நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 16 August 2020

Current Affairs for TNPSC Exams 16-08-2020

தமிழ்நாடு

☛ சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான தமிழக அரசின் ஓய்வூதியம் ரூ.16,000- லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படுவதாகவும். தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 15-8-2020 சுதந்திர தின உரையின் போது அறிவித்துள்ளார்.
☛ தமிழக அரசின் 74வது சுதந்திர தின விருதுகள் 2020 :
o டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது - ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமார்
o கல்பனா சாவ்லா விருது - பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி என 3 பேருக்கு
o முதல்வரின் சிறப்பு விருது - உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன்
o மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான முதல்வரின் சிறப்பு விருதுகள் :
§ சிறந்த தொண்டு நிறுவனம் - சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ காதுகேளாதோர் பள்ளி
§ சிறந்த சமூக பணியாளர் – சாந்தகுமார், திருச்சி
§ சிறந்த மருத்துவர் -டாக்டர் சியாமளா , சேலம்
§ சிறப்பு நிறுவனம் - அதிக மாற்றுத்திறனாளிக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலா நிறுவனம்
o சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி - சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
o முதல்வரின் நல் ஆளுமை விருது
§ * கருவூல கணக்குத் துறைக்கு மாநிலத்தின் நிதி, கருவூலம், மனிதவள மேலாண்மை மற்றும் ஓய்வூதிய மேலாண்மை ஆகிய பணிகளை கணினிமயமாக்கும் நோக்கோடு ஒருங்கிணைந்த நிதி (ம) மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கருத்துவாக்கியமைக்காக.
§ *பெருநகர சென்னை மாநகராட்சி காய்ச்சல் சிகிச்சை முகாம்கள் நடத்தி கோவிட்-19 நோய்த் தொற்றின் சங்கிலியை உடைத்ததற்காக
§ வேளாண்மை, தோட்டக்கலை, மலைப் பயிர்கள் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் ஆதாரத்தினை பேணுவதற்கான புதுமையான உத்திகளை கையாண்டதன் மூலம் நுண்ணீர்ப் பாசனத்தில் நாட்டில் முதலிடத்தை தமிழ்நாடு பெறுவதற்கு உதவியதற்காக
o சிறந்த சமூகப் பணியாளர் - சாந்தகுமார், ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் திருச்சிராப்பள்ளி
o மகளிர் நலனுக்காகச் சிறப்பாகத் தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணியாளருக்கான விருதுகள்
§ சிறந்த சமூக சேவகர் (பெண்களுக்காக செய்யப்படும் சிறந்த பணிக்காக) - கோதனவள்ளி, கோயம்பத்தூர்
§ சிறந்த நிறுவனம் (பெண்களுக்கு சேவை செய்வதற்காக) - கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம், கடலூர்
o சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்காக முதல்வர் விருதுகள்
§ சிறந்த மாநகராட்சி - வேலூர்
§ சிறந்த நகராட்சிகள்: 1. விழுப்புரம், 2.கரூர், 3.கூத்தநல்லூர்
§ சிறந்த பேரூராட்சிகள் : 1. முதல் பரிசு வனவாசி, சேலம் மாவட்டம், 2. வீரபாண்டி, தேனி மாவட்டம், 3. மதுக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம்
o முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது 2020
§ அருண்குமார், மதுரை மாவட்டம்
§ ராம்குமார், கடலூர் மாவட்டம்
§ அம்பேத்கர், சென்னை
§ புவனேஸ்வரி, கடலூர் மாவட்டம்
☛ 3 நிமிடம் 25 விநாடிகளில் 230 திருக்குறளை ஒப்புவித்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி யூதிஷா உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தியா

☛ ‘தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம்’ (National Digital Health Mission (NDHM) ) என்ற பெயரில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தனி சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் திட்டத்தை 74-வது சுதந்திர தின உரையில் 15-8-2020 அன்று பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இதனை, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) திட்டத்தை செயல்படுத்தி வரும் தேசிய சுகாதார ஆணையம் (National Health Authority (NHA)) ‘தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை’ வடிவமைத்து நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். அதில் அவர்களுக்கு இருக்கும் நோய், நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள், பரிசோதனை அறிக்கைகள், கொடுப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும்.
☛ அடுத்த 1000 நாட்களில், ஒவ்வொரு கிராமமும் அடுத்த 1000 நாட்களில் கண்ணாடி இழை இணையக் கேபிள் (ஓஎஃப்சி) இணைப்புடன் இணைக்கப்படும் எனவும் லட்சத்தீவு, கடல் நீருக்கடியில் அமைக்கப்படும் கண்ணாடி இழை இணையக் கேபிள் மூலம் இணைக்கப்படும் என்றும் 74-வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

☛  இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக 15-8-2020 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள புகழ்பெற்ற “டைம்ஸ் சதுக்கத்தில்” இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

☛ ’ஓரியன்’ என்ற விண்மீன் கூட்டத்தில் மிகப்பெரிய சூப்பர் ஜெயண்ட் நட்சத்திரம் ( சிகப்பு ராட்சத நட்சத்திரம் ) என்று அழைக்கப்படும் ‘பீட்டல்ஜூஸ்’ ( Betelgeuse) என்ற மகாநட்சத்திரம் அதன் ஒளியை, பிரகாசத்தை கடந்த அக்டோபர் 2019 ல் இழக்கத் தொடங்கி பிப்ரவரி 2020 மத்தியில் அதன் பிரகாசத்தில் மூன்றில் 2 பங்கை இழந்துள்ளதாக அமெரிக்காவின் ஹப்பிள் விண்வெளி நுண் நோக்கி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
☛ சந்திர மேற்பரப்பில் கட்டமைபுகளை உருவாக்குவதற்கான ”விண்வெளி செங்கலை” (“space bricks”) உருவாக்க ஒரு நிலையான செயல்முறையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ndian Space Research Organisation ) மற்றும் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ( Indian Institute of Science (IISc) ) இணைந்து உருவாக்கியுள்ளன. விண்வெளி செங்கற்கள் (“space bricks”) என பெயரிடப்பட்ட இது எதிர்காலத்தில் சந்திரனின் மேற்பரப்பில் வசிப்பதற்கான கட்டமைப்புகளை ஒன்றிணைக்க பயன்படும்.இந்த செயல்முறை சந்திர மண், பாக்டீரியா மற்றும் குவார் பீன்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுமை தாங்கும் செங்கற்களை உருவாக்க உதவுகிறது. இப்போது உருவாக்கப்பட்ட செயல்முறை மனித சிறுநீரில் இருந்து பெறப்பட்ட யூரியாவைப் பயன்படுத்துகிறது, இது சந்திரனில் கட்டமைப்புகளை உருவாக்க சந்திர மண்ணுடன் கலக்கப்படலாம். சிமெண்டிற்கு பதிலாக குவார் கம் பயன்படுத்தப்படுவதால், குறைந்த கார்பன் தடம் இருக்கும். தேவையான எந்த வடிவத்திலும் செங்கலை மேலும் படிகமாக்க பாக்டீரியா சேர்க்கப்படுகிறது.

விளையாட்டுகள்

☛ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக 15-8-2020 அன்று அறிவித்துள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!