நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 21-22 July 2020

தமிழ்நாடு

  • ☛ கீழடி அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக அங்கு ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் நவீன அகழ்வைப்பகம் கட்டுவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 20-7-2020 அன்று அடிக்கல் நாட்டினார். கீழடியில், 2013-14-ம் ஆண்டு முதல் 6 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான தொல்லியல் அகழாய்வுகளின் மூலம் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று தெரிவிக்கிறது. மேலும், இந்தியாவில் கங்கைச் சமவெளி பகுதியில் கி.மு.6-ம் நூற்றாண்டளவில் தோன்றிய 2-ம் நகரமயமாக்கம் தமிழகத்தில் காணப்படவில்லை என்ற கருதுகோள் இதுவரை அறிஞர்களிடையே நிலவிவந்தது. ஆனால் கீழடி அகழாய்வு கி.மு. 6-ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் நகரமயமாக்கம் உருவாகிவிட்டதை நமக்கு உணர்த்துகிறது.
  • ☛ தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

  • ☛ மிஷோராம் மாநிலத்தின் முதலாவது மெகா உணவுப் பூங்கா திட்டமான ”ஷோராம் மெகா உணவு பூங்காவை” (Zoram Mega Food Park Ltd) மத்திய உணவு பதப்படுத்தல் தொழில் நிறுவனங்கள் (Ministry of Food Processing Industries) அமைச்சர் ஹஷிம்ரத் கபூர் படால் ( Harsimrat Kaur Badal) 21-7-2020 அன்று தொடங்கி வைத்தார்.
  • ☛ இந்தியாவின் முதலாவது, எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான பொது மையம் (public Electric Vehicle charging plaza) புது தில்லியில் 20-7-2020 அன்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • ☛ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 (Consumer Protection Act, 2019) 20 ஜீலை 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 (Consumer Protection Act, 1986) க்கு மாற்றாக அமையும்.
முக்கிய அம்சங்கள் :
  • ☛ மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்’ (Central Consumer Protection Authority) : நுகர்வோரின் உரிமைகளை அமல்படுத்துதல், பாதுகாத்தல், ஊக்குவித்தல்ஆகியவற்றுக்காக, இந்த சட்டத்தின் கீழ் ‘மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்’ (Central Consumer Protection Authority) என்ற அமைப்பு அமைக்கப்பட இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மேலும், நுகர்வோர் உரிமைகள் மீறல்களை விசாரித்தல், புகார்கள் ,வழக்குகளைப் பதிவுசெய்தல், பாதுகாப்பற்ற பொருள்கள் மற்றும் சேவைகளைத் திரும்பப் பெறுதல், நியாயமற்ற வணிகநடைமுறைகள், திசைதிருப்பும் விளம்பரங்களை ரத்து செய்தல், தவறான விளம்பரங்களைத் தயாரிப்போர், அனுமதி அளிப்போர், வெளியிடுவோருக்கு அபராதம் விதித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிசிபிஏ-வுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
    • மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் : மத்திய நுகர்வோர் நலம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரைத் தலைவராகவும், இணையமைச்சரை துணைத்தலைவராகவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 34 உறுப்பினர்களையும் கொண்ட நுகர்வோர் பிரச்சினைகள் பற்றிய ஆலோசனை அமைப்பான மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சிலை அமைப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்சில் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • நுகர்வோர் தாவா தீர்வு ஆணையத்தின் விதிமுறைப்படி, ரூ.5 லட்சம் வரையிலான வழக்கு தாக்கல் செய்ய கட்டணம் ஏதுமில்லை, மின்னணு அடிப்படையில் புகார்களைத் தாக்கல் செய்ய வசதி உள்ளது.
  • ☛ உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020 (Global Real Estate Transparency Index (GRETI) 2020) ல் இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பட்டியலை அமெரிக்காவைச் சேர்ந்த Jones Lang LaSalle’s (JLL) நிறுவனம் இரண்டாண்டுகளுக்கொருமுறை வெளியிட்டு வருகிறது.
  • ☛ ”மனோதர்பன்” (MANODARPAN) என்ற பெயரில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை உதவி வளங்குவதற்கான திட்டத்தை மத்திய மனிதவளத்துறை ‘சுய சார்பு இந்தியா திட்டத்தின்’ (Atma Nirbhar Bharat Abhiyan) ஒரு பகுதியாக 21-7-2020 அன்று தொடங்கியுள்ளது.
  • ☛ கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள ”ChAdOx1 nCoV-19” தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு , பூனேவைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India (SII)) ஒப்பந்தம் செய்திருக்கிறது. மனிதர்களுக்கு செலுத்தி பார்த்ததில் வெற்றி கண்டுள்ள ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவில் டிசம்பரில் கிடைத்து விடும்.
  • ☛ இந்தியா ஐடியா உச்சி மாநாடு (INDIA IDEAS SUMMIT) , அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் (U.S.-India Business Council )சார்பில் ‘சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவோம்‘ என்ற பொருளில் 21-22 ஜீலை 2020 தினங்களில் இணையவழியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், 22-7-2020 அன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஆகியோரும் பேசுகிறார்கள்.
  • ☛ மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் (85) 21-7-2020 அன்று காலமானார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த பாஜகவின் லால்ஜி தாண்டன் எம்பியாகவும், பிகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
  • ☛ 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 450 ஜிகாவாட் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐநா பொருளாதார மற்றும் சமூக குழுமத்தின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி 18-7-2020 அன்று நடைபெற்ற காணொலிக் காட்சி வாயிலாக உரையில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்த முயற்சியால் கரியமில வாயுவால் ஏற்படும் மாசு குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். பல கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டதாலும், 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டதாலும், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஆறு லட்சம் கிராமங்களுக்கு முழு கழிப்பிட வசதி ஏற்படுத்தியுள்ளதையும், ஐந்தாண்டுகளில் 11 கோடி வீடுகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கிக் கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டதாகவும், அதில் 22 கோடி வங்கிக் கணக்குகள் பெண்களுக்கானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

  • ☛ ”ஃபாசெக்ஸ்” (“Passex”) என்ற பெயரில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கிடையேயான ஒத்துழைப்பு இராணுவப் பயிற்சி தென்கிழக்கு கடலுக்கு செல்லும் வழியில் மத்திய கிழக்கு கடலில் 20-7-2020 அன்று நடைபெற்றது.
    • கூ.தக . : ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுடனும் ஏற்கனவே இதே பெயரில் (“Passex”) கடற்படை ஒத்திகை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛ கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய ”ChAdOx1 nCoV-19” என்ற தடுப்பூசியின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
  • ☛ அரபு நாடுகளில் முதல் விண்வெளித் திட்டமாக, செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) வரலாறு படைத்துள்ளது . "அல் அமல்” (Al-Amal) அல்லது "ஹோப் (நம்பிக்கை / Hope)” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம் ஜப்பானின் தானேகசிமா தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து 20-7-2020 அன்று மிட்சுபிஷி ஹெச்-2ஏ (Mitsubishi H-IIA) என்ற ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை நோக்கி 49.50 கோடி கி.மீ. பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த விண்கலம், 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்து, அக்கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்துக்கு இதுவரை அனுப்பப்பட்டுள்ள விண்கலங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சுற்றிவந்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஆய்வு செய்கின்றன. ஆனால், இந்த ஹோப் விண்கலமானது ஒரு முழு செவ்வாய் ஆண்டு (இரு பூமி ஆண்டுகளுக்கு இணையானது) செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 200 மில்லியன் டாலர் (ரூ.1,496 கோடி) மதிப்பீட்டிலான இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
  • ☛ ”ANASIS-II” என்ற பெயரில் தென் கொரியா நாட்டின் முதல் இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக் கோள் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் 'Falcon 9’ ராக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • ☛ முதலாவது, ஐ.நா. உலக செஸ் தினம் (United Nations’(UN) First World Chess Day ) - ஜீலை 20
  • ☛ விண்வெளி ஆய்வுப்பயண தினம் (Space Exploration Day) - ஜீலை 20 (1969 ஆம் ஆண்டு ஜீலை 20 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஃபஷ் ஆகியோர் நிலவின் மேற்பரப்பில் இறங்கிய தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.)

விளையாட்டுகள்

  • ☛ ஆஸ்திரேலியாவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (International Cricket Council (ICC). டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2020) ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் போட்டி, அடுத்த ஆண்டு (2021) அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும் இறுதிப் போட்டி, அடுத்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ☛ கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். 
  • ☛ 21-7-2020 அன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசையில் உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (911 புள்ளி) முதலிடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்திலும் (886 புள்ளி) நீடிக்கிறார்கள்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!