நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 28 July 2020

Current Affairs for TNPSC Exams 28 July 2020

தமிழ்நாடு

  • ☛ தமிழகத்தின் ஆறாவது கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மருத்துவக்கல்லூரியில் 2021-22-ம் ஆண்டில் இருந்து கல்வியாண்டு தொடங்கும். அந்த கல்வியாண்டில் முதலில் 40 பேரும், அதன்பின்னர் 80 பேரும் சேர்க்கப்படுவார்கள்.
    • கூ.தக : ஏற்கனவே, சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லையை தொடர்ந்து சேலம் தலைவாசல் கூட்டு ரோட்டில் 5-வது கால்நடை மருத்துவக்கல்லூரி நிறுவப்பட்டது.
  • ☛ வேளாண்மை அறிவியலில் சிறந்த முனைவா் பட்ட ஆராய்ச்சி அறிக்கைக்கான இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவாஹா்லால் நேரு விருது  2019  கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்  வினோத்குமாா் செல்வராஜின், பருத்தியில் புகையிலை கீறல் நச்சுயிரி நோய்த் தொற்று - அதன் அறிகுறிகள் வெளிப்பாடு, பரவும் முறை, மேலாண்மை என்ற ஆய்வறிக்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ☛ தமிழகத்துக்கு ரூ. 12,305 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.
  • ☛ மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளில் 27-7-2020 அன்று  தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரீதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்விதத் தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்துள்ளது.  தீர்ப்பில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டவேண்டும், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவ கவுன்சில் செயலர் ஆகியோர் கொண்ட 3 நபர் கமிட்டியாக அமைக்கப்படவேண்டும். இந்த கமிட்டி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும்.3 மாத்தில் குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியா

  • ☛ "M-STRIPES" பற்றி : M-STriPES (Monitoring System for tigers - intensive protection and ecological status) என்பது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புலி கணக்கெடுப்புக்கு   பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு செயலியாகும்.
    • 2018-2019 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் தேசிய புலிகள் கணக்கெடுப்பானது, உலகிலேயே மிகப் பெரிய அளவில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணித்து கணக்கெடுப்பாக  கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.
    • புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் , 2010 :
    • புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010-ல் ஒன்று கூடி, 2022 ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
    • இது புலிகள் பாதுகாப்புக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதே கூட்டத்தில், ஆண்டுதோறும் ஜூலை 29-ந் தேதியை உலகப் புலிகள் தினமாகக் கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • ☛ சூழலியல் தாக்க மதிப்பீட்டு (Environment IMpact Assessment) வரைவு 2020 ஐ மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த வரைவின் மீதான மக்கள் கருத்துக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
     சூழலியல் தாக்க மதிப்பீடு (EIA) பற்றி ... (நன்றி : தமிழ் சமயம் (tamil.samayam.com))
  • சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்களால், ஒரு நாட்டின் சூழலியல் வளங்கள் பலியாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்படும் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்று அழைக்கப்படுகிறது.
  • 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நடைமுறையில் இருக்கின்றது. தற்போது, ‘சூழலியல் தாக்க மதிப்பீடு 2006’ நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இதன் மீதான மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
முக்கிய அம்சங்கள் /விமர்சனங்கள் :
  • சூழலியல் தாக்க மதிப்பீட்டின் நோக்கம் சுற்றுச்சூழலுக்கான தீவினைகளை முன்பே கணித்து அதனைத் தடுப்பதுதான். அதற்கு மக்கள் கருத்து, நிபுணர் அறிக்கை, ஆய்வு என பல்வேறு வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளது இந்தச் சட்டம். ஆனால், தற்போது வந்திருக்கும் வரைவு சூழலியல் பாதுகாப்பு என்பதைக் கைவிட்டு முதலீட்டை முதன்மைப்படுத்துகிறது என்பதுதான், இந்த வரைவின் மீது சூழலியாளர்களின் முதல் விமர்சனமாக உள்ளது.
  • இந்த வரைவின் செயல் வடிவம் பல்வேறு தொழிற்சாலைகளை, அவை தொடங்கப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கையாகச் செய்யும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதே போல அனுமதி பெறுவதையும் தொழிற்சாலைகளுக்கு எளிமையாக்கி இருக்கிறது.
இரண்டு விதமான அனுமதிகள்
  • 2006ஆம் ஆண்டுக்குப் பிறகான சூழலியல் தாக்க மதிப்பீட்டின்படி, இரண்டு அனுமதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இது அனுமதி வழங்கும் அதிகாரத்தை மாநில மற்றும் மத்தியக் குழுக்கள் என இரண்டு அமைப்புகளிடம் ஒப்படைத்தது. ஆனால், தற்போதைய வரைவின்படி இனி, இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஒன்று, வல்லுநர் குழு அமைக்கபட்டு குறிப்பிட்ட திட்டம் குறித்த ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது. இரண்டாவது, எந்தவித வல்லுநர் குழு ஆய்வுமின்றி அனுமதி கொடுத்துவிடுவது.
செயல்பாட்டு அறிக்கை கால அவகாசம்
  • அதேபோல, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த விதிமுறையை, ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதுமென்று இந்தப் புதிய சட்டவரைவு மாற்றியுள்ளது.
சதுப்பு நிலங்களுக்கு ஆபத்து
  • சதுப்பு நிலக் காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்று கூறும் பிரிவுகளும் இந்த வரைவில் இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில், சூழலியல் நோக்கில் பார்த்தால், ஒரு சூழலின் நீர்வளத்துக்கு பெரும் ஆதாரமாக விளங்குபவை சதுப்புநிலப்பகுதிகள் தான்.
கார்ப்பரேட்டுகளுக்கு நிலம்
  • வறண்ட புல்வெளிக் காடுகள், இந்தப் புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாகக் கணக்குக் காட்டப்பட்டு கார்ப்பரேட் தொழில் துறைகளுக்குத் திறந்துவிடப்படும்.
  • ☛ வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக”மௌசம்” என்ற புதிய செயலியை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் 27-7-2020 அன்று அறிமுகப்படுத்தினாா். இச்செயலியை வட வெப்ப மண்டலங்களுக்கான சா்வதேச பயிா் ஆராய்ச்சி நிறுவனம், புணேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும். நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும். உள்ளூா் வானிலை நிகழ்வுகள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும். அவசரகால வானிலை குறித்த அறிவிப்பும், அதன் தாக்கம் தொடா்பாகவும் முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒளிபரப்பப்படும். இந்த பயன்பாடு அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் சுமாா் 450 நகரங்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வழங்கும். அதேபோல கடந்த 24 மணிநேர வானிலைத் தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும்.

வெளிநாட்டு உறவுகள்

  • ☛ வியட்நாம் நாட்டில் பஞ்சு கிடங்குகளை (cotton warehouse) அமைக்க இந்தி பஞ்சு நிறுவனம் (Cotton Corporation of India)  திட்டமிட்டுள்ளது.  பஞ்சு ஏற்றுமதியை  அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • ☛ இந்தியா - இந்தோனேசியா இடையே, பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் பிரிவில் ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்ய இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தோனேசியாவுக்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வது, கடல்சாா் பாதுகாப்பை அதிகரிப்பது ஆகியவை தொடா்பாக இந்த ஒத்துழைப்பில் முக்கிய இடம்றவுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு துறையில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
    • கூ.தக. :2018-ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு அரசு முறைப்பயணமாக பிரதமா் மோடி சென்றிருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛  “Ziyuan III 03” என்ற பெயரில்  உயர் தர மேப்பிங் செயற்கைக் கோளை  (high-resolution mapping satellite )  சீனா, தனது Long March-4B ராக்கெட்டின் மூலம்  25-7-2020 அன்று விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
  • ☛ குரோஷியா (Croatia) நாட்டின் புதிய பிரதமராக ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் ( Andrej Plenkovic) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : குரோஷியாவின் தலைநகரம் - ஷாக்ரெப் (Zagreb) | நாணயம் - குரோஷியன் குணா (Croatian kuna)
  • ☛ துனீசியா(Tunisia) நாட்டின் புதிய பிரதமராக ஹிச்செம் மெசிசி (Hichem Mechichi ) நியமிக்கப்பட்டுள்ளார். 
    • கூ.தக. : துனீசியா நாட்டிம் தலைநகரம் ‘துனிஷ்’ (Tunis) | நாணயம் - துனீசியன் தினார் (Tunisian Dinar(TND))

முக்கிய தினங்கள்

  • ☛ உலக கல்லீரல்அழற்சி (ஹெபடிடிஸ்) நோய் தினம் (World Hepatitis Day) - ஜீலை 28 | மையக்கருத்து - ஹெபடிடிஸ் இல்லாத எதிர்காலம் ( Hepatitis-Free Future)
  • ☛ தேசிய வருமான வரி தினம் (Income Tax Day) - ஜீலை 24
    • கூ.தக. : இந்தியாவில் முதல் முறையாக வருமான வரி , ஆங்கிலேயர் காலத்தில் 24 ஜீலை 1860 ல் சர் ஜேம்ஸ் வில்சன் (Sir James Wilson)  என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ☛ “Quest for Restoring Financial Stability in India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் -  விரால் ஆச்சாரியா ( Viral V.Acharya) (முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர்)
  • ☛ The India Way: Strategies for an Uncertain World” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - வெளியுறவுத் துறை அமைச்சர் S ஜெய்சங்கர் (S Jaishankar)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!