நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 15 & 16 January 2021

TNPSC Current Affairs 15-16 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மேற்கொண்டதால், வெளிச் சந்தையில் தமிழகம் கூடுதலாக ரூ.4,813 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கூ.தக. : ஒரு நாடு, ஒரே ரேசன் கார்டு சீர்திருத்தத்தை மத்திய நிதியமைச்சகத்தின், செலவினத்துறை கொண்டு வந்தது. இந்த சீர்திருத்தத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட 11வது மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.

ஏற்கனவே, ஆந்திர பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளன. தற்போது இந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இணைந்துள்ளது.

இது வரை 11 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தையும், 4 மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்பு சீர்திருத்தத்தையும் மேற்கொண்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் 16-1-2021 அன்று தொடங்கி வைக்கிறார் .

கூ.தக. : சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி 16-1-2021 அன்று தொடங்கி வைக்கிறார்.அந்தந்த மாநிலங்களில் முதல்-அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்படும் என அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி அறிவித்துள்ளார்.

கூ.தக. : திருக்குறளுக்கு முதன் முதலாக உரை எழுதியவா் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணக்குடவா். பரிமேலழகரின் உரை மணக்குடவரின் உரைக்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது.

இந்தியா

இந்தியாவின் முதல் ‘தீயணைப்பு பூங்காவை’ (Fire Park) ஒடிசாவின் புவனேஷ்வரில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் 15-1-2021 அன்று திறந்து வைத்தார் . தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை வழங்குவதற்கான முதல் முயற்சியாக ஃபயர் பார்க் உள்ளது. மேலும், தீயணைப்பு தொடர்பான 16 சேவைகளை வழங்கும் மெய்நிகர் தளமான ‘அக்னிஷாம சேவா’ (Agnishama Seva) வையும் நவீன் பட்நாயக் அறிமுகப்படுத்தினார்.

ப்ரீத்தி பந்த் குழு (Preeti Pant committee) : 2019-20 தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (National Family Health Survey-5 (NFHS-5)) இன் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ப்ரீத்தி பந்த் (Preeti Pant) தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைத்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, ஸ்டண்டிங், இரத்த சோகை மற்றும் சி பிரிவு தொடர்பான குறிகாட்டிகளை மேம்படுத்த இக்குழு பரிந்துரைகள் மற்றும் கொள்கை தலையீடுகளை வழங்கும்.

கூ.தக. : 5 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ‘சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின்’ (International Institute for Population Sciences (IIPS)) மூலம் நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் முதல் கட்டம் 131 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டது.

தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கான 5வது தேசிய காயகல்ப் விருதுகள் 2019-20 ( 5th National Kayakalp Awards 2019-20) ல் முதல் பரிசை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள ரேஷி மாவட்ட மருத்துவமனை (District Hospital Reasi ) வென்றுள்ளது. மத்திய அரசு மருத்துவமனைகளுக்கான ‘Group ‘A’’ பிரிவில், இரண்டாவது பரிசை பாண்டிச்சேரியிலுள்ள ‘ஜிப்மர் மருத்துவமனை’ (JIPMER (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research)) பெற்றுள்ளது. ‘B category’ பிரிவில் சிறந்த அரசு மருத்துவமனைக்கான பரிசை ‘எய்ம்ஸ் புவனேஸ்வர்(All India Institutes of Medical Sciences (AIIMS), Bhubaneswar) வென்றுள்ளது.

ஸ்வச் ஸ்வஸ்த்சர்வத்ரா திட்டம் (Swachh SwasthSarvatra (SSS) program) : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (Ministry of Health and Family Welfare) மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் (Ministry of Drinking Water and Sanitation) இணைந்து ஒத்துழைத்து, ஸ்வச் ஸ்வஸ்த்சர்வத்ரா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத தொகுதிக்குள் அமைந்துள்ள சமூக சுகாதார மையத்திற்கு ஒரு முறை மானியமாக ரூ.10 லட்சம் தேசிய சுகாதார மிஷன் (National Health Mission (NHM)) மூலம் வழங்கப்படும்.

உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் துஷ்யந்த் டேவ் (Dushyant Dave) தனது பதவியை 14-1-2021 அன்று ராஜினாமா செய்தார்.

மத்திய விஸ்டா திட்டத்தின்படி, புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி 15-1-2021 அன்று தொடங்கியது . புதிய நாடாளுமன்றம் கட்டத்திற்கு 10 டிசம்பர் 2020 அன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.

கூ.தக. :

இப்போதைய நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான இந்தக் கட்டிடம் கட்டும்போது அப்போது ரூ.83 லட்சம் செலவானது.

இந்த பழைய கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. தரைதளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது.

இந்த நாடாளுமன்ற கட்டிடம் சென்டிரல் விஸ்டா என்னும் மத்திய விஸ்டா மறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களை உருவாக்கப்பட உள்ளன. மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் கட்டப்பட உள்ளது. அதிலும் கூட்டுக் கூட்டத்தொடர் நடந்தால் 1,272 பேர் அமரும் வகையில் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட உள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைதளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

இந்த புதிய நாடாளுமன்றத்தை டாடா புராஜெக்ட்ஸ் லிமிட் நிறுவனம் எடுத்துச் செய்து வருகிறது.

கரோனா தடுப்பூசி போடும் பணியில் வாக்குச்சாவடி அளவில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிக்கு, வாக்காளா் பட்டியல் புள்ளி விவரங்களைப் பயன்படுத்திக்கொள்ள தோ்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது .அதே நேரம், தடுப்பூசி போடும் பணி முடிவடைந்தவுடன் அந்தப் புள்ளி விவரங்களை அழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கூ.தக. : வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு 12-1-2021 அன்று பிறப்பித்தது.

அதன்படி, அந்தச் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக பாரதிய கிஸான் யூனியனின் தேசியத் தலைவா் பூபேந்தா் சிங் மன், சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத்துக்கான தெற்காசிய இயக்குநா் பிரமோத் குமாா் ஜோஷி, வேளாண் விளைபொருள்களுக்கான விலை நிா்ணய ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாடி, ‘ஷேத்கரி சங்காதனா’ என்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அனில் கன்வட் ஆகிய 4 போ் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் ரூ.5,0,0100 நன்கொடை வழங்கியுள்ளார்.

பிரதமரின் மூன்றாம் கட்ட திறன் இந்தியா திட்டம் (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY 3.0) ) , நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் 16-1-2021 அன்று தொடங்கப்படுகிறது . மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் தலைமையில் இந்த 3வது கட்டம், புதிய மற்றும் கோவிட் தொடர்பான தொழில் திறன்களில் கவனம் செலுத்தும். மூன்றாம் கட்ட திறன் இந்தியா திட்டத்தின் கீழ், 2020-2021ம் ஆண்டில் எட்டு லட்சம் பேருக்கு, ரூ.948.90 கோடி செலவில் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 729 பிரதமரின் திறன் மையங்கள், பட்டியலில் உள்ள இதர பயிற்சி மையங்கள் மற்றும் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள 200க்கும் மேற்பட்ட ஐடிஐக்கள் ஆகியவை திறமையான தொழிலாளர்களை உருவாக்க பயிற்சியை அளிக்கவுள்ளன.

2021 ஆம் ஆண்டின் குடியரசு தின நிகழ்ச்சியில் வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தத் தலைவரும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது . கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக, சிறப்பு விருந்தினராக எந்தச் சிறப்பு விருந்தினரையும் அழைக்காமல் குடியரசு தின நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

கூ.தக. :

2021 ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் பங்கேற்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக போரிஸ் ஜான்ஸன் வருகையும் கடந்த 5-ம் தேதி திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1966-ம் ஆண்டு கடைசியாக எந்தச் சிறப்பு விருந்தினரும் வராமல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு முன் கடந்த 1952, 1953 ஆண்டுகளிலும் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினர் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடந்தன.

கடந்த ஆண்டு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2019-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஸா, 2018-ல் ஏசியான் நாடுகளின் 10 தலைவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.2017-ம் ஆண்டில் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நயானும், 2016-ல் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலன்டேவும் பங்கேற்றார்கள். 2015-ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா குடியரசு தினத்தில் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

”பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாடு” (‘Prarambh: Startup India International Summit’) என்ற பெயரில் ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களுக்கான மாநாட்டை' மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல் 15-1-2021 அன்று தொடங்கி வைத்தார்.

அறிவியல் தொழில் ஆராய்ச்சி குழுவின் புதிய மையமான தேசிய அறிவியல் தகவல் தொடர்பு மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை (CSIR-National Institute of Science Communication and Policy Research (CSIR-NIScPR)) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் 14-1-2021 அன்று தொடங்கி வைத்தார். சிஎஸ்ஐஆர்-ன் அறிவியல் தகவல் தொடர்பு மையம் (CSIR-National Institute of Science Communication and Information Resources (CSIR-NISCAIR)) மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் மையம் (CSIR-National Institute of Science, Technology and Development Studies (CSIR-NISTADS) ) ஆகியவற்றை இணைத்து இந்த புதிய சிஎஸ்ஐஆர்- அறிவியல் தகவல் தொடர்ப்பு மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSIR-NIScPR) உருவாக்கப்பட்டுள்ளது.

☞ ‘ அஸ்மி’ (“Asmi”) என்ற பெயரில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில், நாட்டின் முதல் 9 எம்எம் இயந்திர துப்பாக்கி யை (9mm Machine Pistol) ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(Defence Research and Development Organisation - DRDO) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து உருவாக்கியுள்ளது. புனேவில் உள்ள டிஆர்டிஓ-வின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 9எம்எம் இயந்திர துப்பாக்கியை உருவாக்கியுள்ளது. அலுமினியம் மற்றும் கார்பன் பைபர் மூலம் இந்த துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை 16 ஜனவரி 2021 அன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் . நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால், இது உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமாக இருக்கும். முதல் கட்டமாக, கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் 1 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்து முன்கள பணியாளா்கள் 2 கோடி பேருக்கு போடப்படும். அதன் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த தடுப்பூசி திட்டம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கிய கோ-வின் என்ற ஆன்லைன் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தும். இது தடுப்பூசி இருப்புகள், சேமிப்பு வெப்பநிலை மற்றும் கோவிட்-19 தடுப்பூசி பயனாளிகளின் தனிப்பட்ட கண்காணிப்பு உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை அளிக்கும். தடுப்பூசி போடப்படும் நேரத்தில், இந்த டிஜிட்டல் தளம், திட்ட மேலாளர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவும்.

கொவிட்-19 தொற்று, தடுப்பூசி அறிமுகம் மற்றும் கோ-வின் மென்பொருள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க பிரத்தியேக 24 மணி நேர உதவி மையம் - 1075 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான முதல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை (India’s First Indigenously Designed & Developed Driverless Metro Car) , பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 15-1-2021 அன்று அறிமுகம் செய்து வைத்தார்.

பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்படத்தில், ஓட்டுநர் இல்லா நவீன மெட்ரோ ரயில்களை தயாரிக்கிறது. மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்காக தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை, பெங்களூரில் உள்ள பிஇஎம்எல் வளாகத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று அறிமுகப்படுத்தினார்.

வெளிநாட்டு உறவுகள்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கூ.தக. : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா செனக்கா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பூனேவிலுள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 15-1-2021 அன்று செய்துகொள்ளப்பட்டது. இதன் மூலம், ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பங்கள், தொலைதொடர்பு பாதுகாப்பு, இந்திய தீவுகளுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை அமைப்பு, அலைக்கற்றை மேலாண்மை, பொலிவுறு நகரங்கள், இணைப்பு இல்லாத பகுதிகளில் அதிவேக அகண்ட அலைவரிசை, பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திய அரசின் தொலைதொடர்பு துறையும், ஜப்பான் அரசின் தகவல் தொடர்பு துறையும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

சர்வதேச நிகழ்வுகள்

உலகளாவிய எபோலா (Ebola) தடுப்பூசியை சேமிப்பதற்காக, உலகின் நான்கு முன்னணி சுகாதார மற்றும் மனிதாபிமான அமைப்புகளான யுனிசெஃப் ( UNICEF) , உலக சுகாதார அமைப்பு (WHO- World Health Organisation), சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC)) மற்றும் மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (Médecins Sans Frontières (MSF) ) ஆகியவை கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளன. இதற்காக, உலக தடுப்பூசி கூட்டமைப்பிற்கான “காவி” (GAVI - Global Vaccine Alliance) அமைப்பிடமிருந்து நிதியுதவி பெறப்படவுள்ளது.

கூ.தக. : எபோலா நோயானது 1976 ஆம் ஆண்டில் காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்- திடீர் காய்ச்சல், தீவிர பலவீனம், தசை வலி மற்றும் தொண்டை புண் ஆகியவையாகும்.

ஊசி வழி செலுத்தக்கூடிய ஒற்றை டோஸ் எபோலா தடுப்பூசி ”rVSV∆G-ZEBOV-GP, live” மெர்க், ஷார்ப் & டோஹ்ம் (எம்.எஸ்.டி) கார்ப்பரேஷன் ( Merck, Sharp & Dohme (MSD) Corp.) மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஹுருன் குளோபல் 500 பட்டியல் 2020 (Hurun Global 500 list) எனப்படும் உலகெங்கிலும் உள்ள 500 மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் மொத்தம் 11 நிறுவனங்களுடன் இந்தியா 10 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில், உலகளவில், முதல் நான்கு இடங்களை முறையே ஆப்பிள் , மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை முறையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (54 வது இடம்) , டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (73 வது இடம்) மற்றும் எச்.டி.ஃப்.சி. வங்கி (105 வது இடம்) ஆகியவை பெற்றுள்ளன. 
☞ ”USAID” எனும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகமையின் (United State agency for international development) தலைவராக சமந்தா பவர் (Samantha Power) என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபையில் 13-1-2021 அன்று நிறைவேற்றப்பட்டது . அமெரிக்க நாடாளுமன்றக் கட்டமான கேபிடலில் வன்முறையில் ஈடுபடும்படி தமது ஆதரவாளர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூ.தக. : அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டாவது முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல் அதிபர் டொனால்டு டிரம்ப்தான். இதுவரை மூன்று அதிபர்களுக்கு எதிராகத்தான் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

டிசம்பர் 2020 -க்கான நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையின் 22 வது வெளியீடு ஆகும். இந்த நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையானது வருடத்திற்கு இரண்டு முறை வெளியிடப்படுகிறது.

ஜெயந்த் குமார் தாஸ் பணிக்குழு ( Jayant Kumar Dash working group) : ஆன்லைன் கடன் வழங்கல் தொடர்பான துன்புறுத்தல்கள் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் கடன் வழங்குவதற்கான ஒழுங்கு முறைகளை பரிந்துரைக்க, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஜெயந்த் குமார் டாஷ் (Jayant Kumar Dash) தலைமையிலான பணிக்குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இக்குழுவானது, மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

விருதுகள்

“ராணுவ தலைமை தளபதி பாராட்டு பத்திரம்” (Chief of Army Staff Commendation) , சவாலான கொவிட்-19 காலகட்டத்தின் போது ராணுவத்திற்கு சிறப்பான முறையில் சேவையாற்றியதற்காக, தலைமை கட்டுப்பாட்டாளரான திரு அம்ரேஷ் குமார் சௌத்ரிக்கு (Shri Amresh Kumar Chaudhary) வழங்கப்பட்டது

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் (International Film Festival of India (IFFI)) வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement award) இத்தாலிய திரைப்பட இயக்குநர் விட்டோரியோ ஸ்டோராரோ (Vittorio Storaro) -விற்கு வழங்கப்படுகிறது.

கூ.தக. : 51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா 16 ஜனவரி 2021 முதல் கோவாவில் நடைபெறுகிறது.

முக்கிய தினங்கள்

73 வது தேசிய இராணுவ தினம் (Army Day) - ஜனவரி 15 .

கூ.தக. : ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கடந்த 1949ம் ஆண்டு, கடைசி பிரிட்டிஷ் கமாண்டரிடமிருந்து, ராணுவ தளபதி பொறுப்பை மறைந்த பீல்டு மார்ஷ்ல் ஜெனரல் கரியப்பா ஏற்றார். இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி ராணுவ தினமாக கொண்டப்படுகிறது.

சாலை பாதுகாப்பு மாதத்தை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஜனவரி 18ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

வாட்ஸ்ஆப்பின் பிரைவசி அப்டேட் திட்டம் பயனாளர்களிடம் எழுந்த எதிர்ப்பினால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

கூ.தக. : “வாட்ஸ் ஆப்” (WhatsApp) நிறுவனமானது யாகூ நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களான பிரியான் ஆக்ஸன் ( Brian Acton ) மற்றும் ஜான் கொம் (Jan Koum) ஆகியோரால் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த செயலிக்கு ’WhatsApp’ என பெயரிட்டவர் - ஜான் கொம் (Jan Koum)

2014 ஆம் ஆண்டு “வாட்ஸ் ஆப்” (WhatsApp) செயலி ஃபேஷ்புக் (Facebook) நிறுவனத்தினால் கையகப்படுத்தப்பட்டது.

சிறு வணிகங்களுக்கு உதவிடும் “WhatsApp Business” செயலி ஜனவரி 2018 ல் அறிமுகம் படுத்தப்பட்டது.

சிக்னல் மெசஞ்சர் (Signal Messenger) - வாட்சப் நிறுவனத்தின் போட்டியாளராக கருதப்படும் ‘சிக்னல் மெசஞ்சர்’ , வாட்சப் செயலியின் நிறுவனர்களில் ஒருவரான பிரியான் ஆக்‌ஷன் (Brian Acton) மற்றும் மோக்சி மார்லின்ஸ்பைக் (Moxie Marlinspike) ஆகியோர்களால் பிப்ரவரி 2018 ல் தொடங்கப்பட்டது.

"டெலிகிராம் செயலி” (Telegram) - 2013 ஆம் ஆண்டில் ரஷியாவைச் சேர்ந்த நிகோலாய் மற்றும் பாவல் துரோவ் (Nikolai and Pavel Durov) ஆகியோர்களால் தொடங்கப்பட்டது.

விளையாட்டுகள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் 15-1-2021 அன்று தொடங்கியது . இந்த ஆட்டத்தில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

☞ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன், மேத்யூ வேட்-ஐ வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே சமயத்தில் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைத் தமிழக வீரர் நடராஜன் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. இந்த மூன்று ஆட்டங்களிலும் நடராஜன் விளையாடவுள்ளார்.

கூ.தக. : சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார்.

தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார்.

ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார்.

இந்திய தடகள அணியின் நடுத்தர மற்றும் நீண்ட தூர பயிற்சியாளராக, பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நிகோலாய் ஸ்னேசரேவ் (Nikolai Snesarev) நியமனம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!