நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 08 August 2020

Current Affairs for TNPSC  Exam 8th August 2020

இந்தியா

  • ☛ கே. வி. காமத் அழுத்தக் கடன் கமிட்டி ( K.V. Kamath stressed loans committee ) :    COVID-19 தொடர்பான அழுத்தக் கடன்களைத் (stressed loans) தீர்ப்பதற்கான விதிமுறைகள் குறித்த பரிந்துரைகளை செய்ய    கே. வி. காமத் தலைமையிலான குழுவை  இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI) )   அமைத்துள்ளது.
  • ☛ இந்தியாவின் முதல் “கிஷான் இரயில் / ‘விவசாய ரயில்’” (  Kisan Rail ) சேவை மகாராஷ்டிராவின் தேவலாலியில் (Devlali ) இருந்து பீகாரின் தனபூர் (Danapur)  ரயில் நிலையத்திற்கு  7-8-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் விவஷாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த இந்த “கிஷான் இரயிலிலானது”  மாதுளை, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும், குடைமிளகாய், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் மற்றும் எளிதில் அழுகும் வேளாண் பொருட்களையும், காய்கறிகள், பழங்களையும் விரைவாகச் சந்தைக்குக் குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல கிசான் ரயில் உதவும்.   இந்த, இந்திய ரயில்வேயின் முதல் பல்பொருள் வேளாண் பார்சல் சர்வீஸ் ரயில்  வாரம் ஒரு முறை இயங்கும்.
  • ☛ இந்தியாவின் முதல் “சுனாமி தயார்நிலை” (“Tsunami ready”) கிராமங்களாக  ஒடிஷா மாநிலத்தின் , வெங்கட்ரைபூர் (Venkatraipur ) மற்றும் நோலியாசாஹி (Noliasahi) எனும் இரு கிராமங்களும்    6-8-2020 அன்று யுனெஸ்கோவின் (United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO)) அரசுகளுக்கிடையேயான பெருங்கடல் குழு ( Intergovernmental Oceanographic Commission (IOC) ) வினால்  அறிவிக்கப்பட்டுள்ளன.   இதன் மூலம்,  “சுனாமி தயார்” என்ற அந்தஸ்தை அடைந்த  முதல் இந்திய மாநிலமாக ஒடிஷாவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அந்நிலையை எட்டிய முதல் நாடாக இந்தியாவும் உருவாகியுள்ளன.
    • கூ.தக. : Intergovernmental Oceanographic Commission (IOC) இன் தலைமையிடம் பாரிஸ் நகரில் உள்ளது.
  • ☛ "கலாசிஸ் முறை" ஒழிப்பு : ஆங்கிலேயர் காலத்திலிருந்து ரயில்வே துறையில் பின்பற்றப்பட்டு வந்த கலாசிஸ் முறை அதாவது பங்களா பியூன் இனிமேல் நியமிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே துறை அதிரடியாக முடிவு செய்து 6-8-2020 அன்று உத்தரவிட்டுள்ளது. கலாசிஸ் அல்லது பங்களா பியூன் எனப்படுவோர் ரயில்வே உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலைபார்ப்பதற்காக நியமிக்கப்படுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ☛ “ராஷ்ட்ரிய ஸ்வச்சாட்டா கேந்திரா” (Rashtriya Swachhata Kendra) என்ற பெயரிலான நிறுவனத்தை பிரதமர் மோடி அவர்கள் 8-8-2020 அன்று புது தில்லியில் தொடங்கி வைக்கிறார். உலகின் மிகப்பெரிய நடத்தை மாற்ற பிரச்சாரமான ”தூய்மை இந்தியா திட்டத்தின்”  வெற்றிகரமான பயணத்தில் ஆர்.எஸ்.கே தகவல், விழிப்புணர்வு மற்றும் கல்வியை  இந்நிறுவனம் வழங்கும்.  காந்திஜியின் சம்பரன் சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் ராஷ்டிரிய சுவாச்சா கேந்திரா  முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

  • ☛ இலங்கையில் நடந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளதையடுத்து,  மஹிந்த ராஜபக்ச   இலங்கை பிரதமராக மறுபடியும் பதவியேற்கவுள்ளார்.
    • கூ.த.: கரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல் முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.

நியமனங்கள்

  • ☛ மத்திய குடிமைப் பணி தேர்வு ஆணையத்தின் (Union Public Service Commission) தலைவராக டாக்டர் பிரதீப் குமார் ஜோஷி  7-8-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

  • ☛ முதலாவது, சர்வதேச உணவு விரயமாகுதல் மற்றும் கழிவாகுதல் பற்றிய விழிப்புணர்வு தினம் (International Day of Awareness of Food Loss and Waste)    29 செப்டம்பர் 2020 அன்று அனுசரிக்கப்படவுள்ளதாக   உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organisation(FAO)) அறிவித்துள்ளது.

விளையாட்டுகள்

  • ☛ இந்தியாவில் 2021-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ( ICC Men's T20 World Cup 2021) திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், நிகழாண்டு நடைபெறவிருந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் என்றும் சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) அறிவித்துள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • ☛ “Amazing Ayodhya” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நீனா ராய் (Neena Rai)
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!