நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 9-10 December 2020

 இந்தியா

☛ “பி.எம். வாணி” (PM-WANI-Prime Minister's Wi-Fi Access Network Initiative)  என்ற பெயரில்  பொது இடங்களில் பொது மக்களுக்கு இலவச வைஃபை இணையதள வசதி வழங்குதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய  அமைச்சரவை 9-12-2020 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.  

☛ புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை  புதுதில்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் 10-12-2020 அன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுகிறார்.  

☛ ஆயுஷ் அமைச்சகமும் இந்திய கலாச்சார தொடர்பு கவுண்சில் ( Indian Council for Cultural Relations (ICCR)) இணைந்து உலக நாடுகளில் யோகா பயிற்சி முறையை ஊக்குவிக்கும் கூட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

கூ.த.: 9-4-1950 ல்  அபுல் கலாம் ஆசாத் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய கலாச்சார தொடர்பு கவுண்சில்  மத்திய  அரசின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.  இந்தியா மற்றும் வெளி நாடுகளுடனான கலாச்சாரத் தொடர்புகளைப் பேணும் பணியை செய்து வரும் இந்நிறுவனத்தின் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக  டாக்டர் வினய் சஹஸ்ரபுத்தே(Vinay Sahasrabuddhe) உள்ளார். 

☛ ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக (acting chief justice of Jammu and Kashmir High Court)   நீதியரசர் திரு ராஜேஷ் பிண்டால் (Rajesh Bindal)8  டிசம்பர் 2020 அன்று  நியமிக்கப்பட்டுள்ளார்.  

☛ கரோனா நோய்த்தொற்றில் இருந்து நாட்டு மக்கள் உடல்நலம் பெற வேண்டி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவு, 2020-ஆம் ஆண்டில் சுட்டுரை (Twitter)சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அரசியல் சாா்ந்த பதிவுகளில், அதிக எண்ணிக்கையில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

☛ ”விஸ்வாஸ் யோஜனா'(Vanchit Ikai Samooh our Vargon ki Aarthik Sahayta (VISVAS  Yojana)  என்ற பெயரிலான  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவரின்  நிதி மேம்பாட்டிற்கான திட்டத்தை சிறந்த முறையில் அமல் படுத்துவதற்காக, தேசிய பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  ( National Backward Classes Finance & Development Corporation (NBCFDC)) மற்றும் தேசிய பட்டியல் இனத்தவருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  ( National Scheduled Castes Finance and Development Corporation (NSFDC)) சென்ட்ரல் ஃபாங்க ஆஃப் இந்தியா வங்கியுடன் (Central Bank of India) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 

கூ.தக. : 

2020-21 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் ”விஸ்வாஸ் யோஜனா' (VISVAS  Yojana) திட்டத்தின் மூலம் அகில இந்திய அளவில்  பல தொழில்முனைவோர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கு   ரூ .4.00 லட்சம் வரை கடன்கனுதவியும்,   ஓபிசி / எஸ்சி  வகுப்பைச் சேந்த தனி நபர்களுக்கு ரூ .2.00 லட்சம் வரை கடனுதவி  5% வட்டி மானியத்துடன் (subvention) வழங்கப்படுகிறது. 

☛ அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் 300 மில்லியன் இளைஞர்களுக்கு, டிஜிட்டல் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்காக அமெரிக்காவை மையமாகக் கொண்ட சர்வதேச ஆலோசனை நிறுவனமான PwC (PriceWaterhouseCoopers),  ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்  ( United Nations Children’s Fund) மற்றும் யுவா  ( YuWaah (Generation Unlimited in India)) ஆகியவற்றுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

☛ கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு 09.12.2020 அன்று மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், பித்ரா, சேத்லாத், கில்தான், கடமாட் ஆகியவைகளுக்கும் இடையே கடலுக்கடியில் கண்ணாடி இழை வடம் மூலம் நேரடி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கப்படும்.

☛ யூனியன் பிரதேசமான லட்சத்தீவை 100% கரிம வேளாண்(Organic Agricultural)  பகுதி என்று மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது . இந்தியாவில், கரிம வேளாண்மையில் சிக்கிம் மாநிலத்திற்க்குப் பிறகு யூனியன் பிரதேசமான லட்சத்தீவு இரண்டாவது இடத்தில் உள்ளது.  யூனியன் பிரதேசங்களில் முதலிடம் வகிக்கிறது.

வெளிநாட்டு உறவுகள் 

இந்தியா, சுரினாம் இடையேயான சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக, புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு 09.12.2020 அன்று மத்திய அமைச்சரவை  ஒப்புதல் அளித்துள்ளது. 

☛ ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே(MM Naravane) ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு  9-10 டிசம்பர் 2020 தினங்களில் பயணம் மேற்கொள்கிறார். ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு, இந்திய ராணுவத் தளபதி அரசு முறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

☛ உத்தராகண்ட் மாநிலத்தின் பன்பாஸாவில் அமைந்துள்ள தானக்பூர் எரிசக்தி நிலையத்தில் இந்திய- நேபாளம் கால்வாயின் குறுக்கணையில்  நீர்வரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு தேசிய நீர் மின்சாரக் கழகத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான திரு ஏ கே சிங் 08.12.2020 அன்று அடிக்கல் நாட்டினார். 

கூ.தக. : இந்தியா நேபாளம்,  நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட மகாகாளி ஒப்பந்தத்தின்(Mahakali Treaty) கீழ் 1.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்தக் கால்வாய் அமைக்கப்படுகிறது.

உலகம்

☛ ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாஹ் (Sheikh Sabah al-Khalid al-Sabah)   குவைத் நாட்டின்  பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

☛ எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 செ.மீ. அதிகரித்துள்ளது என நேபாளமும் சீனாவும் 08.12.2020 அன்று கூட்டாக அறிவித்துள்ளன. எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டா் என்று அளவிடப்பட்டுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

கூ.த.: கடந்த 1954-இல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய சா்வே அமைப்பு அளவிட்டு, 8,848 மீட்டா் இருப்பதாக அறிவித்தது.

☛ அமெரிக்க அதிபர் (தேர்வு) பைடனின் மருத்துவக்குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி சர்ஜன் ஜெனரலாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்திய - அமெரிக்க மருத்துவரான விவேக் மூர்த்தி அமெரிக்க பொது சுகாதார அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.

☛ உலக சுகாதார அமைப்பு தொண்டு நிறுவனத்தின் (WHO Foundation ) முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக (Chief Executive Officer(CEO)) இந்திய வம்சாவழியைச் சேர்ந்த  அனில் சோனி (Anil Soni) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1-1-2021 அன்று பதவியேற்கவுள்ளார். 

☛ உலகளவில் ட்விட்டரில் அதிக மக்களால் அதிகம் பேசப்பட்டோரின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7-வது இடத்தில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முதலிடத்தில் இருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

 அறிவியல் & தொழில்நுட்பம்

☛ ஹயாபுசா-2 விண்கலம் (Hayabusa 2 spacecraft)  எனப் பெயரிடப்பட்டஜப்பான் நாட்டின் விண்கலம்  ”ரியுகு குறுங்கோளிலிருந்து”( “asteroid Ryugu”) மண் மற்றும் பாறைத் துகள்களை எடுத்துக் கொண்டு 6-12-2020 அன்று பூமியை வந்தடைந்துள்ளது.  2014 ஆம் ஆண்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலமானது சுமார் 30 கோடி கி.மீ தூரம் பயணித்துள்ளது. 

☛ டெல்லி வாரணாசி அதிவேக ரயில்பாதையில் தரைவழி கணக்கெடுப்பு நடத்த இந்திய ரயில்வே லிடார் (LiDAR) நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளது. லிடார் என்பது ஒளி கண்டறிதல் மற்றும் ரேங்கிங் நுட்பமாகும்.(LiDAR - Light Detection and Ranging technique).

 

சுற்றுச்சூழல் & சுகாதாரம்

கடல் வெப்பநிலையின் அதிகரிப்பு காரணமாக செங்கடலில் ஆண் ஆமைகள் பெண்தன்மையுடையவையாக (Potential feminization) மாறி வருவதாக   சவூதி அரேபியா மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

☛ நர்மதா இயற்கை மறுசீரமைப்பு திட்டத்தை  ( Narmada Landscape Restoration Project (NLRP)) செயல்படுத்துவதற்காக என்.டி.பி.சி லிமிடெட்  (National Thermal Power Corporation)) போபாலின் இந்திய வன மேலாண்மை நிறுவனம்  (Bhopal for the implementation of Narmada Landscape Restoration Project (NLRP)) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. என்.டி.பி.சி லிமிடெட்(NTPC Ltd) மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட்  (United States Agency for International Development (USAID)) இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சம விகிதத்தில் நிதியை வழங்கும்.

☛ பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள ராஜ்கீர் உயிரியல் பூங்கா சஃபாரி(Rajgir Zoo Safari), உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயான்(Shaheed Ashfaque Ullah Khan Prani Udyaan in Gorakhpur, Uttar Pradesh). ஆகிய இரண்டு புதிய உயிரியல் பூங்காக்களுக்கு சுற்று சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  07.12.2020 அன்று அங்கீகாரம் வழங்கினார்

☛ தென்கிழக்கு ஆசியாவில், மலேரியா நோயைக் கட்டுப்படுத்திய நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள உலக மலேரியா அறிக்கை 2020 (World Malaria Report 2020)  இன் படி, மலேரியா பாதிப்பு, இந்தியா 2018 உடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 17.6% சரிவை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

விளையாட்டு:

☛ பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 32-ஆவது ஒலிம்பிக் போட்டியில் ‘பிரேக் டான்ஸ்’ புதிய பிரிவாக சோ்க்கப்படுவதற்கு சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி   ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘பிரேக்கிங்’ என்ற பெயரில் அந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

☛ டோக்கியோவில் நடைபெறவுள்ள 2021-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஸ்கேட்போா்டிங், ஸ்போா்ட் கிளைம்பிங், சா்ஃபிங் போன்ற விளையாடுகளும் புதிதாக சோ்க்கப்படுகின்றன. ஸ்விட்சா்லாந்து தலைநகா் ஜெனீவாவில் நடைபெற்ற ஐஓசி நிா்வாக கமிட்டி கூட்டத்தில் 07.12.2020 அன்று இந்த முடிவு எடுக்கபட்டது.

 முக்கிய தினங்கள்

☛ சார்க் சாசன தினம் (SAARC  Charter Day) - டிசம்பர் 8

கூ.தக. : சார்க் (South Asian Association for Regional Cooperation) அமைப்பு 8 டிசம்பர் 1985 அன்று நிறுவப்பட்டது, அன்றையதினமே, அதன் சாசனத்தை பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஏப்ரல் 2007 இல் ஆப்கானிஸ்தான் 8 வது உறுப்பினராக சார்க்கில் சேர்ந்தது.

சார்க் அமைப்பின் தலைமையிடம் நேபாளத்தின் காத்மண்டு நகரில் அமைந்துள்ளது. 

☛ டிசம்பர் 27 ஐ சர்வதேச தொற்றுநோய் ஆயத்தமாயிருத்தல் தினமாக (International Day of epidemic preparedness) அனுசரிக்கும் பிரகடனத்திற்கு ஐ.நா. பொது சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!