Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 23-24 March 2021

TNPSC Current Affairs 23 & 24 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை, இறுதி வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு வழங்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்தி புதிதாக சோ்க்கப்பட்ட பெயா்களால், 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 512 ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 440 போ் ஆண்களும், 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பெண்களும் உள்ளனா். மூன்றாம் பாலித்தனவா்கள் 7 ஆயிரத்து 192 பேராக உள்ளனா்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முகமது ஜான் 23-3-2021 அன்று மாரடைப்பால் காலமானார்.

இந்தியா

இந்தியாவின் முதல் மாநிலமாக ‘எத்தனால் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு கொள்கை 2021 (Ethanol Production Promotion Policy, 2021) -ஐ பீகார் மாநிலம் வெளியிட்டுள்ளது . மத்திய அரசின் ’தேசிய உயிரி எரிசக்தி கொள்கை 2018( National Policy of Biofuels, 2018) -ன் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த கொள்கையின் படி , ரூ/5 கோடி வரையிலான எத்தனால் தயாரிப்பு முதலீடுகலின் மீது 15% மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், ஆண்டொன்றுக்கு 50 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படவுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பண்டேல்கண்ட் மற்றும் விந்தியா பிராந்தியத்திலுள்ள 11 தண்ணீர் பற்றாக்குறை மாவட்டங்களில், ஜல்சக்தி திட்டத்தின் கீழ் குழாய் இணைப்புகளின் மூலம் தண்ணீர் தொழில்நுட்ப உதவி வழங்க டென்மார்க் நாடு மற்றும் ஐக்கிய நாடுகளவையின் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான அலுவலகம் ( United Nations Office for Project Services (UNOPS)) ஆகியவற்றுடன் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

வங்கிகளின் செயலிகளை (applications) ஆய்வு செய்ய ஐந்து நபர்கள் அடங்கிய வெளி ஆலோசனை நிலைக்குழுவை (Standing External Advisory Committee (SEAC)) முன்னாள் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஷியாமளா கோபினாத் (Shyamala Gopinath) தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

இந்தியாவில் முதல் மாநிலமாக ‘விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை’ ( ambulance network for animals) ஆந்திரப்பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது.

இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறை மற்றும் ஜப்பான் அரசின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே நீர்வளம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 23-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோசுக்கும் இரண்டாம் டோஸுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 4-6 வார இடைவெளியை 4-8 வாரமாக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல.

உத்தரப்பிரதேசத்தில் பிஏசி (Provintial Armed Constabulary) என்றழைக்கப்படும் சிறப்பு காவல் படைகளில் பெண்கள் மட்டுமே இடம்பெறும் மூன்று படைகள் அமைக்கப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது . முதன்முறையாகப் பெண்கள் மட்டுமே இடம்பெறும் இம்மூன்று காவல் படைகள், சுதந்திரப் போர்வீரர்களான ராணி அவந்தி பாய் லோதி, உதா தேவி மற்றும் ஜல்காரி பாய் ஆகிய மூன்று பெண் வீரர்களின் பெயர்களில் அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 ஏப்ரல் 2021 முதல் 45-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போடலா ம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் 23-3-2021 அன்று நிறைவேற்றப்பட்டது.

சுரங்கத் தொழிலில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சுரங்கம் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மட்டும் கட்டுப்பாடு) சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் 22-3-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே, 19-3-2021 அன்று இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்ட நிலையில், இப்போது இரு அவைகளின் ஒப்புதலும் கிடைத்துள்ளதால் விரைவில் சட்டமாக்கப்படவுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 23-3-2021 அன்று நடைபெற்ற இலங்கை மீதான போர்க்குற்ற தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. எனினும், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

இந்திய அரசின் ‘தடுப்பூசி நட்புறவு திட்டம் (தடுப்பூசி மைத்ரி)’ திட்டத்தின் கீழ் பூடான் நாட்டுக்கு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 4 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் இரண்டாம் தவணையாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி 2021 ல் 1.5 லட்சம் எண்ணிக்கையில் கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மத்திய பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) மற்றும் ஆப்கானிஸ்தானின் சுயாதீன நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப்பணிகள் ஆணையம் (Independent Administrative Reforms and Civil Services Commission (IARCSC)) ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 23-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

விருதுகள்

மத்திய கலாச்சாரத் துறையின் காந்தி அமைதி விருது 2019,2020 :

2019-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதுஓமன் நாட்டின் நீண்டகால ஆட்சியாளர் மறைந்த சுல்தான் காபூஸ் பின் சையது அல் சையதுக்கும், 2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது வங்கதேசத்தின் தந்தை (வங்கபந்து) என அழைக்கப்படும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இம்முறை இவ்விருது இரு தலைவர்களுக்கு மறைவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. கவுரவமிக்க இவ்விருது ரூ.1 கோடி பரிசுத் தொகை, பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு நேர்த்தியான பாரம்பரிய கைவினைப் பொருள் அல்லது கைத்தறிப் பொருளுடன் வழங்கப்படும்.

மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக 1995-ம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசு இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது. நாடு, இனம், மொழி, சாதி, மதம் மற்றும் பாலினத்துக்கு அப்பாற்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான காந்தி அமைதிப் பரிசுக்கான தேர்வுக் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மக்களவையின் தனிப் பெரும் எதிர்கட்சியின் தலைவரும் அலுவல் சாரா உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் சுலப் இன்டர்நேஷனல் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் ஆகியோரும் இவ்விருதுக்கான நடுவர் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1 கோடி பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம், பட்டயம் மற்றும் பாரம்பரிய கைத்தறி அல்லது கைவினை பொருள் வழங்கப்படும்.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் :

2019-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கான சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இந்த விருதுகள்அறிவிக்கப்பட்டன.

சிறந்த படமாக மோகன்லால் நடித்த ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்மம்’ என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது, ’அசுரன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக, நடிகர் தனுஷ் மற்றும் ‘போன்ஸ்லே’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாயிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த குழந்தை நட்சத்திரமாக ‘கேடி (எ) கருப்பு துரை’ என்ற தமிழ் படத்தில் நடித்த நாகவிஷால் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுக்காக டி.இமான் மற்றும் பிரபுத்தா பானர்ஜி என்ற வங்காள மொழி இசையமைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நடிகர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே…’ என்ற பாடலுக்காக டி.இமான் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

தமிழில் சிறந்த படமாக தனுஷ் நடித்த ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த ஜூரி விருது- ஆர்.பார்த்திபன் (படம்: ஒத்த செருப்பு சைஸ் 7)

சிறந்த நடன இயக்குனர் - ராஜு சுந்தரம் (படம்: மகரிஷி, தெலுங்கு)

சிறந்த ஒலிப்பதிவு -ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு சைஸ் 7), மந்தர் கமலாபுர்கர் (திரிஜியா, மராத்தி), தேபஜித் (ஐவ்துக்-காசி).

முக்கிய தினங்கள்

☞ உலக வானியல் ஆய்வு தினம் (World Meteorological Day 2021) - மார்ச் 23

☞ உலக தண்ணீர் தினம் - மார்ச் 21 | மையக்கருத்து 2021 - தண்ணீரின் மதிப்பறிதல் (‘Valuing water’)

அறிவியல் & தொழில்நுட்பம்

”சோயஸ் 2.1a" (Soyuz-2.1a) ராக்கெட்டின் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சொந்தமான 38 செயற்கைக் கோள்களை ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ்(Roscosmos) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இவற்றில் ’சேலஞ்ச்-1 செயற்கைக்கோள்’ (Challenge-1 satellite) துனிசியாவினால் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோளாகும்.

விளையாட்டுகள்

தில்லியில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அங்கத் வீா்சிங் பாஜ்வா, கனிமத் சிகோன் இணை தங்கப் பதக்கம் வென்றது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“Bringing Governments and People Closer” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - M ராமசந்திரன்

TNPSC குரூப் II, IIA 2021 தேர்வுக்கு இப்போதே தயாராகுங்கள் !!!


☞ 45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

☞ முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !

To Download Test Batch Schedule / Join

www.portalacademy.in | Call / Whatsapp : 8778799470



2 கருத்துகள்:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.