TNPSC Current Affairs 19 - 22 மார்ச் 2021
தமிழ்நாடு
☞ தேவேந்திரகுல வேளாளர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் 18-3-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த இந்த மசோதா, பட்டியலினத்திலுள்ள குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 ஏழு உட்பிரிவுகளைச் சோ்ந்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட இந்த மசோதா வகை செய்கிறது.
அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். அதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூ.தக. : தமிழகத்தில் பட்டியல் இனத்தில் உள்ள குறிப்பிட்ட உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்ய குழு ஒன்றை தமிழ அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் 4.3. 2019 ல்தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தற்போதைய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியா
☞ கேரளா மாநிலத்தில் கல்லூரி தேசிய மாணவர் படையில் சேர ஹனீபா எனும் திருநங்கை ஒருவருக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.மேலும் என்.சி.சி.யில் திருநங்கைகளை சேர்க்கும் வகையில் 1948-ம் ஆண்டு என்.சி.சி. சட்டத்தில் உரியதிருத்தம் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
☞ 4 வது உலக ஆயுர்வேதா திருவிழா 2021 (Global Ayurveda Festival 2021) மெய்நிகர் வாயிலாக 12-19 மார்ச் 2021 தினங்களில் நடைபெற்றது. இதனை அறிவியல் மற்றும் சமூக செயல்பாட்டில் கண்டுபிடிப்புகளுக்கான மையம் (Centre for Innovation in Science and Social Action (CISSA)) எனும் அமைப்பு நடத்தியது.
☞ எச்.கே.மிட்டல் குழு ( H K Mittal Committee) : ஸ்டார்ட் அப் இந்தியா துவக்க நிதி திட்டத்தை (Startup India Seed Fund Scheme (SISFS)) செயல்படுத்துவது மற்றும் கண்காணிப்பதற்காக எச்.கே.மிட்டல் (H K Mittal ) தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கூ.தக. : ஸ்டார்ட் அப் இந்தியா துவக்க நிதி திட்டம் பிப்ரவரி 2021 ல் மத்திய தொழிற்சாலைகள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
☞ கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்ய கூடாது - தேசிய ரத்தபரிமாற்ற கவுன்சில் : கொரோனாவுக்கு எதிரான எந்தவொரு தடுப்பூசி டோஸ் எடுத்துக்கொண்டாலும், கடைசியாக போட்ட தடுப்பூசி டோசுக்கு பின்னர் 28 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேசிய ரத்தமாற்ற கவுன்சில் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ரத்த தானம் செய்வோர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்ட பிறகும் 28 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதாகும். இதன் அர்த்தம், ரத்த தானம் செய்வோர் முதல் தடுப்பூசியை போட்ட பின்னர் 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது என்பதாகும்.
☞ உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4- வது இடத்தில் உள்ளதாக ‘ மிலிட்டரி ரைடக்ட் ’ என்ற ராணுவ இணையதளத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, 100 புள்ளிகளுக்கு 82 புள்ளிகள் எடுத்து சீனா முதலிடத்தில் உள்ளது. 74 புள்ளிகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷியா 3-ம் இடத்திலும், 61 புள்ளிகளுடன் இந்தியா 4-ம் இடத்திலும், 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5-ம் இடத்திலும், 43 புள்ளிகளுடன் இங்கிலாந்து 9-ம் இடத்திலும் உள்ளன.
ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, சுறுசுறுப்பான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை, மொத்த வான்படை, கடற்படை, தரைப்படை, அணுஆயுத பலம், சராசரி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த ராணுவ வலிமை குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ராணுவ வலிமையில் அந்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, ராணுவத்துக்கு ஆண்டுக்கு 73 ஆயிரத்து 200 கோடி டாலர் செலவிடுகிறது. சீனா, 26 ஆயிரத்து 100 கோடி டாலரும், இந்தியா 7 ஆயிரத்து 100 கோடி டாலரும் செலவிடுகின்றன.
☞ ” ஜல்சக்தி அபியான் : மழைநீரை சேகரிப்போம் ” (‘Jal Shakti Abhiyan:Catch the Rain’) என்ற பரப்புரையை பிரதமர் மோடி அவர்கள் ‘ உலக தண்ணீர் தினமான 22-3-2021 அன்று தொடங்கி வைக்கிறார். ’எங்கும், எப்போதும் மழைநீரைச் சேகரியுங்கள்’ (“catch the rain, where it falls, when it falls”) எனும் மையக்கருத்தில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் 22-3-2021 முதல் 30-11-2021 வரையில் நடைபெறுகிறது.
☞ உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 139- வது இடத்தைப் பெற்றுள்ளது . ஐ.நா.வின் நிலைத்த வளர்ச்சிக்கான தீர்வு குறித்த அமைப்பு சார்பில் , சுகாதாரம், கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலான, இந்தப் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறையே ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 149 நாடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 84-வது இடத்திலும் நேபாளம் 87-வது இடத்திலும் வங்காளதேசம் 101- இடத்திலும் பாகிஸ்தான் 105- வது இடத்திலும் உள்ளன. மியான்மர் 126- இடத்தில் உள்ளது. இலங்கை 129-வது இடத்தில் உள்ளது.
☞ விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா என்.ஐ.டி.யில் புதிய மையம் அமைக்க, இஸ்ரோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த மையம் அமைப்பதற்கு மானியமாக ரூர்கேலா என்.ஐ.டி.க்கு இஸ்ரோ 2 ஆண்டுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கூ.தக. : நாடு முழுவதும் விண்வெளி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவர்களை பயன்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் (இங்குபேசன் சென்டர்) அமைக்கப்படும் என இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி ஏற்கனவே அகர்தலா, ஜலந்தர் ஆகிய இடங்களில் உள்ள என்.ஐ.டி.யில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
☞ நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக அரசு சார்பில் நகைக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதை அரசே நிர்வகிக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நகைகள் விற்பனை செய்யப்படும். தொடக்கத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் இத்தகைய நகைக்கடைகள் திறக்கப்படும்.
கூ.தக. : கர்நாடகாவில் உள்ள ஹட்டி தங்க சுரங்கத்தின் பெயர், கர்நாடக மாநில தங்க சுரங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹட்டி தங்க சுரங்கத்தில் ஆண்டுக்கு 1,800 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
☞ மலிவான விலையில் குடிநீா் கிடைக்கும் சா்வதேச நகரங்கள் பட்டியலில் பெங்களூரு 2- ஆவது இடத்தைப் பிடித்துள்ளது . இங்கு ஒரு பாட்டில் குடிநீரின் விலை சுமாா் ரூ.9-ஆக உள்ளது. குடிநீா் மலிவான விலைக்குக் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் லெபனானின் பெய்ரூட் (ரூ.3) முதலிடத்தில் உள்ளது. குடிநீரின் விலை அதிகமாகக் காணப்படும் நகரங்களின் பட்டியலில் நாா்வேயின் ஓஸ்லோ முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு பாட்டில் குடிநீா் சுமாா் ரூ.130-க்கு விற்கப்படுகிறது.
☞ பழைய வாகன அழிப்பு சான்றிதழை சமா்ப்பித்தால் புதிய வாகன விலையில் 5 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
☞ கனிமச் சுரங்க மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா , மக்களவையில் 19-3-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. 1957-ஆம் ஆண்டைய சுரங்கங்கள், தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது ஆகிய நோக்கங்களுக்காக சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைப் போன்று இந்தியாவும் 95 தாதுக்களை உற்பத்தி செய்கிறது. இருந்தபோதிலும் தங்கம், நிலக்கரி போன்ற முக்கிய தாதுக்கள் இன்னும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தாதுவளஆராய்ச்சியில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். அந்த நிறுவனங்கள் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடும். அதிக எண்ணிக்கையிலான சுரங்கங்களும் ஏலத்துக்கு விடப்படும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத் துறையின் தற்போதைய பங்களிப்பு 1.75 சதவீதமாக உள்ளது. இந்தச் சீா்திருத்தம் மூலம், அத்துறையின் பங்களிப்பு 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
☞ தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய 12 நிறுவனங்களின் குழுக்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . கடந்த 2018-2020 வரையிலான காலகட்டத்தில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் என 26 குழுக்கள் ஆய்வுக்கு நியமிக்கப்பட்டன. தற்சமயம் 12 குழுக்ககள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கும்.
கூ.தக. : உணவு பாதுகாப்புச் சட்டம், கடந்த 2013-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 81.83 கோடி பயன்பெறுகிறாா்கள்.
☞ கோவிட் 19 பெருந்தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
☞ பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/India/2021/03/21075404/Publish-new-guidelines-for-the-safety-of-female-passengersMinistry.vpf
☞ ’ சாஹி திஷா பரப்புரை ’ ( ‘Sahi Disha’ Campaign) என்ற பெயரில், கிராமப்புற இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில்முனைவுகளை ஊக்குவிக்கும் வகையிலான பிரச்சாரத்தை ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Programme (UNDP)) மற்றும் IKEA பவுண்டேசன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த பிரச்சாரம், கிராமப்புற பெண்களுக்கு வேலைகள், வாழ்வாதாரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை பாதிக்கும் மற்றும் சுய-நம்பகத்தன்மையுள்ள நிறுவனங்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
☞ ’ கிராம் உஜாலா திட்டம் ’ (Gram Ujala Scheme ) என்ற பெயரில் கிராமப் புறங்களில் மலிவு விலையில் (ரூ.10/-) எல்.இ.டி. விளக்குகளை ( LED bulbs ) வழங்குவதற்கான திட்டத்தை மத்திய அரசு 19-3-2021 அன்று பீகாரின் ஆரா ( Arrah) மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டத்தில் , 15 இலட்சம் எல்.இ.டி. விளக்குகள் பீகார், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள கிராமப்புறங்களில் வழங்கப்படவுள்ளன.
வெளிநாட்டு உறவுகள்
☞ இந்தியாவிற்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் திரு லாய்ட் ஜேம்ஸ் ஆஸ்டின் III (Lloyd James Austin III), பிரதமர் திரு நரேந்திர மோடியை 19-3-2021 அன்று சந்தித்துப் பேசினார்.
☞ “ டஸ்ட்லிக்- II ஒத்திகை ” (EXERCISE DUSTLIK-II) என்ற பெயரில் இந்தியா மற்றும் உஷ்பெகிஸ்தான் நாடுகளுக்கிடையே தீவிரவாத எதிர்ப்பு கூட்டு இராணுவ ஒத்திகை 10-19 மார்ச் 2021 தினங்களில் உத்தரக்காண்டின் ராணிக்கேட்டில் நடைபெற்றது.
☞ ரஷ்யாவின் ‘ ஸ்புட்னிக் வி ’ ( Sputnik V ) தடுப்பூசிகளை 20 கோடி எண்ணிக்கையில் தயாரிக்க ’ ஸ்டெலிஸ் பயோபார்மா ’ (Stelis Biopharma Pvt. Ltd. (Stelis) ) எனும் பெங்களூருவைச் சேர்ந்த மருந்து நிறுவனத்துடன் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கூ.தக. : ஏற்கனவே, ஹைதராபாத்தை சேர்ந்த கிளாண்ட் பார்மா (Gland Pharma ) , ஹெட்டெரோ பயோபார்மா (Hetero Biopharma) ஆகிய நிறுவனங்கள் ‘ஸ்புட்னிக் வி’ ( Sputnik V ) தடுப்பூசிகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த நிறுவனங்களைத் தவிர, டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் ரஷ்யா உடன் உடன் இந்தியாவில் ஸ்பூட்னிக் வி (Sputnik V) ஆய்வு செய்து நாட்டில் அதன் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
☞ இந்தியா - பஹரைன் கடற்படைகளுக்கிடையே ‘ பாசெக்ஸ் ’ எனப்படும் கூட்டு கடற்படை ஒத்திகை 17-3-2021 அன்று பாரசீக வளைகுடாப் பகுதியில் நடைபெற்றது. இந்திய அரசின் ’ஆபரேஷன் சங்கல்ப்’ - ன் கீழ் நடைபெற்ற இந்த ஒத்திகையில் இந்தியாவின் ஐ.என்.எஸ்.தால்வார் (INS Talwar) போர்க்கப்பல் பங்கேற்றது.
கூ.தக. : ’ஆபரேஷன் சங்கல்ப்’ (Operation Sankalp) என்பது, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக (பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா இடையே) இந்திய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசினால் தொடங்கப்பட்ட கடல் பாதுகாப்பு நடவடிக்கையாகும். இதனை, இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், கப்பல் அமைச்சு மற்றும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
☞ நேபாளத்தின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் , பாரத் பயோடெக்கின் கரோனா தடுப்பூசியான கோவேக்சினை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்புதலை வழங்கியது . இதன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த மூன்றாவது நாடு நேபாளம் ஆகும்.
கூ.தக. : ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனத்தினால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவேக்சின் தடுப்பூசி கொரோனா நோய்க்கெதிரான 81% பயனுள்ளதாக இருக்கும் என இந்தியாவில் 26000 நபர்களிடம் செய்யப்பட்ட ஆய்வில் உறுதி செய்யபப்ட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த இந்திய அரசு ஜனவரி 2021 ல் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ள முதல் ஆப்பிரிக்க நாடு - ஜிம்பாவே
சர்வதேச நிகழ்வுகள்
☞ ’ பாஃபி - ஆண்டி டெரர் 2021’ (“Pabbi-Antiterror-2021”) என்ற பெயரில் தீவிரவாத எதிர்ப்பு பன்னாட்டு கூட்டு இராணுவ ஒத்திகையை நடத்தவுள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (Shanghai Cooperation Organisation ) அறிவித்துள்ளது.
☞ மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது.
☞ ஐக்கிய அரபு எமிரேட்டின் மிகப்பெரிய புதிய சரக்கு கப்பல் எம்.வி.ஹபீத் தனது சேவையை விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோமானியா நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் சேவையில் இருந்து வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த கப்பலை அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியுள்ளது.
☞ தான்சானியா நாட்டு அதிபர் ஜான் மகுபுலி உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து, துணை அதிபர் சமியா சுலுஹூ ஹாசன் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றுள்ளார்.
☞ இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசி தடுப்பூசி போட்டுக்கொண்டார் .
☞ பெண்களுக்கு சம உரிமை அளிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகியுள்ளது .47 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ஐரோப்பிய கவுன்சில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்திய மாநாட்டில் மகளிா் உரிமை ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, இந்த ஒப்பத்தில் முதலாவது நாடாக துருக்கி கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
☞ காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயா்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா (2021) மாநிலங்களவையில் 18-3-2021 அன்று நிறைவேற்றப்பட்டது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு இப்போது 49 சதவீதம் அனுமதிக்கப்படுகிறது. இதனை, 74 சதவீதமாக உயா்த்த காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா 2021 வழிவகை செய்கிறது. மேலும், இதன்மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய காப்பீட்டு நிறுவனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. : முதல்முறையாக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ‘காப்பீட்டுச் சட்டம் 1938 ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது அப்போது 26 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு 2015-இல் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயா்த்தி திருத்தம் செய்யப்பட்டது. இப்போது, அதனை 74 சதவீதமாக உயா்த்த திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
☞ ’மூடிஸ் நிறுவனம்’ (Moody’s Analytics) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2021 ஆம் நிதியாண்டில் 12% ஆக இருக்கும் என கணித்துள்ளது.
☞ இந்திய பொருளாதார வளர்ச்சி 2019-2020 ஆம் நிதியாண்டில் -6.9% எதிர்மறையாக இருந்ததாகவும் 2020-2021 ஆம் ஆண்டில் 5% நேர்மறையாகவும் இருக்கும் எனவும் ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பு (UN Conference on Trade and Development (UNCTAD)) கணித்துள்ளது. மேலும், 2020-2021 நிதியாண்டில் உலகின் சராசரி பொருளாதார வளர்ச்சியானது 4.7% ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
விருதுகள்
☞ அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் சிறந்த பெண் ஆராய்ச்சியாளர் விருது 2021 (Science and Engineering Research Board (SERB) Women Excellence Award ) , ஹைதராபாத்திலுள்ள, தேசிய மனித விலங்கு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (National Institute of Animal Biotechnology (NIAB), Hyderabad) விஞ்ஞானி சோனு காந்தி (Dr. Sonu Gandhi) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
☞ சர்வதேச திரைப்பட ஆவணக்காப்பக கூட்டமைப்பின் 2021 ஆம் ஆண்டிற்கான விருது ( ‘FIAF Award 2021’ ) அமிதாப் பச்சன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் எனும் பெருமையையும் அமிதாப்பச்சன் பெற்றுள்ளார்.
நியமனங்கள்
☞ தேசிய பாதுகாப்பு படையின் ( National Security Guard(NSG)) இயக்குநர் ஜெனரலாக ( Director-General) M. A. கணபதி நியமிக்கப்பட்டுல்ளார்.
☞ மத்திய ரிசர்வ் போலிஸ் படையின் ( Central Reserve Police Force(CRPF)) இயக்குநர் ஜெனரலாக குல்தீப் சிங் (Kuldiep Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
☞ இன வேறுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் (International Day for Elimination of Racial Discrimination) - மார்ச் 21
☞ யுனெஸ்கோ - உலக கவிதை தினம் ( UNESCO World Poetry Day ) - மார்ச் 21
☞ உலக டவுண் சிண்ட்ரோம் தினம் (World Down Syndrome Day ) - மார்ச் 21
☞ சர்வதேச காடுகள் தினம் (International Day of Forests) - மார்ச் 21
☞ உலக மறுசுழற்சி தினம் (Global Recycling Day) - மார்ச் 18
☞ உலக சிட்டுக்குருவிகள் தினம் (World Sparrow Day ) - மார்ச் 20
☞ சர்வதேச மகிழ்ச்சி தினம் (International Day of Happiness) - மார்ச் 20
☞ உலக வாய் சுகாதார தினம் (World Oral Health Day) - மார்ச் 20
☞ உலக உறக்க தினம் (World Sleep Day) - மார்ச் 19
அறிவியல் & தொழில்நுட்பம்
☞ தேசிய விண்வெளி பயண மையம் (Human Space Flight Centre (HSFC)) அமைந்துள்ள இடம் - பெங்களூரு
கூ.தக. : 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மையத்தின் இயக்குநராக எஸ்.உன்னிகிருஸ்ணன் நாயர் உள்ளார்.
☞ ”மொபைல் சேவா ஆப் ஸ்டோர் ” (“Mobile Seva Appstore”) என்ற பெயரில் இந்தியாவிற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘செயலி சந்தையை’ (App Store) மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
☞ ’எனர்ஜி ஸ்வராஜ் யாத்ரா ’ (‘Energy Swaraj Yatra’ bus) என்ற பெயரில் சூரிய சக்தியில் இயங்கும் பேருந்தை மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் சேதன் சிங் சோலாங்கி (Chetan Singh Solanki) உருவாக்கியுள்ளார். இந்த பேருந்திற்குள், குளியல், சமையல், தூக்கம், வேலை, மீட்டிங் ஆகிய அனைத்து அன்றாட நடவடிக்கைகளையும் செய்ய முடியும். பஸ்ஸில் 3.2 கிலோவாட் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது 6 கிலோவாட் பேட்டரி சேமிப்பு திறன் கொண்டது.
விளையாட்டுகள்
☞ புது தில்லியில் நடைபெற்ற , உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் , மகளிா் 10 மீ. ஏா் ரைபிள் பிரிவில் , யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் தங்கமும் , இதே பிரிவில் , மானு பாக்கா் வெள்ளியும் வென்றுள்ளனா்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் , உலகின் 4-ம் நம்பர் வீரரான இந்தியாவின் செளரப் செளத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
☞ துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பாஸ்போரஸ் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் ( 51 கிலோ எடைப்பிரிவு) , கௌரவ் சோலங்கி ( 57 கிலோ)ஆகியோ ர் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
☞ நியூசிலாந்தில் மார்ச் - ஏப்ரல் 2022 ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி. பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022 (ICC Women’s World Cup 2022) க்கானஅதிகாரப்பூர்வ பாடலாக, ‘Girl Gang’ எனும் பாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கின் விக்க்மோர் (Gin Wigmore) எனும் நியூசிலாந்து நாட்டு பாடகி பாடியுள்ளார்.
☞ சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (41 வெற்றிகள்) சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் அப்கான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 42 வது வெற்றியைப் பெற்று முறியடித்தார்.
☞ தி புராஜெக்ட் டென்னிஸ் ஹாா்டு கோா்ட் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அா்ஜுன் காதே , ராஷ்மிகா பாமிடிபடி ஆகியோா் சாம்பியன்கள் ஆகியனா்.
☞ துபை ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் சாம்பியன் ஆனாா். இது அவரது முதல் ஏடிபி டூா் பட்டமாகும்.
☞ கர்நாடகாவில் நடைபெற்ற கம்பளா போட்டியில் சீனிவாசகவுடா 100 மீட்டர் தூரத்தை 8.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசேன் போல்டு இலக்கை 9.58 வினாடிகளில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது. ஆனால் அவரை விட குறைவான நேரத்தில் சீனிவாசகவுடா 100 மீ. தொலைவைக் கடந்துள்ளார்.
கூ.தக. : கடலோர கர்நாடக பகுதியான உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களில் இரு எருதுகளை கலப்பையில் பூட்டி சேற்றில் இலக்கை நோக்கி ஓடும் கம்பளா போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☞ ”Full Spectrum: India’s Wars 1972-2020” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அர்ஜீன் சுப்ரமணியம்
கூ , தக. : “India’s Wars: A Military History, 1947-1971” என்பது, இவர் எழுதிய மற்றொரு புத்தகமாகும்.
☞ “Battle Ready for 21st Century” என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் - ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ஜெனரல் தீபக்
SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.