நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 14 January 2021

TNPSC Current Affairs 14 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID) 

தமிழ்நாடு

முதலாவது ‘தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் விருதுகள் 2020’  விவரம் வருமாறு,

தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா்  நாளிதழ் விருது 2020’, ‘தினமணி’ நாளிதளுக்கு வழங்கப்படவுள்ளது.

சி.பா. ஆதித்தனாா் வார இதழ் விருது- கல்கி வார இதழ்

சி.பா. ஆதித்தனாா் திங்களிதழ் விருது- செந்தமிழ் திங்களிதழ்

 தேவநேயப்பாவாணா் விருது-முனைவா் கு. சிவமணி

 வீரமாமுனிவா் விருது- ஹாங்காங்கைச் சோ்ந்த முனைவா் கிரிகோரி ஜேம்ஸ்

 சிறந்த மொழிபெயா்ப்பாளா் விருது: சோ.சேசாச்சலம், முனைவா் இராம.குருநாதன், ப. குணசேகா், முனைவா் பத்மாவதி விவேகானந்தன், சு. ஜோதிா்லதா கிரிஜா, ஜெ. இராம்கி (எ) இராமகிருஷ்ணன், சுவாமி விமூா்த்தானந்தா், மீரா ரவிசங்கா், திலகவதி, கிருஷ்ண பிரசாத் ஆகிய பத்து பேருக்கு சிறந்த மொழி பெயா்ப்பாளா் விருது வழங்கப்படும்.

 2019-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சா் கணினித் தமிழ் விருது -  சே. இராஜாராமன்

மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 2020 பெறுவோர் விவரம் வருமாறு:

இலக்கிய விருது- பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த முனைவா் அலெக்சிசு தேவராசு சேன்மாா்க்,

இலக்கண விருது- இலங்கையைச் சோ்ந்த பேராசிரியா் அருணாசலம் சண்முகதாசு,

மொழியியல் விருது சிங்கப்பூரைச் சோ்ந்த முனைவா் சுப. திண்ணப்பன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க ரூ.621 கோடி செலவாகும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 7 தொல்லியல் அகழாய்வுகள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2020-21-ம் ஆண்டில் தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகளை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கொற்கை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஈரோடு மாவட்டம் கொடுமணல், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு ஆகிய 7 தொல்லியல் அகழாய்வுகள், புதிய கற்கால இடங்களைக் கண்டறிய கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தைக் கண்டறிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொல்லியல் களஆய்வு என 2 தொல்லியல் களஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்காக, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழுவின்  ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் 13-1-2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளன. விருதாளர்களுக்கு பரிசுத்தொகை ரூ.1 லட்சம், தமிழ்த்தாய் விருது பெறும் அமைப்புக்கு ரூ.5 லட்சம், தமிழ்ச்செம்மல் விருதுபெறுவோருக்கு ரூ.25 ஆயிரமும், பாராட்டுச்சான்றும் வழங்கப்படும். விருது பெற்றோர் விவரம் வருமாறு,

2021-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது - வைகைச்செல்வன்;

2020-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது - அ.தமிழ்மகன் உசேன்;

அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ.அருணாச்சலம்;

பேரறிஞர் அண்ணா விருது - மறைந்த கடம்பூர் ஜனார்த்தனன்;

பெருந்தலைவர் காமராஜர் விருது- ச.தேவராஜ்;

மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்,

பாவேந்தர் பாரதிதாசன் விருது - பாடலாசிரியர் அறிவுமதிஎன்ற மதியழகன்,

 ‘தமிழ்த்தென்றல்’ திருவிக விருது - வி.என்.சாமி,

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - வீ.சேதுராமலிங்கம்

2020-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் வளா்ச்சிக்காக தொண்டுசெய்து வருவோா், தமிழ் அமைப்பை ஏற்படுத்தி மொழிக்காக பாடுபடும்ஆா்வலா்களைப் பெருமைப்படுத்தும் வகையில், ‘தமிழ்ச் செம்மல்’ விருதுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒருவா் என்ற வகையில் விருதாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.அந்த வகையில் 2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெறுவோா் விவரம் வருமாறு:

சென்னை மாவட்டம்-ஜெ.வா.கருப்புசாமி, திருவள்ளூா்- வேணு புருஷோத்தமன் , காஞ்சிபுரம்- முனைவா் சு.சதாசிவம், வேலூா்- மருத்துவா் சே.அக்பா் கவுஸா், கிருஷ்ணகிரி - மா.முருககுமரன், திருவண்ணாமலை- முனைவா் இரா.வெங்கடேசன், விழுப்புரம்- பரிக்கல் ந.சந்திரன், கடலூா்- முனைவா் ஜா.இராஜா, பெரம்பலூா்- முனைவா் அ.செந்தில்குமாா் என்கிற தமிழ்க்குமரன், அரியலூா்- முனைவா் சா.சிற்றரசு, சேலம்- கவிஞா் பொன்.சந்திரன்.தருமபுரி- பாவலா் பெரு.முல்லையரசு, நாமக்கல்- ப.முத்துசாமி, ஈரோடு- முனைவா் கா.செங்கோட்டையன், கரூா்- சி.காா்த்திகா, கோயம்புத்தூா்- எம்.ஜி.அன்வா் பாட்சா, திருப்பூா்- முனைவா் துரை அங்குசாமி, நீலகிரி ம.பிரபு, திருச்சி- சோம வீரப்பன், புதுக்கோட்டை-ஜீவி (ஜீ.வெங்கட்ராமன்), சிவகங்கை- இரா.சேதுராமன், தஞ்சாவூா்- பழ.மாறவா்மன், திருவாரூா்- இராம.வேல்முருகன், நாகப்பட்டினம்- மா.கோபால்சாமி, இராமநாதபுரம்- ஆ.முனியராஜ், மதுரை- முனைவா் போ.சத்தியமூா்த்தி, திண்டுக்கல்- தா.தியாகராசன், தேனி- த.கருணைச்சாமி, விருதுநகா்- கவிஞா் சுரா என்கிற சு.இராமச்சந்திரன், திருநெல்வேலி- வீ.செந்தில்நாயகம்.தூத்துக்குடி- ச.காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி- பா.இலாசா் (முளங்குழி பா.இலாசா்), திருப்பத்தூா்- முனைவா் ச.சரவணன், செங்கல்பட்டு- நந்திவரம் பா.சம்பத்குமாா், ராணிப்பேட்டை- கவிஞா் பனப்பாக்கம் கே.சுகுமாா், தென்காசி- மு.நாராயணன், கள்ளக்குறிச்சி- சி.உதியன், மயிலாடுதுறை- துரை குணசேகரன்.

தமிழ்ப் புத்தாண்டுகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளோர் விவரம் வருமாறு,

2020-ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது- விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

கபிலா் விருது - பேராசிரியா் செ.ஏழுமலை

உ.வே.சா. விருது - எழுத்தாளா் கி.ராஜநாராயணன்

கம்பா் விருது -மருத்துவா் எச்.வி.ஹண்டே

சொல்லின் செல்வா் விருது- ஆன்மிகச் சொற்பொழிவாளா் நாகை முகுந்தன்

உமறுப்புலவா் விருது- எழுத்தாளா் ம.அ.சையத் அசன்என்ற பாரிதாசன்

ஜி.யு.போப் விருது - ஜொ்மனியை சோ்ந்த தமிழ்ப் பேராசிரியா் உல்ரீகே நிகோலசு

இளங்கோவடிகள் விருது-பேராசிரியா் மா. வயித்தியலிங்கன்

அம்மா இலக்கிய விருது- பேராசிரியா் தி.மகாலட்சுமி

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் விருது- எழுத்தாளா் ஆ.அழகேசன்

மறைமலையடிகளாா் விருது: மறை.தி.தாயுமானவன்

அயோத்திதாசப் பண்டிதா் விருது: முனைவா் கோ.ப.செல்லம்மாள்

அருட்பெருஞ்சோதி வள்ளலாா் விருது: முனைவா் ஊரன் அடிகள்

காரைக்கால் அம்மையாா் விருது: முனைவா் மோ. ஞானப்பூங்கோதை

 

இந்தியா

73 தேஜஸ் எம்.கே-1ஏ இலகு ரக போர் விமானங்களையும்(Light Combat Aircrafts (LCA) ‘Tejas’ ), 10 தேஜஸ் எம்.கே-1 இலகு ரக பயிற்சி விமானங்களையும்(10 LCA Tejas Mk-1 Trainer aircrafts) , பெங்களூரிலுள்ள  எச்ஏஎல் (Hindustan Aeronautics Limited, HAL)நிறுவனத்திடமிருந்து ரூ.45,696 கோடிக்கு வாங்கவும், இதனுடன் ரூ.1,202 கோடி செலவில் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தேஜஸ் எம்.கே-1ஏ இலகு ரக போர் விமானம், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட 4 பிளஸ் தலைமுறை போர் விமானம். இதில் நவீன ரேடார், ஏவுகணை, எலக்ட்ரானிக் போர் முறை, நடு வானில் எரிபொருள் நிரப்பும் வசதி ஆகியவை உள்ளன. இது விமானப்படையின் தேவையை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கது. இது இந்தியாவில் வடிமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானம். இதில் 50 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரானவை. இது இத்திட்டம் முடிவதற்குள் 60 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், விமானங்களின் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை இந்திய விமானப்படை உருவாக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கட்டமைப்பு மூலம் தேஜஸ் போர் விமானங்களை விமானப்படை திறமையாக கையாள முடியும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை (urban local bodies reforms) , மணிப்பூர் நான்காவது மாநிலமாக அமல்படுத்தியுள்ளது.  ஏற்கனவே இந்தச் சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ள ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுடன் மணிப்பூர் தற்போது இணைந்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி அமைப்பை வலுப்படுத்துவதையும், சிறப்பான பொது சுகாதாரம், தூய்மை சேவைகளை வழங்குவதற்கு அவற்றைத் தயார்படுத்துவதையும் இந்த சீர்திருத்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. பொருளாதார ரீதியாக புத்தாக்கம் பெற்ற நகர்புற உள்ளாட்சி அமைப்புகளால் சிறந்த உள்ளூர் உள்கட்டமைப்பை உருவாக்க முடியும்.

  ஜம்மு-காஷ்மீரில் கதுவா மாவட்டம் ஹிரா நகர் செக்டாரில் பயங்கரவாதிகள் தோண்டிய 150 மீட்டர் நீள சுரங்கப் பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்)  கண்டுபிடித்துள்ளனர்.

பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை  மத்திய பிரதேச மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், கிட்ஸ் (Personal Protective Equipment (PPE) Kits) மற்றும் சூட்களின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது, சீனா முதலிடத்தில் உள்ளது.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலான கொண்டாட்டங்களுக்காக,  பிரதமர்  நரேந்திர மோடி தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு கொண்டாட்டங்கள் 2021 ஜனவரி 23 முதல் தொடங்கவுள்ளது.

கூ.தக. : நேதாஜி பிறந்த தினம் - 23 ஜனவரி, 1897

வெளிநாட்டு உறவுகள்

அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம், இந்தியாவின் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவை கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கிர்கிஸ்தானின் அதிபராக ஜபரோவ் சாடிர் நூர்கோஜெவிச் (Japarov Sadyr Nurgojoevich) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை உருவாக்கிய, ‘எளிதில் தொழில் செய்வதற்கான சீர்திருத்தத்தை’ மேற்கொள்ளும் 8வது மாநிலமாக கேரளா உருவாகியுள்ளது.  இதன் மூலம், இந்தச் சீர்திருத்தத்தை நிறைவேற்றிய தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பட்டியலில் கேரளா தற்போது இணைந்துள்ளது.

 எளிதாக தொழில் செய்யும் சீர்திருத்தத்தை நிறைவேற்றியதால்,  இந்த 8 மாநிலங்களும், ரூ.23,149 கோடி கூடுதலாக கடன் பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.4,813 கோடியும் அடங்கும்.

 

முக்கிய தினங்கள்

முன்னாள் படை வீரர்கள் தினம் (Veterans Day) - ஜனவரி 14

கூ.தக. : கடந்த 1953 ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவின் முதல் ராணுவ தளபதியான ஃபீல்ட் மார்ஷல் கே எம் கரியப்பா ஓய்வு பெற்றதை முன்னிட்டு இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 

விளையாட்டுகள்

அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் (பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிளில்) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி  மாணவி  சி.கவி ரக்ஷனா முதலிடம் பெற்றுள்ளார்.

அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.  

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!