்டமிட்ட முறையில் வேளாண் துறையை வலுப்படுத்த 2.5 கோடி உழவர்களுக்கு ரூ 2 லட்சம் கோடி கடன் ஊக்கம். இது பிரதமரின் விவசாயத் திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் டிசம்பருக்குள் வழங்கப்படும்.
- மேலும், 2020-21ஆம் ஆண்டில் பால் கூட்டுறவுகளுக்கு வருடத்துக்கு இரண்டு சதவீதம் அளவில் வட்டித் தள்ளுபடி வழங்க புதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முறையான திரும்ப செலுத்துதல்/வட்டிக் கட்டுதலுக்கு கூடுதல் இரண்டு சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
- இரண்டு கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், ரூ 5000 கோடி கூடுதல் பணப்புழக்கத்தை இந்தத் திட்டம் உருவாக்கும்.
- மீன் வளத்துறைக்காக மார்ச் 24 அன்று செய்யப்பட்ட 4 கோவிட் தொடர்பான அறிவிப்புகளும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. மேலும், மார்ச் 31 ம் தேதி அன்றுடன் பதிவுக்காலம் முதிர்வடைந்த, பதிவு செய்யப்பட்ட 242 இறால் பண்ணைகள் மற்றும் நவுப்லி ஓடுடைய நீர்வாழ் உயிரினக் குஞ்சுகள் வளர்ப்புப் பண்ணைகள் பதிவைப் புதுப்பிக்க கால அவகாசம் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. கடல்வாழ் உயிரன மீன் வளங்கள் மற்றும் மீன் வளச் செயல்பாடுகள் உள்நாட்டு மீன் வகைக்களுக்கும் பொருந்தும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளன.
- விவசாயிகளுக்கான பண்ணை-வாயில் உள்கட்டமைப்புக்காக ரூ ஒரு லட்சம் கோடி வேளாண் உள்கட்டமைப்பு நிதி பண்ணை - வாயில் ஒருங்கிணைக்கும் இடங்களில் (ஆரம்ப வேளண் கூட்டுறவு சங்கங்கள், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளான் தொழில் முனைவோர், புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இன்னும் பல) வேளாண் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்காக ரூ 1,00,000 கோடி கடன் வசதி. பண்ணை-வாயில் ஒருங்கிணைக்கும் இடங்கள், கட்டுபடியாகும் மற்றும் நிதி ரீதியாக சாத்தியமாகக்கூடிய அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உத்வேகம். உடனடியாக நிதியம் உருவாக்கப்படும்.
- குறு உணவு நிறுவனங்களை முறைப்படுத்த ரூ 10,000 கோடித் திட்டம்'உள்நாட்டின் உலகளாவிய வீச்சுக்கு ஆதரவு' என்னும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கொள்கையை ஊக்குவிக்க, தர நிர்ணயங்களை அடைவதற்கும், வர்த்தக குறியீட்டை கட்டமைப்பதற்கும், சந்தைப்படுத்துதலுக்கும் தொழில்நுட்ப மேம்படுத்துதல் தேவைப்படும் 2 லட்சம் குறு உணவு நிறுவனங்களுக்கு உதவ ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இருக்கும் குறு உணவு நிறுவனங்கள், விவசாயி உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுகளுக்கு ஆதரவு அளிக்கப்படும். பெண்கள் மற்றும் பட்டியல் வகுப்பினர்/பழங்குடியினர் நடத்தும் நிறுவனங்கள் மீதும் முன்னேறும் உத்வேகம் உள்ள மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டு தொகுப்பு ரீதியான (உதாரணம்: உத்திர பிரதேசத்தில் மாம்பழம், கர்நாடகாவில் தக்காளி, ஆந்திர பிரதேசத்தில் தக்காளி, மகாராஷ்டிராவில் ஆரஞ்சு இன்னும் பல) அணுகுமுறைக் கடைப்பிடிக்கப்படும்.
- பிரதமரின் மீனவர்கள் நலத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு ரூ 20,000 கோடி கடல் சார்ந்த மற்றும் உள்நாட்டு மீன்வளத்தின் ஒருங்கிணைந்த, நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக பிரதமரின் மீனவர்கள் நலத் திட்டத்தை அரசு தொடங்கும். கடல் சார்ந்த, உள்நாட்டு மீன்வள நடவடிக்கைகள் மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூ 11,000 கோடி, மீன்பிடி துறைமுகங்கள், குளிர் பதன வசதிகள் மற்றும் சந்தைகள் போன்ற உள்கட்டமைப்புக்காக ரூ 9,000 கோடி வழங்கப்படும். கூண்டுக்குள் உயிரின வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு, அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் புதிய மீன்பிடி கலங்கள், தடமறியும் திறன், ஆய்வகக் கட்டமைப்பு ஆகியவை முக்கியமான செயல்பாடுகளாக இருக்கும். மீன்பிடித் தடைக்காலத்தில் (மீன்பிடிப்பதற்குத் தடை செய்யப்படும் காலம்) உதவும் தனிநபர் காப்பீடு, படகுக் காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும். ஐந்து ஆண்டு காலத்தில் 70 லட்சம் டன்கள் கூடுதல் மின் உற்பத்தி நிலையை எட்டுதலுக்கு இது வழி வகுக்கும். 55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு; ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி ரூ 1,00,000 கோடியை எட்டுதல். தீவுகள், இமயமலைப் பகுதி மாநிலங்கள், வட கிழக்கு மற்றும் முன்னேறும் உத்வேகத்தில் உள்ள மாவட்டங்கள் மீது கவனம் செலுத்தப்படும்.
- தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் : கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக ரூ 13,343 கோடி மதிப்பீட்டில் தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. மாடுகள், எருமை, செம்மறியாடு, ஆடுகள், மற்றும் பன்றி வகையறாக்களுக்கு (மொத்தம் 53 கோடி விலங்குகளுக்கு) கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக 100 சதவீதம் தடுப்பு மருந்தேற்றத்தை உறுதிப்படுத்துவது நோக்கமாகும். 1.5 கோடி மாடுகள் & எருமைகளுக்கு இது நாள் வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
- கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் - ரூ 15,000 கோடி : பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், கால்நடைத் தீவனக் கட்டமைப்பு போன்றவற்றில் தனியார் முதலீட்டுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ரூ 15,000 கோடி செலவில் கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும். சிறப்புப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆலைகள் அமைப்பதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
- விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைப்பதற்காக அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் : அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் அரசு திருத்தங்களை செய்யும். தானியங்கள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், பருப்புகள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய வேளாண் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும். தேசிய பேரிடர்கள், பஞ்சம் போன்ற அசாதாரணக் காலங்களில் மட்டுமே சேமிப்புக் கட்டுப்பாடுகள் விலை ஏற்றத்துடன் அமல்படுத்தப்படும். மேலும், பதப்படுத்துவோர் அல்லது மதிப்பு சங்கிலியில் பங்குபெறுவோருக்கு அவர்களின் நிறுவப்பட்டத் திறன் அடிப்படையிலும், எந்த ஏற்றுமதியாளருக்கும் ஏற்றுமதி தேவை அடிப்படையிலும் எந்தவிதமான சரக்குக் கட்டுப்பாடும் பொருந்தாது.
- விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் தேர்வுகளை அளிக்க வேளாண் சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்கள் : கீழ்கண்டவற்றை வழங்க ஒரு மத்திய சட்டம் வகுக்கப்படும்-
- நல்ல விலையில் பொருள்களை விற்க விவசாயிக்கு போதுமான தேர்வுகள்;
- மாநிலங்களுக்கிடையேயான தடைகள் இல்லா வணிகம்
- வேளாண் பொருள்களின் மின் வணிகத்துக்கான கட்டமைப்பு.
- வேளாண் பொருள்களின் விலை நிர்ணயித்தல் மற்றும் தர உத்தரவாதம் : நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் பதப்படுத்துவோர், ஒருங்கிணைப்பாளர்கள், பெரு வணிகர்கள் மற்றும் ஏற்று மதியாளர்களுடன் ஈடுபடுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் வசதியளிக்கும் சட்டக் கட்டமைப்பு ஒன்றை அரசு இறுதி செய்யும். விவசாயிகளின் ஆபத்தைக் குறைத்தல், உத்தரவாதமான வருமானம் மற்றும் தர நிர்ணயங்கள் இந்த கட்டமைப்பின் முக்கியப் பகுதியாக இருக்கும்.
அதிவிரைவாக முதலீடடை ஈர்க்க கொள்கை சீர்திருத்தங்கள் :
- செயலாளர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழு மூலம் முதலீடுகளை ஈர்க்க அதிவிரைவாக அனுமதி அளித்தல்.
- முதலீட்டுக்கு உகந்த திட்டங்களைத் தயாரித்தல், முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய / மாநில அரசுகளுடன் ஒருங்கிணைக்க அனைத்து அமைச்சகங்களிலும் இட்ட மேம்பாட்டுப் பிரிவு.
- புதிய முதலீடுகளுக்கு போட்டியிடுதலுக்கு, முதலீட்டு ஈர்ப்புக்கு உகந்த நிலை குறித்து மாநிலங்களைத் தரப்படுத்தல்
- சூரியசக்தி PV தயாரிப்பு, முன்னேற்ற தொழில்நுட்பத்திலான செல் பேட்டரி சேமிப்பு சாதனம் போன்ற துறைகளில் முதன்மையான புதிய துறைகளை ஊக்குவிப்பதற்கான ௨எக்குவிப்புத் திட்டங்கள்.
தொழில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.
- உ. தொழில் பகுதிகளில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இணைப்பு நிலையை மேம்படுத்துவதற்காக சவால் முறையில் மாநிலங்கள் மூலம் திட்டம் அமல்படுத்தம்படும்.
- புதிய முதலீடுகளை ஊக்கப்படுத்த தொழில் நிலம்/நில வங்கி வசதி, மற்றும் புவி சார் படமிடலுடன் தகவல் அமைப்பு மூலம் தகவல்களைக் கிடைக்கச் செய்தல்.
- 5லட்சம் ஹெக்டேரில் 3376 தொழில் பூங்காக்கள்/பேட்டைகள்/சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் தகவல் அமைப்பில் படமிடப்பட்டுள்ளன.
- 2020-21ல் அனைத்து தொழில் பூங்காக்களும் தரவரிசைப்படுத்தப்படும்.
நிலக்கரித் துறையில் வணிக ரீதியில் கனிமவளம் எடுக்கும் திட்டம் அறிமுகம்.
- ஓரளவுக்கு மட்டும் வளம் கண்டறியப்பட்ட பகுதிகளில், வளம் அறிதல் - மற்றும் - உற்பத்தித் திட்டம்.
- முழுமையாக வளம் கண்டறியப்பட்ட நிலக்கரித் தொகுப்புகள் மட்டும் முன்பு ஏலம் விடப்படும் சூழ்நிலையில், இப்போது ஓரளவு வளம் கண்டறியப்பட்ட தொகுப்புகளும் ஏலம் விடப்படும்.
- வளம் கண்டறிதலில் தனியார் துறையின் பங்கேற்பு அனுமதிக்கப்படும்.
- குறிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே உற்பத்தியைத் தொடங்கினால், வருவாய் பகிரதலில் சலுகை மூலம் ஊக்குவிப்பு செய்யப்படும்.
- மாற்று நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து, நிலக்கரி உற்பத்தியில் தற்சார்பை அதிகரிப்பது
- நிலக்கரித் துறையில், போட்டி, வெளிப்படைத் தன்மை மற்றும் தனியார் துறை பங்கேற்பை அரசு அறிமுகப்படுத்தும்.
- ரூபாய் / டன் நிர்ணயத்துக்கு பதிலாக வருவாய்ப் பகிர்வு முறை.
- முன்பு, கடைசிப் பயன்பாட்டு உரிமை உள்ள நுகர்வோர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
- தற்போது, யார் வேண்டுமானாலும் நிலக்கரி சுரங்க ஏலத்தில் பங்கேற்று, வெளிச்சந்தையில் விற்பனை செய்யலாம்.
- நுழைவு விதிமுறைகள் தளர்த்தப்படும்.
- உடனடியாக சுமார் 50 சுரங்கங்கள் ஒதுக்கப்படும்.
- தகுதி நிபந்தனைகள் இல்லை, உச்சவரம்புடன் கூடிய வெளிப்படையான கட்டணம்
கனிமவளத் துறையில் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்துதல்
- வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், குறிப்பாக ஆய்வில் அதி நவீன
- தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள்
- கீழ்ண்டவற்றின் மூலம் கொண்டுவரப்படும்:
- தடையற்ற கலப்பு ஆய்வு - சுரங்க வேலை-மற்றும் உற்பத்தி முறை அறிமுகம்.
- திறந்த மற்றும் வெளிப்படையான ஏல நடவடிக்கை மூலம் 500 சுரங்க வளாகங்கள்
- வழங்கப்படும்.
- அலுமினியத் தொழிலின் செயல்திறனை அதிகரிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரியின் கூட்டு ஏலம் அறிமுகம். மின்சாரச் செலவைக் குறைக்க அலுமினியத் தொழில்களுக்கு உதவும்
- நிலக்கரித் துறையில் பன்முக வாய்ப்புகள் - 50,000 கோடி ரூபாய் முதலீடு.
- நிலக்கரி வாயுமயமாக்குதல் மற்றும் திரவமயமாக்குதல் ஆகியவற்றுக்கு வருவாய்ப் பங்கீட்டில் தள்ளுபடி வழங்குவதன் மூலமாக ஊக்கமளிக்கப்படும்.
- சுற்றுச்சூழல் பாதிப்பு கணிசமாகக் குறையும்
- வாயு அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு இந்தியாவிற்கு உதவும்
கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 50 ஆயிரம் கோடி ரூபாய்
- 2023- 2024ஆம் ஆண்டுக்குள், இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் இதர தனியார்
- வட்டாரங்களிலிருந்து, அதிகரிக்கப்பட்ட நிலக்கரி உற்பத்தி இலக்கான ஒரு பில்லியன் டன் நிலக்கரியை வெளியேற்றுவதற்காக:
- இயந்திரங்கள் மூலம் நிலக்கரியைக் கொண்டு செல்வதற்காக, கொணரிப்பட்டைகள் (Conveyor Belt) சுரங்கங்கள் முதல் ரயில்வே பக்கவாட்டு மேடைகள் வரை அமைப்பது உட்பட, நிலக்கரி எடுத்துச் செல்வதற்காக 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு.
- சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும்
கொள்கைச் சீர்திருத்தங்கள் - கனிம வளத் துறை
- சுரங்கப் பணிகளிலும், உற்பத்தியிலும் சிறந்த செயல்திறனை அடைய சுரங்கக் குத்தகைகளின் மாற்றத்தை அனுமதிக்கவும், உபயோகப்படுத்தாத உபரிக் கனிமங்களை விற்கவும் சொந்த மற்றும் சொந்தமில்லாத சுரங்கங்களுக்கு இடையேயான வேறுபாட்டைக் களைதல்
- பல்வேறு கனிமங்களுக்கான கனிமக் குறியீடு ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் சுரங்கங்கள் அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
- சுரங்க ஏலங்கள் வழங்கப்படும் போது செலுத்தப்படும் முத்திரைத் தாள் கட்டணத்தை முறைப்படுத்துதல்.
பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை அதிகரித்தல்
- பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்புக்கான இந்தியாவில் உற்பத்தி - “மேக் இன் இந்தியா”; ஆண்டு வாரியாக ஆயுதங்கள் / தளவாடங்கள் இறக்குமதி தடைக்கான பட்டியல்அறிவிக்கை வெளியிடுதல்.
- இறக்குமதி உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரித்தல்.
- உள்நாட்டு மூலதனக் கொள்முதலுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கீடு.
- இறக்குமதி செலவைக் குறைக்க பெரும் பாதுகாப்பு உதவும்.
- ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை வணிகமயமாக்குவதன் மூலம் ஆயுத
- விநியோகத்தில் தன்னாட்சி. பொறுப்புடைமை மற்றும் செயல்திறனை முன்னேற்றுதல்
கொள்கைச சீர்திருத்தங்கள் - பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தி
- பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தித் துறையில் தடையற்ற வழிமுறையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அனுமதிப்பதற்கான வரம்பு 49சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக ஆக உயர்வு.
- குறித்த கால வரம்பில் பாதுகாப்புத் துறைக்கான கொள்முதல் நடைமுறை மற்றும் பின்வரும் முறைகளில் முடிவெடுத்தல் விரைவாக்கம்:
- ஒப்பந்த மேலாண்மைக்கு உதவிட பணித் திட்ட மேலாண்மைப் பிரிவு உருவாக்குதல்;
- ஆயுதங்கள் / பணித்தளங்களுக்கு பொதுவான அலுவலர் தரநிலை தேவைகள் நடைமுறை சாத்திய அளவில் உருவாக்குதல்;
- ஒத்திகை மற்றும் பரிசோதனை நடைமுறைகளை ஆய்வு செய்து திருத்தி அமைத்தல்.
பறக்கும் செலவுகளில் ரூ 1000 கோடி குறைப்பு-பயணிகள் விமானப் போக்குவரத்துக்காக வான்வெளியை சிறந்த முறையில் உபயோகப்படுத்துதல்.
- இந்திய வான்வெளியின் 6 சதவீதம்மட்டுமே தாராளமாகக் கிடைக்கிறது.
- பயணிகள் விமானப் போக்குவரத்தை இன்னும் திறன் வாய்ந்ததாக ஆக்க இந்திய
- வான்வெளியைப் பயன்படுத்துவதற்கானக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.
- விமானப் போக்குவரத்துத் துறைக்கு வருடத்துக்கு ரூ 1000 கோடி மொத்தப் பலனாகக் கிடைக்கும்.
- வான்வெளியை சிறந்த முறையில் உபயோகப்படுத்துதல்: எரிபொருள் பயன்பாடு, நேரம் குறையும்.
- சுற்றுப்புறச் சூழலின் நேர்மறைத் தாக்கம்.
- அரசு-தனியார் பங்களிப்பு மூலம் உலகத் தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள்
- அரசு-தனியார்- பங்களிப்பு அடிப்படையில் செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தலுக்கு 6 ஏலங்களில் 3 விமான நிலையங்களைப் பயன்படுத்த இந்திய விமான ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
- 6 விமான நிலையங்களில் முதல் நிலையில் வருடாந்திர வருமானம் - ரூ.1000 கோடி (இப்போதைய வருடாந்திர லாபம் ரூ.540 கோடி என்ற நிலையில்). இந்திய விமான ஆணையத்திற்கு நேரடி நிதியாக ரூ.2300 கோடி கிடைக்கும்.
- 2வது நிலையில் செயல்படுத்த மேலும் 6 விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏல நடைமுறைகள் உடனடியாகத் தொடங்கப்படும்.
- 1 மற்றும் 2 வது நிலைகளில் 12 விமான நிலையங்களில் தனியாரின் முலம் ரூ.13,000 கோடி முதலீடு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- 3வதுநிலை ஏலத்துக்கு மேலும் 6 விமான நிலையங்கள் அறிவிக்கப்படும்.
- விமானப் பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாறப்போகிறது.
- பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் மாற்றியமைத்தல் துறைக்கான வரி விகிதங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
- வானூர்தி உதிரிபாகங்கள் பழுது நீக்குதல் மற்றும் விமானப் பரமாரிப்பு ரூ. 800 கோடியில் இருந்து ரூ. 2000 கோடிக்கு மூன்று ஆண்டுகளில் உயரப்போகிறது.
- உலகின் முன்னணி பொறி இயந்திரத் (எஞ்சின்) தயாரிப்பாளர்கள் பொறி இயந்திரப் பழுது நீக்குதல் வசதிகளை வரும் வருடத்தில் இந்தியாவில் ஏற்படுத்துவார்கள்.
- உற்பத்தியை அதிகப்படுத்துதல் மூலம் செலவைக் கட்டுப்படுத்த, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் மாற்றியமைத்தல் துறைகளுக்கிடையே நெருக்கம்.
- விமானங்களின் பராமரிப்பு செலவு குறையும்.
- கட்டணக் கொள்கைச் சீரதிருத்தம் : பின்வரும் சீர்திருத்தங்களை முன்வைக்கும் கட்டணக் கொள்கை ஒன்று வெளியிடப்படும்:
நுகர்வோர் உரிமைகள்
- மின்விநியோக நிறுவனத்தின் செயல்திறன் குறைவால் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது.
- சேவைகளின் தரம் மற்றும் அது தொடர்பாக மின்விநியோக நிறுவனங்களுக்கு அபராதங்கள்.
- போதிய மின் விநியோகத்தை மின்விநியோக நிறுவனங்கள் உறுதி செய்தல்; மின்தடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
துறையை ஊக்குவித்தல்
- துறைகளுக்கு இடையிலான மானியங்களை ஆக்கபூர்வமாகக் குறைத்தல்.
- திறந்தநிலை அணுகலுக்கு கால வரையுடன் கூடிய அனுமதி.
- உற்பத்தி மற்றும் பகிர்மானப் பணித் திட்ட நிறுவனங்கள் போட்டி நிலையின்படி தேர்வு செய்யப்படும்.
- துறையின் நீடித்த செயல் திறன் நிலைமை
- ஒழுங்குபடுத்தக்கூடிய சொத்துகள் கிடையாது.
- உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் பட்டுவாடா.
- மானியத் தொகை பயனாளிக்கு நேரடியாக கணக்கில் செலுத்துதல் (1981); ஸ்மார்ட் ப்ரிபெய்டு மீட்டர்கள்.
- யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தைத் தனியார்மயமாக்கல்.
- _ மின்சார விநியோகம் மற்றும் மின்வழங்கலில் குறைவான செயல்திறன்.
- _ யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சாரத் துறைகள்/அமைப்புகள் தனியார் மயமாக்கப்படும்.
- நுகர்வோருக்கு சிறந்த சேவையை அளித்து. விநியோகத்தில் செயல்பாடு மற்றும் நிதி ஆற்றலை மேம்படுத்தும்.
- நாடு முழுவதும் உள்ள இதர அமைப்புகள் பின்பற்றுவதற்கான ஒரு மாதிரியை அளிக்கும்.
- நடைமுறை சாததிய இடைவெளியை சரி செய்யும் நிதி ரூ.6100 கோடி மூலம், சமூக கட்டமைப்புத் துறையில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல்.
- நடைமுறை சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதால் சமூகக் கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப் படுகின்றன.
- நடைமுறை சாத்திய இடைவெளியை சரி செய்யும் அளவை, மொத்த பணித் திட்ட செலவில் தலா30 சதவீதம் வரையில் மத்திய
- மற்றும் மாநில அரசுகள் / சட்டபூர்வ அமைப்புகளால் VGF ஆக அளிக்க வரம்பு உயர்த்தப்படும்.
- மற்ற துறைகளில், இப்போது VGF ஆக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் / சட்டபூர்வ அமைப்புகள் தலா 20 சதவீதத்தை ஏற்கும்
- நிலை தொடரும். மொத்த திட்டச் செலவினம் ரூ.8100 கோடி
- மத்திய அமைச்சகங்கள் / மாநில அரசு/ சட்டபூர்வ அமைப்புகள் பணித் திட்டங்களை முன்வைக்கலாம்.
விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் பங்கேற்பை ஊக்குவித்தல்
- இந்திய விண்வெளித் துறையின் பயணத்தில் இந்தியத் தனியார் துறை ஒரு சக பயணியாக இருக்கும்.
- செயற்கைக்கோள்கள், ஏவுதல் மற்றும் விண்வெளித் தொடர்புடைய சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்கு சமமானக் களத்தை அளிக்கும்.
- சாதகமான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சூழ்நிலையை தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கும்.
- இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் வசதிகள் மற்றும் தொடர்புடைய இதர சொத்துகளைப் பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள தனியார் துறையினர் அனுமதிக்கப்படுவர்.
- கோள் ஆய்வு. வெளிப்புற விண்வெளிப் பயணம் ஆகியவைத் தொடர்பான வருங்காலத் திட்டங்கள் தனியார் துறைக்கும் வழங்கப்படும்.
- தொலைநிலை உணர்தல் தகவல்களை தொழில்நுட்பத் தொழில் முனைவோருக்கு வழங்க தாராள புவிசார் தகவல் கொள்கை.
அணுசக்தி தொடர்பான சீர்திருத்தங்கள்
- மருத்துவ ஐசோடோப்புகள் உற்பத்தி - புற்றுநோய் மற்றும் இதர நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதன் மூலம் மனிதகுல நலனை மேம்படுத்துதலுக்கு அரசு- தனியார் பங்களிப்பு முறையில் ஆராய்ச்சி அணு உலை நிறுவப்படும்.
- உணவுப் பதப்படுத்தலுக்கு கதிர்வீச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த - வேளாண்மை சீர்திருத்தங்களுக்கு உதவ, விவசாயிகளுக்கு உதவிட 117 முறையில் வசதிகள் ஏற்படுத்துதல்.
- இந்தியாவின் துடிப்பான ஸ்டார்ப்-அ௮ப் சூழலை அணுசக்தித் துறையுடன் பிணைத்தல் - ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்பத் தொழில்முனைவோருக்கு இடையில் ஒருங்கிணைப்பைப் பேணுதலுக்கு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும்சிந்தனை உருவாக்கல் மையங்கள் அமைக்கப்படும்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்துக்கு அரசு கூடுதலாக ரூ .40, 000 கோடி ஒதுக்கீடு செய்யும்.
சுகாதார சீர்திருத்தங்கள், நடவடிக்கைகள்:
- சுகாதாரத்தின் மீதான பொது செலவினங்கள் அதிகரிக்கப்படும்.
- அடித்தள சுகாதார நிறுவனங்களில் முதலீடுகள்.
- கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுகாதார மற்றும் நல மையங்களை அதிகரித்தல்.
- எத்தகைய வருங்கால பெருந்தொற்றுக்கும் இந்தியாவைத் தயார்படுத்துதல் -
- தொற்று நோய் மருத்துவமனை வளாகங்கள் - அனைத்து மாவட்டங்களிலும்.
- ஆய்வக வலைப்பின்னல் மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துதல் -
- அனைத்து மாவட்டங்கள், வட்டார அளவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள்.
- பெருந்தொற்றுக்களைக் கையாள ஆய்வகங்கள், பொது சுகாதார மையம்.
- ஆராய்ச்சியை ஊக்குவித்தல் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம்
- ஒருங்கிணைந்த சுகாதாரத்துக்காக தேசிய நிறுவன தளம்., அனைத்து மாவட்டங்கள், வட்டார அளவில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள். பெருந்தொற்றுக்களைக் கையாள ஆய்வகங்கள், பொது சுகாதார மையம்
கோவிட் பாதுப்புக்குப் பிந்தைய காலத்தில் சமத்துவததுடன் தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் கல்வி.
- PM eVIDYA - பல முனை அணுகுதல் வசகி கொண்ட டிஜிட்டல் / ஆன்லைன் கல்வித் திட்டம் உடனே தொடங்கப்படும் .அதில் பின்வரும் அம்சங்கள் இருக்கும்:
- மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பள்ளிக் கல்விக்கு DIKSHA : அனைத்து கிரேடுகளுக்கும் இ-பாடங்கள் மற்றும் QR குறியீட்டில் அறியும் பாடப் புத்தகங்கள் (ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்).
- 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் ஓவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி டி.வி .சேனல் (ஒரே நாடு, ஒரே சேனல்).
- வானொலி, சமுதாய வானொலி மற்றும் பாட்காஸ்ட்களை தீவிரமாகப் பயன்படுத்துதல்.
- பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற மாற்றுத் திறனாவிக்கு விசேஷ இ-பாடங்கள்.
- உயர்நிலை வரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் 2020 மே 30 தேதியில் இருநது ஆன்லைன் கல்வித் திட்டங்கள் தொடங்க தானாகவே அனுமதிக்கப்படும்.
- மனோதர்பன் - மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பதீதினருக்கு மன ஆரோக்கியம், உணர்வுப்பூர்வமான ஆரோக்கியதீதுகீகு உதவும் உளவியல் சார்நீத சமூக உதவி அளிக்கும் திட்டம் தொடங்கப்படும்.
- பள்ளிக்கூட, மழலைப் பருவக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய தேசிய பாடத் திட்டம் மற்றும் வழிகாட்டி வரையறை வெளியிடப்படும்; உலகளாவிய மற்றும்21 வது நூற்றாண்டு தொழில் திறன் தேவைகளுடன் ஒருங்கிணைந்ததாக இது இருக்கும்.
- 2025 க்குள் கிரேடு 5 முடிக்கும் மாணவர்கள் உரிய கற்றலைப் பெறுவதை உறுதி செய்ய தேசிய அடிப்படை நிலை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு லட்சிய நோக்குத் திட்டம் டிசம்பர்2020 க்குள் தொடங்கப்படும்.
திவாலாதல் மற்றும் நொடிப்புநிலை விதிகள் தொடர்பான நடவடிக்கைகள் மூலம் தொழில் செய்வதை எளிதாக்குவதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
- திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.1 கோடியாக ((ரூ.1 லட்சத்திலிருந்து) அதிகரிக்கப்பட்டுள்ளது
- சட்டத்தின்பிரிவு 240ஏ-வின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு திவால் தீர்வு வழிமுறைகள், விரைவில் அறிவிக்கப்படும்.
- நோய்த் தொற்றுச் சூழல் அடிப்படையில், புதிதாக திவால் நடவடிக்கைகளைத் தொடங்கும் பணிகள் ஓராண்டுவரை நிறுத்திவைப்பு.
- திவால் விதியின்கீழ், திவால் நடவடிக்கைகளைத் தொடங்குவதில், பணத்தைத் திரும்பச் செலுத்தாதது தொடர்பான வரைமுறையில் கோவிட்-19 காரணமாகப் பெறப்படும் கடனுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம்.
நிறுவன சட்ட வழுவதல்களை குற்றமற்றதாக்குதல்
- சிறிய தொழில்நுட்ப மற்றும் செயல்முறை வழுவதல்கள் (பெருநிறுவன சமூகக் கடமைகளைப் பற்றிய தகவல் அறிக்கையில் குறைபாடுகள், இயக்குநர்கள் குழு தகவல் அறிக்கையில் போதாமை, வழுவதல்களைத் தாக்கல் செய்தல், ஆண்டுப் பொதுக்குழுக்கூட்டம் நடத்துவதில் தாமதம்) தொடர்புடைய விதிமீறல்களை, நிறுவன சட்ட வழுவதல்களை குற்றமற்றதாக்குதல்.
- இசைந்துத் தீர்க்கக்கூடிய பெருவாரியான குற்றப் பிரிவுகள் உட்புறத் தீர்ப்பு செயல்முறைக்கு மாற்றப்படும். இசைந்து தீர்க்கக்கூடிய விஷயங்களில் பிராந்திய இயக்குநரின் அதிகாரங்கள் அதிகரிப்பு (முன்னர் 18 பிரிவுகளே இருந்த நிலையில், தற்போது 58 பிரிவுகள் உட்புறத் தீர்ப்பு செயல்முறை மூலம் கையாளப்படும்;.
- குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் சுமைகளை இந்த சட்டத் திருத்தங்கள் குறைக்கும்.
- இசைந்துத் தீர்க்கக்கூடிய 7 குற்றங்கள் மொத்தமாகக் கைவிடப்பட்டன. மாற்றுக் கட்டமைப்பின் கீழ் 5 குற்றங்கள் கையாளப்படும்.
- மற்ற முக்கிய சீர்திருத்தங்களில் பின்வருவன அடங்கும்-
- இந்திய பொது நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு நீதிப் பரிபாலன எல்லைக்குள் செகீயூரிட்டிகளை நேரடியாகப் பட்டியலிடுதல்.
- பங்குப் பரிவர்த்தனை மையங்களில் Non-convertible debentures (NCD) களில் பட்டியலிடும் தனியார் நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகக கருதப்பட மாட்டாது.
- கம்பெனிகள் சட்டம், 2013-இல் கம்பெனிகள் சட்டம், 1956 Part A (உற்பத்தி நிறுவனங்கள்) அம்சம் சேர்ப்பு.
- தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் விசேஷ அமர்வுகளை கூடுதலாக உருவாக்கும் அதிகாரம்.
- சிறிய நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் ., ஸ்டார்ட் அப்களின் அனைத்து தவணை தவறுதல்களுக்கும் குறைவான அபராதங்கள்.
- புதிய, சுயசார்பு இந்தியாவுக்கான பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், குறைந்தபட்சம் ஒரு நிறுவனம், பொதுத்துறையின் கீழ் இருக்கும். ஆனால், தனியார் துறையினரும் அனுமதிக்கப்படுவார்கள்.
- மற்ற துறைகளில், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படூம் (வாய்ப்புகள் போன்றவற்றின் அடிப்படையில் செயல்படுத்துவதற்கானகாலம் இருக்கும்.
- தேவையில்லாத நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் வகையில், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை ஒன்று முதல் நான்கு வரை இருக்கும்; மற்றவை தனியார்மயமாக்கப்படும் / இணைக்கப்படூம்/ மற்ற நிறுவனங்களின் கீழ் கொண்டுவரப்படும்.
மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதரவு
- நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடுகள் செல்லத்தக்கது என்பது போல வரிப் பகிர்வு (ரூ 466,038 கோடி) ஏப்ரலில் முழுமையாக வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் வளங்கள் கடும் அழுத்ததில் உள்ள போதும், வருவாய் இழப்பு மானியங்கள் (ரூ 12,390 கோடி) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன.
- மாநிலப் பேரிடர் நிவாரண நிதி முன்பணம் (ரூ 11,092 கோடி) ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கப்பட்டது.
- நேரடி கொவிட்-எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சகத்தால் ரூ 4,113 கோடிகும் அதிகமான நிதி வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய ரிசர்வ் வங்கி கீழ்கண்டவற்றை அதிகரித்துள்ளது:
- மாநிலங்களின் வழிகள் மற்றும் முறைகள் முன்பண அளவுகள் 60 சதவீதம் வரை.
- . ஒருமாநிலம் தொடர்ந்து மிகைப்பற்றில் இருக்கக்கூடிய காலம் 14 நாட்களில் இருந்து 21 நாட்கள்.
- ஒரு மாநிலம் ஒரு காலாண்டில் மிகைப்பற்றில் இருக்கக்கூடிய காலம் 32 நாட்களில் இருந்து 50 நாட்கள்.
- 2020-21-ஆம் ஆண்டில் மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு ரூ.641 லட்சம் கோடியாக அறிவிக்கப்பட்டது, இது ஒட்டுமொத்த மாநில உற்பத்தியில் (GSDP) 3 சதவீதம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 75 சதவீதத் தொகை, மாநிலங்களுக்கு மார்ச் 2020-லேயே அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்தும் காலத்தை மாநிலங்களே முடிவுசெய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கடன் அளவில் 14 சதவீதத்தை மட்டூமே மாநில அரசுகள் பெற்றுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தொகையில் 8% சதவீதம்அளவுக்கு இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன.
- மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு 3சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்படூகிறது. இது 2020-21-ஆம் ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும். இதன்மூலம், மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி கிடைக்கும்.
”தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு” ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20.97 லட்சம் கோடியில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
- முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி
- சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அவசர கடன் வசதி - ரூ. 3,00,000 கோடி
- சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் கடன் - ரூ.20,000 கோடி
- சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான Fund of Funds - ரூ. 50,000 கோடி
- பி.எப். நிறுவனத்துக்கு - ரூ.2,800 கோடி
- பி. எப் வட்டித் தொகை குறைப்பு - ரூ. 6,750 கோடி
- நிதித்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி - ரூ 30,000 கோடி
- என்.பி.எப்.சி மற்றும் எம்.எப்.ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் - ரூ. 45,000 கோடி
- மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகங்களுக்கு - ரூ.90,000 கோடி
- டி.டி.எஸ் வரிப்பிடித்தம் - ரூ. 50,000 கோடி
- இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி
- புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்- ரூ. 3,500 கோடி
- முத்ரா கடன் திட்ட மானியம் - ரூ. 1,500 கோடி
- சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி - ரூ. 5,000 கோடி
- CLSS - MIG வீட்டுக்கடன் திட்டம் - ரூ.70,000 கோடி
- நபார்டு வங்கி மூலமாக கூடுதல் அவசர நிதி - ரூ.30,000 கோடி
- கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி - ரூ. 2,00,000 கோடி
- மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி
- குறு உணவு உற்பத்தி நிலையங்கள் - ரூ. 10,000 கோடி
- பிரதான் மந்திரி மத்யச சம்பத யோஜனா - ரூ. 20,000 கோடி
- ஆபரேஷன் க்ரீன் திட்டம் - ரூ. 500 கோடி
- விவசாய உள்கட்டமைப்பு நிதி - ரூ. 1,00,000 கோடி
- கால்நடை வளர்ப்புத் துறை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு - ரூ. 15,000 கோடி
- மூலிகை உற்பத்தி - ரூ. 4,000 கோடி
- தேனீ வளர்ப்பு - ரூ. 500 கோடி
- நான்காம் , ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி
- நம்பகத்தன்மை, இடைவெளி நிதி (வி.ஜி.எப்) - ரூ. 8,100 கோடி
- ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு - ரூ.40,000 கோடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.