நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டம் (AMMA Covid Care Scheme)

”அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தை” அறிமுகப்படுத்த  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 
       அதன்படி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும்அளிக்கப்படும். 
                அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் அந்த பெட்டகத்தில் இருக்கும்.
                 இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். இதன் மூலம் வீட்டில் இருந்தாலும், நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும்
நன்றி : தினமணி , 10-8-2020
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!