TNPSC Current Affairs 26-28 பிப்ரவரி 2021
தமிழ்நாடு
☞ 'இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்ற புதிய கட்சியை அர்ஜுன மூர்த்தி என்பவர் தொடங்கியுள்ளார்.
☞ நெய்வேலியில் 7,800 கோடி ரூபாய் மதிப்பிலான 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அற்பணித்தார்.
☞ வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் 26-2-2021 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 28-2-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இம்மசோதாவின் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடும், சீா்மரபினருக்கு 7 சதவீத உள்ஒதுக்கீடும், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவினருக்கு 2.5 சதவீத உள்ஒதுக்கீடும் வழங்குவதற்கு வழிவகை காணப்பட்டுள்ளது.மேலும், இந்த உள் ஒதுக்கீடானது தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இன்னும் 6 மாத காலத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு அந்தப் பணி தொடக்கப்பட்டுள்ளது. அது ஒவ்வொரு ஜாதிக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையில் வரும்போது மாற்றியமைக்கப்படும்
நீதிபதி ஜனாா்த்தனம் ஆணையம் (2012) :
பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் ஜாதிகளுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான கோரிக்கைகளை முதல்வராக இருந்த ஜெயலலிதா, . நீதிபதி ஜனாா்த்தனம் தலைமையிலான, 2012 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கான ஆணையத்துக்கு (Tamil Nadu Backward Classes Commission) அனுப்பி, அந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து, உள் ஒதுக்கீடு தொடா்பாக அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதை ஆணையம் பரிசீலனை செய்து, சமா்ப்பித்த அறிக்கை அரசின் பரிசீலனையில் இருந்துவந்த நிலையில் அந்தப் பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு உரிய சட்டம் இயற்றி நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதி குலசேகரன் ஆணையம் (2020) :
தமிழ்நாட்டில் சாதி வாரியான தரவுகளை சேகரிப்பதற்கான ஒரு கணக்கெடுப்பை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமை ஆணையம் ஒன்று டிசம்பர் 2020 ல் அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது சாதி வாரியான தரவுகளை சேகரிப்பதற்கான வழிமுறைகளை ஆராயும், அதன் அடிப்படையில், அத்தகைய தரவுகளை சேகரித்து ஒரு அறிக்கையை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும்.. இந்த ஆணையத்தின் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூ.தக.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் முதன் முதலில் 13 நவம்பர் 1969 அன்று திரு.சட்டநாதன் தலைமையில், திரு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தொடங்கப்பட்டது.
8-7-2020 அன்று அமைக்கப்பட்ட, தற்போதைய, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி M.தணிகாச்சலம் உள்ளார்.
☞ விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து புதிதாக விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
☞ தமிழகம், புதுச்சேரி, கேரளத்துக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகம், புதுவை, கேரளத்துக்கு ஒரே கட்டமாகவும், அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் மே 2-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
☞ தமிழகத்திற்கான தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர் . காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
☞ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மூத்த தலைவருமான தா. பாண்டியன் (88) 26-2-2021 அன்று காலமானார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் 1932ஆம்ஆண்டு பிறந்தவர் தா. பாண்டியன். இவர் பத்து ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும்வடசென்னையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
☞ சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பாலுசாமி வீர மரணம் அடைந்தார்.
☞ புதுச்சேரி தவிர்த்து தமிழகம், கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில், ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.30.8 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தெர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . புதுச்சேரியில் ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.22 லட்சம் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
☞ விருப்பம் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் முறை வாய்ப்பாக அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
இந்தியா
☞ தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிமுறைகள் 2021 (Information Technology (IntermediaryGuidelines and Digital Media Ethics Code) Rules 2021) -ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. சமூக இணைய தளம் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளம் தொடர்பாக இணக்கமான மேற்பார்வையிடும் பொறிமுறையை பெறுவதற்காக, மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ஐ உறுதி செய்துள்ளது.
இந்த விதிகளின் இரண்டாம் பாகம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.
டிஜிட்டல் மீடியா தொடர்பான நெறிமுறைகள், நடைமுறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான 3ம் பாகம் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி, இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள், இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேள்விகள் எழுப்பவும், விமர்சிக்கவும், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தலாம்.
கூ.தக. : இந்தியாவில் சமூக ஊடகங்கள் பயன்பாட்டார்கள் விவரம் வருமாறு...
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் : 53 கோடி
யூ ட்யூப் பயன்படுத்துவோர் : 44.8 கோடி
பேஸ்புக் பயன்படுத்துவோர் : 41 கோடி
இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர்: 21 கோடி
ட்விட்டர் பயன்படுத்துவோர் : 1.75 கோடி
☞ பேராசிரியர் ஜனகிராம் குழு : இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை மறு ஆய்வு செய்ய பேராசிரியர் ஜனகிராம் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( Insurance Regulatory and Development Authority of India (IRDAI)) அமைத்துள்ளது.
☞ இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த இயந்திர கருவிகள் பூங்கா (integrated machine tool park) கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அருகில் வசந்த்நரசபுராவில் அமைக்கப்பட்டுள்ளது.
☞ இந்தியாவின் முதலாவது குளிரூட்டப்பட்ட இரயில் நிலையம் (India's first centralised AC railway terminal) எனும் பெருமையை கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலுள்ள M.விஸ்வேஸ்வரா இரயில் நிலையம் பெற்றுள்ளது.
☞ 100 %
வீடுகளுக்கும் குழாய்வழி தண்ணீர் இணைப்பு வழங்கியுள்ள
இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை தெலுங்கானா மாநிலம் பெற்றுள்ளது.
☞ இந்தியாவின் முதலாவது கடலுக்கடியிலான சுரங்கம் (Undersea Tunnel) மும்பையில் கட்டப்பட்டு வருகிறது . இந்த சுரங்கத்தின் பணிகள் 2023 ஆண்டு வாக்கில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
☞ ‘E-Daakhil’ என்ற பெயரில் தேசிய நுகர்வோர் பிரச்சனைகள் நிவாரண ஆணையத்தின் ( National Consumer Dispute Redressal Commission (NCDRC)) இணையவழி சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
☞ ’ இந்தியா பொம்மை கண்காட்சி 2021’ 28 பிப்ரவரி 2021 முதல் 2 மார்ச் 2021 வரையிலான தினங்களில் மெய்நிகர் வழியாக நடைபெறுகிறது . இந்தியாவில் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப்பொருட்களான பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், இந்திய பொம்மைகளின் உலகளாவிய சந்தையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
☞ 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
☞ கொரோனா தடுப்பு மருந்துகள் தனியார் மருத்துவமனையில் ரூ.250 விலையிலும் அரசு மருத்துவமனையில் விலையின்றி இலவசமாகவும் கிடைக்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
☞ ‘சி-விஜில்’ செயலி (cVIGIL App) : சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை ‘சி-விஜில்’ செயலி மூலம் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.
☞ புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல் படுத்தும் அரசாணையை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 25-2-2021 அன்று பிறப்பித்துள்ளாா்.
☞ தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் 2013-ன்படி, பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக் நடைமுறை டெல்லியில் அம்மாநில அரசால், வரும் மார்ச் 2021 மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது.
☞ அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கு 250 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியுள்ளது.
வெளிநாட்டு உறவுகள்
☞ பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி ‘கோவேக்ஸின்’ தடுப்பூசிகளை வாங்குவதற்கு அந்நிறுவனத்துக்கும், பிரேசிலின் சுகாதார அமைச்சகத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
சர்வதேச நிகழ்வுகள்
☞ ஜான்சன் அண்ட் ஜான்சன் (Johnson & Johnson ) நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவுமற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. அறிவித்துள்ளது. இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
☞ சீனாவில் ஐ.நா. நிர்ணயித்த காலெக்கெடுவுக்கு முன்னதாகவே வறுமையை ஒழித்துவிட்டதாக அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. நிர்ணயித்த காலெக்கெடுவை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
☞ கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம் என்று அபுதாபி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் மர்வான் அல் காபி தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம்
☞2021-2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 13.7% ஆக இருக்கும் என மூடிஸ் (Moody’s) நிறுவனம் கணித்துள்ளது.
விருதுகள்
☞ பிரதமா் மோடிக்கு சா்வதேச சுற்றுச்சூழல் விருது : அமெரிக்காவின் ஐஹெச்எஸ் மாா்க்கிட் நிறுவனத்தின் வருடாந்திர ‘செராவீக்’ மாநாட்டில், சா்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதன்மை விருது (CERAWeek Global Energy and Environment Leadership Award) பிரதமா் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படவுள்ளது.
நியமனங்கள்
☞ 6 வது தேசிய பட்டியலின ஆணையத்தின் (6th National Commission for Scheduled Castes(NCSC)) தலைவராக முன்னாள் மத்திய மந்திரி விஜய் சம்ப்லா (Vijay Sampla) நியமிக்கப்பட்டுள்ளார்.
☞ ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளராகவும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நியூயார்க் அலுவலகத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த லிஜியா நோரோன்ஹாவை (Ligia Noronha) ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குடெரெஸ் ( António Guterres) நியமித்துள்ளார்.
முக்கிய தினங்கள்
☞உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினம் (World NGO (Non-Governmental Organization) day) - பிப்ரவரி 27
☞ தேசிய அறிவியல் தினம் (National Science Day) - பிப்ரவரி 28 | மையக்கருத்து 2021 - ”அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் எதிர்காலம்: கல்வி, திறன்கள் மற்றும் வேலைகளில் அவற்றின் பாதிப்புகள்” (Future of STI: Impacts on Education, Skills, and Work)
கூ.தக. : 1930 இல் நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் ’ராமன் விளைவை’ க் கண்டுபிடித்த தினத்தை (28 பிப்ரவரி 1928) நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
அறிவியல் & தொழில்நுட்பம்
☞ பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 உள்பட 19 செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து 28-2-2021 அன்று விண்ணில் செலுத்தப்பட்டன. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும். மேலும், பிஎஸ்எல்வி பிரிவில் 53-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
கூ.தக. :
இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் (என்எஸ்ஐஎல்) சார்பில் முதல் முறையாக வர்த்தகரீதியாக பிரேசில் நாட்டின் ’ அமேசேனியா-1’ செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக இஸ்ரோ நிறுவனத்துக்கு அந்நியச் செலாவணியும் கிடைக்கும். அமேசானியா 637 கிலோ எடையுடையது. இதன் ஆயுள்காலம் 4 ஆண்டுகள். இது பிரேஸிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் வடிவமைக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் அமேசான் காடு அழிப்புத் திட்டங்களைக் கண்காணிக்கவும், காடுகளின் சூழல், வேளாண் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர,இந்தியாவின், சதீஸ் தவண் செயற்கைக்கோள், ஜிடி சாட், ஜிஹெச்ஆர்சிஇ செயற்கைக்கோள், ஸ்ரீ சக்தி செயற்கைக்கோள், பாதுகாப்புத் துறையின் சிந்து நேத்ரா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது தவிர அமெரிக்காவின் ஸ்பேஸ் பிஇஇ, மெக்சிகோவின் நானோ கனெக்ட் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, யுனிட்டி சாட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 3 செயற்கைக்கோள்களை, கோவையைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி இன்ஸ்ட்டியூட் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் ஜேபிஆர் கல்லூரி, நாக்பூர் ஜிஹெச் ரெய்சோனி கல்லூரியின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டுடன் செலுத்தப்பட்டுள்ள சதீஷ் தவான் சேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் மற்றும் பகவத் கீதையின் வாசகமும் இடம் பெற்றுள்ளது.
சிந்து
நேத்ரா செயற்கைக்கோள் : பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம்
செலுத்தப்பட்ட பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) இளம் விஞ்ஞானிகள் சேர்ந்து
உருவாக்கிய சிந்து நேத்ரா செயற்கைக்கோளானது இந்திய பெருங்கடல் பகுதியில்,
ராணுவ போர் கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான
நோக்கில் உருவாக்கப்பட்டது.
☞ புற்றுநோய் எதிா்ப்பு மருந்து மூலக்கூறுக்கு நிலையான மாற்றை சென்னை ஐஐடியின் உயிரிதொழில்நுட்பவியல் துறை இணை பேராசிரியா் ஸ்மிதா ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர் . இவர்களின் கண்டுபிடிப்பானது, புற்று நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக தற்போது பயன்படுத்தப்படும் ‘கேம்ப்டோதெசினுக்கு’ (கேம்ப்டோதெசின் என்பது ‘கேம்டொதெக்கா அக்யூமினாட்டா’ மற்றும் ‘நோத்தபோடைட்ஸ் நிமோனியானா’ மரங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு ஆல்கலாய்டு ஆகும்) மாற்றாக நுண்ணுயிா் நொதித்தல் செயல்முறையை உருவாக்கியுள்ளனா்.இதனால், விலை குறைந்த புற்றுநோய் மருந்துகளை உருவாக்க முடியும் எனத் தெரிகிறது.
☞ ”டேர் மைடி திங் (Dare Mighty Things)” : செவ்வாய் கிரகத்தை ஆராய அமெரிக்காவின் நாசா அனுப்பிய பெர்சிவரென்ஸ் ரோவர் பயன்படுத்திய மிகப்பெரிய பாராசூட்டில் ஒரு ரகசிய செய்தி இருந்துள்ளது. அதில் டேர் மைடி திங் (Dare Mighty Things) என்று வாக்கியம் பைனரி குறியீட்டைப் பயன்படுத்தி, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களைக் கொண்டு ரகசியமாக பாராசூட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருந்தவர் கணினி பொறியாளரான இயன் கிளர்க். (Dare Mighty Things) டேர் மைடி திங் என்பது அமெரிக்காவின் 26-வது ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் கூறிய தத்துவ வாக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான ஒரு வரியாகும்.
விளையாட்டுகள்
☞ இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (Table Tennis Federation of India (TTFI)) தலைவராக ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா (Dushyant Chautala) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
☞ இரண்டாவது கேலோ இந்தியா தேசிய குளிர்கால விளையாட்டுகள் 2021 (Khelo India National Winter Games 2021) ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலுள்ள குல்மர்க் எனுமிடத்தில் 26-2-2021 முதல் 2-3-2021 வரையில் நடைபெறுகிறது.
☞ தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசாம் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணி நியமனம் பெற்றுள்ளார்.
கூ.தக. : அசாமில் பிறந்த அசத்தல் தடகள வீராங்கனை, ஹிமா தாஸ். இவருக்கு வயது 21. இவர் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசியன் விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார்.
☞ எகிப்து தலைநகா் கெய்ரோவில் நடைபெற்று வரும், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஹமது கான், வீா் சிங், காங்குரா ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
☞ ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்ற அடிலெய்டு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றாா்.
புத்தகங்கள் / ஆசிரியர்கள்
☞ “Unfinished: A Memoir” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் (Priyanka Chopra Jonas)
FOR CURRENT AFFAIRS IMPORTANT QUESTIONS AS QUIZ FORMAT SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.