TNPSC தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் 9-10 மார்ச் 2021
Click Here to Subscribe for Current Affairs PDF
(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)
தமிழ் நாடு
☛ 12 தமிழக அரசியல் கட்சிகளுக்கு பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு, மனிதநேய மக்கள் கட்சி - கத்தரிக்கோல், ஜனசங்கம் பார்ட்டி ஆஃப் இந்தியா - வெண்டைக்காய், வஞ்சித் பகுஜன் ஆகாதி - கிராமபோன், மக்கள் ராஜ்யம் கட்சி - தலையணை, நம் இந்தியா நாம் இந்தியர் கட்சி - அன்னாசிப்பழம், பாரத சேவைக் கட்சி - ரப்பர் ஸ்டாம்ப், நேஷனல் டெமாக்ரசி பார்ட்டி ஆஃப் சவுத் இந்தியா - குளிர்சாதன பெட்டி, மக்கள் திலகம் முன்னேற்றக் கழகம் - பலூன், அவர்மகாத்மா நேஷனல் பார்ட்டி - கேஸ் ஸ்டவ், மை இந்தியா பார்ட்டி - சிசிடிவி கேமரா, பாரத மக்கள் கட்சி - ஹெல்மெட், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் - டியூப் லைட்
☛ கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில், சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டது. இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த மூடி குமிழ், தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானை மூடி போன்ற அமைப்பை உடையதாக உள்ளது. மிகவும் சிறியதாக இருப்பதால் 2,600 ஆண்டுகளுக்கு முன் சிறுமியரின் விளையாட்டு பொருளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்தியா
☛ இந்தியாவின் முதல் ’காடுகளின் மூலம் சுகமாக்கும் மையம்’ ( Forest Healing centre ) உத்தரகண்ட் மாநிலம் ராணிக்கேட்டில் அமைந்துள்ள காட்டில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சி பிரிவினால் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 9-3-2021 அன்று பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோகிந்தர் பிஷ்ட் (Joginder Bisht) தொடங்கி வைத்துள்ளார். இயற்கையுடனான நேரடி தொடர்புக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பெற முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
☛ உலகளவில் மின் - வணிக குறியீடு 2020 (UNCTAD B2C E-commerce Index 2020)- ல் இந்தியா 71 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ.நா. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான (United Nations Conference on Trade and Development (UNCTAD)) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்து நாடு பெற்றுள்ளது.
☛ ”இண்டர்நெட் சாதி திட்டம்” (Internet Saathi) என்பது, இந்தியாவில், கிராமப்புற பெண்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கோடு, கூகுள் இந்தியா (Google India), இன்டெல் (Intel) மற்றும் டாடா டிரஸ்ட் (Tata Trusts) ஆகியவற்றால் இணைந்து 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
வெளிநாட்டு உறவுகள்
☛ ”டஸ்ட்லிக்” (‘Dustlik’) என்ற பெயரில் இந்தியா மற்றும் உஷ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை 9-21 மார்ச் 2021 தினங்களில் உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள ராணிகேட் எனுமிடத்தில் நடைபெறுகிறது.
☛ ”நட்பு பாலம்” (மைத்ரி சேது) : இந்தியா வங்கதேசம் இடையே கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி 9-3-2021 அன்று திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலமான திரிபுரா மற்றும் வங்கதேசம் இடையே பெனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 1.9 கி.மீ. நீளமுள்ள இந்த பாலம் திரிபுராவின் சப்ரூம் நகரையும் வங்கதேசத்தின் ராம்கரையும் இணைக்கிறது.
உலகம்
☛ பர்கா மற்றும் நிகாப் (burqa and niqab) போன்றவற்றினால், பொது இடங்களில் முழுவதுமாக முகத்தை மறைப்பதற்கு சுவிட்சர்லாந்து அரசு 7-3-2021 அன்று தடை விதித்துள்ளது.
முக்கிய நியமனங்கள்
☛ இந்திய கணக்காய்வர்-தலைமைத் தணிக்கையர் (Comptroller and Auditor General of India) கிரிஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu), ஐக்கிய நாடுகளவையின் 2021 ஆம் ஆண்டுக்கான வெளி தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நித குழுவில், இந்தியாவைத் தவிர, ஜெர்மனி, சிலி, சீனா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் , பிலிப்பைன்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, கானா, இந்தோனேசியா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
புத்தகங்கள்
☛ “The Frontier Gandhi: My Life And Struggle” என்ற பெயரில் கான் அப்துல் காஃபர் கானின் (Khan Abdul Ghaffar Khan) சுயசரிதை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தானைச் சேர்ந்த அரசு குடிமைப்பணி அதிகாரி இமிதியாஸ் அகமது சாகிப்ஜாதா (Imitiaz Ahmad Sahibzada) மொழிபெயர்த்துள்ளார்.
☛ ஸ்ரீமத் பகவத் கீதையின் ஸ்லோகங்கள் (shlokas of Srimad Bhagavadgita) பற்றி 21 அறிஞர்களின் வர்ணனைகள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார்.
விருதுகள்
அறிவியல் தொழில்நுட்பம்
☛ இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Defence Research & Development Organisation (DRDO)) உருவாக்கப்பட்டுள்ள கடற்படைக்கான ‘அதிநவீன கடற்கணை (டார்பிடோ) - சியெனா’ (‘Advanced Light Torpedo (TAL) Shyena’) 8-3-2021 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
☛ ”நிஷார்” (‘NISAR’ (NASA-ISRO SAR)) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் இஸ்ரோ (Indian Space Research Organisation (ISRO)) மற்றும் அமெரிக்காவின் நாசா ( National Aeronautics & Space Administration (NASA)) இணைந்து தயாரிக்கும் , புவி கண்காணிப்பிற்கான, சிந்தெடிக் அஃபெர்சர் ரேடார் (Synthetic Aperture Radar (SAR)) தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ”நிஷார்” (‘NISAR’ (NASA-ISRO SAR)) புவி கண்காணிப்பு திட்டத்தின் மூலம் முதல் செயற்கைக்கோள் 2020 ஆம் ஆண்டில் அனுப்பப்படவுள்ளது.
விளையாட்டு
☛ சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற ’யோனெக்ஸ் சுவிஸ் ஓபன் 2021’ ( YONEX Swiss Open 2021) பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.