நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 21,22 September 2020

 Current Affairs for TNPSC Exams 21-22 September 2020

தமிழ்நாடு

தமிழகத்தில் சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோக்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தாா். எம் ஆட்டோ நிறுவனம் ரூ.140 கோடி முதலீட்டில் மின்சாரம் மற்றும் சூரியசக்தி மூலம் இயங்கும் 13 வடிவங்களில் இந்த  புதிய ஆட்டோக்களை உருவாக்கியுள்ளது.

தமிழகப் பொருளாதாரத்தில் கொரோனாவின்  தாக்கம் குறித்த  சி.ரெங்கராஜன் குழு தனது அறிக்கையை 21-9-2020 அன்று தமிழக அரசிடம்  சமர்ப்பித்துள்ளது. 

கூ.தக. : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு துறைகளில் ஏற்பட்ட  பாதிப்பை சீரமைக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பொருளாதார வல்லுனர்கள் அரசு அதிகாரிகள் அடங்கிய   24 பேர் கொண்ட

  உயர்நிலை குழுவை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரெங்கராஜன் தலைமையில்  தமிழக அரசு அமைத்து இருந்தது.

☞"அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டத்தை"  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  21-9-2020 அன்று   தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக,  ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகள்  தொடங்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும்  மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட உள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழக அரசிற்கு வழங்கப்பட்ட 2018-19-ம் ஆண்டுக்கான மின் ஆளுமை விருது மற்றும் பாராட்டு சான்றிதழை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  21-9-2020 அன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்.

☞ “கேடயம்” செயல் திட்டம் : திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்னேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் “கேடயம்” என்ற செயல் திட்டம் 21-9-2020 அன்று  தொடங்கப்பட்டது. இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 

தமிழகத்தில் 50 ஆயிரம் வேலையற்ற நபா்களுக்கு இணைய வழியில் கல்வி மற்றும் திறன் பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்காவின் ‘கோா்ஸெரா’ (Coursera) இணையவழி கற்றல்  நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தமிழக அரசு செய்துள்ளது.

ஜப்பான் சா்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன், உயா்தர மேம்பாட்டு மையம் நிறுவிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கும், ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா

2020-ம் ஆண்டுக்கான ஏஇசட்  (AZ Award) விருதுகளில் சமூகப் பயன்பாடு கட்டிடப் பிரிவில் மக்களின் விருப்பத் தேர்வாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வேளாண் துறை தொடர்பான ‘கிருஷி பவன்’ என்ற கட்டிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடற்படை போர்க்கப்பலில் 2 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஹெலிகாப்டர்களை போர்க்கப்பல் தளத்தில் இருந்து இயக்கப் போகும் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த முதல் பெண் விமானிகள் என்ற பெருமையை சப் லெப்டினன்ட் குமுதினி தியாகி மற்றும் சப் லெப்டினன்ட் ரித்தி சிங் பெறுகிறார்கள்.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயா்த்தப்பட்டு ரூ.1,975-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மசூா் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 உயா்த்தப்பட்டு ரூ.5,100-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.225 அதிகரிக்கப்பட்டு ரூ.4,650-ஆகவும், பாா்லிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.75 அதிகரிக்கப்பட்டு ரூ.1,600-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.300 உயா்த்தப்பட்டு ரூ.5,100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், குசம்பப்பூவுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.112 உயா்த்தப்பட்டு ரூ.5,327-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைபொருட்கள் வாணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், 2020 (The Farmers' Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill, 2020) மற்றும் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services Bill, 2020) ஆகிய மசோதக்களை மாநிலங்களவையில்  20-9-2020 அன்று  நிறைவேற்றப்பட்டது.ஏற்கனவே, 2020 செப்டம்பர் 17 அன்று மக்களவையால் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னூறுக்கும் குறைவாக பணியாளர்க்களை கொண்டுள்ள நிறுவனங்கள் ஊதியம் இல்லா விடுப்பு (லே-ஆப்) அளிப்பதற்கு இனி அரசின் அனுமதி பெறத் தேவையில்லை என விதி விலக்களிக்கும்  தொழில் உறவு வரைவு மசோதா 2020, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் மிக நீளமான சுரங்கம் எனும் பெருமையை இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள   ‘அடல்’ சுரங்கம் பெற்றுள்ளது. 

☞ "ஃபிரைட் சேவா" ( “Freight Seva” ) என்ற பெயரில்,  சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்கும் , வாடிக்கையாளர்களுக்கு விரைவான தகவல்களை வழங்குவதற்குமான மொபைல் செயலியை தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நகரத்தை (film city) உத்தரபிரதேச மாநிலம் கௌதமபுத்தா நகரில் உருவாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இந்திய அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு 2022 :

 இந்திய அரசு 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் இலக்கை நிர்ணயித்துள்ளது, ( ஹைட்ரஜன் இந்த இலக்கில் சேர்க்கப்படவில்லை).  இதில் 100 ஜிகாவாட்ஸ் சூரிய சக்தி, 60 ஜிகாவாட் காற்று, உயிரி எரிபொருட்களிலிருந்து 10 ஜிகாவாட் மற்றும் நீர் சார்ந்த திட்டங்களிலிருந்து 5 ஜிகாவாட் ஆகியவை அடங்கும்.  

வெளிநாட்டு உறவுகள்

☞ “MCP Linz”  என்ற சரக்கு கப்பல் மூலம் இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையில் முதல் நேரடி சரக்கு படகு சேவை(Cargo Ferry Service ) 21-9-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த படகு சேவை இந்தியாவின் தூத்துக்குடி மற்றும் கொச்சி நகரங்களையும் மாலத்தீவின் குலுதுஃபுஷி ( Kulhudhuhfushi) மற்றும் மாலி துறைமுகங்களுக்கிடையேயும் நடைபெறுகிறது. 

கொங்கன் ரயில்வே இரண்டு நவீன டீசல்-எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (Diesel-Electric Multiple Unit (DMUC) trains) ரயில்களை நேபாள ரயில்வேயிடம் 18-9-2020 அன்று  ஒப்படைத்தது. இந்த இரயில்களை சென்னையிலுள்ள  Integrated Coach Factory தயாரித்துள்ளது. 

உலகம்

உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலாக10 முறை ஏறிச் சாதனை புரிந்த நேபாள நாட்டைச் சேர்ந்த, ஆங் ரிடா ஷெர்பா 21-9-2020 அன்று காலமானார்.

முக்கிய தினங்கள்

உலக ரோஜாப்பூ தினம் ( World Rose Day) ( கேன்சர் நோயை எதிர்த்து போராடுபவர்களுக்கு  நம்பிக்கையூட்டும் தினமாக அனுசரிக்கப்படுகிறது.)  -  செப்டம்பர் 22 

கூ.தக. :

கனடாவைச் சேர்ந்த 12 வயதான மெலிண்டா ரோஸின் நினைவாக உலக ரோஜா தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் இரத்த புற்றுநோயின் அரிய வடிவமான அஸ்கின்ஸ் கட்டியுடன் பாதிப்படைந்து மரணமுற்றார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, புற்றுநோய்க்கான மருத்துவம் பெறுவதற்கான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை 1954 ஜூன் மாதம் 18ம் தேதி துவங்கினார்.

சர்வதேச அமைதி தினம் (International Day of Peace) - செப்டம்பர் 21 | மையக்கருத்து 2020 - இணைந்து அமைதியை வடிவமைப்போம்   (Shaping Peace Together)

உலக அல்சீமர் தினம் (World Alzheimer’s Day) - செப்டம்பர் 21

விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், மகளிா் ஒற்றையா் பிரிவில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோா் சாம்பியன் பட்டம் வென்றனா்.

பொருளாதாரம் 

காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளா்கள் உறுதி செய்யும் நடைமுறையை (Know Your Customer / KYC) வீடியோ மூலம் மேற்கொள்ள இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (Insurance Regulatory and Development Authority (IRDA)) அனுமதி அளித்துள்ளது.

தன்னாா்வத் தொண்டு அமைப்புகள் (என்ஜிஓ) வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிக்கும், வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 21-9-2020 அன்று  நிறைவேறியது.தன்னாா்வத் தொண்டு அமைப்புகளைப் புதிதாக பதிவு செய்வதற்கும், பதிவை புதுப்பிக்கவும் அந்த அமைப்பில் உள்ள அனைத்து நிா்வாகிகளும் ஆதாா் அடையாள அட்டையைக் கட்டாயமாக சமா்பிக்க வேண்டும் என்றும் அரசு ஊழியா்கள் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறக் கூடாது என்றும் இந்த மசோதாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

☞ “மஹிலா ஆத்மனிர்பர்ஷில் ஆச்சானி (பெண்கள் சுய-சார்பு திட்டம்)” ( Mahila Atmanirbharshil Aachani (Women Self-Reliance programme)) என்ற பெயரில் சுய உதவிக் குழுக்களுக்கான சுய-சார்பு இந்தியா 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அஸ்ஸாமில்  19-9-2020 அன்று  தொடங்கியுள்ளது.

விருதுகள்

Ig நோபல் பரிசு 2020 (Ig Nobel Prize 2020 )  பிரதமர் நரேந்திர மோடிக்கு  இந்தியாவில் மருத்துவ கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது. 

அணுகுண்டுகளை  அமைதியாக வெடித்ததற்காக" 1998ல் இவ்விருதை வென்ற அடல் பிஹாரி வாஜ்பாய்க்குப் பிறகு Ig நோபல் பரிசு வென்ற இந்தியாவின் இரண்டாவது பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.  

கூதக. : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்  அமைதிக்காக Ig நோபல் பரிசு 2020 ஐ வென்றுள்ளன. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இந்தியாவின் முதல் CRISPR கோவிட் -19 (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats COVID-19) சோதனையான ‘ஃபெலுடா’ (FELUDA’( FNCAS9 Editor-Limited Uniform Detection Assay)) ஐ வணிக ரீதியாக தயாரிப்பதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (Drug Controller General of India ) அனுமதி வழங்கியுள்ளது.

இதை சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி (CSIR-IGIB (Council of Scientific and Industrial Research -Institute of Genomics and Integrative Biology)) விஞ்ஞானிகள்  உருவாக்கியுள்ளனர்.  டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஜி.ஐ.பி ஆகியவை மே, 2020 இல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, டாடா குழுமம் இதைத் தயாரிக்கும்.

நானோ தொழில்நுட்பம் கொண்டு மெக்னீஸியம் பூசப்பட்ட உலோக கலவையைப் பயன்படுத்தி, எலும்பு முறிவு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் முகேஷ் டோபிள் தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்துள்ளனா். அதனை முதலில் முயலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்து, பரிசோதனை செய்துள்ளனா்.

☞"ஸ்வாஸ்னர்" ( ‘Swasner’) என்ற பெயரில் தலைக்கவச (helmet) வடிவிலான வெண்டிலேட்டர் கருவியை புவனேஸ்வரில் உள்ள  சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த  (International Institute of Information Technology Bhubaneswar) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். "ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி" (hyperbaric oxygen therapy) அடிப்படையில் இந்த வென்டிலேட்டர் கருவி இயங்குகிறது. 

நியமனங்கள்

 ☞ "நிறுவனங்கள் சட்ட குழுவின்" (Company Law Committee) கால அளவு செப்டம்பர் 2020 முதல் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தற்போதைய தலைவராக ராஜேஸ் வர்மா உள்ளார்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் (National Technical Research Organisation (NTRO)) புதிய தலைவராக அனில் தாஸ்மனா (Anil Dhasmana) நியமிக்கப்பட்டுள்ளார்.

Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Profile
    பெயரில்லா
    Said: Sir kindly post one or two days current affairs in a individual post.. it will be easy to prepare.. Dumping more days is very difficult.. and Thank you very much for this valuable posts in this page, it is more useful for all types of aspirants.. Thank you
    Sir kindly post one or two days current affairs in a individual post.. it will be easy to prepare.. Dumping more days is very difficult.. and Thank you very much for this valuable posts in this page, it is more useful for all types of aspirants.. Thank you
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!