TNPSC Current Affairs, Online Tests, Latest News

Post Top Ad

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

குரூப் 4 & VAO 2021 தேர்விற்கான முழு பாடத்திட்டத்தையும் திட்டமிட்டு குறுகிய காலத்தில் படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 120 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்)

Download Test Schedule (Tamil)
About Test Batch | Join Now

TNPSC Current Affairs 24-25 October 2020

 Current Affairs for TNPSC Exams 24-25 October 2020

தமிழ்நாடு

‘என் தோழி’ என்ற பெயரில் இரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பு தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு, பாதுகாப்பு படை பெண் போலீஸ், அவர்களின் தோழியை போல் உடன் இருந்து பயணத்தை இனிமையாக்குவார்கள். பயணத்தின்போது ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையின் மூலம் உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரெயில் புறப்படும் இடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் 5 பெண்கள் கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

o கூ.தக. : ‘என் தோழி’ அமைப்பு தென் கிழக்கு ரெயில்வேயில் முதன் முதலாக தொடங்கப்பட்டது. அங்கு இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் மோடி அவர்கள் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக உரையாடினார்.

இந்தியா

"கிசான் சூரியோதய யோஜனா” (Kisan Suryodaya Yojana) என்ற பெயரில், விவசாயிகளுக்கு 16 மணிநேர மின்சாரம் வழங்குவதற்கான குஜராத் மாநில அரசின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 24-10-2020 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மின்சாரம் பெற முடியும்.

தார் பாலைவனத்தில் 172 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆற்றின் படிமங்களை அண்ணா பல்கலைக்களகம், இந்திய அறிவியல் கல்வி மற்று ஆராய்ச்சி நிறுவனம் (IISER - Indian Institute of Science Education and Research), கல்கத்தா மற்றும் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங் நிறுவனம் (Max Planck Institute) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நதியானது , பழங்கற்காலத்தைச் (Paleolithic era) சார்ந்ததாக கருதப்படுகிறது.

சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலகிலேயே இந்தியா, 5-வது இடத்துக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

’பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தினை’ ( Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) சிறப்பாக செயல்படுத்திய தேசிய அளவிலான 30 மாவட்டங்களின் பட்டியலில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் மாண்டி மாவட்டம் (Mandi district ) முதலிடத்தைப் பெற்றுள்ளது.

o கூ.தக. : ’பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 2000

ராஜீவ் குமார் குழு : நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறையின் சீர்திருத்தங்களை மதிப்பீடு செய்ய நிதி அயோக் (NITI (National Institution for Transforming India) Aayog) துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நிதி ஆயோக் அமைப்பு அமைத்தது.

வெளிநாட்டு உறவுகள்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation (ILO)) நிர்வாகக் குழுவின் தலைவராக (Chairperson of the Governing Body) மத்திய த்ழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலராக் இருக்கும் அபூர்வா சந்திரா (Apurva Chandra) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இவர் அக்டோபர் 2020 முதல் ஜீன் 2021 வரையிலான காலக்கட்டத்தில் இந்த பொறுப்பை வகிப்பார்.

o கூ.தக. : 11 ஏப்ரல் 1919 ல் தொடங்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. 187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள இந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரலாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஹய் ரைடர் (Guy Ryder) உள்ளார்.

சர்வதேச நிகழ்வுகள்

தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ 25-10-2020 அன்று காலமானார் .

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் காலியாகியுள்ள நீதிபதி பதவிக்கு, எமி கோனே பாரெட்டை நியமிக்க நாடாளுமன்ற செனட் சபையின் நீதிமன்ற விவகாரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளித்து, அந்த நாட்டுடன் நல்லுறவை ஏற்படுத்த சூடான் முன் வந்துள்ளது. அமெரிக்க அதிபா் டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையின் பலனாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜி-20 நாடுகளின் முதலாவது, ‘ஊழலுக்கெதிரான அமைச்சர்களின் பணிக்குழுவின் கூடுகை’ (Ministerial Meeting of G-20 Anti-Corruption Working Group) 22-10-2020 அன்று இணையவழியில் நடைபெற்றது . இந்தியாவின் சார்பாக, மத்திய பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் ஜிஜேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.

லெபனான் நாட்டின் பிரதமராக ‘சாத் எல்-தின் ஹரிரி’ (Saad El-Din Hariri) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

சர்வதேச பனிச்சிறுத்தை தினம் (International Snow Leopard Day) - அக்டோபர் 23

உலக போலியோ தினம் (World Polio Day) - அக்டோபர் 24

ஐக்கிய நாடுகள் தினம் (United Nations Day) - அக்டோபர் 24 ( ஐக்கிய நாடுகள் அமைப்பு நிறுவப்பட்ட (24 அக்டோபர் 1945) தினத்தில் அனுசரிக்கப்படுகிறது.)

இந்தியா - சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை வாரம் (India – International Food & Agri Week) 16-22 அக்டோபர் 2020 தினங்களில் நடைபெற்றது.

உலக வளர்ச்சி தகவல் தினம் (World Development Information Day) - அக்டோபர் 24

விருதுகள்

மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சிகிச்சை மருத்துவ நிபுணா் ஏ.என்.சந்திரசேகரனுக்கு ஆசிய பசிபிக் மூட்டுவாத சிகிச்சை அமைப்பின் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இவர், சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசுத் துறைத் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: