TNPSC Current Affairs in Tamil 1-2 March 2021 - TNPSC Portal - Current Affairs                                                                                             -->

TNPSC Current Affairs in Tamil 1-2 March 2021

TNPSC Current Affairs 1-2 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

👉டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி தொடா்ந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி முத்தரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா

👉 ”சுகம்யா பாரத் மொபைல் செயலி” (“Sugamya Bharat App”) 2-3-2021 அன்று மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெக்லாட் (Thaawarchand Gehlot) அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ’சுகம்யா பாரத் திட்டத்தை’ (Accessible India Campaign or Sugamya Bharat Abhiyan ) செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது.

கூ.தக. : ”சுகம்யா பாரத் அபியான்’ பற்றி ...

3 டிசம்பர் 2015 அன்று பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்குதல் மற்றும் போக்குவரத்தில் அவர்களது மீதான பாகுபாடுகளை களைவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும் .

👉 ”சன்சாட் தொலைக்காட்சி” (“Sansad TV”) : இந்திய நாடாளுமன்றத்தின் தொலைக்காட்சி சானல்களான லோக்சபா டி.வி. ( Lok Sabha TV) மற்றும் ராஜ்யசபா டி.வி. (Rajya Sabha TV ) ஆகிய இரண்டையும் இணைத்து ‘சன்சாட் தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. இந்த சன்சாட் டி.வி. -யின் முதன்மை செயல் அதிகாரியாக ரவி கபூர் (Ravi Kapoor) நியமிக்கப்பட்டுள்ளார்.

கூ.தக. : இந்த இரு தொலைக்காட்சிகளையும் ஒரே தொலைக்காட்சியாக இணைப்பதற்கு 2019 ஆம் ஆண்டில் சூரிய பிரகாஷ் குழு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

👉 ’உலக உயிரி-இந்தியா கூடுகை 2021’ (Global-Bio India 2021) மெய்நிகர் வாயிலாக

‘வாழ்க்கையை மாற்றுதல்’ (‘Transforming Lives’ ) என்ற மையக்கருத்துடன் 1-3 மார்ச் 2021 தினங்களில் நடைபெறுகிறது. இந்த கூடுகையை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழுள்ள உயிரி தொழில்நுட்ப துறை நடத்துகிறது.

வெளிநாட்டு உறவுகள்

👉 இந்தியா - பாகிஸ்தான் இடையே 2013 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை (‘2003 Ceasefire Agreement’ ) தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் 24-2-2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

2003 போர்நிறுத்த ஒப்பந்தம் (‘2003 Ceasefire Agreement’ ) பற்றி:

கார்கில் போருக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 2003 ஆம் ஆண்டு நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், ஸ்ரீநகர்-முசாபராபாத் மற்றும் பூஞ்ச்-ராவல்கோட் வழித்தடங்களைத் திறக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் மூலம், இந்தியா பாகிஸ்தான் இடையே இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்ப்பட்ட காஷ்மீர் பகுதிகளுக்கிடையே 60 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பஸ் மற்றும் டிரக் சேவைகளுக்கு வழி வகுத்தது . காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே வேலி அமைப்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வழி வகுத்தது.

👉 இந்தியாவில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட , புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், மேம்பட்ட டிஜிட்டல் கோபால்ட் சிகிச்சை அளிக்கும் இந்த இயந்திரமான ‘பாபட்ரான்- 2’ , மத்திய சுகாதாரத் துறை சாா்பில் தீவு நாடான மடகாஸ்கருக்கு வழங்கப்பட்டுள்ள து.

சர்வதேச நிகழ்வுகள்

👉 "ஆர்டிகா-எம்” (‘Arktika-M’) என்ற பெயரில் ஆர்ட்டிக் பகுதியில் பருவநிலை மாற்றத்தைக் கண்காணிப்பதற்கான செயற்கைக்கோளை ரஷியா 28-2-2021 அன்று விண்ணில் செலுத்தியது.

👉 கடலிலிருந்து பெறப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு , உலகின் முதல் கணினியை எச்.பி. (HP (Hewlett-Packard)) நிறுவனம் உருவாக்கியுள்ளது.

விருதுகள்

👉 ”78 வது கோல்டன் குளோப் விருதுகள் 2021” (78th Golden Globe Awards 2021) முக்கிய விருதுகளின் விவரம் :

சிறந்த திரைப்படம் - டிராமா-நோமேட்லேண்ட்

சிறந்த திரைப்படம் - மியூஸிக்கல் / காமெடி -போரட் சப்ஸிக்யூண்ட் மூவி ஃபிலிம்

சிறந்த நடிகை - டிராமா -ஆண்ட்ரா டே (தி யுனைடட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லீ ஹாலிடே)

சிறந்த நடிகர் - டிராமா -சாட்விக் போஸ்மேன் (மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்)

சிறந்த நடிகர் - மியூஸிக்கல் / காமெடி -ஸச்சா பேரன் ஜோஹன் (போரட் சப்ஸிக்யூண்ட் மூவி ஃபிலிம்)

சிறந்த நடிகை -ஜோடி ஃபாஸ்டர் (தி மாரிஷேனியன்)

சிறந்த நடிகை - மியூஸிக்கல் / காமெடி -ரோஸமுண்ட் பைக் (ஐ கேர் எ லாட்)

சிறந்த இயக்குநர் -க்ளோ ஸாவோ (நோமேட்லேண்ட்)

சிறந்த இசைக் கோர்ப்பு -ட்ரெண்ட் ரெஸ்னர், ஆட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்ட் - ஸோல்

நியமனங்கள்

👉 ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்தியத் தூதராக மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி மன்பிரீத் வோக்ரா (Manpreet Vohra) நியமிக்கப்பட்டுள்ளாா்.

முக்கிய தினங்கள்

👉பூஜ்ஜிய பாகுபாடு தினம் (Zero Discrimination Day) - மார்ச் 1
👉உலக உள்நாட்டு பாதுகாப்பு தினம் (World Civil Defence Day) - மார்ச் 1
👉குடிமை கணக்கியல் தினம் (Civil Accounts Day) - மார்ச் 1
👉அரிய நோய்கள் தினம் (Rare Disease Day) - பிப்ரவரி 28
👉தேசிய புரோட்டீன் தினம் (National Protein Day) - பிப்ரவரி 27

விளையாட்டுகள்

👉 சிங்கப்பூா் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரின் சாம்பியன் ஆனாா்.

👉 ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்ற அடிலெய்டு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றாா்.

👉 உகாண்டாவில் நடைபெற்ற சா்வதேச பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் வருண் கபூா் மற்றும் மகளிா் ஒற்றையா் பிரிவில் மாளவிகா பன்சோத் ஆகியோா் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

👉 பிரான்ஸில் நடைபெற்ற மான்ட்பெலியா் டென்னிஸ் போட்டியில் பெல்ஜிய வீரா் டேவிட் காஃபின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

👉 சப்-ஜூனியா் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகாராஷ்டிரத்தின் சாயாலி வனி பட்டம் வென்றுள்ளார்.

 

 
                                                                   
     

Related Posts

2 comments

  1. Please update the news daily and some of the important news missing

    ReplyDelete
    Replies
    1. hi we try to cover 100% comprehensive current affairs in TNPSC point of view, if you found any information missing, u can intimate in the comment section, we will update it in next compilation.

      Delete

Post a Comment

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.