TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

குரூப் II, IIA 2020 (New Syllabus) Test Batch

குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

New Test Batch Admission Going On
Download Test Schedule / Join

TNPSC Current Affairs 1-2 September 2020

TNPSC Current Affairs 1,2-09-2020
இந்தியா
☛  ”சாவ்னி கோவிட் : யோதா சன்ரக்‌ஷன் யோஜனா” (“Chhavni COVID: Yodha Sanrakshan Yojana” ) என்ற பெயரில் இந்தியா முழுவதும் 62 இராணுவ கன்டோன்மென்ட் பகுதிகளில் பணிபுரியும் 10000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான குழு ஆயுள் காப்பீட்டு திட்டத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (Life Insurance Corporation (LIC)) மூலம் தொடங்கியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் எதிர்பாரா உயிரிழப்பு நேரிடும் தருணத்தில், பயனர்கள் ரூ.5இலட்சம் இழப்பீடு பெறுவர்.
☛  உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மெட்ரோ (Kanpur Metro ) இரயில் திட்டத்தில் 650 மில்லியன் யூரோ முதலீடு செய்வதாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி (European Investment Bank ) அறிவித்துள்ளது.
☛  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (84) 31-8-2020 அன்று மரணம் அடைந்தார்.
o இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2017 வரை பதவி வகித்தவர்.
o இவரது உயரிய மக்கள் சேவையை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது.
o காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். 1982-ம் ஆண்டில் 47-வது வயதிலேயே இவர் நிதி மந்திரி ஆனார்.
o இந்திராகாந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய மூன்று பிரதமர்களிடம் மந்தியாக பணியாற்றி உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 5 முறையும், மக்களவை உறுப்பினராக 2 முறையும் இருந்திருக்கிறார். முதன் முதலாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக மேற்கு வங்காள மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில் இருந்து கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
o மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிராடி கிராமத்தில் கடந்த 1935-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி பிரணாப் முகர்ஜி பிறந்தார். இவருடைய தந்தை பெயர் கமடா கிங்கர் முகர்ஜி, தயார் பெயர் ராஜலட்சுமி முகர்ஜி. பெற்றோர் சுதந்திர போராட்ட வீரர்கள் ஆவார்கள்.
o கூ.தக. : இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். அந்த சமயத்தில் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக காங்கிரசில் ஓரங்கட்டப்பட்டதால், அதில் இருந்து விலகிய பிரணாப் முகர்ஜி ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியுடன் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, 1989-ம் ஆண்டு அந்த கட்சியை காங்கிரசுடன் இணைத்தார்.
☛ கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு சுப்ரீம் கோர்ட்டு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒரு ரூபாய் அபராதத்தைத் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
☛ இந்திய முன்னாள் தூதா் கே.எஸ்.பாஜ்பாய் 30-8-2020 அன்ற் காலமானாா் .கடந்த 1952-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு பணியில் சோ்ந்த காத்யாயனி சங்கா் பாஜ்பாய் , அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கான இந்திய தூதராக பணிபுரிந்துள்ளாா். கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, அவா் பாகிஸ்தானில் இந்திய தூதராக பணியாற்றினாா்.
☛ இந்தியாவின் முதல் பெண் இருதயநோய் நிபுணர் மற்றும் அனைத்திந்திய இதய பவுண்டேசன், புது தில்லி (All India Heart Foundation (AIHF)), தேசிய இதய நிறுவனம் (National Heart Institute(NHI)) ஆகியவற்றின் நிறுவனருமான டாக்டர் எஸ். பத்மாவதி தனது 103 வயதில் காலமானார். இவர், ’இருதயவியலின் தாய்’ (“GodMother of Cardiology”) எனவும் அழைக்கப்படுகிறார்.
☛ உலகின் மிகப்பெரிய சோலார் மரம் (World’s Largest Solar Tree) மேற்குவங்க மாநிலம் துர்க்காப்பூரில் , ’இந்திய தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்’ (Council of Scientific and Industrial Research (CSIR)) மற்றும் மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Mechanical Engineering Research Institute(CMERI)) நிறுவப்பட்டுள்ளது.
☛ ’மெட்பாட்’ (‘MEDBOT’) என்ற பெயரில் தொலை கட்டுப்பாட்டு மருத்துவ தள்ளுவண்டியை (remote-controlled medical trolley ) இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
☛ அடல் பிமிட் வியாகி கல்யாண் யோஜனா (Atal Bimit Vyakti Kalyan Yojana) என்ற பெயரிலான பணியாளர் மாநில காப்பீட்டு திட்டத்தின் (Employees’ State Insurance (ESI) scheme) கீழ் வரும் தொழிலாளர்களுக்கு வேலையின்மை பயன் வழங்கும் திட்டத்தின் கால அளவை 30 ஜீன் 2021 வரையில் ஓராண்டிற்கு பணியாளர் மாநில காப்பீட்டு கழகம் (Employees’ State Insurance Corporation (ESIC)) நீட்டித்துள்ளது.
o கூ.தக. : 1 ஜூலை 2018 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் பிமிட் வியாகி கல்யாண் திட்டத்தின் கீழ் , பணியாளர் மாநில காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலங்களில், வேலையின்மை நன்மையாக, வாழ்நாளில் ஒரு முறை 90 நாட்கள் வரை பண உதவி இழப்பீடாக வழங்கப்படுகிறது.
☛ உலகின் நீண்ட காலம் பயன்பாட்டிலிருந்த போர்க்கப்பல் எனும் கின்னஸ் உலக சாதனைக்குரிய ”ஐ.என்.எஸ் விராட் ” (INS Viraat ) போர்க்கப்பல் குஜராத்திலுள்ள அலாங் ( Alang ) எனுமிடத்தில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் உடைக்கப்படவுள்ளது. 1987 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விராட் கடந்த மார்ச் 2017 ல் தனது 30 ஆண்டுகால சேவையினின்று ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
☛ ரேணாட்டு சோழர் (Renati Chola ) காலத்தைச் சேர்ந்த ஒரு அரிய கல்வெட்டு ஆந்திராவின் கடபா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு, டோலமைட் பலகை (dolomite slab) மற்றும் களிமண் பாறையில் (shale) பொறிக்கப்பட்டுள்ளது. பழமையான தெலுங்கில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டின் காலம், கி.பி 8 ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது.
o கூ.தக. : ரேணாட்டின் தெலுங்கு சோழர்கள் (ரேணாட்டு சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) இன்றைய ஆந்திரப்பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள ரேணாடு பகுதியை ஆண்டனர். இந்த மன்னர்கள் தாங்கள் கரிகலா சோழனின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். சமஸ்கிருதத்திற்கு பதிலாக நிர்வாகத்திலும் கல்வெட்டுகளிலும் தெலுங்கைப் பயன்படுத்திய முதல் இராஜ்ஜியம் இவர்களுடையது என அறியப்படுகிறது.
வெளிநாட்டு உறவுகள்
☛ “அக்ரியோட்டா” ( “Agriota” ) என்ற பெயரில் இந்திய விவசாயிகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உணவுத் தொழில்துறைக்கு இடையே பாலமாகச் செயல்படுவதற்கான புதிய மின்-சந்தை தளத்தை ஐக்கிய அரபு எமிரேட் தொடங்கியுள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
☛ அரபு நாடான கத்தாரில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1000 ரியால்களாக (சுமாா் ரூ.20,000) ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
☛ லெபனானின் புதிய பிரதமராக முஸ்தபா ஆதிப் (48) நியமிக்கப்பட்டுள்ளார்.
☛ வரலாற்று நிகழ்வாக இஸ்ரேலிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நேரடி விமான சேவை 31-8-2020 அன்று தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆகாஸ்டு 13-ந்தேதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.
☛ ’ஆர்மி 2020’ (“Army-2020) என்ற பெயரில் , 6வது சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் (6th International Military-Technical Forum) 23-29 ஆகஸ்டு 2020 தினங்களில் ரஷியாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்றது.
பொருளாதாரம்
☛ தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.1½ லட்சம் கோடி நிலுவைத்தொகையை செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது . அதன்படி, வோடாபோன், ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கித் தொகையை (ஏ.ஜி.ஆர்.) செலுத்துவதற்கு 10 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் ஏ.ஜி,ஆர் நிலுவைத்தொகையின் 10 சதவீதத்தை 2021-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் கட்ட வேண்டும். பின்னர் 2031-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தி விட வேண்டும்.
☛ இந்தியாவின் பொருளாதாரம் 2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. லாக்டவுன் நடவடிக்கையால், நுகர்வோர் செலவிடுவது குறைந்தது, தேவை குறைந்து, முதலீடு செய்வதும் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நிதியாண்டின் (2019-20)முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 5.2 சதவீதம் வளர்ச்சி இருந்த நிலையில், கடந்த ஜனவரி –மார்ச் மாதத்தில் 3.1 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
o உற்பத்தித் துறை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 39.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கட்டுமானத்துறை வளர்ச்சி 50.3 சதவீதம் வீழ்ந்துள்ளது,
கூ.தக. :
o கடந்த 1996-ம் ஆண்டிலிருந்துதான் காலாண்டு நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அப்போது இருந்து ஏறக்குறைய 24 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான வீழ்ச்சியை கண்டதில்லை.
ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product (GDP)) என்றால் என்ன ? (நன்றி: bbc.com)
o ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒட்டு மொத்த சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படுகிறது.

ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும் முறை :
நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும்.
o முதலாவது நுகர்வுச் செலவு. இது சரக்குகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை வாங்க தனிநபர்கள் செலவு செய்த மொத்த தொகை.
o இரண்டாவது அரசின் செலவுகள்.
o மூன்றாவது முதலீட்டுச் செலவு. இது ஆலைகள் நிறுவுதல், உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக செலவிடப்பட்ட தொகை.
o நான்காவது நிகர ஏற்றுமதி. அதாவது ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இடையே உள்ள வேறுபாட்டின் மதிப்பு.
ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி முக மதிப்பு (nominal value) மற்றும் உண்மை மதிப்பு (real value) என்ன இரண்டு வழிகளில் அளவிடப்படும்.
o நடப்பு நிதியாண்டில் விலை நிலவரத்தின்படி ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகளின் மதிப்பு ஜிடிபியின் முக மதிப்பு எனப்படும்.
o ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டை அடிப்படை ஆண்டாகக் வைத்து கணக்கிடப்படும். தற்போதைய முக மதிப்பு அந்த அடிப்படை ஆண்டில் நிலவிய விலைவாசி நிலவரத்திற்கு ஏற்ப, பணவீக்கத்தின் காரணமாக அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
o இதுவே ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மை மதிப்பு என்று கூறப்படுகிறது.
o இந்த உண்மை மதிப்பே ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிட சரியான முறை என்று கருதப்படுகிறது.
o வேளாண்மை, உற்பத்தித் துறை, மின்சாரம், எரிபொருள் விநியோகம், கனிமம், சுரங்கம். காடுகள் மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய எட்டு உற்பத்தி துறைகள் மற்றும் வர்த்தகம், தகவல்தொடர்பு, நிதி, காப்பீடு, விற்பனைத் துறை, சமூக மற்றும் பொது சேவைகள் ஆகிய சேவைத் துறைகளில் இருந்து ஜிடிபி தரவுகள் சேகரிக்கப்படும்.
நியமனங்கள்
☛ ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக 1-9-2020 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பில் இணைவதற்காக, தேர்தல் ஆணையராக பணிபுரிந்த அசோக் லவாசா தனது தேர்தல் ஆணையா் பதவியை கடந்த ஆகஸ்ட் 2020 ல் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போதைய தேர்தல் ஆணையர்கள்.
o தலைமைத் தேர்தல் ஆணையர் (Chief Election Commissioner) - சுனில் அரோரா (Sunil Arora )
o தேர்தல் ஆணையர்கள் - சுஷில் சந்திரா (Sushil Chandra) , ராஜிவ் குமார் (Rajiv Kumar)
v மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes(CBDT)) தலைவராக பதவி வகித்து வரும் பிரமோத் சந்திர மோடிக்கு (Pramod Chandra Mody) ஆகஸ்ட் 1, 2020 முதல் பிப்ரவரி 28, 2020 வரை 6 மாதங்களுக்கு பணி நீட்டிப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
முக்கிய தினங்கள்
☛ தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) - 1-7 செப்டம்பர்
☛ செப்டம்பர் 2020 மாதம் ‘ஊட்டச்சத்து மாதமாக’ (Nutrition month / Poshan Maah) அனுசரிக்கப்படுகிறது.
விளையாட்டுகள்
☛ ஃபார்முலா ஒன் சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன்(Lewis Hamilton) (மெர்சிடஸ்) பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ் 2020 (Belgian Grand Prix 2020) ஐ வென்றுள்ளார். இவர் இந்த பட்டத்தை வென்றுள்ளது இது 4 வது முறையாகும்.
☛ ராஷ்டிரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் (Rashtriya Khel Protsahan Puruskar 2020) இந்திய விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ( Air Force Sports Control Board ) வழங்கப்பட்டுள்ளது. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தினால் வழங்கப்படும் இவ்விருது, நாட்டில் விளையாட்டு வளர்ச்சியில் கார்ப்பரேட்டுகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு வாரியங்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☛ “The Big Thoughts of Little Luv” என்ற புத்தகத்தின் ஆசிரிஅய்ர் - கரண் ஜோகர்
 
 

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email:

Post Bottom ads