நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 17-18 January 2021

Daily Current Affairs for TNPSC Exams 17-18 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 12 காளைகளை அடக்கிய விராட்டிபத்து கண்ணனுக்கு க்விட் கார் பரிசு வழங்கப்பட்டது.

இந்தியா

தொழில்முனைவோா்கள் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1,000 கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு (Startup India seed fund) அமைப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கூ.தக. : புதிய தொழில் தொடங்குவோரை ஊக்குவிப்பதற்காக ‘ஸ்டாா்ட்-அப் இந்தியா’ திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி புதிய தொழில்களுக்கான ‘பிராரம்ப்: ஸ்டாா்ட்-அப் இந்தியா சா்வதேச மாநாடு’ காணொலிக் காட்சி வாயிலாக 16,17 ஜனவரி 2021 தினங்களில் நடைபெற்றது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் 4 புதிய தொழில் நிறுவனங்கள் மட்டுமே 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்டவையாக இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 30-க்கும் அதிகமாக உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் 11 புதிய தொழில் நிறுவனங்களின் மதிப்பு, 100 கோடி அமெரிக்க டாலா்களைக் கடந்துள்ளது.

சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குஜராத் மாநிலத்தின் கெவாடியாவிலுள்ள ‘ஒற்றுமை சிலைக்கு’ (Statue of Unity) எட்டு ரயில்களை பிரதமர் திரு நரேந்திர மோடி 17-1-2021 அன்று காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கெவாடியா முதல் சென்னை, வாரணாசி, ரேவா, தாதர் மற்றும் தில்லி இடையேயான புதிய இணைப்புகள், கெவாடியா- பிரதாப் நகர் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் சேவைகள், தபோய்- சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத்- கெவாடியா புதிய அகல ரயில் பாதை ஆகிய வழிதடங்களில் பயணிக்கும் இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு (Statue of Unity) சீரான இணைப்பை வழங்கும். ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே இடத்திற்கு ரயில் சேவை கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

கூ.தக. : அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட குஜராத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலையைப் பாா்வையிட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.இதுவரை சுமாா் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஒற்றுமை சிலையைப் பாா்வையிட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

சுபாஷ் சந்திர குந்தியா குழு (Subhash Chandra Khuntia Committee) : இந்தியாவில் சுகாதார காப்பீட்டின் தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த 10 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI- Insurance Regulatory and Development Authority of India) அமைத்துள்ளது. இந்த குழுவிற்குIRDAI தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திர குந்தியா தலைமை தாங்குவார். ஒரு ஆண்டு காலவரையறை கொண்டுள்ள இந்த குழுவின் முக்கிய நோக்கங்கள், காப்பீட்டு தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மையை ஆராய்தல், குறிப்பிட்ட நோய்களின் பாதுகாப்பு குறித்த அணுகுமுறைகளை பரிந்துரைத்தல், மற்றும் சிகிச்சை நெறிமுறை அல்லது விகித கட்டமைப்பில் விதிமுறைகளை உருவாக்குதல் ஆகியவையாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி : ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி கடந்த 1951-52-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தோ்தலில் முதல்நபராக வாக்களித்தவர். 18-1-2021 அன்று நடைபெற்ற ஹிமாசல் உள்ளாட்சித் தோ்தலில் வாக்களித்துள்ளதால் தற்போது இவரது பெயர் செய்திகளில் வந்துள்ளது.

பிரபல ஹிந்துஸ்தானி இசையமைப்பாளரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் 18-1-2021 அன்று காலமானாா்.

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் 18-1-2021 முதல் அமலுக்கு வருகிறது . இந்த சட்டத்தின்படி மாடுகளை கொல்ல முடியாது. விவசாயிகள் வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் அதை கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். ஆனால் 13 வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேளாண் சட்டங்கள் விவசாய சீர்திருத்தங்களுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறனை கொண்டு இருக்கின்றன என சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

கோவின் செயலியில் (Co-WIN App) பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

”சாக்ஷம்” (‘SAKSHAM’ ) என்ற பெயரில் பசுமையான மற்றும் தூய்மையான எரிசக்தி (Green and Clean Energy) குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் நோக்கிலான பிரச்சாரத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலிய சிக்கன ஆராய்ச்சி சங்கம் (Petroleum Conservation Research Association (PCRA)) 16-1-2021 அன்று தொடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு நடைபெற உள்ள இந்த பிரச்சாரத்தில், கரியமில தடங்கள் அதிகரிப்பதால் உருவாகும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றி மக்களிடையே விளக்கப்படும்.

கொச்சி விமான நிலைய பயன்பாட்டுக்காக மிதக்கும் சூரியமின் தகடுகள் மூலம் மின் உற்பத்தி : உலகளவில் முற்றிலும் சூரியமின் சக்தி மூலம் இயங்கத் தொடங்கிய முதல் விமான நிலையம், கேரள மாநிலம் கொச்சி சா்வதேச விமான நிலையம் ஆகும். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்த விமான நிலையத்தின் மின்சார தேவைகள் முழுவதுமாக சூரியமின் சக்தி மூலம் பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது.தற்போது கூடுதல் சிறப்பாக இந்த விமான நிலையத்தின் மின்சார தேவைக்காக செயற்கை குளங்களை உருவாக்கி, அதில் மிதக்கும் விதமாக சூரியமின் சக்தி தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

TEPC - Telecom Equipment and Services Export Promotion Council (தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்)

கூ.தக. : இந்த கவுன்சிலின் தற்போதைய தலைவராக சந்தீப் அகர்வால் (Sandeep Aggarwal) உள்ளார்.

வெளிநாட்டு உறவுகள்

1.8 கோடி இந்தியா்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனா் என ஐ.நா. வெளியிட்டுள்ள ‘சா்வதேச இடம்பெயா்வு 2020’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிகபட்சமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியா்களும், அமெரிக்காவில் 27 லட்சம் பேரும், சவூதி அரேபியாவில் 25 லட்சம் பேரும் வசித்து வருகின்றனா். குறிப்பிட்ட நாட்டைச் சோ்ந்தோா் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைத் தொடா்ந்து மெக்ஸிகோ, ரஷியா, சீனா, சிரியா நாடுகளைச் சோ்ந்தோா் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா்.

ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரிய நாடுகளிலிருந்தும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டினால் நடத்தப்படும் ஜி7 உச்சி மாநாடு 2021 வரும் ஜுன் 11 முதல் 13 வரை தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் (Cornwall, Southwest England) நகரில் நடைபெறுகிறது.

கூ.தக. : முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.1975 ஆம் ஆண்டில் தொடங்கிய இவ்வமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

சர்வதேச நிகழ்வுகள்

ஈஸ்டோனியா (Estonia) நாட்டின் பிரதமர் ஜீரி ராதாஸ் (Juri Ratas) 13-1-2021 அன்று பதவி விலகி யுள்ளார்.

உகாண்டாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் திரு யோவோரி முசேவேனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமெரு எரிமலை 16-1-2021 அன்று வெடித்து சிதறியது. இந்தோனேசியாவில் ஏறக்குறைய 130 எரிமலைகள் உள்ளன. இது வேறு எந்த நாட்டையும் விட அதிகம் ஆகும்.

பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது. ரஷியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கும் வகையில், கடந்த 2002-ம் ஆண்டு ‘திறந்த வான்வெளி ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டது. இது, ஒரு நாடு, மற்ற நாட்டின் வான் பகுதியில் உளவு விமானங்களை இயக்கி, ராணுவ படைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க வகை செய்கிறது. இதில், 30-க்கு மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.ஏற்கனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. வெளியிட்டுள்ள ‘சா்வதேச இடம்பெயா்வு 2020’ அறிக்கையின் படி, உலகில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவா்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் மட்டும் 5.1 கோடி வெளிநாட்டினா் வசித்து வருகின்றனா். அதைத் தொடா்ந்து, ஜொ்மனி (1.6 கோடி), சவூதி அரேபியா (1.3 கோடி), ரஷியா (1.2 கோடி), பிரிட்டன் (90 லட்சம்) ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டினா் வசித்து வருகின்றனா் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருதுகள்

”மின்னாளுகைக்கான ஸ்கோச் சாலஞ்சர் விருது” (“SKOCH Challenger Award”-“Best Performance in e-Governance”) மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகத்திற்கு (Ministry of Tribal Affairs ) வழங்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மையுடன் கூடிய சிறந்த ஆளுகையை வழங்கியதற்கான ஸ்கோச் சாலஞ்சர் விருது (SKOCH Challenger Award) பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டது .மின் ஆளுகையை பலப்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகள், மாற்றும் ஏற்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களின் மூலம் சிறப்பான மற்றும் வெளிப்படைத்தன்மையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவாவில் நடைபெறும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், பழம்பரும் நடிகர்-இயக்குநர் பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு (Biswajit Chatterjee) சிறந்த இந்தியருக்கான விருது (Indian Personality of the Year Award) அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

திருவள்ளுவர் தினம் 2021 - 15 ஜனவரி 2021 அன்று அனுசரிக்கப்பட்டது. 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!