நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 16-17 February 2021

 நடப்பு நிகழ்வுகள்   பிப்ரவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழகம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 ஐ 16-2-2021 அன்று வெளியிட்டார்.

இந்தியா

☞ ஆசியாவின் மிக நீளமான (12 கி.மீ.) வனவிலங்கு பாதுகாப்பு பாதை (Wildlife Protection Corridor) எனும் பெருமையை தில்லி - டேராடூன் எக்ஸ்பிரஸ்வே (Delhi-Dehradun Expressway) பெறவுள்ளது.

☞ ‘நிஸ்தா’ (NISTHA - National Initiative for School Heads' and Teachers' Holistic Advancement) ) திட்டத்தின் கீழ் நடப்புஆண்டில் 56 லட்சம் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிஅளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, கற்பிக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ளவும், தொழில்நுட்பத்தை கையாளுவதை கற்றுக்கொள்ளவும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்கான தேசிய முயற்சி (நிஸ்தா) என்ற திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது.
இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு (உயர்கல்வி, மேல்நிலை) தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் பணியிடைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
☞ பெண்கள் பணியாற்றும் அனைத்து அரசு அலுவலங்களிலும் நாப்கின் வழங்கும் எந்திரங்களையும், நாப்கின்களை எரிக்கும் எந்திரங்களையும் நிறுவ கேரள அரசு உத்தரவி்ட்டுள்ளது.
☞ மேற்குவங்க அரசின் ’மா கிட்சன்ஸ்’ திட்டம் : தமிழகத்தின் அம்மா உணவகம், கர்நாடகாவின் இந்திரா கேன்டீன் வரிசையில் மேற்குவங்கத்தில் மானிய விலையில் உணவு அளிக்கும் ’மா கிட்சன்ஸ்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி 5 ரூபாய்க்கு சாதம், சமைத்த காய்கறிகள், பருப்பு, ஒரு முட்டை வழங்கப்படும். இதற்கான மானியமாக மாநில அரசு ஒரு உணவுக்கு ரூ. 15 செலுத்தும்.
☞ நாடுமுழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்று நடைமுறை 15 பிப்ரவரி 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் சுங்கச் சாவடிகளைக் கடக்க நேர்ந்தால், இருமடங்கு கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் `பாஸ்டேக்' நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 'பாஸ்டேக்' கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவசாகம் அளி்க்கப்பட்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் 15 பிப்ரவரி 2021 ஆம் தேதி நள்ளிரவு முதல் தேசிய நெஞ்சாலைகளைக் கடக்கும் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
☞ கேரள மாநிலம், கொச்சியில் ரூ.6,000 கோடியில் கட்டப்பட்டுள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி வளாகத்தை 14-2-2021 அன்று பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

☞ இந்தியாவின் தேசியக்கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்தவகையில் இந்திய கொடி குறியீடு-2002 மற்றும் தேசிய கவுரவங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,
முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசியக்கொடியையே பயன்படுத்த வேண்டும் என இந்திய கொடி குறியீட்டில் வழிமுறை செய்யப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகளுக்குப்பின் இந்த கொடிகளை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது. தேசியக்கொடிக்கு உரிய கண்ணியத்துடன் தனிப்பட்ட முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசியக்கொடியை எரித்தல், சிதைத்தல், அழித்தல் போன்ற அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இதைப்போல தேசியகீதம் பாடுவதை ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
☞ இந்தியாவின் வரைபடத்தை உருவாக்குவதற்கான புவியியல் தரவுகளுக்கான (geospatial data for map-making) கட்டுப்பாடுகளை இந்திய அரசு 15-2-2021 அன்று தாராளமயமாக்கியுள்ளது. இதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த தரவுகளை எந்த வித கட்டுபாடுமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
☞ N. S. விஸ்வநாதன் குழு : நகர்புற கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைப்பதற்காக 8 நபர்கள் கொண்ட வல்லுநர் குழுவை முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் N. S. விஸ்வநாதன் தலைமையில் இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

☞ ஜாா்கண்ட், பிகாா் மாநில முன்னாள் ஆளுநா் ரமா ஜோய்ஸ் (89) 16-2-2021 அன்று காலமானாா்.

வெளிநாட்டு உறவுகள்

☞ ”ஈரான் -ரஷியா கடற்படை பாதுகாப்பு பெல்ட் ஒத்திகை 2021” (Iran-Russia Maritime Security Belt 2021) என்ற பெயரில், இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரான் மற்றும் ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சியில் இந்தியாவும் இணைந்துள்ளது.

உலகம்

☞ உலக வர்த்தக அமைப்பின் (World Trade Organization) முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி ஒகோன்ஜோ இவீலா (Ngozi Okonjo Iweala ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் தலைவரான ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த முதல் நபா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளாா்.
கூ.தக. : 1 ஜனவரி, 1995 ல் தொடங்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் தச்மையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறுகிறது. இவ்வமைப்பில், தற்போது 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

☞ அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான கண்டன தீர்மான புகாருக்கு செனட் சபையில் போதிய ஆதரவு கிடைக்காததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
☞ காங்கோ நாட்டின் பிரதமராக ஜீன் மைக்கேல் சாமா லூகொண்டோ கீஞ்செ (Jean-Michel Sama Lukonde Kyenge) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
☞ அஸ்ட்ரா செனகா - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்த கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
☞ சீனாவில் ஐக்கிய நாடுகளவை ஒருங்கிணைப்பாளராக இந்தியாவை சேர்ந்த சித்தாா்த் சாட்டா்ஜி பொறுப்பேறுள்ளார். அந்நாட்டில் ஐ.நா.வின் 27 அமைப்புகள், அதன் நிதி மற்றும் திட்டங்களை அவா் மேற்பாா்வையிடுவாா்.

☞ ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் (United Nations Capital Development Fund (UNCDF) ) நிர்வாக செயலாளராக (Executive Secretary) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியாளரான பிரீத்தி சின்ஹா (Preeti Sinha) நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1966ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிதி அமைப்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பெண்கள், இளைஞர்கள் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான நிதயுதவி வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
☞ அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் தொழிலாளா் விவகாரங்களுக்கான சிறப்பு உதவியாளராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரணீதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளாா்.

பொருளாதாரம்

☞ குடும்ப ஓய்வூதியங்களுக்கான மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45, 000 ரூபாயிலிருந்து 1, 25, 000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

☞ உலகளவில் பருப்புகள் உற்பத்தியில் இந்தியா 24% பங்களிக்கிறது என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அறிவியல் / தொழில்நுட்பம்

☞ இந்தியாவில் மின்னணு சார்ந்த பொருட்களின் தயாரிப்பை அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனம் துவங்கவிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக, அலைபேசியை தொலைக்காட்சியுடன் இணைக்கும் கருவியான அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் இந்தியாவில் தயாரிக்கப்படும்.சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தைச் சேர்ந்த கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி என்ற உற்பத்தியாளருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது உற்பத்தியை அமேசான் நிறுவனம் துவக்கும்.

விருதுகள்
☞ ”சாங்சுவரி வாழ்நாழ் சேவை விருது 2020” (Sanctuary Lifetime Service Award, 2020) என்ற சர்வதேச சுற்றுசூழல் விருது தமிழகத்தை சேர்ந்த
எஸ். தியோடர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை ’Sanctuary Nature Foundation’ வழங்கியுள்ளது.
முக்கிய தினங்கள்

☞ பாதுகாப்பான இணையதள தினம் (Safer Internet Day) 2021 - பிப்ரவரி 9 (பிப்ரவரி இரண்டாவது வாரத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது)

நியமனங்கள் 

☞ புதுச்சேரி கவர்னர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கபட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

☞ மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பெயர் பரிந்துரைக்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!