Post Top Ad

TNPSC குரூப் II, IIA 2021 Test Batch

45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Download Test Schedule | Join Now
Tamil Medium | English Medium

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

Download Test Schedule | Join Now
Tamil Medium (120 தேர்வுகள்) | English Medium (100 Tests)

TNPSC Currrent Affairs 7-8 December 2020

 தமிழ்நாடு

☞ சட்டப்பேரவையில் வ.உ.சி., ஓமந்தூராா் ராமசாமி ரெட்டியாா், பரமசிவம் சுப்பராயன் ஆகிய மூன்று  மூன்று தலைவா்களின் உருவப் படங்கள் திறக்கப்படும் என்ற முதல்வா் பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பினால்,  சட்டப்பேரவையை அலங்கரிக்கும் தலைவா்களின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா

☞ இந்தியா மொபைல் மாநாடு (India Mobile Congress) 2020 ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி,  டிசம்பர் 8,2020 அன்று   காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். 8-10 டிசம்பர் 2020 தினங்களில் நடைபெறும் இந்த மாநாட்டை  இந்திய அரசின்  தொலைத் தொடர்புத் துறையும் (Department of Telecommunications), இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் (Cellular Operators Association of India (COAI)) இணைந்து   நடத்துகின்றன. 

கூ.தக. : மையக்கருத்து - “உள்ளடக்கிய புத்தாக்கம் - திறன்மிகு, பாதுகாப்பான மற்றும் நிலையானது  ( "Inclusive Innovation - Smart, Secure, Sustainable”)

☞ நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த மெய்நிகர் மாநாட்டின் (WASH (Water, Sanitation & Hygiene) Conclave ) இன்7 வது பதிப்பு 2-4  டிசம்பர் 2020 தினங்களில் மெய்நிகர் வழியாக நடைபெற்றது.   யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம்) , தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம்  ( National Institute of Rural Development and Panchayati Raj) ஆகியவை தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநில அரசாங்கங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தன.. ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் மாநாட்டின் முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.

கூ.தக. : கருப்பொருள்: "சுகாதாரம் கவனிக்கப்படத்தக்கது"(Hygiene Matters),  

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையகமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் நிர்வாக இயக்குநர் - ஹென்றிட்டா எச் ஃபோர் (Henrietta H. Fore)

 இந்தியாவுக்கான யுனிசெப் பிரதிநிதி - டாக்டர் யாஸ்மின் அலி ஹக்(Dr. Yasmin Ali Haque)

☞ பெங்களூரு ஸ்மார்ட் எரிசக்தி திறமையான மின் விநியோக திட்டத்திற்காக 190 மில்லியன் டாலர் (ரூ .1,400 கோடிக்கு மேல்) கடனுக்கு 4-12-2020 அன்று ஆசிய வளர்ச்சி வங்கி ( Asian Development Bank (ADB)) ஒப்புதல் அளித்துள்ளது. 

கூ.த.: 19 டிசம்பர் 1966 அன்று தொடங்கப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையகம் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிநா நகரில்  மாண்டலுயோங்(Mandaluyong) எனுமிடத்தில் உள்ளது.  இந்தியா உட்பட68 நாடுகள் உறுப்பினராக உள்ள இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக  ஜப்பானைச் சேர்ந்த மசாட்சுகு அசகாவா(Masatsugu Asakawa) உள்ளார். 

☞  விவசாயிகளுக்காக ‘கிரிஷி ஓடி’   ( ‘Kirishi OD(Overdraft) scheme’)  எனும் திட்டத்தை கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கி   (Karnataka Vikas Grameena Bank (KVGB)) 5 டிசம்பர் 2020 அன்று அறிமுகப்படுத்தியது.  

☞  மத்திய பிரதேசத்தின் குவாலியர், ஓர்ச்சா ஆகிய நகரங்களை உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகம்:

☞  ஐ.நா. வர்த்தக வளர்ச்சி மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD))  அமைப்பின்  ’ஐ.நா. முதலீட்டு மேம்பாட்டு விருது 2020’ (United Nations Investment Promotion Award)  இந்தியாவின் “இன்வெஸ்ட் இந்தியா” (‘Invest India’ )  அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

கூ.தக. : ஐ.நா. வர்த்தக வளர்ச்சி மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில் உள்ளது. 

2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ’இன்வெஸ்ட் இந்தியா’ அமைப்பானது, இந்திய அரசாங்கத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (Department for Promotion of Industry and Internal Trade) கீழ்  அமைக்கப்பட்டது. 

☞  ”கஞ்சா” வை “மிகவும் ஆபத்தான மருந்து” பிரிவில் இருந்து போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின்  ( United Nations Commission on Narcotic Drugs (UN-CND)) 63 வது அமர்வு நீக்கியுள்ளது. 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்:

☞  HL-2M டோகாமக் உலை (Tokamak reactor) சீனாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அணு இணைவு சோதனை சாதனமாகும். தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த உலை உருவாக்கும் மிக அதிக அளவிலான வெப்பம் மற்றும் சக்தியின் காரணமாக "செயற்கை சூரியன்" என்று அழைக்கப்படுகிறது.

☞ ”காஃபென் -14” (”Gaofen-14”) என்ற பெயரில்  புவி ஆராய்ச்சி செயற்கைக்கோளை சீனா தனது  ‘லாங்க் மார்ச் -3B’ (Long March-3B) ராக்கெட் மூலம் 6 டிசம்பர் 2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 

☞ இந்தியாவின் முதல் தனியார்  தொலையுணர்வு செயற்கைக்கோளை (remote-sensing satellite)  தயாரிப்பதற்காக, “பிக்சல்” (Pixxel) எனும் நிறுவனம், இந்திய விண்வெளி துறையின் கீழ் செயல்படும் ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்” (NewSpace India Limited (NSIL)) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  இந்த செயற்கைக் கோளானது 2021 ஆம் ஆண்டு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்  (PSLV (Polar Satellite Launch Vehicle)) மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

சுற்றுசூழல்:

☞ மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் கன்ஹர்கான் டிசம்பர் 5-12-2020 அன்று  வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இது மகாராஷ்டிராவின் 50 வது வனவிலங்கு சரணாலயம்.

விளையாட்டு:

☞ கென்ய வீரா் கிபிவோட் கன்டி ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பந்தய இலக்கை 57 நிமிடம், 32 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தாா். இதற்கு முன்னதாக கென்ய வீரா் ஜியாஃப்ரி கம்வோரோா் 58 நிமிடம் 1 விநாடியில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது.

☞ ஃபிட் இந்தியா மிதிவண்டிப் போட்டியின் இரண்டாவது பதிப்பை மத்திய விளையாட்டு அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மெய்நிகர் வாயிலாக  7-12-2020 அன்று  தொடங்கி வைத்தார். 

☞ உலக தடகள விருதுகள் 2020 (World Athletics Awards 2020) ல்,  ஸ்வீடனின் துருவ வால்டர் மோண்டோ டுப்லாண்டிஸ் (Pole Vaulter Mondo Duplantis) 2020 ஆண்டின் ஆண் உலக தடகள வீரராகவும்,  வெனிசுலாவைச் சேர்ந்த டிரிபிள் ஜம்பர் யூலிமர் ரோஜாஸு(Yulimar Rojas ) 2020 ஆண்டின் பெண் உலக தடகள வீராங்கனையாகவும்  தேர்வு செய்யப்பட்டுள்னர்.

☞ சாகிர் கிராண்ட் பிரிக்ஸின் ஃபார்முலா 2(Sakhir Grand Prix)  போட்டியை வென்ற முதல் இந்தியர் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த  ஜெஹான் தாருவாலா (Jehan Daruvala)  பெற்றுள்ளார். 

புத்தகம் மற்றும் ஆசிரியர்கள்:

☞  ”The Patient Assassin: A True Tale of Massacre, Revenge and the Raj” என்ற பெயரில்  ஜாலியன் வாலாபாக் படுகொலையை மையமாகக் கொண்டு   பிரிட்டிஷ்-இந்திய பத்திரிகையாளர் அனிதா ஆனந்த்  எழுதிய புத்தகத்திற்கு ”ஃபென் ஹெஸ்ஸல்-டில்ட்மான் வரலாற்றிற்கான பரிசு 2020 (PEN Hessell-Tiltman Prize for History 2020) ஐ வென்றுள்ளது. 

முக்கிய தினங்கள்:

☞ முதலாவது ஐ.நா. சர்வதேச வங்கிகளின் (International Day of Banks) தினம்  4-12-2020 அன்று அனுசரிக்கப்பட்டது. 

☞ சர்வதேச சிவில் விமான தினம் (International Civil Aviation Day) -  டிசம்பர் 7

☞ ஆயுதப்படைகளின் கொடி நாள் (Armed Forces Flag Day)  - டிசம்பர் 7

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: