நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 18-20 February 2021

 TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 18 - 20 பிப்ரவரி 2021 

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்பு   திட்டத்தின் முதல் கட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, 21-2-2021 அன்று அடிக்கல் நாட்டவுள்ளாா்.
இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூா் மாவட்டம் மாயனூா் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களின் வட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைக்கப்படும். இதன்மூலம், கரூா், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கா் நிலங்களும் பயன்பெறும். இதற்காக 118.45 கிலோமீட்டா் நீளத்துக்கு கட்டளைக் கால்வாயில் இருந்து புதிதாக கால்வாய் வெட்டப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படும்.
இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிலோமீட்டா் நீளத்துக்கு கால்வாய் உருவாக்கப்பட்டு வைகையுடன் இணைக்கப்படுகிறது. இதனால், 220 ஏரிகளும், 23, 245 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும். மூன்றாவது கட்டத்தில் விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெற உள்ளன. இதன்படி, 34 கிலோமீட்டா் நீளத்துக்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. இந்த மூன்றாம் கட்ட திட்டத்தால் 492 ஏரிகளும், 44, 547 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும்.
ஒட்டுமொத்தமாக ரூ.14,400 கோடியில் 262 கிலோமீட்டா் தூரத்துக்கு நிறைவேற்றப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6 , 300 கனஅடி நீா் தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டு குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படும்.
☞ அமேசான் இந்தியா (Amazon India) நிறுவனம் இந்தியாவில் தனது முதல் உற்பத்தி நிலையத்தில் சென்னையில் அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
☞ சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே  பெரியேரி ஊராட்சி வீ.கூட்ரோடு அரசு ஆட்டுப்பண்ணையில் 1200 ஏக்கர் நிலத்தில் ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள  கால்நடை பூங்காவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22-2-2021 அன்று திறந்து வைக்கிறார்.
☞ தமிழக அரசின் பாரதி விருது  2019,2020 : 
2019-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது சீனி விஸ்வநாதனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது எஸ்.ராஜேஸ்வரிக்கும், பாலசரஸ்வதி விருது, அலா்மேல் வள்ளிக்கும் அளிக்கப்பட உள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கான பாரதி விருது, சுகி சிவத்துக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராமுக்கும், பாலசரஸ்வதி விருது சந்திரா தண்டாயுதபாணிக்கும் அளிக்கப்பட உள்ளது.
☞ தமிழக அரசின் டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது 2019,2020 : 
2019-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. திரைத் துறையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, இசைத் துறையில் பி.சுசிலா, நாட்டியத் துறையில் அம்பிகா காமேஷ்வா் ஆகியோருக்கு அளிக்கப்பட உள்ளது.
2020-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ஜெ ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதில், திரைத்துறை பிரிவில் செளகாா் ஜானகி, இசைத்துறையில் ஜமுனா ராணி, நாட்டியத் துறையில் பாா்வதி ரவி கண்டசாலா ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
☞ ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே ரூ.700 கோடி மதிப்பில் அமையவுள்ள இயற்கை எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 17-2-2021 அன்று  தொடக்கி வைத்தார்.  
கூ.தக.  எண்ணூர் திரவநிலை எரிவாயு முனையத்தில் இருந்து பல ஊர்களின் வழியாக தூத்துக்குடிக்கு எரிவாயு எடுத்துச் செல்ல ரூ.4 ஆயிரத்து 500 கோடி செலவில் குழாய் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில், ரூ.700 கோடி செலவில், ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு  குழாய் வழித்தட பணி முடிந்தநிலையில், அந்த வழித்தடத்தை  பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். 
☞ ரூ.31,500 கோடி மதிப்பில் நாகப்பட்டினத்தில்  அமையவுள்ள காவிரி படுகை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி அவர்கள் 17-2-2021 அன்று அடிக்கல் நாட்டினார். இந்த ஆலையில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பெட்ரோல், டீசல் தயாரிக்கப்படும்.
☞ சென்னை மணலி பெட்ரோலியம் நிறுவன கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு திட்டத்தை பிரதமர் மோடி அவர்கள் 17-2-2021 அன்று  காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை எண்ணூரில் உள்ள சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் ரூ.500 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட கேசோலின் சல்பர் நீக்க வளாகத்தின் மூலம் சுற்றுச் சூழல் மாசு குறையும். 
☞  தருமபுரி மாவட்டத்தில் கும்முனூர் கிராமத்தில் புதியதாக வேளாண் கல்லூரி தொடங்கவுவதற்கான  அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இருந்தே அமலுக்கு வருவதாகவும், கல்லூரி தற்காலிகமாக, மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
☞ தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக இரு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக  ஆனந்த் ஐஏஎஸ்  மற்றும் அஜய் யாதவ் ஐஏஎஸ் ஆகியோரை  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
☞ புதுச்சேரியின் 5-வது பெண் துணை நிலை ஆளுநராக ( பொறுப்பு ஆளுநராக) தமிழிசை சவுந்தரராஜன்  பொறுப்பேற்றுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
☞  சென்னை சர்வதேச திரைப்பட விழா 18-2-2021 அன்று தொடங்கி  8 தினங்கள் நடைபெறுகிறது. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் மற்றும் பிவிஆர் நிறுவனம் இணைந்து, இந்த ஆண்டு 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது.  தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ படம் திரையிடப்பட்டது. 
இந்தியா
☞ 11வது உலக பெட்ரோலியம் நிலக்கரி மாநாடு 2021  ( World PetroCoal Congress) மற்றும்  2வது உலக எதிர்கால எரிசக்தி கூடுகை (World Future Fuel Summit) 16-17 பிப்ரவரி 2021 தினங்களில் புது தில்லியில் நடைபெற்றது. 
 
☞ 2020 ஆம் ஆண்டிற்கான உலக மரங்கள் நகரமாக (Tree City of the World 2020) ஹைதராபாத் நகரத்தை    ஆர்பர் டே பவுண்டேஷன் மற்றும் உலக வேளாண் நிறுவனம் ( Arbor Day Foundation and the Food and Agriculture Organization (FAO)) ஆகியவை அறிவித்துள்ளன. இதன் மூலம், இத்தகைய அங்கீகாரம் பெறும் இந்தியாவின் முதல் நகரம் எனும் பெருமையையும் ஹைதராபாத் நகரம் பெற்றுள்ளது.
☞ "ஸ்கோட்ச் - 2020 ஆண்டின் சிறந்த முதலமைச்சருக்கான விருது’ (Skoch Chief Minister of the Year award) ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
☞ ’சன்டேஸ்'  (Sandes) என்ற பெயரில், வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றான புதிய செயலியை மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) வடிவமைத்துள்ளது. 
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 17-வது இடை மறிக்கும் கப்பலாக (இன்டெர்செப்டார் போட்) சி-453   18-2-2021 அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 
☞ இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளான ஹெலினா(‘Helina’), துருவாஸ்திராவின் (‘Dhruvastra’)சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. மூன்றாம் தலைமுறை பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான (Anti-Tank Guided Missile Systems)  ஹெலினா, துருவாஸ்திராவை, நேரடி தாக்குதல் மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். அனைத்து பருவநிலைகளிலும், பகலிலும், இரவிலும் இதை பயன்படுத்த முடியும். உலகில் உள்ள மிகவும் நவீன பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) உள்நாட்டிலேயே இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன.
இந்தியாவில்  சுகாதார ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக, மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை (Bill & Melinda Gates Foundation)மற்றும்  இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research)  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 
கணவரின் மூதாதையா் சொத்துக்கு மனைவியையும் உரிமையாளா் ஆக்குவதற்கான அவசரச் சட்டம் உத்தரகண்ட் மாநில அரசினால் இயற்றப்பட்டுள்ளது. 
ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளன. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நாட்டின் 100 மாவட்டங்களில் உள்ள வேளாண் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து அளவில் உற்பத்தி அளவை மதிப்பிடுவது போன்ற தரவு சேகரிப்புகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்த இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நலனை உறுதி செய்ய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம், 2015 (Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015)-ல் திருத்தங்கள் செய்வதற்கான, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின், திட்டத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 17-2-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
சிறார் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிப்பதை உறுதி செய்யவும், நம்பகத்தன்மையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவுகளை , சிறார் நீதிச் சட்டத்தின் 61வது பிரிவின் கீழ், மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் ஆகியோர் பிறப்பிப்பதற்கான அதிகாரம் அளிக்கும் வகையிலும் இந்த திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. 
சிறார் நீதிச் சட்டங்களை சுமுகமாக அமல்படுத்தவும், துயரமான சூழ்நிலைகளில் உ.ள்ள குழந்தைகளுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல அமைப்பு உறுப்பினர்கள் நியமனத் தகுதிகளை நிர்ணயிப்பது, முன்னர் வரையறுக்கப்படாத குற்றங்களை,  கடுமையான குற்றம், கடுமையில்லாத குற்றம் என வகைப்படுத்துவது போன்றவை இத்திட்டத்தின் இதர அம்சங்களாகும். இச்சட்டத்தின் பல பிரிவுகளை அமல்படுத்துவதில் உள்ள பல சிக்கல்களுக்கும் இந்தத் திருத்தத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. 
☞ அசாமின் துப்ரி (Dhubri)  மற்றும் மேகாலயாவின் புல்பாரி (Phulbari) இடையே   பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே    கட்டப்படவுள்ள  இந்தியாவின் மிக நீளமான சாலைப் பாலத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி 18-2-2021 அன்று  அடிக்கல் நாட்டினார். இந்த பாலம், ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், கிலோமீட்டர் நீளத்திற்கு அமைய உள்ளது. ஜப்பான் நிறுவனம் இந்த திட்டத்திற்கு நிதிஉதவி அளிக்க சம்மதித்துள்ளது. எல் அண்ட் டி நிறுவனம், ரூ.3 ஆயிரத்து 166 கோடி மதிப்பில், 4 வழி பயணப் பாலத்தை அமைத்து தர ஒப்பந்தம் பெற்றறுள்ளது.
☞ அசாமில் ‘மகாபாகு-பிரம்மபுத்ரா’ (‘Mahabahu-Brahmaputra’ ) திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 18-2-2021தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வட கிழக்கு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து ரீதியான இணைப்பை மேம்படுத்துவதாகும்.
☞ தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு மென்பொருள் சார்ந்த வானொலி (Software Defined Radio (SDR)) தொலைத்தொடர்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போது நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சி என் ஆர் ( Combat Net Radio (CNR)) கருவியின் வாயிலாக குரல் வழியான தகவல்களை மட்டுமே பரிமாறிக்கொள்ள முடியும்.மென்பொருள் சார்ந்த வானொலியில் தரவுகள் பரிமாற்றம், இரைச்சலான சூழ்நிலைகளிலும் துல்லியமான தகவல்களை வழங்குதல், கூடுதல் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதுபோன்ற மிக உயரிய அதிர்வெண் கொண்ட மென்பொருள் வானொலியின் பயன்பாடு இந்திய ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
☞ சுதந்திர இந்தியாவில், முதல் முறையாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஷப்னம் என்ற பெண் தூக்கிலிடப்பட உள்ளார். ஆனால் அவரைத் தூக்கிலிடும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொன்று குவித்தார் என்பதே இவர் மீதான குற்றமாகும்.  இந்தியாவிலேயே பெண்களை தூக்கிலிடும் அறை ஒரே ஒரு இடத்தில்தான் உள்ளது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த அறை இதுவரை பயன்படுத்தப்பட்டதே இல்லை. அது மதுரா சிறையில் 1870-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. 
☞ இ‌ந்​திய சைகை மொழி அக​ரா​தி​யி‌ன் 3-ஆ‌ம் பதி‌ப்பை ம‌த்​திய சமூக நீதி ம‌ற்​று‌ம் அதி​கா​ர​ம​ளி‌த்​த‌ல் துறை‌ அமைச்​ச‌ர்  தாவ‌ர்​ச‌ந்‌த் கெலா‌ட் காணொலி மூல‌ம் 17-2-2021 அன்று  வெளி​யி‌ட்​டா‌ர். 
இ‌ந்த அக​ரா​தியை, சமூக நீதி ம‌ற்​று‌ம் அதி​கா​ர‌ம் அளி‌த்​த‌ல் அû‌ம‌ச்​ச​க‌த்​தி‌ன் கீ‌ழ் செய‌ல்​ப​டு‌ம் , இ‌ந்​திய சைகை மொழி ஆரா‌ய்‌ச்சி ம‌ற்​று‌ம் பயி‌ற்சி மைய‌ம் உருவாக்கியுள்ளது.   
☞ ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த கடலில் மும்பை பாந்த்ரா - வொர்லி கடல் பகுதியிலிருந்து, கேட் வே ஆப் இந்தியா வரை 36 கி.மீ தூரம் நீந்தி   12 வயது சிறுமி  ஜியா ராய் சாதனை படைத்துள்ளார்.
☞ `பரிக்‌ஷா பே சர்ச்சா 2021’  (Pariksha Pe Charcha 2021) என்ற பெயரில், உலகெங்கும் உள்ள  தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி அவர்களின்  கலந்துரையாடல்  நிகழ்வு  மார்ச் 2021 ல் நடைபெறவுள்ளது. 
வெளிநாட்டு உறவுகள் 
☞ இந்தியா மற்றும் இந்தோனேசியா கடற்படைகளுக்கிடையே ‘ஃபாசெக்ஸ்’ (‘PASSEX’ (Passage Exercise)) கூட்டு கடற்படை ஒத்திகை 18-2-2021 அன்று நடைபெற்றது. 
☞ ஆப்கானிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னை பரங்கிமலையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் சார்பில்  கடந்த் 2017-ம் ஆண்டு முதல்   ஓவ்வொரு ஆண்டும் 20 பேர் வீதம், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
☞ ஐ.நா. அமைதிப்படைக்கு  2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. ஐ.நா. அமைதிப்படையில், அமைதி ஏற்படுத்தும் 12 நடவடிக்கைகளில் 94 ஆயிரத்து 484 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
☞ கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன்   15-16 ஜீன் 2020 தினங்களில்  நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா் என்பதை சீன ராணுவம் முதல்முறையாக 19-2-2021 அன்று  ஒப்புக்கொண்டுள்ளது. 
☞ இந்தியா, மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்திற்கு  (Comprehensive Economic cooperation and Partnership Agreement)  மத்திய அமைச்சரவை 17-2-2021 அன்று ஒப்புதல் வழங்கியது. 
ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல் முறையாகும். வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், சரக்கு வர்த்தகம், உற்பத்தி செய்யப்படும் இடத்தின் சட்டங்கள், சேவைகள் வர்த்தகம், வணிகத்தின் தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய நடவடிக்கைகள், நபர்களின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறைகள் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்பு இடம் பெறுகின்றன.
இரு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை மேம்படுத்துவதற்கான அமைப்புசார்ந்த செயல்முறையை ஊக்குவிக்கவும், மேம்படுத்தவும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் வழிவகுக்கும். 
☞ ரவீந்திரநாத் தாகூரின் அமெரிக்க பயணத்தின் நூற்றாண்டு விழா அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் கொண்டாடப்பட்டது. ‘ஹூஸ்டன் தாகூா் சமூகம்’ என்ற அமைப்பு சாா்பில்  இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
கூ.தக. : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்த ரவீந்திரநாத் தாகூா், கவிஞா் மட்டுமின்றி இசையமைப்பாளா், எழுத்தாளா், கல்வியாளா் என பன்முகத் தன்மை கொண்டவா். நாட்டுக்கு தேசிய கீதத்தை அளித்தவா். ‘கீதாஞ்சலி’ என்ற கவிதைத் தொகுப்புக்காக 1913 ஆண்டிற்கான, இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றாா்.
பல்கலைக்கழகம் ஒன்றில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு 1921-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவா் சென்றாா்.
சர்வதேச நிகழ்வுகள்
☞ நேபாளத்தில் 6 பள்ளிக்கூடங்களை 518 நேபாள ரூபாய் மதிப்பில் கட்டிக் கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் நேபாளம் இடையே 18-2-2021 அன்று செய்துகொள்ளப்பட்டது. 
☞ இந்துப்பை தங்கள் அனுமதியின்றி பிற நாடுகள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக, அந்த உப்புக்கு புவிசாா் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
கூ.தக. : இந்துப்பு, இமாலய உப்பு, பாறை உப்பு என்று அழைக்கப்படும் இந்த உப்பானது, பாகிஸ்தான், இமயமலைத் தொடா் பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த உப்பு, சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பயன்படுகிறது.
☞ பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக ( 19-2-2021 அன்று )  இணைந்துள்ளது.

நியமனங்கள்

☞ மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  நியமிக்கப்பட்டுள்ளார்.  மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக கடந்த 6 ஆண்டுகள் இருந்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பதவி காலம்15  பிப்ரவரி 2021 அன்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
☞ ஒரு மணி நேரத்தில் 172 உணவு வகைகளை சமைத்து கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த  9 வயது சிறுவன் ஹயன் அப்துல்லா  ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
☞ ‘பிராணி மித்ரா’ விருதுகள் 2021 : பிராணிகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றுக்காக அரும்பணியாற்றிய தனிநபா்கள், அமைப்புகளுக்கு 2021 -ஆம் ஆண்டிற்கான 14 பிராணி மித்ரா விருதுகளையும், ஜீவ்தயா விருதுகளையும் மத்திய கால்நடை பராமரிப்பு, மீன், பால்வளத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் வழங்கினாா்.
இதில், தனிநபருக்கான பிராணி மித்ரா விருதை தில்லியைச் சோ்ந்த யோகேந்தா் குமாரும், ராஜஸ்தானைச் சோ்ந்த இருவரும் பெற்றனா். துணிச்சல் வீர தீரச் செயல்களுக்கான பிராணி மித்ரா சௌா்யா விருது கோவையைச் சோ்ந்த மறைந்த கல்பனா வாசுதேவனுக்கும், தில்லியை அடுத்த குருகிராமத்தைச் சோ்ந்த அனில் கந்தாஸுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பிராணிகளுக்கான வாழ்நாள் சாதனையாளா் பிராணி மித்ரா விருது சென்னையைச் சோ்ந்த மருத்துவா் எஸ். சின்னி கிருஷ்ணன், கேப்டன் எஸ்.ஆா். சுந்தரம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
பெரு நிறுவனங்களுக்கான விருதை மும்பை டாடா டிரஸ்ட் பவுண்டேஷனும், அமைப்புகளுக்கான விருதுகளை ஹரியாணாவைச் சோ்ந்த உலக சங்கீா்த்தன் டூா் டிரஸ்ட் மற்றும் ராஜ்கோட், ஆமதாபாத் போன்ற நகரங்களைச் சோ்ந்த அமைப்புகளும் பெற்றுள்ளன. ஜீவ்தயா விருதை (கருணை உள்ளம்) தில்லி தியான் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் பெற்றுள்ளன.
அறிவியல் தொழில்நுட்பம்
☞  நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம்  செவ்வாய் கிரகத்தில் 19-2-2021 அன்று வெற்றிகரமாக  தரையிறங்கியுள்ளது. 
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா எனவும், செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காகவும் ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ‘பொ்சிவரன்ஸ்’ ஆய்வுக் கலம் 30-7-2020 அன்று அனுப்பப்பட்டது.  பூமியிலிருந்து 47.2 கோடி கி.மீ. தொலைவு பயணம் செய்த பொ்சிவரன்ஸ் ஆய்வுக் கலம், செவ்வாய் கிரக வளிமண்டலத்துக்குள்  18-2-2021 அன்று நுழைந்து, பின்னர்,  ‘ஜெஸெரோ’ பள்ளப்பகுதியில் 19-2-2021 அன்று வெற்றிகரமாக தரையிறங்கியது. 
கூ.தக. :  நாசாவின் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான பொ்சிவரன்ஸ் ஆய்வுத் திட்டத்தில்    இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ஸ்வாதி மோகன்   முக்கியப் பங்கு வகித்துள்ளார்.  அவர், செவ்வாய் கிரகத்தில் ‘ பொ்சிவரன்ஸ் ’ ஆய்வு கலத்தைக் கட்டுப்படுத்தி வழி நடத்தும் பிரிவுக்கு  தலைமை வகிக்கிறாா். 
☞ எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்து சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளா்கள் எம்.முகமது ஹாசன், சின்மய்பிந்தி ஆகியோா் அடங்கிய ஆய்வுக் குழு சாதனை புரிந்துள்ளனா். மருந்துகளை செயல்படாமல் செய்யும் எய்ட்ஸ் நோய்க்கு அதன் பலவீனமான பகுதியைக் கண்டறிந்து மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்து அழிக்கக் கூடிய மருந்தை அவா்கள் கண்டறிந்துள்ளனா். தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பயன் தரத்தக்க பல புதிய மருந்துகளை உருவாக்கக் கூடிய தரவுகளையும் அவா்கள் உருவாக்கியுள்ளனா்.
விளையாட்டு
☞ டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான குழுவின் தலைவராக ஜப்பான் நாட்டின் அமைச்சர்   செய்கோ ஹாஷிமோட்டோ ( Seiko Hashimoto) நியமிக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  23 ஜீலை 2021 முதல் 8 ஆகஸ்டு 2021 வரையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகின்றன. 
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டென்ஸ்-பெலாரஸின் அரினா சபலென்கா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
☞ ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்ற பிலிப் ஐலேன்ட் டிராபி டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ரஷியாவின் காமிலா ரஹிமோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
☞ ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரா் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தாா்.
தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெட்ரோலியத்துறை (பிஎஸ்பிபி) சாா்பில் விளையாடிய மணிகா பத்ரா மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் ஆனாா். இப்பட்டத்தை இவா் வெல்வது இது 2-ஆவது முறையாகும்.
☞ இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரி மகன் அர்ஜூன் டெண்டுல்கரை ஆரம்பத் தொகையான ரூ. 20 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 
புத்தகங்கள்
‘Indian Economy’s Greatest Crisis: Impact of Coronavirus and the Road Ahead’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அருண் குமார் 
  
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!