Post Top Ad

TNPSC குரூப் II, IIA 2021 Test Batch

45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

Download Test Schedule | Join Now
Tamil Medium | English Medium

TNPSC குரூப் IV & VAO 2021 Test Batch

Download Test Schedule | Join Now
Tamil Medium (120 தேர்வுகள்) | English Medium (100 Tests)

TNPSC Current Affairs in Tamil 21-22 February

 TNPSC Current Affairs   21 - 22 பிப்ரவரி 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு 

 ☞  காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உப வடி நிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், குன்னத்தூரில்  எடப்பாடி பழனிசாமி  21-2-2021 அன்று அடிக்கல் நாட்டினார்.  இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு,

ரூ.14,400 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர். 

ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பில், நிறைவேற்றப்படுகிற இந்த திட்டத்தினால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, வருகிற உபரி நீரை வறட்சியின் பிடியில் சிக்கி வருகிற தென் மாவட்டங்களுக்கு திருப்பி விட வழி பிறக்கும்.

இந்த திட்டம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலப்பரப்பும், இரண்டாவது கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 23 ஆயிரத்து 245 ஏக்கர் நிலப்பரப்பும், மூன்றாவது கட்டத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஏறத்தாழ 44 ஆயிரத்து 547 ஏக்கர் நிலப்பரப்பும் நீர்ப்பாசன வசதியைப் பெறும்.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறபோது, கடலில் வினாடிக்கு சுமார் 6,300 கன அடி நீர் கடலில் கலக்கும். அது, இனி மேற்சொன்ன மாவட்டங்களின் நீர்ப்பாசன தேவைக்கும், குடிநீர் வசதிக்கும் பயன்படும் என்பது இத்திட்டத்தின்  சிறப்பாகும். 

இணைப்பு விவரம்

முதல் கட்ட திட்டத்துக்காக 118.45 கி.மீ. நீளத்துக்கு கட்டளை கால்வாயில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படுகிறது.

இரண்டாம் கட்ட திட்டத்துக்காக தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் உருவாக்கி, வைகையுடன் இணைக்கப்படும்.

மூன்றாம் கட்ட திட்டத்துக்காக 34 கி.மீ. நீளத்துக்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது.

கூ.தக. : 2019-2020 ஆம் ஆண்டில் நீர் மேலாண்மைக்கான சிறந்த விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. 

(தகவல் ஆதாரம் : தினத்தந்தி, தமிழக அரசின் செய்தி வெளியீடு) 

இந்தியா

☞ “மின்சாரத்திற்கு செல்வோம்” (“Go Electric”) என்ற பெயரிலான நாடு தளுவிய பரப்புரையை  மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் 19-2-2021 அன்று தொடங்கினார். இந்த பரப்புரையின் நோக்கம்  மின் வாகங்கங்கள் பயன்பாடு மற்றும் மின் அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும்.

☞ இந்தியாவின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் அறிவியல், புத்தாக்க, தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பல்கலைக்கழகமானது தலைநகா் திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள மங்களாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் அறிவியல், எலக்ட்ரானிக் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 5 துறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு துறையும் பட்ட மேற்படிப்பு வரையிலான கல்வியை வழங்கும்.

 ☞  ஐஐடி காரக்பூரில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர். சியாம பிரசாத் முகர்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கழகத்தை பிரதமர் மோடி அவர்கள் 23  பிப்ரவரி 2021 அன்று திறந்து வைக்கவுள்ளார். இந்த பல் நோக்கு சிறப்பு மருத்துவமனையை மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆதரவுடன் காரக்பூர் ஐஐடி அமைத்துள்ளது.

☞  ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை (இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை பூனேவைச் சேர்ந்த  சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது)  6 வார இடைவெளியில் செலுத்துவதைவிட 3 மாத இடைவெளியில் செலுத்தினால் கரோனாவை ஒழிப்பதில் அதிக பலன் கிடைக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

☞   நாகாலாந்து சட்டப் பேரவையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.  1963-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப் பேரவையில் முதல் முறையாக தற்போது தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

☞  பிரதமரின் விவசாயிகள்  தேசிய விருதுக்கு (PM Kisan national award)  ஆந்திரபிரதேச மாநிலத்தின் அனந்தபுரமு மாவட்டம்  தோ்வு செய்யப்பட்டுள்ளது.

☞  டிஜிலாக்கர் (DigiLocker) இயங்குதளத்துடன் ஒருங்கிணைந்த பாஸ்போர்ட் சேவைகள், வழங்கும்  திட்டத்தை  மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம்,  பாஸ்போர்ட் சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் டிஜிலாக்கரில் பதிவேற்றிய குறிப்பிட்ட ஆவணங்களுக்கான இணைப்பை வழங்க முடியும். இது பாஸ்போர்ட் சேவைகளுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்களை டிஜிலாக்கர் மூலம் காகிதமில்லாத முறையில் சமர்ப்பிக்க குடிமக்களுக்கு உதவும்.

பொருளாதாரம் 

☞  SBI வங்கியின் ”யோனோ” என்ற பெயரிலான மொபைல் வங்கி சேவைக்கான செயலியின் ’YONO’ என்ற பதத்தின் விரிவாக்கம்   - You Only Need One 

வெளிநாட்டு உறவுகள்

☞  இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மாலத்தீவு நாட்டில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது  21-2-2021 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

☞  மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.  ஏற்கனவே,  சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட    1 லட்சம்  கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாலத்தீவுகளுக்கு கடந்த ஜனவரி 2021  மாதம் மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

☞  ’நேவ்டெக்ஸ்21’ (NAVDEX 21 - Naval Defence Exhibition) மற்றும்  ’ஐடெக்ஸ்21’ (IDEX 21 -International Defence Exhibition)  என்ற பெயரில் 20-25 பிப்ரவரி 2021 தினங்களில் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபி நகரில் நடைபெறும் சர்வதேச கடற்படை மற்றும் இராணுவ கண்காட்சிகளில் பங்கு பெறுவதற்காக இந்திய கடற்படையைச் சேர்ந்த , ஐ.என்.எஸ். பிரளயா (INS Pralaya) எனும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் அபுதாபியை சென்றடைந்துள்ளது. 

☞  2021 ஆம் ஆண்டில் ’பிரிக்ஸ்’ (BRICS - Brazil, Russia, India, China, South Africa) அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து, அவ்வமைப்பிற்கான 2021 ஆம் ஆண்டிற்கான இணையதளத்தை (brics2021.gov.in/) வெளியுறவு அமைச்சர் S.ஜெய்சங்கர் அவர்கள் 19-2-2021 அன்று  தொடங்கி வைத்தார். 

கூ.தக. :  ’பிரிக்ஸ்’  அமைப்பிற்கு 2020 ஆம் ஆண்டில் தலைமைதாங்கிய நாடு - ரஷியா

உலகம் 

☞  ”ஆரோவ்-4” (‘Arrow-4’) என்ற பெயரில் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேல்  மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து உருவாக்குகின்றன. 

கூ.தக. : உலகிலேயே பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணைகளை (anti-ballistic missile system) தயாரித்துள்ள நான்கு நாடுகள் அமெரிக்கா, ரஷியா, இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆக்யவையாகும். 

☞   பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு ஏ (எச் 5 என் 8)  (A(H5N8)) என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியதற்கான  உலகின் முதல்  ஆதாரத்தை  ரஷ்யா  உலக சுகாதார அமைப்புக்கு (WHO) தெரிவித்துள்ளது.

☞  சவுதி அரேபியா நாடு முதல்முறையாக பெண்களுக்கான ஆயுதப் படையைத் தொடங்கியுள்ளது.  

அறிவியல் / தொழில்நுட்பம்

☞  சூரியக்காற்று காரணமாக செவ்வாய் கிரகம் தனது வளிமண்டலத்தை இழந்திருக்ககூடும் என்பதை இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.  இந்த ஆய்வை   கொல்கத்தாவை சேர்ந்த இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அர்ணாப் பசாக் மற்றும் திவ்யேந்து நந்தி ஆகியோர் நடத்தியுள்ளனர். 

☞  சந்திரயான்-3  விண்கலம் 2022-ம் ஆண்டில்  விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவுசெய்தது. சந்திராயன் -2 வில் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் விண்கலன்களை மட்டும் அனுப்ப திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இதற்கிடையே, கரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள் சுமார் 6 மாத காலம் வரை முடங்கின. இதனால் சந்திரயான்-3 உள்ளிட்ட திட்டங்களை முடிப்பதில் தாமதம்ஏற்பட்டுள்ளது. 

கூ.தக. : நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம்தேதி ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, செப்டம்பரில் நிலவை நெருங்கியபோதிலும், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக கூறப்படுகிறது.

 அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர்,நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவை ஆர்பிட்டர் ஓராண்டாக சுற்றிவந்து ஆய்வு செய்வதுடன், பல்வேறு அரிய புகைப்படங்களையும் அனுப்பி வருகிறது.

விளையாட்டு

 ☞ ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2021 போட்டியில்,  

 ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா்.

 மகளிா் ஒற்றையா் பிரிவில் ஜப்பானின் நயோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றாா்.

 கலப்பு இரட்டையா் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்-செக்.குடியரசின் பா்போரா கிரெஜ்சிகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

 மகளிா் இரட்டையா் பிரிவில் பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டென்ஸ்-பெலாரஸின் அரினா சபலென்கா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

 ☞ மான்டினீக்ரோவில் நடைபெறும் அட்ரியாடிக் பியா்ல் குத்துச்சண்டை 2021 போட்டியில்,

81+ கிலோ எடைப் பிரிவில்,  இந்தியாவின் ஆல்ஃபியா பதான்தங்கப் பதக்கம் வென்றாா்.

மகளிருக்கான 60 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் வின்கா தங்கம் வென்றாா். 

மகளிருக்கான 75 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் மணிப்பூா் வீராங்கனை சனமாசா சானு தங்கம் வென்றாா். 

மகளிருக்கான 48 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில்  இந்தியாவின் கீதிகாவு  வெள்ளிப் பதக்கம்  வென்றார். 

 ☞ ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்ற  பிலிப் ஐலேன்ட் டிராபி டென்னிஸ் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-ரஷியாவின் காமிலா ரஹிமோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

புத்தகங்கள்

 ☞ எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’  எனும்  நூல்  21-2-2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

 ☞ ஆன்மிக சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான டாக்டர் ரங்கன்ஜி எழுதியுள்ள ‘வேதம் என் வேட்கை’ என்ற நூல்  21-2-2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

 ☞  'Nation First - The Golden Saga of 82 Years' (Rashtra Pratham – 82 varshon ki Swarnim Gatha) என்ற பெயரில் மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் (Central Reserve Police Forces's (CRPF)) புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வெளியிட்டுள்ளார். 

முக்கிய தினங்கள் 

☞  உலக தாய்மொழிகள் தினம் - பிப்ரவரி 21 

 ☞  உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice) - பிப்ரவரி 20 


TNPSC குரூப் IV & VAO, II, IIA  2021 தேர்வுக்கு இப்போதே தயாராகுங்கள் !!! 

Admission going on for the following Online Test Batches.

👉TNPSC Group 4, VAO 2021 (Tamil Medium)

www.portalacademy.in/p/tnpsc-group-4-2021-tamil-medium.html

👉TNPSC Group 4, VAO 2021 (English Medium)

www.portalacademy.in/p/tnpsc-group4-2021-test-batch-english.html

👉TNPSC Group 2, 2A 2021 (Tamil Medium)

www.portalacademy.in/p/group-2-tamil-medium.html

👉TNPSC Group 2, 2A 2021 (English Medium)

www.portalacademy.in/p/group-2-english-medium.html

For Queries 

Call/Whatsapp : 8778799470 No comments:

Post a comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Subscribe To Get All The Latest Updates!

email updates
Email: