நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 25-29 March 2021

TNPSC Current Affairs 25-29 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

மான்கிபாத் (‘மனதின் குரல்’) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்ட சென்னை கலங்கரை விளக்கம்: உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘லிப்ட்’ வசதி கொண்ட கலங்கரை விளக்கங்களில் ஒன்று, சென்னை கலங்கரை விளக்கம் ஆகும். இங்கு ‘லிப்ட்’ மூலம் 9-வது தளம் வரை செல்ல முடியும்.இந்த கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம், சூரிய மின்தகடுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படுவது மற்றொரு சிறப்பு. இந்த கலங்கரை விளக்கத்தின் அருகே அமைந்துள்ள உலகனேஸ்வர் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல்லவ மன்னர் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டதாகும்.

கோயம்புத்தூரில் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கிவரும் பஸ் நடத்துனர் மாரிமுத்து யோகநாதனுக்கு பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கூ.தக. : ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி பற்றி ... பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றது முதல், ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு 28-3-2021 அன்று நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட கோ. தாமோதரன் வெற்றி பெற்றுள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக எம்.பிக்கள் ரவீந்திரநாத், மாணிக்கம் தாகூர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

இந்தியா

100% வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்பு வழங்கியுள்ள இந்தியாவின் முதல் யூனியன் பிரதேசம் (மாநிலம்/யூனியன் பிரதேசம் சேர்ந்து மூன்றாவது) எனும் பெருமையை அந்தமான் மற்றும் நிக்கோபார் யூனியன் பிரதேசம் அடைந்துள்ளது. இதனை உலக தண்ணீர் தினமான 22-3-2021 அன்று அந்தமான் லெப்டினண்ட் கவர்னர் டி.கே.ஜோஷி அறிவித்தார்.

உலகின் முதல் காற்றிலிருந்து குடிநீர் தயாரித்து வழங்கும் நடமாடும் தானியங்கி வழங்கி (கியோஸ்க் - Kiosk) மற்றும் தண்ணீர் அறிவு மையம் (World’s First Mobile Water from Air Kiosk and Water Knowledge Centre) ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் , ’மேக்தூத் சொலுஷனைப்’ (‘MEGHDOOT solution’) பயன்படுத்தி, மைத்ரி அக்வாடெக் (Maithri Aquatech) என்ற நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

"கோவோவேக்ஸ்" என்ற பெயரில், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கான சோதனையை தொடங்கியுள்ளதாக, பூனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியின் ஒட்டுமொத்த நோய் எதிா்ப்புத் திறன் 89 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கூ.தக. : கரோனா வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் 2-வது மருந்து இதுவாகும். இதற்கு முன் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தைத் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீடு 2021 (International Intellectual Property Index 2021)ல் இந்தியா 40 வது இடத்தைப் பெற்றுள்ளது . முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.

இந்திய கடலோர காவல் கப்பல் “வஜிரா” (Indian Coast Guard Ship (ICGS) ‘Vajra’ சென்னையிலுள்ள காட்டுப்பள்ளியில் நாட்டிற்கு அற்பணிக்கப்பட்டது.

உற்பத்தி திறனை வளர்ப்பதற்காக யோகாவை ஒரு கருவியாக பயன்படுத்துதலைக் குறித்து ஆராய்வதற்கான பல்துறை சார்ந்த வல்லுநர் குழுவை HR நாகேந்திரா என்பவரின் தலைமையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அமைத்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கான புதிய விமானத்தின் பெயர் - ‘ஏர் இந்தியா ஒன்' (அ) போயிங் ‘பி 777’ . சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் தந்து வங்காளதேச பயணத்திற்கு இந்த விமானத்தையே பயன்படுத்தினார்.

வெளிநாடுகளில் வசிக்கும் தகுதியுள்ள இந்திய வாக்காளா்கள், நடைபெற இருக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் தபால் வாக்குப் பதிவு நடைமுறையை பயன்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை செயல் வடிவம் பெறுவதற்கு 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும் என்பதால், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் இது சாத்தியமில்லை என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்தியாவில் உருமாறும் கரோனா தீநுண்மியின் புதிய வகையான ‘இரட்டை மாறுதலுக்குள்ளான வகை’ (double mutant variant) கொரானா வைரஸ் பரவுவியுள்ளதை மரபியலுக்கான இந்திய கரோனா கூட்டமைப்பு(இன்சாகாக்) கண்டறிந்துள்ளது.

நாட்டிலேயே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் (digital payments) உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2020-21 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையிலான டிஜிட்டல் பணவர்த்தனைகள் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும், உத்தரப்பிரதேசத்தின் சித்தார்த்தா நகர் (Siddhartha Nagar) மற்றும் ஃபிரோஷாபாத் (Firozabad ) மாவட்டங்களை ‘டிஜிட்டல் மாவட்டங்கள்’ ( 'digital districts') எனவும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

”பாலைவனக் கொடி ஒத்திகை –VI” (Exercise Desert Flag –VI) என்ற பெயரில் பன்னாட்டு இராணுவ ஒத்திகை ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் 4-27 மார்ச் 2021 தினங்களில் நடைபெற்றது. இந்தியாஇன் சார்பில் Su-30MKI போர் விமானம் கலந்து கொண்டது.

‘பாஸ்எக்ஸ்’ ஒத்திகை ( 'PASSEX' exercise ) என்ற பெயரில் , இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் 28-3-2021 அன்று தொடங்கியது. இந்த கூட்டு பயிற்சியில் முதன் முறையாக இந்திய விமானப்படை போா் விமானங்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ் நிரந்தர சிந்து ஆணையத்தின் 16 வது கூட்டம் ( Meeting of Permanent Indus Commission under the Indus Waters Treaty) புதுடில்லியில் 23-24 மார்ச் 2021 தினங்களில் நடைபெற்றது.

வங்கதேசத்தின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொள்வதற்காக . பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக (26-27 மார்ச் 2021 தினங்களில்) அந்நாட்டிற்கு சென்ற நிலையில், இந்தியா - வங்கதேச நாடுகளிடையே வா்த்தகம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் 5 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் 27-3-2021 அன்று கையெழுத்தாகின.

12 லடசம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவின் பரிசின் அடையாளமாக பிரதமர் நரேந்திர மோடிவங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் ஒப்படைத்தார்.

ஐ.நா. அமைதிப்படை வீரர்களுக்கு 2 லட்சம் இலவச தடுப்பூசிகள் இந்தியா வழங்கியுள்ளது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ஐ.நா.வின் 12 அமைதிகாப்பு நடவடிக்கைகளில் 121 நாடுகளைச் சேர்ந்த 85 ஆயிரத்து 782 வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். பாரம்பரியமாக இந்த படையில் இந்திய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிகழ்வுகள்

உலகின் முதல் கப்பல் சுரங்கம் (World’s first Ship Tunnel) நார்வே நாட்டில் கட்டப்பட்டு வருகிறது.

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் 2022ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

காங்கோ குடியரசின் அதிபராக டெனிஸ் சசாசோ நாகசோ (Denis Sassou Nguesso) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்க காட்டு யானைகளை (African forest elephant (Loxodonta cyclotis) அழியும் நிலையில் மிகவும் அருகி வரும் விலங்காகவும் , ஆப்பிரிக்க சவானா யானைகளையும் ( African Savanna Elephant (Loxodonta africana)) அருகி வரும் விலங்காகவும் (Endangered) இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN) ) சிவப்பு பட்டியலில் (IUCN Red List) பட்டியலிட்டுள்ளன.

தைவான் நாட்டில் 1 மில்லியனுக்கு அதிகமான வீடுகளுக்கு ரேசன் முறையில் தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்தை அந்நாடு அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன் அமைச்சரவையின் துணை சுகாதாரத்துறை பதவிக்கு திருநங்கை பெண்ணான டாக்டர் ரேச்சல் லெவின் நியமிக்கிக்கப்பட்டுள்ளார்.

‘ஷகீன் 1ஏ' என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாகிஸ்தான் சோதித்துள்ளது . இந்த ஏவுகணை 900 கி.மீ. வரையிலான இலக்குகளை தாக்கவல்லது.

விருதுகள்

“வியாஸ் சம்மன் 2020” (Vyas Samman 2020) விருது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்தி மொழி எழுத்தாளர் ஷரத் பகாரே (Sharad Pagare) என்பவருக்கு ‘பாடலிபுத்ரு கி சம்ராகி’ (Patliputru ki Samragi) எனும் வரலாற்று நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India (UIDAI)) முதன்மை தலைமை அதிகாரியாக சவுரப் கார்க் (Saurabh Garg) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானநிலையங்கள் ஆணையத்தின் தலைவராக (Airports Authority of India (AAI)) சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.அமுதா அதே அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிப்பதற்குத் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளாா்.

விதிகளின்படி, உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு வருகிறாா். அதனடிப்படையில் என்.வி.ரமணாவின் பெயரை எஸ்.ஏ.போப்டே பரிந்துரைத்துள்ளாா்.

எஸ்.ஏ.போப்டேவின் பரிந்துரை ஏற்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா ஏப்ரல் 24-ஆம் தேதி பொறுப்பேற்பாா்.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை என்.வி.ரமணா அப்பதவியில் நீடிப்பாா். அவா் ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சோ்ந்தவா். கடந்த 2013-ஆம் ஆண்டில் தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.வி.ரமணா, அடுத்த ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு பெற்றாா்.

முக்கிய தினங்கள்

☞ உலக காசநோய் தினம் (World Tuberculosis Day) - மார்ச் 24

அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சர்வதேச நினைவு நாள் (International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade ) - மார்ச் 25

உலக நாடக தினம் ( World Theatre Day) - மார்ச் 27

அறிவியல் & தொழில்நுட்பம்

‘மெத்திலோபாக்டீரியம் அஜ்மாலீ” ( “Methylobacterium ajmalii” ) என்ற பெயரில் புதிய வகை பாக்டீரிய சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய உயிரி பன்முகத்தன்மை ஆராய்ச்சியாளர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் அஜ்மல் கானை பெருமைப்படுத்தும் வகையில் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுகள்

நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கபடி போட்டியில் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த லோகநாதன் (23) எனும் கல்லூரி மாணவர், தங்கம் வென்றுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 25 மீ. ரேபிட் ஃபயா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் விஜய்வீா் சித்து-தேஜஸ்வினி ஜோடி தங்கம் வென்றது . இந்த போட்டிகளில் , ஆடவருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் விஜய்வீா் சித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“My Experiments With Silence” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - சமீர் சோனி (Samir Soni), பாலிவுட் நடிகர்

“Indians: A Brief History of a Civilization”

என்ற புத்தகத்தின் ஆசிரியர் - நமித் அரோரா (Namit Arora)

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!