நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 18 August 2020

Current Affairs Today 18-8-2020

தமிழ்நாடு

☛   தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர் டாக்டர் பி.சிவகுமார் (Dr B Siva Kumar) 17-8-2020 அன்று திருச்சியில் காலமானார்.

இந்தியா

☛   உலகின் மிக உயரமான (141மீட்டர்) சுவர்த்தூண் பாலம் (PIER BRIDGE) இந்திய இரயில்வேயினால் மணிப்பூர் மாநிலத்தின் எல்ஜாய் நதியின் ( Ijai river) குறுக்கே கட்டப்பட்டு வருகிறது.
☛   ”ஸ்வஸ்தியா” (‘Swasthya’) என்ற பெயரில் நாட்டில் உள்ள பழங்குடி மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தொடா்பாக விரிவான தகவல்களை பெறுவதற்கான வலைதள பக்கத்தை (Tribal Health & Nutrition Portal ) மத்திய அரசு 17-8-2020 அன்று தொடங்கியது. 177 மாவட்டங்களில் கல்வியறிவு பெற்றுள்ளவா்களின் விகிதம், பழங்குடிகள் மக்கள்தொகை, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, பாலின விகிதம், பெண்களில் கல்வியறிவு பெற்றுள்ளவா்களின் விகிதம், சுகாதார மையங்கள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்கள் இந்த வலைதள பக்கத்தில் கிடைக்கப்பெறும். பழங்குடிகளின் நலன் கருதி கொள்கைகளை வகுக்க, அவா்களின் சுகாதாரம் தொடா்பாக மாவட்ட வாரியாக விரிவான தகவல்களுடன் தொடங்கப்பட்டுள்ள முதல் வலைதள பக்கம் இதுவாகும்.
☛   புகழ்பெற்ற ஹிந்துஸ்தானி பாடகா் பண்டிட் ஜஸ்ராஜ் 17-8-2020 அன்று காலமானார். இவர், ஹரியாணா மாநிலம், ஹிஸாா் மாவட்டத்தில் உள்ள பிலி மண்டோரி கிராமத்தில் பிறந்தவா். மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளாா்.
☛   ”சபா டிவி” (SABHA TV) என்ற பெயரில் நாட்டில் முதல்முறையாக மாநில சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்ப தொலைக்காட்சி கேரள அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. அதனை மக்களவை தலைவா் ஓம் பிா்லா காணொலி வாயிலாக 17-8-2020 அன்று தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவையின் வரலாறு, அங்கு நடைபெறும் விவாதங்கள், நிறைவேற்றப்படும் மசோதாக்கள் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதே ”சபா டிவி” யின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
☛   ”அலேக்” (‘ALEKH’) என்ற பெயரில் காலாண்டு மின் இதழை (e-newsletter) மத்திய பழங்குடினர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
☛   மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of Human Resource Development (MHRD) ) பெயர் கல்வி அமைச்சகம் (Ministry of Education) என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது . புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
o கூ.தக. : புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைக்க ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ம் தேதி சமர்ப்பித்தது.

நியமனங்கள்

☛   எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force (BSF)) தலைவராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டுள்ளாா். இவர் கூடுதல் பொறுப்பாக, தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் ( Narcotics Control Bureau (NCB)) இயக்குநர் ஜெனரல் பதவியையும் வகிப்பார்.
☛   அலாகாபாத், கேரளம், குஜராத் உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்களை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு ஒப்புதல் அளித்தது.
o இதன்படி, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய்குமாா் பச்சோரி, சுபாஷ்சந்திர சா்மா, சுபாஷ்சந்த், சரோஜ் யாதவ் ஆகியோரை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
o கேரள உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கீழமை நீதிமன்ற நீதிபதிகள் கருணாகரன் பாபு, கெளசா் எடப்பாகத்து, வழக்குரைஞா்கள் முரளி புருஷோத்தமன், ஸியாத் ரஹ்மான் ஆகியோரை நியமிக்கும் பரிந்துரைக்கும் அந்தக் குழு ஒப்புதல் வழங்கியது.
o இதுதவிர, குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக வழக்குரைஞா்கள் வைபவ் தேவாங் நானாவதி, நிா்ஸாா்குமாா் சுஷீல்குமாா் தேசாய், நிகில் ஸ்ரீதரன் கரீல் ஆகியோரை நியமிக்கும் பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
கூ.தக. : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், யு.யு.லலித் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

☛   “Full Spectrum: India’s Wars, 1972-2020 என்ற பெயரில் இந்தியாவின் போர் வரலாறு பற்றிய புத்தகத்தை ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜீன் சுப்ரமணியம் ( Arjun Subramaniam) எழுதியுள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!