TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 11,12 மார்ச் 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
இந்தியா
☛ உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் 10-3-2021 அன்று பதவியேற்றுக் கொண்டாா். முன்னதாக, உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத், தனது பதவியை 9-3-2021 அன்று ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
☛ ” ஐ.என்.எஸ். கரஞ்ச் ” (INS Karanj) என்று பெயரிடப்பட்டுள்ள, இந்திய கடற்படையில் மூன்றாவது ‘ஸ்காா்பீன்’ ரக நீா்மூழ்கி கப்பல் நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது.
கூ.தக. : பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல்) மூலமாக 6 ‘ஸ்காா்பீன்’ ரக நீா்மூழ்கி கப்பல்களை இந்தியா கட்டமைத்து வருகிறது. இதில், இரண்டு நீா்மூழ்கி கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டு, கடற்படையில் ஏற்கெனவே இணைக்கப்பட்டன. இப்போது மூன்றாவது நீா்மூழ்கி கப்பலான கரஞ்ச் வெற்றிகரமாக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
☛ இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையம் (India’s Largest Floating Solar Power Plant) , 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுடன் தெலுங்கானாவின் பெடாப்பள்ளி மாவட்டத்திலுள்ள ராமகுண்டம் (Ramagundam) எனுமிடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதனை தேசிய அனல் மின் நிலையம் நிறுவனம் (National Thermal Power Corporation Limited) உருவாக்குகிறது.
தெரிந்துகொள்ளுங்கள் : இந்தியாவில், சமூக -பொருளாதார மற்றும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு கடைசியாக, மத்திய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சகம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் சாா்பில் கடந்த 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
☛ கர்நாடகா மாநிலத்தில், இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சுபாஷ்ஆதி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
☛ மத்திய நிதி மற்றும் நிறுவனங்கள் விவகார இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ( Anurag Thakur) ’டெரிடோரியல் ஆர்மி’ (Territorial Army) யில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருக்கும் போதே இவ்வாறு, டெரிடோரியல் ஆர்மியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள முதல் நபர் எனும் பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
☛ ”அர்ஜீன் சகாயக் திட்டம்” ( Arjuna Sahayak Project) என்ற பெயரில் நீர்ப்பாசன திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.
☛ இந்தியாவின் அருணாசல பிரதேச எல்லைக்கருகே பிரம்மபுத்திரா நதியில் அணையைக் கட்டுவதற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அருணாசல பிரதேச எல்லையை ஒட்டியுள்ள திபெத்தின் மெடாக் மாகாணத்தில் இந்த அணை கட்டப்படவுள்ளது.
கூ.தக. : அருணாசல பிரதேசம், அஸ்ஸாமில் பாயும் பிரம்மபுத்திரா நதி, சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் ‘யாா்லங் ஜாங்போ’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
☛ ஜமைக்கா நாட்டிற்கு, இந்தியாவின் சார்பாக, 50 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
☛ ”க்வாட்” / “நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை” (Quadrilateral Security Dialogue) அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் முதலாவது உச்சிமாநாடு ( Leaders’ Summit of the Quadrilateral Framework) 12-3-2021 அன்று நடைபெறுகிறது. 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
கூ.தக. : ”க்வாட்” அமைப்பானது, ஆசியாவின் நேட்டோ அமைப்பு (Asian NATO) எனவும் அழைக்கப்படுகிறது.
☛ அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் 3 நாள் பயணமாக 19-21 மார்ச் 2021 தினங்களில் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
☛ அமெரிக்காவில் கொரோனா நிவாரண நிதியாக குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் வழங்க வகை செய்யும் மசோதாவில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
☛ ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடம் அமெரிக்கா அளித்துள்ளது.
☛ ஏப்ரல் 1, 2021 முதல் 50 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட வணிகங்களுக்கு ஜிஎஸ்டி மின் - விலைப்பட்டியல் (GST e-invoicing) கட்டாயமாகிறது என மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes & Customs (CBIC)) அறிவித்துள்ளது.
☛ காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49% இலிருந்து 74% ஆக உயர்த்துவதற்கான காப்பீட்டுச் சட்டம் 1938ன் (Insurance Act, 1938) மீதான திருத்தத்திற்க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
☛ ‘பிரதமரின் ஆரோக்ய பாதுகாப்பு நிதி’/ ’பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதி’(Pradhan Mantri Swasthya Suraksha Nidhi) என்ற பெயரில் சுகாதாரத் துறைக்காக காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்பு நிதியை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை 10-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. சில பொருள்கள் மீது சுகாதாரம் மற்றும் கல்விக்காக விதிக்கப்படும் கூடுதல் வரி (செஸ்) வாயிலாக வசூலாகும் தொகையில், சுகாதாரத்துக்கான பங்கீடானது இந்த நிதித் தொகுப்பில் சேமிக்கப்படவுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய் (Health and Education Cess ) மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து நிதிச் சட்டம் 2007-ன் 136-பி பிரிவின் கீழ் சுகாதாரத்தின் பங்காக காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதியான பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதி உருவாக்கப்படவுள்ளது.
பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் முக்கிய அம்சங்கள்:
i.சுகாதாரத்திற்கான காலாவதியாகாத ஒற்றைத் தொகுப்பு வைப்புநிதி பொது கணக்கில் உருவாக்கப்படும்
ii.சுகாதாரம் மற்றும் கல்விக்கான மேல்வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியில் சுகாதாரத்தில் பங்கு, பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியின் கணக்கில் சேர்க்கப்படும்
iii.பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா நிதியில் சேர்க்கப்படும் தொகை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ்க்காணும் முக்கிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்:
• ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்
• ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள்
• தேசிய சுகாதார இயக்கம்
• பிரதமரின் ஸ்வஸ்திய சுரக்ஷா திட்டம்
• மருத்துவ அவசர காலங்களின் போது அவசரகால மற்றும் பேரிடர் தயார் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்
• நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் தேசிய சுகாதார கொள்கை 2017-இன் இலக்குகளை முன்னெடுத்து செல்வதற்கான எதிர்கால திட்டங்கள்
iv.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இந்தத் தொகுப்பின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படும்
v. எந்த நிதி ஆண்டிலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கான செலவினங்கள் முதலில் இந்த வைப்பு நிதியிலிருந்தும், அதன்பிறகு ஒட்டுமொத்த நிதிநிலை ஆதரவிலிருந்தும் வழங்கப்படும்.
கூ.தக. : 2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, கல்விக்காக சில பொருள்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 3 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்துவிட்டு, சுகாதாரம் மற்றும் கல்விக்காக 4 சதவீத கூடுதல் வரியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் தொழில்நுட்பம்
☛ ”ஆஸ்டர் எக்ஸ்” ( “AsterX”) என்ற பெயரில், பிரான்ஸ் நாடு விண்வெளியில் தனது முதலாவது இராணுவ ஒத்திகையை 8-12 மார்ச் 2021 தினங்களில் நடத்தியுள்ளது.
☛ நிலவு (Moon) குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
☛ ”ஃபுஜாகு” (“Fugaku”) என்ற பெயரில் ஜப்பான் நாட்டினால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகவும் வலிமை வாய்ந்த சூப்பர் கம்பியூட்டர் (supercomputer) பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனை ஜப்பானைச் சேர்ந்த ’RIKEN’ மற்றும் ’Fujitsu’ ஆகிய நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.
☛ உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் ( Food and Agriculture Organization (FAO)) ’கிங் புமிபால் உலக மண் தின விருது 2020’ (“King Bhumibol World Soil Day - 2020 Award”) இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுண்சிலுக்கு (Indian Council of Agricultural Research (ICAR)) வழங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ‘மண்ணரிப்பை தடுப்போம், எதிர்காலம் காப்போம்’ (“Stop soil erosion, save our future”) எனும் மையக்கருத்தில், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுண்சில் நடத்திய ‘மண் ஆரோக்கிய விழிப்புணர்வு’ பிரச்சாராத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கூ.தக. : உலக மண் தினம் (World Soil Day) - டிசம்பர் 5
ICAR - இந்திய மண் அறிவியல் நிறுவனம் (ICAR-Indian Institute of Soil Science) அமைந்துள்ள இடம் - போபால், மத்திய பிரதேசம்
☛ இந்தியாவின் தலைமை புள்ளியியலாளராக ( Chief Statistician of India) G P சமந்தா (G P Samanta) நியமிக்கபப்ட்டுள்ளார்.
☛ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பேச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
☛ “Karunanidhi: A Life” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - AS பன்னீர்செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.