Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 5-6 February 2021

 Current Affairs for TNPSC Exams 5-6 February 2021 

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு 

☞முதல் முறை வாக்காளா்களுக்கு தபால் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழக தோ்தல் துறை, அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை தலைமை தபால் அதிகாரி ஜே.சாருகேசி ஆகியோா் இடையே  இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

☞விழுப்புரத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க  சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து இந்த புதிய  பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். 

☞திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையத்தைக் காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி 5-2-2021 அன்று திறந்து வைத்தார். அதேபோல சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
☞மாற்றுப் பாலினத்தவருக்காக தையல் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கான விசேஷ செயலியையும் முதல்வர் பழனிசாமி  5-2-2021 அன்று தொடங்கி வைத்தார்.
☞திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியா் செல்வத்தை நியமனம் செய்து, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தியா

☞”PMSVANidhi se Samriddhi” என்ற பெயரில்  பிரதமர் தெரு விற்பனையாளரின் ஆத்மநிபார் நிதி (PM SVANidhi) திட்டத்திற்கான மொபைல் செயலியை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மேலும், பிரதமர் தெரு விற்பனையாளரின் ஆத்மநிபார் நிதி (PM SVANidhi) திட்டத்தின் ஒருபகுதியாக, தெரு உணவு விற்பனையாளர்களுக்கு உதவிடும் வகையில் சொமோட்டோ (Zomato) நிறுவனத்துடன்  மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 

☞லக்வார் மின்சார திட்டத்திற்கு (Lakhwar Electricity Project) மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்  ஒப்புதல் அளித்துள்ளது.   இந்த மின்சார திட்டம், ரூ .5747.17 கோடி செலவில்,  உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் யமுனை ஆற்றில் அமைக்கப்படவுள்ளது. 

☞இந்தியாவின் முதல் இடிமின்புயல்  ஆராய்ச்சி மையம் (thunderstorm research testbed) ஒடிசாவின் பாலசூரில் நிறுவப்படும் என இந்தியா வானிலை ஆய்வு துறை (India Meteorological Department) அறிவித்துள்ளது.  மின்னல் தாக்குதல்களால் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த ஆய்வு மையம் நிறுவப்பட்டுள்ளது.
☞ஊனமுற்றோர் மற்றும் முதியவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தியாவில் அணுகக்கூடிய, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய நகரங்களுக்கான உலகளாவிய நகர திட்டமிடலுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்காக புது தில்லியிலுள்ள தேசிய நகர்ப்புற விவகார நிறுவனத்துடன் (National Institute of Urban Affairs (NIUA))  இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கரக்பூர்(Indian Institute of Technology(IIT) Kharagpur) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
☞’சோரோஸ்டர்’ (‘Zoroaster’) என்ற பெயரில் துரித கடலோர ரோந்து கப்பலை செஷல்ஸ் நாட்டிற்கு தயாரித்து வழங்கிட  கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம் (Garden Reach Shipbuilders and Engineers Ltd) மற்றும் செஷல்ஸ் நாட்டிடையே  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
☞கோபர்-தன் ( GOBAR-DHAN scheme ) திட்டத்தின் விரிவாக்கம் -  ‘Galvanizing Organic Bio-Agro Resources Dhan’
கூ.தக. : கால்நடைகள் மற்றும் மக்கும் கழிவுகளை பயனுள்ள வகையில் மேலாண்மை செய்து   விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த உதவுவதற்கான திட்டம்.
☞”டிராப்பெக்ஸ்-21” (TROPEX-21 - Theatre level Readiness and Operational Exercise 2021) என்ற இந்தியாவின், கடற்படை விமானப்படை, இராணுவம் மற்றும் கடலோர காவல்படையின்   போர் தயார்நிலையை சோதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள கூட்டு இராணுவ ஒத்திகை 31-1-2021 அன்று நடைபெற்றது. இந்த ஒத்திகையானது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. 

☞பவுலோமி பாவினி சுக்லா : லக்னோவை பூர்வீகமாகக் கொண்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான பவுலோமி பாவினி சுக்லா  ஆதரவற்ற குழந்தைகள் கல்வி கற்பதற்காக தொடர்ந்து பணியாற்றி வந்ததற்காக, 30 வயதுக்குள் உள்ள சாதனையாளர்களுக்கான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 2021 பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 
☞இந்தியாவில்  5 பேரில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு :  இந்தியாவில் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 5 பேரில் ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடும். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.5 சதவீதம் அதாவது 27 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் நடத்திய 3-வது செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது.

☞பிரேசில் நாட்டின் ‘அமேசானியா-1’ உட்பட 21 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட் மூலம் வரும் 28-2-2011 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.   

☞நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு மேற்குவங்காளத்தில்  உருவாக்கப்படும் என  அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 
☞மத்திய கல்வி அமைச்சகத்தின் ’சமாக்ரா சிக்‌ஷா’ (Samagra Shiksha ) திட்டத்தின்  கீழ் நிதியளிக்கப்பட்ட குடியிருப்பு பள்ளிகள் / விடுதிகளை "நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குடியிருப்பு பள்ளிகள் / விடுதிகள்" (Netaji Subhas Chandra Bose residential schools/hostels) என்று பெயரிட கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள் 

☞ஐக்கிய நாடுகளவையின் யுனிசெஃப் அமைப்பிற்க்கு நீண்டகால அடிப்படையில் கரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு வகைசெய்யும் ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.

கூ.தக. : பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கரோனா தடுப்பூசியை ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில்,  மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் செயல்படும் ,   சீரம் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கிய கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும் சீரம் நிறுவனம் தயாராகி வருகிறது. இத்தனியார் மருந்து நிறுவனம் சைரஸ் எஸ். பூனேவாலா எனும் பார்சி நபரால் 1966-இல் துவக்கப்பட்டது.

☞6 வது இந்தியா-ரஷ்யா இராணுவ தொழில்துறை மாநாடு (India-Russia Military Industrial Conference) 3-2-2021 அன்று பெங்களூரில் நடைபெற்றது.

☞உலகெங்கிலும் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 7,139 இந்தியக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
☞இந்தியா-பஹ்ரைன் இடையே , புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில்,  ஒத்துழைப்பிற்கான முதல் கூட்டு செயற்குழுக் கூட்டம் 4-2-2021 அன்று  காணொலிக் காட்சி வாயிலாக நடந்தது.
உலகம் 

☞’காஷ்னவி’ (‘Ghaznavi (Hatf-III)) என்ற பெயரில் அணு ஆயுதம் தாங்க வல்ல  தரையிலிருந்து - தரையிலுள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் 3-2-2021 அன்று சோதித்துள்ளது. 

☞இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ள எட்னா எரிமலை வெடித்துத்துள்ளது. 

 பொருளாதாரம் 

☞2021 - 22-ம் ஆண்டில் இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சி  10.5 சதவிகிதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி  கணித்துள்ளது. 

ரூ.5,000 கோடி மூலதன நிதியுடன் நபாா்டின் கீழ் குறு நீா்ப்பாசன நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.3970.17 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்து உள்ளது என மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 
☞ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில், ரெப்போ ரேட் விகிதம் மாற்றமின்றி 4% ஆக இருக்கும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35% என்ற அளவிலேயே தொடரும்  என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  
நியமனங்கள் 

☞’தேசிய பாதுகாப்பு கவுண்சிலின்’ (National Safety Council(NSC)) புதிய தலைவராக எல்.என்.டி (L&T) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்    SN சுப்ரமணியனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நியமித்துள்ளது. 

விளையாட்டு 

☞’இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின்’ (Boxing Federation of India(BFI)) தலைவராக அஜய் சிங் (Ajay Singh) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

புத்தகங்கள் 

☞“Whereabouts” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ஜீம்பா லாகிரி (Jhumpa Lahiri)  

☞’1857 – The Sword of Mastaan’ என்ற பெயரில் 1857 ஆம் ஆண்டின் சிப்பாய் கலகத்தைப் பற்றிய புத்தகத்தை வினீத் வாஜ்பாய் (Vineet Bajpai)  எழுதியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot