நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 23-24 January 2021

TNPSC Current Affairs 23-24 ஜனவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ கோவை, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல். நீலகிரி மாவட்டபழங்குடியினருக்கான அரசு ஐடிஐ.க்களை மேம்படுத்த டைட்டன் நிறுவனத்துடன் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

’டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம்’ 5 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கூ.தக. : ஏற்கனவே, சென்னைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அலங்கார மீன்வளர்ப்பு முனையம் நிச்சயம் அமையவுள்ளது என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த அலங்கார மீன்வளர்ப்பு முனையம் திட்டத்தை செயல்படுத்தும்.

இந்தியா

”ஆபரேஷன் சர்த் ஹவா” (Operation Sard Hawa) எல்லை பாதுகாப்பு படையால் ராஜஸ்தானின் மேற்கு எல்லையில் தொடங்கப்பட்டது. அடர்த்தியான மூடுபனி காரணமாக ஊடுருவலின் நிகழ்வுகளை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். குடியரசு தினத்திற்கு முன்னதாக பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் 23-1-2021 அன்று நடைபெற்ற வடகிழக்கு சபையின் 69-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

`வாசுகி’ என்று பெயர்வைக்கப்பட்டுள்ள, இந்திய ரயில்வேயின் முதலாவது, 3.5 கி.மீ நீளம் கொண்ட பிரம்மாண்டமான சரக்கு ரயில் இயக்கிசாதனை படைக்கப்பட்டுள்ளது . இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் சார்பில் சரக்கு ரயில் போக்குவரத்தில் இந்த புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காகம் 5 சரக்கு ரயில்களை இணைத்து 3.5 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயில் உருவாக்கப்பட்டது. இந்த நீண்ட சரக்கு ரயில் மூலம் முதல்முறையாக பிலாஸ்பூர் ரயில் கோட்டத்தில் உள்ள பிலாய்-யில்இருந்து கோர்பாவுக்கு நேற்று முன்தினம் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டுள்ளது. மொத்தம் 224 கி.மீதொலைவை 7 மணி நேரத்தில் கடந்துள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ”Smart Anti-Airfield Weapon (SAAW)” ஐ இராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஒடிஷா கடற்கரையில் வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. இதனை பொதுத்துறை நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக் லிமிடெட்’ (Hindustan Aeronautics Limited (HAL)) தயாரித்துள்ளது.

‘அக்வா ரீஜிக்’ (‘Aqua Rejuv’) என்ற பெயரில், நீர்ப்பாசனம் மற்றும் வேளாண் பணிகளுக்காக கழிவு நீரைப் பயன்படுத்தும் முதல் கழிவு நீர் தூய்மைப்படுத்தும் தொழில்நுட்பத்தை சிஎஸ்ஐஆர்-மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்(CSIR-CMERI) , துர்காப்பூர் ( மேற்கு வங்காளம்)) அறிமுகப்படுத்தியுள்ளது.கழிவு நீரை ஆறு கட்டங்களாக தூய்மைப்படுத்தும் இந்த முறை மூலம் நான்கு ஏக்கர்கள் விளைநிலங்களுக்கு தேவையான 24,000 லிட்டர்கள் தண்ணீரை சுத்தப்படுத்தலாம். இதன் சுத்திகரிப்பு உபகரணம் உள்ளூரிலேயே கிடைக்கும். தூய்மைப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு குடிக்கவும் இந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாம்.

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் தேவை என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

”ஆயுஷ்மான் CAPF” ( Ayushman CAPF(Central Armed Police Foreces)) என்ற பெயரில், மத்திய ஆயுத காவல் படை வீரா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 23-1-2021 அன்று தொடங்கி வைத்தாா்.இந்த திட்டத்தின் கீழ் சிஏபிஎஃப், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) படைகளைச் சோ்ந்த சுமாா் 28 லட்சம் வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பயனடைவா்.

ரூர்கி ஐஐடியில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (Ministry of Road Transport and Highways ) ஆய்வு இருக்கையை (Professorial Chair) தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மற்றும் ரூர்கி ஐஐடி ஆகியவை 22-1-2021 அன்று கையெழுத்திட்டன. சாலை போக்குவரத்து மற்றும் ரூர்கி ஐஐடியுடன், நெடுஞ்சாலை அமைச்சகம் வைத்துள்ள இந்த கூட்டு சாலை துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை வலுப்படுத்தும். நெடுஞ்சாலை கட்டமைப்பு மேம்பாட்டில் ஆய்வு பணிகளை ஒருங்கிணைந்து நடத்துவது மற்றும் கல்வி கற்பிப்பது போன்றவற்றில், பேராசிரியர் பதவியுடன் கூடிய இந்த பிரிவு சிறந்த தலைமையை வழங்கும்.

ஆய்வு கட்டுரைகள் வெளியிடுவதில், இந்தியா ஏற்கனவே 3வது இடத்தில் உள்ள நிலையில், தற்போது உலகளாவிய புத்தாக்க பட்டியலில் (Global Innovation Index (GII)) 48 வது இடத்துடன் , முதல் 50 புத்தாக்க பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

‘ஷ்ரம்சக்தி’ (Shramshakti) என்ற பெயரில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலான இணையளத்தை (Digital Data Solution for Migrant Workers) கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா 22-1-2021 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் பெயர் தொழிலாளர்களுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான திட்டங்களை திறம்பட வகுக்க முடியும்

பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து உள்ளது.

பொறியியல் படிப்புகளில் உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுண்சில் (All India Council for Technical Education (AICTE).) மூலம் பிரகதி (PRAGATI) மற்றும் சக்ஷம் (SAKSHAM) திட்டங்களின்கீழ் ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை 2014-2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சக்ஷம் (SAKSHAM) கல்வி உதவித் தொகையானது பொறியியல் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மானவிகளுக்கு வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் 1,68,606 புதிய வீடுகள் கட்ட பிரதம மந்திரியின் அவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தும், “அனுமதி மற்றும் கண்காணிப்பு கமிட்டி’ அனுமதி வழங்கியுள்ளது . இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்திற்குள் (வரும் 2022-க்குள்) அனைவருக்கும் வீடு என்ற இலக்கை நோக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிற, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தில் 21-1-2021 அன்று பயங்கரதீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.

வெளிநாட்டு உறவுகள்

இந்தியாவில் டிஜிட்டல் திறன் மேம்பாட்டிற்காக, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation(NSDC)) , கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம், லாங் பீச் (California State University, Long Beach (CSULB) ) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகம்,, இந்தியாவில் திறன் தேடுபவர்களுக்கு 200 க்கும் மேற்பட்ட இலவச படிப்புகளை வழங்கும். சுகாதார, மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், நிதி, வேலைவாய்ப்பு திறன் போன்ற பல்வேறு துறைகளின் படிப்புகள் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும்.

இந்தியா ரஷியாவிடமிருந்து வாங்கவுள்ள எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்பை இயக்குவது குறித்து பயிற்சி பெறுவதற்காக இந்தியாவின் இராணுவ நிபுணர்கள் ரஷ்யாவிற்கு செல்லவுள்ளனர் . எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்பானது, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் ரஷியாவிடமிருந்து, இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளது.

’இந்தியா- ஆப்பிரிக்கா வர்த்தக கவுண்சில் 2021’ (India Africa Trade Council 2021) சென்னையில் 22-1-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது . ’கார்பரேட் கிளினிக்’ ( Corporate Clinic) நிறுவனத்தின் நிறுவனர் ராமகிருஷ்ணன் ’இந்தியா- ஆப்பிரிக்கா வர்த்தக கவுண்சிலின்’ இயக்குநராக (Director of the India Africa Trade Council) நியமிக்கபப்ட்டுள்ளார்.

இந்தியாவின் குடியரசு தினவிழா 2021 அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது. வங்காளதேசம் விடுதலை பெற்ற 50-வது ஆண்டு நிறைவையொட்டி இந்த அணிவகுப்பில் அந்த நாடும் கலந்து கொள்கிறது.

கூ.தக. : இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் 3-வது வெளிநாட்டு ராணுவம் வங்காளதேசத்தினுடையது ஆகும். ஏற்கனவே பிரான்ஸ் (2016), அமீரக (2017) நாடுகளின் படைகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வங்காளதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளன . ஏற்கனவே, நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் தடுப்பூசியும், பூடானுக்கு 1½ லட்சம் டோஸ் தடுப்பூசியும், மாலத்தீவுகளுக்கு ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசியும், மொரீஷியஸ் நாட்டிற்கு 1 லட்சம் தடுப்பூசிகளும் இந்தியாவின் மூலம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

☞ சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வர்த்தக ரீதியாக, பிரேசில் நாட்டிற்கு 20 லட்சம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இந்தியா 22-1-2021 அன்று அனுப்பியுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் (Ukhnaa Khurelsukh) தனது பதவியை 21-1-2021 அன்று ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே செய்யபட்ட ‘ஸ்டார்ட் - ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தை’ (START - Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க புதிதாக அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பிடன் முன்மொழிந்துள்ளார்.

கூ.தக. : அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம் 2010 இல் ப்ராக் (செக் குடியரசின் தலைநகரம்) ல் கையெழுத்தானது. இது 2011 ல் நடைமுறைக்கு வந்தது.

அமெரிக்காவின் பழம்பெரும் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரி கிங் உயிரிழந்தார். 1950 மற்றும் 1960- களில் வானொலி தொகுப்பாளராக இருந்த லாரி கிங். பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளராக புகபெற்று விளங்கினார். எம்மி, பிபாடி, உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்

இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழுவை கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார். மனித உரிமை மீறல்கள் குறித்து முந்தைய இலங்கை அரசுகள் அமைத்த குழுக்களின் கண்டுபிடிப்புகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் , சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, போலீ்ஸ் துறை முன்னாள் தலைவர், ஓய்வு பெற்ற அதிகாரி ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முந்தைய குழுக்களின் சிபாரிசுகளை அமல்படுத்த என்ன செய்யலாம் என்பதை பரிந்துரைக்குமாறு அக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகிலேயே அழுக்கான மனிதராக ஈரான் நாட்டைச் சேர்ந்த அமோவ் ஹாஜி (87) அறியப்படுகிறார். கடந்த 67 ஆண்டுகளாக இவர் குளிக்கவில்லை.

அமெரிக்காவிடம் இருந்து 50 ‘எப்-35’ போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் ஐக்கிய அரபு அமீரகம் கையெழுத்திட்டுள்ளது .

தென்கொரியாவில் ஊழலை தடுப்பதற்காக வலிமை வாய்ந்த ஊழல் விசாரணை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது . இதன் தலைவராக கிம் ஜின் ஊக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதாரம்

பஞ்சாப் & சிந்து வங்கியின் (Punjab & Sind bank ) அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை (authorised share capital) ரூ .3,000 கோடியிலிருந்து ரூ .10,000 கோடியாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது.

விருதுகள்

சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது 2021 (Subhash Chandra Bose Aapda Prabandhan Puraskar 2021) க்கு, அமைப்பு பிரிவில் நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனிநபர் பிரிவில் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை குறித்த, குறிப்பாக நிலச்சரிவுகள் குறித்த, அறிவியல் ஆய்வுகளுக்கு இந்தியாவில் அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர் டாக்டர் ராஜேந்திர குமார் பண்டாரி ஆவார். சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ மற்றும் மூன்று இதர இடங்களில் நிலச்சரிவு குறித்த இந்தியாவின் முதல் ஆய்வகத்தை அவர் உருவாக்கினார்.

கூ.தக. : பேரிடர் மேலாண்மையில் சிறப்பான பங்களிப்பையும், தன்னலமற்ற சேவையையும் ஆற்றி வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ”சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார்” என்ற பெயரில் புதிய விருதை இந்திய அரசு அறிவித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான ஜனவரி 23 அன்று ஒவ்வொரு வருடமும் இந்த விருது அறிவிக்கப்படும். அமைப்பாக இருப்பின் ரூ 51 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும், தனிநபராக இருக்கும் பட்சத்தில் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

பிரெஞ்சு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான ரோமன் ரோலன் பரிசு புதுச்சேரி பிரெஞ்சுப் பேராசிர் வெங்கட சுப்புராய நாயகருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் எழுதிய பிரெஞ்சு நாவலை ’உல்லாசத் திருமணம்’ எனும் தலைப்பில் இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ள புத்தகத்திற்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலம் தீர்க்கப்படாத காடிசன் - சிங்கர் கணிதத்திற்கும், ராமானுஜன் வரைபடத்திற்கும் தீர்வு கண்ட இந்திய கணிதவியலாளர் நிகில் வத்சவா உள்ளிட்ட 3 பேர், அமெரிக்காவில் மைக்கேல் அண்ட் ஷீலியா ஹெல்டு விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

குவாண்டம் மெக்கானிக்சுடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடுகளுக்கு கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகியோர் கடந்த 1959ம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளியிட்டனர். இந்த கோட்பாட்டிற்கு நீண்ட காலமாக தீர்வு காணப்படாமலேயே இருந்தது. சிக்கலான இந்த கணிதத்திற்கு இந்தியாவை சேர்ந்த நிகில் ஸ்ரீவத்சவா தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார். இவரோடு அமெரிக்காவின் ஆடம் மார்க்கஸ், யேல் பல்கலைக் கழகத்தின் டேனியல் ஸ்பீல்மன் ஆகியோரும் காடிசன்-சிங்கர் மற்றும் ராமானுஜன் வரைபடத்திற்கு தீர்வு கண்டுள்ளனர்.

நியமனங்கள்

ஆசியான் செயலகத்திற்கான (ASEAN Secretariat) இந்தியாவின் தூதராக ஜெயந்த் N கோப்ராகேட் (Jayant N Khobragade) நியமிக்கப்பட்டார்.

கூ.தக. :

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (Association of Southeast Asian Nations (ASEAN)) 8 ஆகஸ்ட், 1967 அன்று சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது. இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் தலைமையிடத்தைக்கொண்ட இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளாக, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகியவை உள்ளன.

முக்கிய தினங்கள்

☞ தேசிய பெண் குழந்தைகள் தினம் (National Girl Child Day) - ஜனவரி 24

கூ.தக. : தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19)(Srishti Goswami) செயல்பட உள்ளார். 24-1-2021 அன்று உத்தரகண்டின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இவர் பணியாற்ற உள்ளார்.

☞ ‘பராக்கிரம தினம்’ (Parakram Diwas) - ஜனவரி 23 (நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினம் - 23 ஜனவரி, 1897)

அறிவியல் & தொழில்நுட்பம்

“உலகத்தின் ரீங்காரம்” ( Hum of the Universe) என்பதை ஈர்ப்பு அலைகளுக்கான வட அமெரிக்க நானோஹெட்ஸ் ஆய்வகத்தால் (North American Nanohetz Observatory for Gravitational Waves (NANOGrav)) கண்டறிந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி இந்த ரீங்காரமானது ஈர்ப்பு அலைகளால் உருவாகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

இந்தோ-நேபாளம் விளையாட்டுப் போட்டிகளில், 20 வயது வரை உள்ள கபடி அணியில் இராமநாதபுர மாவட்டம், கடலாடி அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த T.இரஞ்சித் முருகன், M. தங்க நாதன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு தங்கப் பதங்கம் பெற்றனர்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!