Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

Post Top Ad

Your Ad Spot

TNPSC Current Affairs in Tamil 15-18 March 2021

TNPSC Current Affairs 15-18 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

தமிழகத்தின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்ததுதல் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Food Processing Technology (IIFPT), Thanjavur) மற்றும் ஹரியாணா மாநிலம் குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோா் பயிற்சி நிறுவனம் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களையும் தேசிய நிறுவனங்களாக அறிவிக்கும் ‘தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோா் பயிற்சி மற்றும் மேலாண்மை மசோதா, 2019’ என்ற மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், இந்த இரண்டு நிறுவனங்களும் முழு சுதந்திரத்துடன், ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களுக்கு இணையாக செயல்பட முடியும்.

☞ ஆசியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 4 ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சையை செய்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் சாதனை படைத்துள்ளார்.

நாட்டிலேயே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் அதிகம் பெற்ற மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திற்கு அடுத்து கல்வியில் அதிக அளவில் கடன் பெற்ற மாநிலமாக கேரளம் உள்ளது.

இந்தியா

உலகின் மிக உயரமான இரயில்வே பாலம் (World’s Highest Railway Bridge) , ‘ சீனப் பாலம்’ (‘Chenab Bridge’ ) என்ற பெயரில், இந்தியா இரயில்வேயின் மூலம் ரூ.12000 கோடி செலவில் சீனப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. 1.315 Km நீளமுள்ள ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரேசி மாவட்டத்தின் (Reasi district) பக்கல் ( Bakkal) மற்றும் காரி ( Kauri ) ஆகிய இடங்களை இணைக்கும் இந்த பாலம் 2021 ஆம் ஆண்டு முடிவில் கட்டி முடிக்கப்படவுள்ளது.

மின்னணு சைக்கிள் தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், லண்டனில் தலைமையகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முதலாவது ‘மைய குளிரூட்டு முறைமையை’ (India’s 1st Centralized AC Terminal) கொண்ட இரயில் நிலையம் எனும் பெருமையை பெங்களூருவிலுள்ள எம்.விஸ்வேஸ்வராயா இரயில் நிலையம் (Sir M Visvesvaraya Terminal) பெற்றுள்ளது .

"ஐஎன்எஸ் துருவ் கப்பல்" விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 'பெருங்கடல் கண்காணிப்பு' கப்பலான இதனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (என்டிஆர்ஓ) ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. 'இந்துஸ்தான் ஷிப்யார்ட்' நிறுவனத்தால் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் கட்டமைக் கப்பட்டுள்ளது.

கூ.தக. : ஐஎன்எஸ் துருவ் கப்பல் இந்தியக் கடற்படையில் இணையும்பட்சத்தில், பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களைக் கொண்ட 6-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். தற்போது வரை அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டும்தான் இந்தக் கண்காணிப்பு ரக கப்பல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது . உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

”IQAir” நிறுவனம் வெளியிட்டுள்ள ’உலக காற்று தர அறிக்கை 202’ (World Air Quality Report 2020) -ன் படி,

உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உள்ளன.

உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகர் தில்லி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை வங்காளதேச தலைநகர் டாக்கா மற்றும் மூன்றாவது இடத்தை மங்கோலியா நாட்டின் தலைநகர் உலான்பாதர் ஆகியவை பெற்றுள்ளன.

உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே ‘கோடன்’ (சீனா), காஷியாபாத் (உத்தரப்பிரதேசம்) மற்றும் புலந்தர்ஷார் (உத்தரப்பிரதேசம்) ஆகியவை உள்ளன.

பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான உச்ச வரம்பை 24 வாரங்களாக உயா்த்த அனுமதிக்கும் ‘மருத்துவ கருக்கலைப்பு (திருத்த) மசோதா, 2021’ (The Medical Termination of Pregnancy (Amendment) Bill, 2021) நாடாளுமன்றத்தில் 16-3-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971 (Medical Termination of Pregnancy Act, 1971) ன் மீதான இந்த திருத்தத்தின் மூலம், பாலியல் ரீதியில் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளின்கீழ் பெண்ணின் கருவை கலைக்க அனுமதிக்கும் உச்ச வரம்பு இதுவரை 20 வாரங்கள் என்றிருந்தது, இனி 24 வாரங்களாக உயர உள்ளது.

2011-15 மற்றும் 2016-20 க்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (சிப்ரி) 15-3-2021 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், உலகிலேயே அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆயுத இறக்குமதியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா 2016 முதல் 2020 வரை அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயா் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2 ஆண்டுகளாக அச்சிடப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அரசு 15-3-2021 அன்று தெரிவித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த முதுபெரும் கதகளி நடனக் கலைஞா் சேமஞ்சேரி குஞ்ஞிராமன் 15-3-2021 அன்று காலமானாா்.

சிஏ, சிஎஸ் (Chartered Accountant (CA), Company Secretary (CS) ) , ஐசிடபிள்யுஏ (ICWAI-Institute of Cost and Works Accountants of India))ஆகிய படிப்புகள் இனி முதுநிலைப் படிப்புகளுக்கு இணையானவை என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

மத்திய ஜவுளி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிகள் ஏற்றுமதி கழகத்தை ( Handicrafts and Handlooms Export Corporation of India Limited) மூடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 16-3-2021 அன்று ஒப்புதல் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு உறவுகள்

’நாடாளுமன்ற நட்புக் குழுக்களை’ (Parliamentary Friendship Group), இந்தியா தனது நட்பு நாடுகளில் அமைக்கவுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு போர்ச்சுகல் நாடு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது.

வங்கதேசப் பிரதமர் மேதகு ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 மார்ச் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் . கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பிரதமர் மோடி அவர்கள் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே, விளையாட்டு மற்றும் இளைஞர் தொடர்புடைய விஷயங்களில் ஒத்துழைப்புடன் செயல்பட மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மாலத்தீவு விளையாட்டு மற்றும் சமுதாய மேம்பாட்டுத்துறை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 16-3-2021 அன்று ஒப்புதல் அளித்தது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் கையெழுத்தானது.

சர்வதேச நிகழ்வுகள்

உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய பண்ணை (largest floating solar farm of the world) சிங்கப்பூரில் கட்டப்பட்டு வருகிறது.

சீனாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டால் மட்டுமே சீனா வர விசா வழங்கப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.

‘டிஎம் சாட் 1’ ( DMSat-1) என்ற பெயரில், காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் செயற்கைக் கோளை ஐக்கிய அரபு அமீரகம் 20-3-2021 அன்று விண்ணில் செலுத்துகிறது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

பொருளாதாரம்

☞ மார்ச் 2021 இன் படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (Foreign exchange (Forex) reserves) , உலகளவில் நான்காவதாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முதல் மூன்று இடங்களில் முறையே சீனா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளும், ஐந்தாவது இடத்தில் ரஷியாவும் உள்ளன.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 74 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவை மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 15-3-2021 அன்று தாக்கல் செய்தார்.

கூ.தக. : காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு, கடந்த 2015-ம் ஆண்டு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

விருதுகள்

கட்டடவியல் துறையின் மிக உயர்ந்த விருதான ‘பிரிட்ச்சர் கட்டடவியல் பரிசு 2021’ (Pritzker Architecture Prize 2021) பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டடவியல் வல்லுநர்கள் ஆனி லாகாடன்(Anne Lacaton) மற்றும் ஜீன் - பிலிப் வாசல் (Jean-Philippe Vassal) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான “ரென்யூ பவர்” ( “ReNew Power”) உலக பொருளாதார மன்றத்தால் (World Economic Forum(WEF)) உலகளாவிய கலங்கரை விளக்கம் நிறுவனம் ( Global Lighthouse Company) எனும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .

நியமனங்கள்

இந்திய ராணுவத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனராக பி. எஸ். ராஜு பொறுப்பேற்கவுள்ளார்.

பிரதமர் அலுவலக முதன்மை ஆலோசகராகப் பணியாற்றி வந்த பி.கே .சின்ஹா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சர்வதேச காசநோய் தடுப்பு அமைப்பான ‘‘Stop TB Partnership Board’’ இன் தலைவராக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன் (Dr. Harsh Vardhan) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day) - மார்ச் 16

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) - மார்ச் 15

உலக கணித தினம் (International Day of Mathematics) - மார்ச் 14

சர்வதேச ஆறுகளின் மீதான நடவடிக்கை தினம் 2021 (International Day of Action for Rivers 2021) - மார்ச் 14

விளையாட்டுகள்

தேசிய ஜூனியா் மற்றும் இளையோா் டேபிள் டென்னிஸ் போட்டியில் முறையே ஸ்வஸ்திகா கோஷ் (தில்லி) , தியா சிதாலே (மகாராஷ்டிரம்) ஆகியோா் சாம்பியன் ஆகினா்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“Gandhi in Bombay’’ எனும் புத்தகத்தின் ஆசிரியர்கள் - உஷா தாக்கர் ( Usha Thakkar) மற்றும் சந்தியா மேத்தா (Sandhya Mehta)

“India’s Power Elite: Caste, Class, and Cultural Revolution” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சஞ்சயா பாரு ( Sanjaya Baru)

“My Life in Full: Work, Family and Our Future” என்ற பெயரில் பெப்சிகோ (PepsiCo ) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ‘இந்திரா நூயி’ (Indra Nooyi) தனது சுயசரிதையை எழுதியுள்ளார்.

1 கருத்து:

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot