நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 19-20 July 2020

தமிழ்நாடு

  • ☛  தமிழகத்தைச் சோ்ந்த முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-ஆவது பெண் நீதிபதி எனும் பெருமைகளுடைய ஆா். பானுமதி 19-7-2020 அன்று ஓய்வு பெற்றார். 2013 -ல் ஜாா்க்கண்ட் மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா். 2014 ஆகஸ்ட்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பானுமதி நியமனம் செய்யப்பட்டாா்.
  • ☛ இந்தியாவின் மிகச்சிறந்த கணித மேதைகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.சேஷாத்ரி (88) சென்னையில் 17-7-2020 அன்று காலமானாா்.

இந்தியா

  • ☛ உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ.25 இலட்சம் இலவச ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பை ஜம்மு காஷ்மீர்   அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ☛ ”மெடிகேப்” (“MediCAB”) என்ற பெயரில் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லத் தக்க மருத்துவமனையை (portable hospital unit) ஐ.ஐ.டி. மெட்ராஸ் உதவியுடன் ”மோடுலஸ் ஹவுஷிங்” (Modulus Housing) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவமனை கேரள மாநிலம் வேநாடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயனுக்கு வந்துள்ளது.
  • ☛ “KURMA” மொபைல் செயலி : இந்திய ஆமை இனங்களை பற்றிய விவரங்களை கண்காணித்தல் மற்றும் அறிவித்தலுக்காக KURMA” எனும் மொபைல் செயலியை இந்திய ஆமைகள் பாதுகாப்பு செயல்பாட்டு நெட்வர்க்(Indian Turtle Conservation Action Network (ITCAN)) எனும் அமைப்பு உருவாக்கியுள்ளது.
    • கூ.தக. : உலக ஆமைகள் தினம் - மே 23
  • ☛ ஐக்கிய நாடுகளவையின் பொருளாதார மற்றும் சமூக கவுண்சிலின் (United Nations Economic and Social Council (ECOSOC) ) உயர்மட்ட கூடுகையில் பிரதமர் மோடி அவர்கள் 17-7-2020 அன்று உரையாற்றினார்கள்.
    • கூ.தக. : 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ’ECOSOC’ அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் ராமசாமி முதலியார் எனும் தமிழராவர். நியூயார்க்கில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக, நார்வே நாட்டைச் சேர்ந்த மோனா ஜூல் (Mona Juul) என்பவர் உள்ளார். 

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛ சீனா ஆராய்ந்து தயாரிக்கும் கரோனா தடுப்பூசி உலகளாவிய பொதுப் பொருளாக வழங்கப்படும் என்று 73ஆவது உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் வாக்குறுதி அளித்துள்ளார்.
  • ☛ ஐக்கிய நாடுகளவையின் 75 ஆவது ஆண்டு தினம் 21 செப்டம்பர் 2020 அன்று “நாம் விரும்பும் எதிர்காலம், நமக்குத் தேவையான ஐ.நா: பன்முகத்தன்மைக்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல்” (The Future We Want, the UN We Need: Reaffirming our Collective Commitment to Multilateralism) எனும் மையக்கருத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

பொருளாதாரம்

  • ☛ இந்தியாவில், கடந்த, 2005 முதல், 2016 வரையிலான, 10 ஆண்டு காலகட்டத்தில், 27.30 கோடி பேர், வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக ஐ.நா., வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி திட்டம் (Oxford Poverty and Human Development Initiative (OPHI)) ஆகியவை இணைந்து வெளியிட்ட புள்ளி விபரத்தில் (UN’s Global Multidimensional Poverty Index) தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ☛ மூன்றாவது ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூடுகை (G20 Finance Ministers and Central Bank Governors meet) இணைய வழியில் 18-7-2020 அன்று நடைபெற்றது. சவுதி அரேபியா நாடு தலைமையேற்று நடத்திய இந்த கூடுகையில் இந்தியாவின் சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். 

விருதுகள்

  • ☛ ஐக்கிய நாடுகளவையின் ”நெல்சன் மண்டேலா பரிசு 2020” (Nelson Mandela Prize 2020) கிரேக்க நாட்டைச் சேர்ந்த மரியானா வர்டினோயனிஸ் (Marianna Vardinoyannis) மற்றும் கினியா (Guinea ) நாட்டைச் சேர்ந்த மருத்துவர் மோரிஷானா கோயாடே (Morissana Kouyaté) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூ.தக. : ஐ.நா. பொது சபையால்( United Nations General Assembly (UNGA) ) 2014 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நெல்சன் மண்டேலா பரிசு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

நியமனங்கள்

  • ☛ உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி யு.யு.லலித் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் புதிய மற்றும் ஐந்தாவது உறுப்பினராகியுள்ளார். இவா் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 2022 நவம்பா் 8-ஆம் தேதி பணி ஓய்வு பெறும் வரை, கொலீஜியத்தின் உறுப்பினராக இருப்பாா்.
    • கூ.தக. : தற்போது, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் உறுப்பினா்களாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எப்.நாரிமன் ஆகியோா் உள்ளனா். ஐந்து மூத்த நீதிபதிகளை உறுப்பினா்களாகக் கொண்ட இந்தக் கொலீஜியம்தான், நீதிபதிகள் நியமனத்துக்கான பெயா்களை பரிந்துரை செய்யும்.

முக்கிய தினங்கள்

  • ☛ சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் (Nelson Mandela International Day) - ஜீலை 18

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ☛ ”பிளாக்ராக் மால்வேர்” (Blackrock Malware) என்ற பெயரிலான ‘கணிணி தீம்பொருள்’ ( Malware) ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளிலிருந்து பயனர்களின் கிரடிட் கார்டு தகவல்கள் மற்றும் கடவுச்சொல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!