TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 30 July 2020

Current Affairs for TNPSC Exams 30 July 2020

தமிழ்நாடு

 • 👉 தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞராக முன்னாள் தலைமை வழக்குரைஞரான ஏ.எல்.சோமயாஜியை தமிழக அரசு நியமித்துள்ளது. அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் சிறப்பு மூத்த வழக்குரைஞர் என்ற பதவியை தற்போது புதிதாக உருவாக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியா

 • 👉 ”Conservation Assured | Tiger Standards [CA|TS]” என்ற பெயரிலான புலிகள் காப்பக தரத்தை இந்தியாவில் உள்ள 50 புலிகள் காப்பகங்களிலும் அமலாக்கம் செய்யவுள்ளதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்   தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority (NTCA)) அறிவித்துள்ளது.
 • 👉 ‘டேர் டு ட்ரீம் 2.0’ (‘Dare to Dream 2.0’ ) என்ற பெயரில் விண்வெளி தொழில்நுட்பத்தில்  ( aerospace technologies ) கண்டு பிடிப்பு போட்டியை  மத்திய  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation (DRDO))  முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தன்று (ஜீலை 27)  அறிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 • 👉 கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதியுதவியை வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய பசிபிக் பேரிடா் மேலாண்மை நிதித் தொகுப்பில் இருந்து இந்த தொகை அளிக்கப்படவுள்ளது. ஜப்பான் அரசு இந்த தொகையை பேரிடா் மேலாண்மை நிதிக்கு அளிக்கிறது.
 • 👉 வங்காளதேசத்திலுள்ள ‘ஸ்ரீ ஸ்ரீ ஜெய் காலி மதார் கோயில்’ (Sree Sree Joy Kali Matar temple) எனப்படும் 300 வருட பழமையான கோயில் இந்தியாவின் உதவியுடன் மறுசீரமைக்கப்படுகிறது.

சர்வதேச நிகழ்வுகள்

 • 👉 ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின்  தலைவராக சீனாவின் நிதியமைச்சர் ’ஜின் லிகுன்’ (Jin Liqun) மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விருதுகள்

 • 👉 புவி அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்புக்கான தேசிய விருதுகள் 2020 :
  • சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ஏ.ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிலவியல் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்து வரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் வி.வி.எஸ்.எஸ்.சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.
  • திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் பாபுவுக்கு, வளி மண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையைச் சார்ந்த என்.வி.சலபதிராவுக்கு, நிலஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருதும், பெண் விஞ்ஞானிக்கான அன்னா மானி விருது, கோவா தேசிய பெருங்கடல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் லிடியா டி.எஸ்.கண்டேபார்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

 • 👉 இந்திய வம்சாவழி எழுத்தாளர் அவ்னி தோஷி (Avni Doshi) எழுதிய  ‘ஃபர்ண்ட் சுகர்’ (‘Burnt Sugar’) எனும் நாவல் புக்கர் பரிசு 2020 (Booker Prize) க்கு போட்டியிடும் 13 புத்தகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்த நாவல், இந்தியாவில் ‘Girl in White Cotton’ எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
 • 👉 உலக மனிதர்கள் கடத்தலுக்கெதிரான தினம் (World Day against Trafficking in Persons.) - ஜீலை 30
 • 👉  சர்வதேச நண்பர்கள் தினம் (International Day of Friendship) - ஜீலை 30

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads