Post Top Ad

TNPSC குரூப் II, IIA 2021 Test Batch

45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Download Test Schedule | Join Now
Tamil Medium | English Medium

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

Download Test Schedule | Join Now
Tamil Medium (120 தேர்வுகள்) | English Medium (100 Tests)

TNPSC Current Affairs 21-22 January 2021

TNPSC Current Affairs 21-22 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞சாதிவாரியான கணக்கெடுப்புக் கான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நீதிபதி குலசேகரன் ஆணையத்தின் முதல் கூட்டம் 20-1-2021 அன்று நடந்தது.

தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உயா்ந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

o மொத்த வாக்காளர்களில், 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண்களும், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண்களும் உள்ளனா். 4 லட்சத்து 62 ஆயிரத்து 597 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் உள்ளனர்.

o மூன்றாம் பாலித்தனவா் எண்ணிக்கை 7 ஆயிரத்து 246 ஆக உள்ளது.

o 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் வயது வாக்காளா்கள் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 போ் உள்ளனா்.

o தமிழகத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளா்கள் உள்ளனா். குறைவான வாக்காளா்களைக் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் தொகுதி. இந்தத் தொகுதியில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளா்கள் உள்ளனா்.

தமிழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை : முதற்கட்டமாக 16-1-2021 அன்று தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்க்காக, தமிழகத்திற்கு 5, 36,500 கோவிஷீல்டு, 20,000 கோவேக்ஸின் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.அதன் தொடா்ச்சியாக 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 8,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. மொத்தமாக, தமிழகத்துக்கு இதுவரை 10.65 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒருவருக்கு இரண்டு தவணைகளாக தடுப்பூசி போட வேண்டும். தற்போது இருப்பில் உள்ளதைக் 5.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும்.

இந்தியா

சுதந்திரப் போராட்ட வீரர் 'நேதாஜி' சுபாஸ் சந்திரபோஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தியாவின் மிகப் பழமையான ரயில்களில் ஒன்றான ஹவுரா-கல்கா மெயிலை(Howrah-Kalka Mail) "நேதாஜி எக்ஸ்பிரஸ்" (Netaji Express) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது . இந்த பெயர்மாற்றம் நேதாஜி அவர்களின் 125 வது பிறந்த தினம் முதல் (23 ஜனவரி 2021) அமலாகிறது.

கூ.தக. : Howrah-Kalka Mail மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தையும் (கிழக்கு இரயில்வே) , ஹரியானா மாநிலத்தின் பாஞ்ச்குலா மாவட்டத்தில் அமைந்துள்ள கால்காவிற்கும் (வடக்கு இரயில்வே) இடையே சேவை வழங்கி வருகிறது.

”கோரேவாடா சர்வதேச மிருகக்காட்சிசாலையை” (Gorewada International Zoo) , "பாலாசாகேப் தாக்கரே கோரேவாடா சர்வதேச விலங்கியல் பூங்கா" (Balasaheb Thackeray Gorewada International Zoological Park) என்று மகாராஷ்டிரா அரசு மறுபெயரிட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் அமைந்துள்ள இந்த விலங்கியல் பூங்கா சுமார் 2,000 ஹெக்டேர் வன நிலங்களை உள்ளடக்கியது.

மின்சார மானியத்தை நேரடி பணப் பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலம் வழங்கிய இந்தியாவின் முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் உருவாகியுள்ளது.

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை ஆந்திராவில் அம்மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி 21-1-2021 அன்று தொடங்கி வைத்தார்.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்கு திரிபுரா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது .இதன் மூலம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படவுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களை விட கர்நாடகம் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி முதல் இடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில், இதுவரை மொத்தம் 7.86 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

டிராகன் பழத்தின் பெயரை தாமரை எனப் பொருள்படும் ’கமலம்’ என்று மாற்றுவதற்கு குஜராத் அரசு முடிவு செய்திருப்பதாக, அந்த மாநில முதல்வா் விஜய் ரூபானி அறிவித்துள்ளார் . டிராகன் என்ற வாா்த்தை சீனாவை நினைவுபடுத்துவதாலும், இந்தப் பழம் தாமரைப் பூவைப் போல இருப்பதாலும் இந்த பெயர்மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறியுள்ளார்.

கூ.தக . : டிராகன் பழம் பற்றி ...

o டிராகன் பழம் மத்திய மெக்சிகோவை பிறப்பிடமாகக் கொண்டதாக் கருதப்படுகிறது, அங்கிருந்து மத்திய அமெரிக்காவுக்குப் பரவி பின் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

o டிராகன் பழத்தின் அறிவியல் பெயர் : செலினிசெரஸ் உண்டாடஸ் ( Selenicereus undatus)

o டிராகன் பழத்தின் இதர ஆங்கிலப் பெயர்கள்: Pitaya, Red Pitahaya, Night blooming Cereus, Strawberry Pear, Belle of the Night, conderella plant

அருணாச்சல பிரதேசத்தின் முன்னாள் ஆளுநரும், இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவருமான மாதா பிரசாத் (Mata Prasad) தனது 95 வயதில் லக்னோவில் காலமானார் .

☞”அவோலோகனா மென்பொருள்” ( ‘Avolokana Software’) என்ற பெயரில் அரசு நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கான மின்னாளுமைக் கருவியை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் 39 துறைகளால் செயல்படுத்தப்பட்ட 1800 திட்டங்களில் செய்யப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் செலவுகள் குறித்த தரவைக் கண்காணிக்கவும் அணுகவும் இந்த மென்பொருளை அரசாங்கம் பயன்படுத்தும்.

‘ராணுவ வலிமை தரவரிசை 2021 ’ இந்தியா 4 வது இடத்தில் உள்ளது . ‘ Global Firepower’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இந்தியாவிற்கு அடுத்த (5வது) இடத்தில் ஜப்பான் உள்ளது.

கூ.தக. : இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் 542 போர் விமானங்கள்(combat aircraft) , 37 தாக்குதல் ஹெலிகாப்டர்கள்(attack helicopters) , 17 நீர்மூழ்கிக் கப்பல்கள் (submarines) மற்றும் 4,730 டாங்கிகள் (tanks) உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வருடத்திற்கு 12.7 லட்சம் மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி திறனோடு அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள நம்ரூப்பில் (Namrup) யூரியா தொழிற்சாலை (Urea Plant) அமைக்கப்படவுள்ளது.

‘கவாச் ஒத்திகை’ (‘Exercise Kavach’) என்ற பெயரில் இந்திய ராணுவம், கடற்படை , விமானப்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை இணைந்து, அந்தமான் கடல் பகுதியில், மிகப் பெரியளவிலான கூட்டு பயிற்சியை அந்தமானில் ஜனவரி 2021 இறுதி வாரத்தில்

மேற்கொள்கின்றன.

7-வது ‌’மாஸ்கிரேட் 2021’ (MASCRADE 2021) என்ற பெயரில் கடத்தல் மற்றும் போலியான வர்த்தகங்களுக்கு எதிரான ( Movement against Smuggled & Counterfeit Trade) இயக்கத்தை மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார்.ஃபிக்கி ( FICCI) எனப்படும் இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு இந்த கூடுகையை ஏற்பாடு செய்தது.

தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஓடிடி சேனல் (India Science, Nation’s Science & Technology OTT (Over-the-top) channel) 2021 ஜனவரி 15ம் தேதியுடன், 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது . இந்த டி.வி சேனலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் விஞ்ஞான் பிரசார் (Vigyan Prasar) என்ற தன்னாட்சி அமைப்பு நிர்வகிக்கிறது. மக்கள் இடையே அறிவியல் மனநிலை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கா உருவாக்கப்பட்ட, இணையதளம் மூலமாகவும், காணக்கூடிய இந்த ஓடிடி (OTT (Over-the-top) ) சேனல் கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி தொடங்கப்பட்டது.

☞” ஷரம்சக்தி டிஜிட்டல் தரவு தீர்வகம்” (Shramshakti Digital Data Solution) என்ற பெயரில் கோவா மாநிலத்திலுள்ள சுமார் 4 இலட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய உதவி மையத்தை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் கோவா அரசு இணைந்து 22-1-2021 அன்று தொடங்கவுள்ளன.

இந்தியா கண்டுபிடிப்பு குறியீடு 2020 (India Innovation Index 2020) ஐ நிதி அயோக் (NITI Aayog) மற்றும் இந்திய போட்டி நிறுவனம் (Institute for Competitiveness) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. 36 வகையிலான அலகுகளின் அடிப்படையிலான இந்த குறியீடு பட்டியலில்,

o பெரிய மாநிலங்களில், முதல் ஐந்து இடங்களை முறையே கர்நாடகா(42.50), மகாராஷ்டிரா(38.03), தமிழ்நாடு (37.91 மதிப்பெண்கள்), தெலுங்கானா(33.23) மற்றும் கேரளா (30.58) மாநிலங்கள் பெற்றுள்ளன.

o யூனியன் பிரதேசங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே தில்லி, சண்டிகர், டாமன்&டையூ, புதுச்சேரி மற்றும் கோவா ஆகியவை பெற்றுள்ளன.

o வட கிழக்கு மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே ஹிமாச்சலப்பிரதேசம், உத்தரக்காண்ட், மணிப்பூர், சிக்கிம் மற்றும் மிசோராம் மாநிலங்கள் பெற்றுள்ளன.

o கூ.தக. : முதலாவது, இந்தியா கண்டு பிடிப்பு குறியீடு அக்டோபர் 2019 ல் வெளியிடப்பட்டது.

o நிதி அயோக்கின் தலைவராக பிரதமர் மோடி அவர்களும் துணைத் தலைவராக ராஜீவ் குமார் மற்றும் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மீது 850 மெகாவாட் ‘ரேட்டல்’ நீர் மின்சக்தி திட்டத்தில் (Ratle Hydro Power Project) ரூ 5281.94 கோடி முதலீடு செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நீர் மின் கழகம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில மின்சார மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக முறையே 51% மற்றும் 49% பங்களிப்புடன் நிறுவப்பட இருக்கும் புதிய கூட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே முதலாவது ‘அறிவுசார் சொத்துரிமை பேச்சுவார்த்தை’ (India-EU IPR dialogue 2021 ) 19-1-2021 அன்று மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது. இதில், இந்தியாவின் தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை ( Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) ) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் ( European Union (EU) Commission ) ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பூடான் நாட்டிற்கு முதல்கட்டமாக 1.5 லட்சம் கோவிஷீல்டு டோஸ் கரோனா தடுப்பு மருந்து 20-1-2021 அன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கூ.தக. : இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 6 நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 20-1-2021 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுண்சிலின் ( United Nations Human Rights Council(UNHRC) ) தலைமை பொறுப்பிற்கு பிஜி நாட்டைச் சேர்ந்த நஜாத் ஷமீம் கான் ( Nazhat Shameem Khan) எனும் பெண்மணி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியை வகித்தவர் ஆஸ்திரியாவின் எலிசபெத் டிச்சி-பிஸ்ல்பெர்கே (Elisabeth Tichy-Fisslberge).

கூ.தக. : 15 மார்ச், 2006 அன்று தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுண்சிலின் தலைமையிடம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட இவ்வைப்பானது, ஒரு தலைவர், 4 துணைத் தலைவர்கள் மற்றும் 5 பிராந்திய குழுக்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உத்தரவின்படி பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது . ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார், குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் வருவதற்கான தடையை நீக்குதல், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிதல், மக்களுக்கு பொருளாதார உதவி, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் தவறாக எடுக்கப்பட்ட முடிவுகளை திரும்ப பெறுதல் போன்றவை அந்த உத்தரவுகளில் அடங்கும்.

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிட்டு, 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஜோ பைடன் 20-1-2021 அன்று பதவியேற்றாா் . அவருடன் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் துணை அதிபராகப் பொறுப்பேற்றாா்.

o கூ.தக. : துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கமலா ஹாரிஸின் தாய்வழி தாத்தா மன்னாா்குடியை அடுத்த பைங்காநாடு துளசேந்திரபுரத்தை சோ்ந்த பி.வி. கோபாலன் ஐயா், பாட்டி ராஜம். கோபாலன் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சிவில் சா்வீஸ் பணியில் இருந்தவா். 1930-ஆம் ஆண்டு கொடிசியாவில் இருந்து வந்த அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக ஜாம்பியா நாட்டுக்கு இந்திய அரசு சாா்பில் அனுப்பிவைக்கப்பட்டாா். பின்னா், கோபாலன் அமெரிக்காவில் குடியேறினாா். இவருக்கு, சியமளா, சரளா என 2 பெண் குழந்தைகள். இதில், சியாமளாவின் மகள்தான் கமலா ஹாரிஸ்.

o அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவியேற்பு உரையை இந்திய வம்சாவளி இளைஞா் வினய் ரெட்டி (தெலங்கானா மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்டவா்) தயாரித்து அளித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றம் - ஓர் அறிமுகம் :

அமெரிக்க நாடாளுமன்றத்தில் (United States Congress) செனட் (The Senate) மற்றும் பிரதிநிதிகள் சபை (The House of Representatives) எனும் இரண்டு அவைகள் உள்ளன. வாஷிங்டன், டி.சி.யில் உள்ள யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிட்டலில் காங்கிரஸ் கூடுகிறது.

செனட் (The Senate) :

அமெரிக்க காங்கிரசின் மேலவையான செனட்டில் 100 செனட்டர்கள்(ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 2 செனட்டர்கள்) உள்ளனர். தற்போதைய செனட்டின் தலைவர் அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஆவார்.

பிரதிநிதிகள் சபை (The House of Representatives) :

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப 50 மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 435 பிரதிநிதிகளை இந்த பிரதிநிதிகள் சபை கொண்டுள்ளது. இந்த பிரதிநிதிகளைத் தவிர, பிரதிநிதிகள் சபையில், கொலம்பியா மாவட்டம், காமன்வெல்த் ஆஃப் புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் 4 அமெரிக்க பிராந்தியங்களான அமெரிக்கன் சமோவா, குவாம், யு.எஸ். விர்ஜின் தீவுகள் மற்றும் வடக்கு மரியானா தீவுகளின் காமன்வெல்த் ஆகிய இடங்களிலிருந்து 6 வாக்களிக்காத உறுப்பினர்கள் (non-voting members) உள்ளனர்.

பிரதிநிதிகள் சபையின் த்ற்போதைய சபாநாயகர்- நான்சி பெலோசி (Nancy Pelosi)

‘ஷாஹீன் -3’ (Shaheen-III) என்ற பெயரில், அணுசக்தி திறன் கொண்ட மேற்பரப்பு- மேற்பரப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை (Surface-to-Surface Ballistic Missile) பாகிஸ்தான் 20-1-2021 அன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை 2, 750 கி.மீ தூரத்திலுள்ள இலக்கை தாக்க வல்ல, பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட மிக நீண்ட தூர ஏவுகணை ஆகும்.

பொருளாதாரம்

”முகமறியாத அபராதத் திட்டம் 2021” (Faceless Penalty Scheme 2021) எனும் புதுமையான திட்டத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் ( Central Board of Direct Taxes (CBDT)) அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் அபராதத்தொகையினை வசூல் செய்வதற்கான இத்திட்டத்தின் வாயிலாக நாடெங்கும், ‘தேசிய முகமறியா அபராத மையங்கள்’ (National Faceless Penalty Centres(NFPC)) அமைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் முறையான முக்கிய உள்நாட்டு வங்கிகளின் பட்டியல் 2020 ஐ (Domestic Systemically Important Banks) இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 31 மார்ச் 2020 ஆம் தேதி நிலவரப்படி வங்கிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான இந்த பட்டியலில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ (Industrial Credit and Investment Corporation of India) மற்றும் எச்.டி.எஃப்.சி (Housing Development Finance Corporation Limited) ஆகியவை முறையான முக்கிய உள்நாட்டு வங்கிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுகள்

“நெல்சன் மண்டேலா” உலக மனிதாபிமான விருது (“Nelson Mandela” World Humanitarian Award) ரவி கெய்க்வாட் (Ravi Gaikwad) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (Life Insurance Corporation (LIC)) நிர்வாக இயக்குநராக சித்தார்த்த மொஹந்தியை (Siddhartha Mohanty) நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைதொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (Telecommunications Consultants India Ltd(TCIL)) அமைப்பின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக சஞ்சீவ் குமார் (Sanjeev Kumar ) நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்தியாவில் குவாண்டம் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்ஸ் ஆய்வகத்தை (Quantum Computing Applications Lab) அமைப்பதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics & Information Technology) அமேசான் இணையதள சேவைகள் (Amazon Web Services (AWS)) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த ஆய்வகம் ஒரு நாட்டின் திட்டங்களை செயல்படுத்த அமைக்கப்படும் உலகின் முதலாவது குவாண்டம் கம்ப்யூட்டிங் அப்ளிகேஷன்ஸ் ஆய்வகமாக இருக்கும்.

கூ.தக. : 2020-21 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ரூ.8000 கோடி செலவில், ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும், குவாண்டம் தொழில்நுட்பம் மற்றும் செயலிகள் குறித்த தேசிய திட்டத்தை (National Mission on Quantum Technologies & Applications (NM-QTA)) இந்தியா அறிவித்தது.

நமது பால்வெளியில் உள்ள என்ஜிசி 2808 ( NGC 2808) எனப்படும் புதிரான, உருண்டையான, குறைந்தது ஐந்து தலைமுறைகள் நட்சத்திரங்களை கொண்ட மிகப்பெரிய விண்மீன் தொகுப்பை இந்தியாவின் ‘அஸ்ட்ரோசாட் புற ஊதா பட தொலைநோக்கியின்’ (AstroSat’s Ultraviolet Imaging Telescope) மூலம் ஆராய்ந்து வரும் வானியலாளர்கள், அரிதான, சூடான மற்றும் வெளிச்சம் நிறைந்த புற ஊதா நட்சத்திரங்களை (ultraviolet-bright stars) அதில் கண்டறிந்துள்ளனர் . அவைகளின் உட்பரப்பு ஏறத்தாழ முழுவதும் வெளிவந்த நிலையில், மிகவும் சூடாக இருக்கும் இந்த நட்சத்திரங்கள், சூரியன் போன்ற விண்மீன் உருவாவதற்கான இறுதி கட்டங்களில் இருக்கின்றன.

பெங்களூரில் அமைந்துள்ள இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் (Indian Institute of Astrophysics (IIA)) விஞ்ஞானிகளான தீப்தி எஸ் பிரபு, அன்னப்பூரணி சுப்பிரமணியம் மற்றும் சினேகலதா சாஹு ஆகியோர் புற ஊதா படப்பதிவு தொலைநோக்கியின் தரவுகளை, ஸ்பேஸ் தொலைநோக்கி, காயா தொலைநோக்கி மற்றும் தரையில் இருந்து செய்யப்பட்ட ஒளியியல் ஆய்வு போன்ற இதர ஆராய்ச்சிகளின் கண்டறிதல்களோடு ஒன்றிணைத்துள்ளனர். உருண்டையான தொகுப்பில் வெளிச்சம் மிகுந்த சுமார் 34 விண்மீன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கூ.தக. : வானியல் செயற்கைக்கோள் அல்லது அஸ்ட்ரோசாட் (Astrosat) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 28 செப்டம்பர் 2015 அன்று செலுத்தப்பட்ட வானியல் செயற்கைக்கோளாகும்.

விளையாட்டுகள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார் . அந்த அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார்.

2021 ஐபிஎல் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிரபல வீரர் ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்கிற சாதனையை போா்ச்சுகலின் நட்சத்திரக் கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார் . ரொனால்டோ இடம்பெற்றுள்ள ஜுவென்டஸ் அணி, இத்தாலியன் சூப்பர் கோப்பையை 9-வது முறையாக வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் நபோலி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.இதன்மூலம் சர்வதேச மற்றும் கிளப் ஆட்டங்களில் தனது 760-வது கோலை அவர் அடித்துள்ளதன் மூலம் இதற்கு முன்னதாக 759 கோல்கள் அடித்த ஜோசெஃப் பிகானின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

”கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள்” (Khelo India Winter Games) 18-30 ஜனவரி 2021 தினங்களில் லடாக் யூனியன் பிரதேசத்திலுள்ள ‘சன்ஸ்கார் சமவெளி’ (Zanskar Valley) எனுமிடத்தில் நடைபெறுகிறது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

‘The Population Myth: Islam, Family Planning and Politics in India’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - S Y குரேஷி (S Y Quraishi)

“A textbook of Urban Planning and Geography” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சமீர் சர்மா (Sameer Sharma)

No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: