TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs 13-14 December 2020

 தமிழகம்

☛ காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழமையான குழம்பேஸ்வரர் கோயிலில் 565கிராம் எடையுள்ள தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டது.

☛ 'முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம்' (Amma Mini Clinic) :  தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ (Mini Clinic) அமைக்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 14.12.2020 அன்று சென்னை ராயபுரத்தில் தொடங்கி வைத்தார். 

திட்டத்தின் சிறப்பம்சங்கள் :

கிராமப்புறங்களில் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 என்று மொத்தம் 2,200 கிளினிக்குகள் அமைக்கப்படுகின்றன. 

இங்கு மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். 

கிளினிக் காலை 8 - 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை என 8 மணி நேரம் செயல்படும். கிளினிக்கில் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 கி.மீ.க்கு ஒரு ஆஸ்பத்திரி இருக்கும்.  


இந்தியா

☛ பொம்மைகள் தரக்கட்டுப்பாட்டு ஆணை, 2021, ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவிருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் இந்திய தர நிர்ணய ஆணையத்தால் பரிசோதித்த பின்னரே அனுமதி அளிக்கப்படும் இதன்படி  கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் பொருட்கள், மற்றும் புவிசார் குறியீடுகள் கொண்ட பொருட்களுக்கு இந்திய பொம்மை தரக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதிலிருந்தும்,  தரக்குறியீட்டை பயன்படுத்துவதிலிருந்தும்  விலக்கு அளிக்கிறது.

☛ பிரித்திபால் சிங் கில்  : இரண்டாவது உலகப்போரில் பங்கேற்றவரும், முப்படைகளில் பணியாற்றியருமான பஞ்சாபைச் சோ்ந்த வீரா் பிரித்திபால் சிங் கில், நாட்டின் சுதந்திரத்துக்கும் முன்னரும் பின்னரும் தரைப்படை, விமானப்படை, கடல்படைகளில் பணிபுரிந்தவராக உள்ளாா். கா்னல் என்ற பதவி உயா்வுடன் பணி ஓய்வு பெற்ற இவா் 12.12.2020 தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினாா்.


உலகம்

☛ உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)) அவசர மருத்துவ குழு (Emergency Medical Team (EMT)) முன்முயற்சியை செயல்படுத்துவதற்காக ‘சிவப்பு சேனல் ஒப்பந்தம்’(Red Channel Agreement) எனப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

☛ உலக பொருளாதார மன்றத்தின்   (World Economic Forum (WEF)) 2021 ஆம் ஆண்டிற்கான சிறப்பு வருடாந்திர கூட்டம்  13-16 மே 2021 தினங்களில்  சிங்கப்பூரில்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உலக பொருளாதார மன்றத்தின்  சிறப்பு வருடாந்திர கூட்டம் ஆசியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இரண்டாவது முறையாக சுவிட்சர்லாந்தின் டாவோஸுக்கு வெளியே இந்த கூட்டம் நடைபெறுகிறது.

☛ ”பீம்” (BEAM- BSE E-Agricultural Markets Ltd) என்ற பெயரில் விவசாயிகளுக்கான மின்னணு சந்தையை   பிஎஸ்இ (Bombay Stock Exchange)ன்  துணை நிறுவனமான பிஎஸ்இ இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் தொடங்கியுள்ளது. 


சுற்றுச்சூழல்

☛ இந்தியாவில் 21 சதவீதம் காற்று மாசு குறைக்கப்பட்டுள்ளதாகவும் , பாரீஸ் காலநிலை ஒப்பந்த இலக்குகளைக் கடந்தும் இந்தியா செயல்படும் எனவும் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.   

கூ.தக. : பாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியஸுக்கும் கீழாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டு உறவுகள்

☛ இந்தியாவுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான முதல் இருதரப்பு மெய்நிகர் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசின் தலைவர் ஷவ்காட் மிரோமோனோவிச் மிர்சியோயேவ் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

☛ இந்தியா – மியான்மர் நாடுகளுக்கிடையேயான 5 வது போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான  இருதரப்பு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் 11.12.2020 அன்று நடைபெற்றது.

பாலஸ்தீனிய அகதிகளின் நலனுக்காக பணியாற்றும் ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)) இந்தியா 2 மில்லியன் அமெரிக்க டாலர் உதவியை பாலஸ்தீன நாட்டிற்கான இந்தியாவின் பிரதிநிதி சுனில் குமார் மூலம் வழங்கியுள்ளது.  இதன் மூலம், பாலஸ்தீனிய அகதிகளுக்கான கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, நிவாரணம் மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட அதன் திட்டங்கள் மற்றும் சேவைகளை ஆதரிப்பதற்காக  ஆண்டுதோறும் வழங்குவதாக இந்திய அரசு உறுதியளித்திருந்த ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் தொகை முழுவதுமாக வழங்கப்பட்டுள்ளது. 


விளையாட்டு

☛ ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் தொழில்முறையில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை மணிப்பூரைச் சோ்ந்த பாலா தேவி பெற்றுள்ளார். 

☛ துபையில் நடைபெற்ற ஐடிஎஃப் மகளிா் டென்னிஸ் போட்டியின் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா , ஜாா்ஜியாவின் இகாடெரின் கோா்கோட்ஸியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். 


புத்தகம் 

☛  ‘விவசாயிகளை முதலிடம் வைத்தல்’(‘Putting Farmers First’) என்ற சிறு புத்தகத்தை  தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்வெளியிட்டுள்ளது.


முக்கியதினம்:

☛ சர்வதேச நடுநிலைமை தினம் (International Day of Neutrality)  - டிசம்பர் 12


பொருளாதாரம்

☛ ஆர்.டி.ஜி.எஸ்., (Real Time Gross Settlement(RTGS)) சேவை 14-12-2020 முதல் 24 மணி நேரமும் செயல்பட துவங்கியுள்ளது. இதற்கு முன்பு வரை ஆர்.டி.ஜி.எஸ்., நடைமுறை வங்கி வேலை நாட்களில் மட்டுமே செய்யப் பட்டது. காலை, 7.00 மணி முதல் மாலை, 6.00 மணி வரை மட்டுமே இச்சேவை வழங்கப்பட்டு வந்தது.

மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியின் கிளையில் இருந்து அதே வங்கியின் மற்றொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் பணம் அனுப்ப பயன்படும் வங்கி சேவை தான் ஆர்.டி.ஜி.எஸ்., எனப்படுகிறது.

'நெப்ட்' (NEFT-National Electronic Funds Transfer) சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், இரண்டு லட்சம் ரூபாய் வரையில் தான் பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், ஆர்.டி.ஜி.எஸ்., சேவையை தான் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

ஏற்கனவே, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், 'நெப்ட்' உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்களை கடந்த   ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. 

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.