நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 21,22 ஜீன் 2020

TNPSC Current Affairs 21-22 June 2020

தமிழ்நாடு

  • தமிழக சிறைத்துறை (Tamil Nadu Prison Department) சிறை-சீர்திருத்தத்துறை (Department of Prisons and Correctional Services ) என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேலும் இதன் தலைமை அதிகாரியும் இனிமேல் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை டைரக்டர் ஜெனரல் என்றே (டி.ஜி.பி) அழைக்கப்படுவார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

  • புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான அமிதாப் காந்த் குழு : நிதி அயோக் (NITI (National Institution for Transforming India) Aayog) முதன்மை செயல் அலுவலர் அமிதாப் காந்த் (Amitabh Kant) தலைமையில் கூகிள் , மைக்ரோசாஃப்ட் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் உள்ளடங்கிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தளத்தை ஏற்படுத்துவதற்கான உயர்மட்ட குழுவை நிதி அயோக் அமைத்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு தளத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 ஊரடங்கினால் வேலையிழந்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்க தங்களது அருகாமையிலேயே வேலைவாய்ப்பை வழிவகை செய்து தரப்படும்.
  • ”பிரதம மந்திரி தெருவோர விற்பனையாளர்களுக்கான சுய சார்பு நிதி திட்டத்தினை ( Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi)) அமல்படுத்துவதற்கான வங்கியாக இந்திய சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India (SIDBI) ) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களை அமைச்சகம் மற்றும் அவ்வங்கியிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கூ.தக. : நாடெங்கிலுமுல்ள 50 இல்டசம் தெருவோர வியாபாரிகள் பயனடைவதற்கான ”PM SVANidhi” திட்டமானது 1 ஜீன் 2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகள் ஓராண்டில் மாதத்தவணையாக திருப்பிச் செலுத்துவதற்கான ரூ.10,000/- கடனுதவியைப் பெறலாம்.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தியா ஏற்கவுள்ளது.பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக எட்டாவது முறையாக இந்தியா அண்மையில் தோ்ந்தெடுக்கப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    • கூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.
    • நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும். பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு உறுப்பு நாடு ஏற்பது வழக்கமாக உள்ளது.கவுன்சிலின் 15 உறுப்பு நாட்டுப் பெயா்களுடைய ஆங்கில எழுத்துருவின் அகரவரிசைப்படி ஒவ்வொரு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பு நிா்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டம் - முக்கிய தகவல்கள்:
    • புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்காக ரூ.50,000 கோடி செலவிலான ‘கரிப் கல்யாண் ரோஜ்கார் அபியான்’ (Garib Kalyan Rojgar Abhiyaan) திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 20 ஜீன் 2020 அன்று பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
    • இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன் ஊரகப் பகுதிகளில் பொதுப்பணிகளின் வாயிலாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமாகும்.
    • 125 நாட்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் 25 வகையான வேலைகள் , புலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக ரூ.1709 கோடி (200 மில்லியன் யூரோக்கள்) கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் பிரஞ்ச் வளர்ச்சி முகமை (French Development Agency) மற்றும் இந்திய அரசிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

  • அமெரிக்காவில் தேசிய அறிவியல் நிறுவனத்தின் 15-ஆவது இயக்குநராக இந்திய அமெரிக்க விஞ்ஞானி , (சென்னையைச் சேர்ந்த) சேதுராமன் பஞ்சநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இரண்டாம் உலகப்போர் வெற்றியின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஜூன் 24, 2020ஆம் தேதி நடைபெறவிருக்கும் வெற்றி அணிவகுப்பில் கலந்துகொள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மாஸ்கோவிற்கு செல்லவிருக்கிறார்.

முக்கிய தினங்கள்

  • சர்வதேச யோகா தினம் (International Yoga Day) - ஜீன் 21 | மையக்கருத்து(2020) - ஆரோக்கியத்திற்கான யோகா - வீட்டில் யோகா (Yoga for Health- Yoga at Home)
    • கூ.தக. : சர்வதேச யோகா தினம் ஐ.நா. பொது சபையில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி (ஜீன் 21) 2015 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நீர்நிலையியல் தினம் (World Hydrography Day) - ஜீன் 21
  • தந்தையர் தினம் (Fathers Day) 2020 - ஜீன் 21 (ஜீன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • 2020 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம் (Solar Eclipse) 21-06-2020 அன்று நிகழ்ந்தது. இவ்வாண்டிற்கான அடுத்த சூரிய கிரஹணம் 14-12-2020 அன்று நடைபெறும்.
    • கூ.தக. : சூரிய கிரகணம் (Solar eclipse) என்பது நிலவின் நிழல் புவியின் மீது விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும். இது சூரியன் மற்றும் புவிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது மட்டுமே ஏற்படும்.
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!