நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil - 13 - 15 February 2021

TNPSC Current Affairs 13-15 பிப்ரவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞தொடக்கக் கூட்டுறவு பணியாளா்களின் ஊதியத்தை உயா்த்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க தனி குழுவை, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் டி.அமலதாஸ் தலைமையில் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

☞ தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 13-2-2021 அன்று தாக்கல் செய்யப்பட்டது. தேவேந்திர குலத்தான், குடும்பன், பள்ளன், கடையன், காலாடி, பன்னாடி, வாதிரியான் ஆகிய ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயரிட்டு அழைக்கும் இந்த மசோதா தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று மக்களவையில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹன்ஸ்ராஜ் வர்மா குழு :

பட்டியல் சாதிப் பிரிவில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற 6 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு 04.03.2019 அன்று மூத்த ஆட்சிப் பணி அலுவலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இக்குழு இந்த நேர்வுக்கு தொடர்புடைய பல்வேறு தரப்பினருடைய கோரிக்கைகள் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் அறிக்கைகளை கருத்தில் கொண்டு மாநிலப் பட்டியலினத்தில் உள்ள வாதிரியான் உட்பிரிவினையும் உள்ளடக்கி தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட பரிந்துரைத்தது.

மேலும், தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட்டாலும் மேற்குறிப்பிட்ட தற்போது 7 சாதி உட்பிரிவிலும் சமூகப் பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு பட்டியலின வகுப்பில் தொடரும் என்று இக்குழு பரிந்துரைத்திருந்தது.

தமிழக அரசின் “முதலமைச்சரின் உதவிமையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” 13.2.2021 அன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சோழிங்கநல்லூர், ராஜீவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 100 இருக்கைகளுடன் முதலமைச்சரின் உதவி அழைப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணிநேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும், CMHelpline Citizen என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும், https://www.facebook.com/CM-Hepline-TN என்ற டிவிட்டர் வாயிலாகவும் https://www.facebook.com/CM-Hepline-TN என்ற பேஸ்புக் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

கூ.தக. : தமிழக முதல்வர் பழனிசாமி கடந்த 15.9.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரையது களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பாக “முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்” செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி அவர்கள் 14-2-2021 அன்று சென்னைக்கு வந்த போது தனது உரையில் குறிப்பிட்ட ஒளவையார் மற்றும் பாரதியார் பாடல்கள்.

‘வரப்புயர, நீா் உயரும்

நீா் உயர, நெல் உயரும்

நெல் உயர, குடி உயரும்

குடி உயர, கோல் உயரும்

கோல் உயர, கோன் உயா்வான்’ - ஒளவையார்

‘ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்

-------------------

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்

ஓயுதல்செய்யோம் தலைசாயுதல் செய்யோம்’ - பாரதியார்

☞சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 14-2-2021 அன்று தொடங்கி வைத்தார். மேலும், மயிலாடுதுறை - திருவாரூர் இடையே மின்மயமாக்கப்பட்ட ஒற்றை லைன் ரயில் பாதையையும் பிரதமர் மோடி அவர்கள் தொடக்கி வைத்தார்.

ஐஐடி டிஸ்கவரி வளாகத்தை, செங்கல்பட்டு மாவட்டம் தையூரில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி அவர்கள் 14-2-2021 அன்று நாட்டினார்.

இந்தியா

சாக்‌ஷம் வேலைவாய்ப்பு இணையதளம் (‘SAKSHAM’ Job Portal) என்ற பெயரில் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு இணையதளத்தை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (Technology Information, Forecasting and Assessment Council (TIFAC) ) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் மற்றும் உலகிலேயே அதிக ஆண்டுகள் சேவையிலிருந்த விமானந்தாங்கி கப்பல் எனும் பெருமைகளையுடைய ஐ.என்.எஸ். விராத் (INS Viraat) போர்க்கப்பலை உடைப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்திய கடற்படையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்த போர்க்கப்பலை உடைப்பதற்காக ஜீலை 2020 ல் நடைபெற்ற ஏலத்தில் ஸ்ரீராம் குழுமம் (Shree Ram Group) வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரதான் மந்திரி மஹிளா சக்தி கேந்திரா திட்டம் (Pradhan Mantri Mahila Shakti Kendra Scheme) பற்றி ...

22 நவம்பர் 2017 அன்று மஹிளா சக்தி கேந்திரா திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டமானது, கல்லூரி மாணவர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு மூலமாக கொண்டு சமுதாய பங்கேற்பை ஊக்குவிக்க செய்வதாகும். அத்துடன், பெண்கள் தொடர்பான திட்டங்களின் அமலாக்கத்தில் உதவிபுரிவதற்காக பெண்களுக்கான மாவட்ட அளவிலான மையங்கள் (District Level Centres for Women) மற்றும் பெண்களுக்கான மாநில வள மையங்கள் ( State Resource Centres for Women ) அமைப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிதி மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே 60:40 என்ற விகிதத்தில் பகிரப்படும். வடகிழக்கு மாநிலங்களில் இந்த நிதி பகிர்வு 90:10 என்பதாக இருக்கும். யூனியன் பிரதேசங்களுக்கு 100% மத்திய நிதி வழங்கப்படுகிறது.

இந்தியாவின் முதலாவது பிரத்யேக சாகரிகா சர்வதேச கப்பல் முனையத்தை (India's first full-fledged international cruise terminal) கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் மோடி அவர்கள் 14-2-2021 அன்று நாட்டிற்கு அற்பணித்தார்.

‘ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்’ (Ek Bharat, Shreshtha Bharat) என்னும் தலைப்பில் கவியரங்கம் ஒன்றை 2021 பிப்ரவரி 20 அன்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் புதுதில்லியில் நடத்தவிருக்கிறது.

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு. புலிகோரு வெங்கட சஞ்சய் குமாரை ( Puligoru Venkata Sanjay Kumar) குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

11-வது ராஷ்டிரிய சன்ஸ்கிரிதி மகோத்சவம் (Rashtriya Sanskriti Mahotsav) மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெகார் அரண்மனையில் 14-16 பிப்ரவரி 2021 தினங்களிலும், டார்ஜிலிங்கில் 22-24 பிப்ரவரி 2021 தினங்களிலும் முர்ஷிதாபாத்தில் 27-28 பிப்ரவரி 2021 தினங்களிலும் நடைபெறுகிறது.

“டிராபெக்ஸ் 21” (Theatre Level Operational Readiness Exercise (TROPEX 21)) என்ற பெயரில், இரு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும், இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் விளையாட்டு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நடைபெறுகிறது. இந்திய கடற்படை மற்றும் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் கடலோர காவல்படைகள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜூன் மாக் -1 ஏ ராணுவ பீரங்கியை பிரதமர் மோடி அவர்கள் 14-2-2021 அன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த அதிநவீன அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி டாங்கி சென்னை ஆவடியில் உள்ள கனரக ஊா்தி தொழிற்சாலையில், ரூ.8,400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துடன் பாதுகாப்பு தளவாட ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கியை உருவாக்கியுள்ளது. இந்த அதிநவீன பீரங்கியைப் பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, 118 அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி டாங்கி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய ராணுவம் எல்லையில் ஏற்கெனவே 124 அா்ஜுன் பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது. இதைத்தொடா்ந்து, கூடுதலாக இந்த 118 அா்ஜுன் மாா்க் 1 ஏ பீரங்கி வாகனங்களும் சோ்கின்றன.

இந்த பீரங்கி வாகனம் நவீன 120 மி.மீ. துப்பாக்கியுடன் இயங்குவதோடு எந்த நேரத்திலும் எந்த தட்ப வெப்பத்திலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அா்ஜூன் மாா்க் 1 ஏ பீரங்கி இரவு நேரத்திலும் இலங்குகளை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்தும் வகையில், தொ்மல் இமேஜிங் என்கிற பிரத்யேக வசதிகொண்ட அதி நவீன கேமரா உள்ளது.

ஆண்டுக்கு 1.10 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கும் திறனுடன் ஓசூரில் ‘ஏத்தர் எனர்ஜி'யின் முதல் உற்பத்தி நிலையம் செயல்படத் தொடங்கி உள்ளது.

தேசிய தோட்டக்கலை கண்காட்சி 2020 (National Horticulture Fair) பெங்களூரில் நடைபெற்றது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Agricultural Research (ICAR)), இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Horticultural Research (IIHR)), பெங்களூரு, ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்தின.

வெளிநாட்டு உறவுகள்

சிரியா நாட்டின் உணவு பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்காக 2 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா வழங்கியுள்ளது .

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்காவின் நுகர்வோர் நிதி பாதுகாப்பு வாரிய தலைவராக இந்திய அமெரிக்கரான ரோகித் சோப்ரா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.நா.வின் அடுத்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா வேட்புமனுவை அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரோரா அகாங்ஷா (34), தற்போது, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (யுஎன்டிஎப்) தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணிபுரிபுரிகிறார். அவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐ.நா.வின் முதல் பெண் பொதுச்செயலாளர் எனும் பெருமையைப் பெறுவார்.

”பாபா் ஏவுகணை” : தரையிலிருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள தரை இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய தனது பாபா் ஏவுகணையை பாகிஸ்தான் 11-2-2021 அன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இத்தாலியின் புதிய பிரதமராக மரியோ டிராகி (Mario Draghi ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

5,000 ஆண்டுகளுக்கு முன்னா் இயங்கி வந்த மது ஆலையை எகிப்தில் தொல்பொருள் ஆய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா். கிமு 3150 முதல் கிமு 2613 வரை இருந்த முதல் பேரரசை உருவாக்கிய மன்னன் நாா்மா் காலத்தில் அந்த மது ஆலை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.

முக்கிய தினங்கள்

தேசிய உற்பத்தி திறன் தினம் (National Productivity Day) - பிப்ரவரி 12

தேசிய பெண்கள் தினம் (National Women’s Day) - பிப்ரவரி 13 (சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்த தினத்தில் (13-2-1879) அனுசரிக்கப்படுகிறது)

உலக வானொலி தினம் (World Radio Day) - பிப்ரவரி 13

புல்வாமா தாக்குதல் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் 14-2-2021 அன்று அனுசரிக்கப்பட்டது.

கூ.தக. : ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, பாதுகாப்பு படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவனும் உயிரிழந்தனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்

‘திவான்வென் -1’ (Tiwanwen-1) என்று பெயரிடப்பட்ட சீன விண்கலம் 10-2-2021 அன்று, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ‘ஹோப்’ (Hope) திட்டம் 9-2-2021 அன்று செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

”Turn Around India: 2020 – Surmounting Past Legacy” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - RP குப்தா

-----------------------------------

TNPSC குரூப் IV & VAO, II, IIA 2021 தேர்வுக்கு இப்போதே தயாராகுங்கள் !!!

Admission going on for the following Online Test Batches.

TNPSC Group 4, VAO 2021 (Tamil Medium)

www.portalacademy.in/p/tnpsc-group-4-2021-tamil-medium.html

TNPSC Group 4, VAO 2021 (English Medium)

www.portalacademy.in/p/tnpsc-group4-2021-test-batch-english.html

TNPSC Group 2, 2A 2021 (Tamil Medium)

www.portalacademy.in/p/group-2-tamil-medium.html

TNPSC Group 2, 2A 2021 (English Medium)

www.portalacademy.in/p/group-2-english-medium.html

For Queries

Call/Whatsapp : 8778799470

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!