நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 25-26 January 2021

TNPSC Current Affairs 25-26 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் 70,000 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா். இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 37 சதவீதம் குறைவான எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. காச நோய் பாதிப்பு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

72-ஆவது குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையிலான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், தமிழக அரசின் சார்பில், பல்லவர்களின் பெருமைய பறைசாற்றும், மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் மாதிரி அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்றது . 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்ற பாடல் ஒலிக்க, நடனக் கலைஞர்கள் அதற்கேற்றவாறு நடனமாடியபடிச் சென்றனர்.

சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலத்தை 10-ஆவது முறையாக 6 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூ.தக. : ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017- ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்தத்து.

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை கிளையை (Chennai Bench of National Company Law Appellate Tribunal) மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் 25.1.2021 அன்று திறந்து வைத்தார். ஒதன் மூலம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் மொத்த அமர்வுகளின் எண்ணிக்கை 16 அதிகரித்துள்ளது.

கூ.தக. :

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தலைவர் - நீதிபதி திரு பன்சி லால் பட்

இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவை (India’s largest multi-model logistic park) குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சனந்த் அருகே விரோச்சன் நகரில் அமைப்பதற்காக அம்மாநில அரசு மற்றும் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (Adani Ports and Special Economic Zone Ltd (APSEZ)) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

15வது இந்தியா டிஜிட்டல் உச்சி மாநாடு 2021 (India Digital Summit 2021) 19-20 ஜனவரி 2021 தினங்களில் இன்டர்நெட் & மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (nternet & Mobile Association of India (IAMAI)) வின் மூலம் நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் மையக்கருத்து ‘தற்சார்பு இந்தியா - புதிய தசாப்தத்தின் ஆரம்பம்’ (‘Aatmanirbhar Bharat – Start of New Decade’) என்பதாகும்.

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, 8 ஆண்டுகளுக்கு மேலான போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும்போது பசுமை வரி விதிக்கப்படும். சாலை வரியில் 10 முதல் 25 சதவிகிதம் வரையிலான விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

வாக்காளர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லாமல் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நகரங்களில் இருந்தும் வாக்களிக்கும் புதிய முறைக்கான (ரிமோட் ஓட்டிங்) சோதனைகள் விரைவில் தொடங்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார் . இதுகுறித்து சென்னை ஐஐடியுடன் தேர்தல் ஆணையம் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த தொகுதியில் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு செல்லாமல் தாங்கள் இருக்கும் இடத்தில் தொலைதூர நகரங்களில் இருந்தபடியே வாக்களிக்க முடியும்.

‘ஹலோ வாக்காளர்கள்’ (‘Hello Voters') என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோ 11வது தேசிய வாக்காளர் தினமான 25-1-2021 அன்று துவங்கப்பட்டுள்ளது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘பாரத் பர்வ் 2021’ ( Bharat Parv 2021 ) என்ற மெய்நிகர் தேசியக் கண்காட்சியை மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜனவரி 26ம் தேதி தொடங்கி வைக்கிறார்.ஜனவரி 26ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல மாநிலங்களின் கலாச்சாரம், சுற்றுலாத் தலங்கள், கைவினைப் பொருட்கள், உணவுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

தேசிய புவி அறிவியல் தரவு உருவாக்க ஆய்வு நடவடிக்கைகளை ( National Baseline Geoscience Data Generation Programme) விரைவுபடுத்துவதற்காக, தேசிய புவிவேதியியல் வரைபடம் (National Geochemical Mapping (NGCM)) , தேசிய புவிஇயற்பியல் வரைபடம் (National Geophysical Mapping (NGPM)), தேசிய வான்வழி வரைபடத் திட்டம் (National Aero Geophysical Mapping Program (NAGMP)) ஆகிய தேசிய அளவிலான ஆய்வுகளை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை (e-EPIC (Electronic Electoral Photo Identity Card) ) மத்திய சட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் 25-1-2021 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டையை செல்லிடப்பேசி மற்றும் கணினிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘பிடிஎஃப்’ கோப்பாக இருக்கும் இதில் திருத்தங்களைச் செய்ய முடியாது. ஆனால், பிரதி எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூ.தக. : கடந்த 1993-ஆம் ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டை வழங்கப்பட்டது. அது தனிநபா்கள் அடையாள மற்றும் முகவரி சான்றாகவும் பல்வேறு இடங்களில் ஏற்கப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்திய தோ்தல் ஆணையம் நிறுவப்பட்டது. அன்றைய தினத்தில் மின்னணு வாக்காளா் அட்டை திட்டமும் தொடங்கப்படுகிறது. ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளா் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

’ஆம்பெக்ஸ்-21” (AMPHEX – 21) என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளின் கூட்டு ஒத்திகை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 21-25 ஜனவரி 2021 தினங்களில் நடைபெற்றது.

"ஆயு சம்வாத் (எனது உடல் நலன், எனது பொறுப்புடைமை/My Health My Responsibility)" என்ற பெயரில், ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன், புதுதில்லியின் அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், ஆயுர்வேதம், கொவிட்-19 பெருந்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் 5 இலட்சத்திற்கும் அதிகமான கருத்தரங்கங்கள் நடைபெறும்.

2024 முதல் தேஜஸ் விமானங்கள் விமானப் படையிடம் ஒப்படைக்கப்படும் என ஹெச்.ஏ.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய விமானப் படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஹெச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 83 தேஜஸ் எம்கே-1 போா் விமானங்களை ரூ. 48,000 கோடி மதிப்பில் மத்திய அரசு வாங்க திட்டமிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘ஏரோ இந்தியா’ சா்வதேச விமான கண்காட்சியில் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் முறைப்படி ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கும் இந்திய விமானப் படைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி 73 தேஜஸ் போா் விமானங்களும், 10 தேஜஸ் பயிற்சி போ் விமானங்களும் வாங்கப்பட உள்ளன.தேஜஸ் போா் விமானம் ஒன்றின் விலை ரூ. 309 கோடியாகும். தேஜஸ் பயிற்சி விமானம் ஒன்றின் விலை ரூ. 280 கோடி.

தேஜஸ் போா் விமானம் சிறந்த ரேடாா் தொழில்நுட்பம், விண்ணில் பறந்தபடி எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம் என பல்வேறு நவீன தொழில்நட்பங்களைக் கொண்டது. மிகச் சிறந்த என்ஜின் இதில் இடம்பெற்றிருக்கும். எனவே, தேஜஸ் விமானம் சீனாவின் ஜே.எஃப்-17 போா் விமானத்தைக் காட்டிலும் செயல்பாட்டில் சிறந்து விளங்கக் கூடியதாகும்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிகள் நிறைவடைய 3 ஆண்டுகள் ஆகும். மேலும், அதற்கான திட்ட செலவினம் ரூ.1,100 கோடியைத் தாண்டும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளா் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் தெரிவித்துள்ளாா்.

சர்வதேச நிகழ்வுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணு ஆயுதத் தடை தொடர்பான ஒப்பந்தம் (Treaty on the Prohibition of Nuclear Weapons) 22 ஜனவரி 2021 முதல் நடைமுறைக்கு வந்தது, இது அணு ஆயுதங்களைத் தடைசெய்யும் முதல் சர்வதேச ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2017 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒப்பந்தத்தின் கையொப்பமிட்ட நாடுகள், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அபிவிருத்தி, சோதனை, உற்பத்தி, இருப்பு, இடமாற்றம், பயன்படுத்துதல் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு தடை செய்யப்பட்டுள்ளனர். மேலும், எந்தவொரு அணு ஆயுத நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தால், அதன் அணு ஆயுதத் திட்டத்தை சரிபார்க்கவும் மாற்றமுடியாமல் அகற்றவும் வழிவகுக்கும் ஒரு கால கட்டமைப்பு வழங்கப்படுகிறது.

இதுவரையில், 86 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன மற்றும் 52 நாடுகள் இவ்வொப்பந்தத்தை அங்கீகரித்துள்ளன.

இருப்பினும், முக்கிய அணுசக்தி திறன் கொண்ட நாடுகளான, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை அல்லது கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் இணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேவ் ஜெகதீசன் என்பவரை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் பணியாற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விதித்த தடையை அதிபர் ஜோ பைடன் நீக்க உத்தரவிட்டுள்ளார்

போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர்மார்சிலோ ரெபெலோ டிசோசா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ஈஸ்டோனியா (Estonia) நாட்டின் முதல் பெண் பிரதமராக காஜா கல்லாஸ் (Kaja Kallas) தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

கடந்த 2020-ஆம் ஆண்டில் கரோனா பேரிடா் காரணமாக பல முக்கிய நாடுகளில் முதலீட்டு வரத்து சரிவடைந்த நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 13 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

விருதுகள்

2021 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியல் வருமாறு.

பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே

கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (மறைவுக்கு பின்)

மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே,

அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நரீந்தர் சிங் கப்பானி (மறைவுக்கு பின்)

ஆன்மீகத்திற்காக டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான்,

தொல்லியல் துறைக்காக டெல்லியை சேர்ந்த பி.பி. லால்

கலை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் சாஹூ

பத்ம பூஷண் விருதுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அவர்களின் விவரம் வருமாறு,

கலை துறையில் கேரளாவை சேர்ந்த கிருஷ்ணன் நாயர் சாந்த குமாரி சித்ரா,

பொது விவகார துறையில் அசாம் முன்னாள் முதல் மந்திரி தருண் கோகாய் (மறைவுக்கு பின்),

இலக்கியம் மற்றும் கல்வி பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த சந்திரசேகர் கம்பாரா,

பொது விவகார துறையில், முன்னாள் மக்களவை சபாநாயகரான மத்திய பிரதேசத்தின் சுமித்ரா மகாஜன்,

குடிமக்கள் சேவையில் பிரதமருக்கான முன்னாள் முதன்மை செயலாளரான உத்தர பிரதேசத்தின் நிருபேந்திர மிஸ்ரா

பொது விவகார துறையில் முன்னாள் மத்திய மந்திரியான பீகாரை சேர்ந்த ராம் விலாஸ் பஸ்வான் (மறைவுக்கு பின்),

பொது விவகார துறையில் குஜராத்தின் கேசுபாய் பட்டேல் (மறைவுக்கு பின்),

பிற துறையில் ஆன்மீகத்தில் மத தலைவரான உத்தர பிரதேசத்தின் கால்பே சாதிக் (மறைவுக்கு பின்),

பொது விவகார துறையில் அரியானாவின் தர்லோசன் சிங்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் 2021 அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரம் வருமாறு,

பி. அனிதா - விளையாட்டு (கூடைப்பந்து)

சுப்பு ஆறுமுகம் - கலை

சாலமன் பாப்பையா - இலக்கியம் - கல்வி - இதழியல்

பாப்பம்மாள் - பிற - இயற்கை விவசாயம்

பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் - கலை

கே.சி. சிவசங்கர் - கலை

மராச்சி சுப்புராமன் - சமூகப் பணி

பி. சுப்ரமணியன் - வர்த்தகம் மற்றும் தொழில் (சாந்தி சோஷியல் சா்வீஸ் அமைப்பின் நிறுவனா்)

திருவேங்கடம் வீரராகவன் - மருத்துவம்

ஸ்ரீதர் வேம்பு - வர்த்தகம் மற்றும் தொழில்

காவல்துறை, தீயணைப்பு, சிறைத்துறைகளில் பணியாற்றும் தமிழகத் சோ்ந்த 27 பேருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவரும் இவ்வாண்டிற்கான குடியரசுத்தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன . விருது பெற்றோர் விவரம் வருமாறு,

குடியரசுத்தலைவரின் மெச்சத்தகுந்த போலீஸ் விருது : 1. மகேஷ்குமாா் அகா்வால்- கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையா். 2. டேவிட்சன் தேவாசிா்வாதம் -கூடுதல் டி.ஜி.பி., காவல் தொழில்நுட்ப பணி. 3. பி.மணிகண்டன்- ஐஜி, கோவைப்புதூா் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை.

காவல் துறை சிறப்பு மிகு பணி : 1. டி.எஸ். அன்பு - ஐஜி, சிலை கடத்தல் தடுப்பு ரகசிய புலனாய்வு. 2. கபில்குமாா் சாரட்கா் -ஐஜி, சிறப்புப்புலனாய்வு, சிபி சிஐடி, 3. சந்தோஷ்குமாா், ஐஜி, நிா்வாகம், தலைமையகம், 4. சி.முரளி - டிஎஸ்பி, ஓசூா், 5. கே.வி. கலைச்செல்வம், டிஎஸ்பி, லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம், 6. எம்.ஜிவானந்தம், உதவி ஆணையா், சென்னை மாநகர காவல்துறை. 7. பிஎஸ் கந்தசாமி - ஆய்வாளா், பாதுகாப்பு பிரிவு, சிஐடி, 8. டி.சுகன்யா, ஆய்வாளா், லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை, 9. ஏ.சிவசங்கரன் - ஆய்வாளா், சிறப்பு காவல்படை, மணிமுத்தாறு, 10. என்.சீனிவாசன்- உதவி காவல் ஆய்வாளா், சிறப்புப் புலனாய்வு (எஸ்பி, சிஐடி தலைமையகம்), 11. எஸ்.ஜான்ஸன் - டிஎஸ்பி, ஆயுதக் காவல் படை, சேலம், 12. வி. ரவிச்சந்தின் - சிறப்பு உதவி காவல் ஆய்வாளா், குற்றப்பதிவு பிரிவு, சென்னை, 13. எஸ். ஸ்டீபன் - சிறப்பு உதவி காவல் ஆய்வாளா், தீவிரவாதிகள் பிரிவு, கன்னியாகுமரி, 14. ஆா்.கருணாகரன் - தலைமைக் காவலா், சிறப்புப் புலனாய்வு (எஸ்பி, சிஐடி தலைமையகம்), 15. ஜெ.சுரேஷ் - உதவி காவல் ஆய்வாளா், சிறப்பு அதிரடிப் படை, ஈரோடு, 16. என்.சித்தாா்த்தன் - உதவி காவல் ஆய்வாளா், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, தலைமையகம், சென்னை, 17. பி.ரமேஷ் - தலைமைக் காவலா், சிறப்புப் புலனாய்வு(எஸ்பி, சிஐடி தலைமையகம்) ஆகிய 17 தமிழக காவல்துறையினரும் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளா் ஆா். ராஜனும் குடியரசுத் தினத்தையொட்டி காவல் துறை சிறப்பு மிகு பணிக்கான விருதுகளை பெற்றுள்ளனா்.

தமிழக அரசின் வீரதீர செயலுக்கான அண்ணா விருது , கொடைக்கானல் ரோடு-அம்பாத்துரை இடையே தண்டவாளத்தில் கிடந்த கற்பாறைகளில் மோதாமல் துரிதமாக செயல்பட்டு வைகை விரைவு ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய மதுரை ரயில் ஓட்டுநர் சுரேஷ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதியை துரத்திப் பிடிக்க முயன்று உயிரிழந்த மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா் மோகன் லாலுக்கு வீரதீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் போலீஸ் விருது வழங்கப்படவுள்ளது.

கூ.தக. : புல்வாமா தாக்குதல் நடைபெற்ற நாள் - 14 பிப்ரவரி 2019

51 வது இந்தியா சர்வதேச திரைப்பட விழாவின் முக்கிய விருதுகள்.

தங்க மயில் விருது (Golden Peacock Award) "Into the Darkness" என்ற டென்மார்க்கைச் சேர்ந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதை இரண்டாம் உலகப்போரை மையமாகக் கொண்டதாகும்.

சிறந்த இயக்குநருக்கான விருது - தைவான் மொழி இயக்குநர் சென்-நியன் கோ( Chen-Nien Ko )விற்கு அவர் இயக்கிய 'The Silent Forest' என்ற திரைப்படத்திற்கும்,

சிறந்த நடிகர் விருது - சு-சுவான் லியு(Tzu-Chuan Liu) விற்கும்,

சிறந்த நடிகை விருது போலந்து நாட்டு நடிகை சோஃபியா ஸ்டாஃபியெஜ் (Zofia Stafiej) க்கும் வழங்கப்பட்டுள்ளன.

"ICFT யுனெஸ்கோ காந்தி விருது" (ICFT UNESCO Gandhi Award), "200 Meters" எனும் அரேபிய மொழி திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமீன் நாய்ஃபெக் (Ameen Nayfeh) என்பவர் இதனை இயக்கியுள்ளார்.

"இந்த ஆண்டின் இந்திய ஆளுமை விருது" ( Indian Personality of the Year ) வங்க மொழி நடிகர் பிஸ்வஜித் சட்டர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது 2021 (Pradhan Mantri Rashtriya Bal Puraskar- 2021) பெற்றுள்ள தமிழக சிறுமி - பிரசித்தி சிங் (Prasiddhi Singh), சமூக சேவைக்காக

ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள்-2020-ஐ நாற்பது பேருக்கு வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் . இவற்றில் சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் ஒருவருக்கும், உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் எட்டு பேருக்கும், ஜீவன் ரக்‌ஷா பதக்கம் 31 பேருக்கும் வழங்கப்படும். உயிர் தியாகம் செயத ஒருவருக்கும் விருது வழங்கப்படுகிறது.

உயிர் காக்கும் மனிதத்தன்மை மிகுந்த தீரச்செயலை செய்தவர்களுக்கு ஜீவன் ரக்‌ஷா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா, உத்தம் ஜீவன் ரக்‌ஷா மற்றும் ஜீவன் ரக்‌ஷா என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா 2021 விருது கேரளாவைச் சேர்ந்த முகமது முக்சின் (Muhammed Muhsin) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

ஐ.நா. அமைப்பின் உயிா்நிலை சமூக, பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்தியாவைச் சோ்ந்த பொருளாதார நிபுணா் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தவிர 19 சா்வதேச பொருளாதார நிபுணா்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

முக்கிய தினங்கள்

இந்தியாவின் குடியரசுத் தினத்தன்று (ஜனவரி 26) சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாடு – ஆஸ்திரேலியா

தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் - ஜனவரி 25

தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day) -ஜனவரி 24

11வது தேசிய வாக்காளர் தினம் (11th National Voters’ Day) - ஜனவரி 26 | மையக்கருத்து 2021 - நமது வாக்காளர்களை அதிகாரமிக்கவர்களாகவும், விழிப்புணர்வு மிக்கவர்களாகவும், பாதுகாப்பு மற்றும் தகவல் அறிந்தவர்களாகவும் ஆக்குவது.

(‘Making Our Voters Empowered, Vigilant, Safe and Informed’)

கூ.தக. : இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. இதை குறிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம், வாக்காளர்கள் குறிப்பாக புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான். நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் நடைமுறையில் தகலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

அறிவியல் & தொழில்நுட்பம்

’பால்கான் 9 ராக்கெட்’ (Falcon 9 rocket) எனும் ஒற்றை ராக்கெட்டின் மூலம் 143 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ’ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) ஒரு புதிய உலக சாதனை யை படைத்துள்ளது. இதற்கு முன்னர், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால், பிப்ரவரி 2017 இல் ஒரே ஒரு ஏவலில் 104 செயற்கைக்கோள்களை அனுப்பியதே சாதனையாக கருதப்பட்டிருந்தது.

விளையாட்டுகள்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆடவருக்கான தேசிய ஃப்ரீஸ்டைல் மல்யுத்தம் உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பரிசு பெற்றோர் விவரம் வருமாறு,

65 கிலோ பிரிவில் ரோஹித் தங்கம் வெல்ல, ஷா்வன் வெள்ளிப் பதக்கமும், அமித் மற்றும் அனுஜ் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா். 70 கிலோ பிரிவில் விஷால் காலிராமன் தங்கம் வெல்ல, பா்வீன் வெள்ளியும், கரன் மற்றும் சுஷில் ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.

79 கிலோ பிரிவில் ராகுல் ரதி தங்கம் வென்றாா். 86 கிலோ பிரிவில் தில்லியின் பிரவீண் சாஹா் சாம்பியன் ஆக, மகாராஷ்டிரத்தின் வெட்டல் ஷெல்கே வெள்ளியும், ரயில்வேயின் தீபக் மற்றும் சா்வீசஸ் அணியின் சஞ்ஜீத் ஆகியோா் வெண்கலம் கைப்பற்றினா்.

97 கிலோ எடைப் பிரிவில் ரயில்வே வீரா் சத்யவா்த் கடியன் முதலிடம் பிடித்தாா். சா்வீசஸ் வீரா் மோனு 2-ஆம் இடம், ஹரியாணாவின் சுமித் குலியா, தில்லியின் ஆஷிஷ் ஆகியோா் 3-ஆம் இடம் பிடித்தனா். ஒட்டுமொத்தமாக ரயில்வே அணி 192 புள்ளிகளுடன் சாம்பியன் ஆக, சா்வீசஸ் (162), ஹரியாணா (138) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

‘Flying Blind: India’s Quest for Global Leadership’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மொகமது சீஷன் (Mohamed Zeeshan)

“Ten Lessons for a Post–Pandemic World” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஃபரீத் சகரியா (Fareed Zakaria)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!