நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 21 August 2020

Current Affairs for TNPSC Exams  21-08-2020
தமிழ்நாடு
☛ தூய்மையான நகரங்களின் கணக்கெடுப்பு 2020 அறிக்கையில் ( Swachh Survekshan 2020 Report) தமிழ்நாடு 10 வது இடத்தைப் பெற்றுள்ளது.
o 10 லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரங்களின் பட்டியலில்,கோயம்பத்தூர் 40 வது இடத்தையும், மதுரை 42 வது இடத்தையும், சென்னை நகரம் 45-வது இடத்தைப் பெற்றுள்ளன.
o 1 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் திருச்சி 102 வது இடத்தையும், திருநெல்வேலி 159 வது இடத்தையும், சேலம் 173 வது இடத்தையும் திருப்பூர் 223 வது இடத்தையும், வேலூர் 272 வது இடத்தையும் மற்றும் காஞ்சிபுரம் 280 வது இடத்தையும் பெற்றுள்ளன.
☛ சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக கௌரி நியமிக்கப்பட்டுள்ளார்.
☛ தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழக துணைவேந்தராக சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா
☛  ‘டிஜிட்டல் வாழ்க்கைத்தர குறியீடு 2020’ ( “Digital Quality of Life (DQL) Index 2020”) ல் இந்தியா 57 வது இடத்தைப் பெற்றுள்ளது. SurfShark எனப்படும் இணைய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே டென்மார்க், ஸ்வீடன் மற்றும் கனடா நாடுகள் பெற்றுள்ளன. மேலும் குறைந்த விலையில் இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் (Internet Affordability) இந்தியா 9 வது இடத்தையும், இணைய தள தரத்தில் (Internet Quality) 78 வது இடத்தையும், மின் உட்கட்டமைப்பில் (Electronic (E)-infrastructure) 79 வது இடத்தையும், ’இணைய பாதுகாப்பில்’ (E-security) 57 வது இடத்தையும், மின்னாளுமையில் (E-Government) 15 வது இடத்தையும் பெற்றுள்ளது.
☛  இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனத்தின் (NPCI) சர்வதேச பணப்பரிமாற்ற நிறுவனம் (NPCI International Payments Limited (NIPL)) எனும் புதிய கிளை நிறுவனத்தை இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India (NPCI)) தொடங்கியுள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்வமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக (Chief Executive Officer(CEO) ) ரிதேஷ் சுக்லா (Ritesh Shukla) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய அமைப்பு, சர்வதேச பணப்பரிமாற்றம் தொடர்பான தொழில்நுட்பங்களை வடிவமைத்து செயல்படுத்தும்.
☛ இந்தியாவில் தனியார் நிறுவனத்தினால் முழுவதுமாக தயாரிக்கப்பட்ட முதல் பினாக்கா ரக ராக்கெட்டுகள் (Pinaka rockets) ராஜஸ்தானின் பொக்ரானில் இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது . ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டத்தில் முக்கிய மைல் கல்லாக கருதப்படும் இந்த ராக்கெட்டை , நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட, “எகனாமிக் எக்ஸ்புளோசிவ் லிமிடெட் (Economic Explosives Ltd (EEL))” எனும் தனியார் நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் தனியார் துறைக்கு இடையிலான தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தின் ( transfer of technology) அடிப்படையில் தயாரித்துள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
☛ இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே கலாச்சார ஒப்பந்தம் 20-8-2020 அன்று கையெழுத்திடப்பட்டது . 2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் இந்த ஒத்துழைப்பு திட்டம் இரு நாடுகளுக்கிடையே மக்கள் பரிமாற்றத்தை (people to people exchange) ஊக்குவிக்கும்.
சர்வதேச நிகழ்வுகள்
☛ ஈகுவடோரியல் கினியா (Equatorial Guinea) பிரதமராக ஃபிரான்ஸிஸ்கோ ஆசூ (Francisco Asue) 19-8-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார் .
o கூ.தக. : Equatorial Guinea வின் தலைநகரம் ’மலாபோ’ (Malabo), நாணயம் - Central African CFA franc, தற்போதைய அதிபராக தியோடர் ஓபியாங் (Teodoro Obiang) உள்ளார்.
☛ மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள "ஜுன்டா" எனப்படும் ராணுவ அரசின் தலைவராக அந்த நாட்டின் ராணுவ உயரதிகாரி அஸிமி கோய்டா தன்னை அறிவித்துக்கொண்டுள்ளாா்.
☛ ஆஸ்திரேலிய மக்களுக்கு கோவிட்-19 க்கான ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்துள்ளார்.
☛  ’மார்டிர் ஃகாசெம் சொலெமானி’ (Martyr Qassem Soleimani) என்ற பெயரில் 1400 கி.மீ. தொலைவிலுள்ள நிலத்திலிருந்து - நிலத்திலுள்ள இலக்கை தாக்க வல்ல பாலிஸ்டிக் ஏவுகணையை (surface-to-surface ballistic missile) ஈரான் நாடு வெற்றிகரமாக சோதித்துள்ளது.
முக்கிய தினங்கள்
☛  சமூக ஒற்றுமை தினம் (Communal Harmony Day) / சத்பவனா திவாஸ் (Sadbhavana Diwas) - ஆகஸ்டு 20 (முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் பிறந்த தினம்)
☛  உலக கொசு தினம் (World Mosquito Day) - ஆகஸ்டு 20
அறிவியல் & தொழில்நுட்பம்
☛ ”செரஸ்” ( Ceres) எனும் குறுங்கோளுக்கு (Dwarf Planet) ஆராய்ச்சியாளர்கள் “பெருங்கடல் உலகம்” (Ocean World) என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளனர்.
விளையாட்டுகள்
☛  2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( Board of Control for Cricket in India (BCCI)) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
o கூ.தக. : ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது.
BCCI பற்றி ....
o 1928 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் (Tamil Nadu Societies Registration Act) கீழ் தொடங்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையிடம் மஹாராஷ்டிரமாநிலம், மும்பையிலுள்ள வான்கடே ஸ்டேடியத்தில் (Wankhede Stadium) உள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக சவுரவ் கங்குலியும், செயலராக ஜெய் ஷா-வும் உள்ளனர்.
☛ 2020 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . விளையாட்டு அமைச்சகத்தைச் சோ்ந்த 12 போ் கொண்ட தோ்வுக் குழு இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது விளையாட்டுத் துறையின் உயரிய விருதான கேல் ரத்னாவுக்கு ஒரே நேரத்தில் 5 போ் பெயா் பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 4 போ் பெயா் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கா்மாகா், துப்பாக்கி சுடுதல் வீரா் ஜிது ராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோருக்கு இந்த விருது ஒன்றாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛ ”Haksar on India’s Sri Lanka Policy” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - V. சூரியநாராயணன்
☛ “India Tomorrow: Conversations with the Next Generation of Political Leaders” என்ற பெயரில் இந்தியாவிலுள்ள 50 வயதிற்கு கீழுள்ள அரசியல் தலைவர்களின் பேட்டிகளடங்கிய புத்தகத்தை பிரதீப் சிப்பீர் (Pradeep Chhibber) மற்றும் ஹர்ஷ் ஷா (Harsh Shah) ஆகியோர் எழுதியுள்ளனர்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!