நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 3-4 March 2021

TNPSC Current Affairs 3-4 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

அகில இந்திய செயல் திறன் விருது, எண்ணெய், எரிவாயு சேமிப்புகுறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கூ.தக. : மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2020-ம் ஆண்டு, ‘சக்ஷம்’ என்றபெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்து ஒரு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தின. இதில், எரிபொருள் சிக்கனம் குறித்து கடந்த ஆண்டில் அதிகஅளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டு உள்ளது.

தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி (88) 4-3-2021 அன்று காலமானார்.

கூ.தக. : குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 1933-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி பிறந்த இரா.கிருஷ்ணமூர்த்தி இவரது தந்தை டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார்.

தமிழக பசுமை இயக்கத் தலைவரும், மருத்துவருமான ஜீவா என்கிற வெ. ஜீவானந்தம் (75) 2-3-2021 அன்று காலமானாா் . பாரதி மீது அளப்பரிய பற்று கொண்டிருந்த ஜீவா, ஈரோட்டில் பல ஆண்டுகளாகத் தொடா்ந்து பாரதி விழாக்களை நடத்தியுள்ளாா். குடிப்பழக்கத்தில் உள்ளவா்களை மீட்க ஈரோட்டில் மையம் அமைத்து நடத்திவந்தாா்.

இந்தியா

வாழ சுலபமான நகரங்கள் பட்டியல் 2020 (Ease of Living Index 2020) ஐ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs) 4-3-2021 அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே பெங்களூரு, பூனே, ஆமதாபாத், சென்னை மற்றும் சூரத் நகரங்களும் , 10 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே சிம்லா, புவனேஸ்வர், சில்வாசா, காக்கி நாடா மற்றும் சேலம் நகரங்களும் பெற்றுள்ளன. மேலும் 10 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 6 வது இடத்தை வேலூர் நகரமும், 10 வது இடத்தை திருச்சிராப்பள்ளி நகரமும் பெற்றுள்ளன. வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்கள் வாழ்வாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி செயல்திறன் பட்டியல் 2020 (Municipal Performance Index (MPI) 2020) of Housing and Urban Affairs) 4-3-2021 அன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகராட்சிகளில் முதல் ஐந்து இடங்களை முறையே இந்தூர், சூரத், போபால், பிப்ரி சிஞ்ச்வாட் மற்றும் பூனே நகரங்களும் , 10 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் புது தில்லி (எம்.சி), திருப்பதி, காந்திநகர், கர்னால் மற்றும் சேலம் நகராட்சிகளும் பெறுள்ளன. மேலும், 10 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் திருப்பூர் நகராட்சி 6 வது இடத்தையும், திருநெல்வேலி நகராட்சி 10 வது இடத்தையும் பெற்றுள்ளன.

ஏப்ரல் 2021 ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் மட்டும்,மக்கள் பிரிதிநித்துவ சட்டம் 1951 (Representation of the People Act, 1951) பிரிவு 29A இன் படி, புதிய கட்சியை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

கூ.தக. : புதிய கட்சியை பதிவு செய்ய கட்சியின் பெயர், மாநிலம், கட்சியின் நோக்கம், உறுப்பினர்கள், பிரிவுகள், நிர்வாகிகள் தேர்வு நடைமுறை உள்ளிட்ட முழுமையான விவரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் ரூ.10,000-க்கான வரைவோலையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

கட்சி தொடர்பான அறிவிப்பை 2 தேசிய நாளிதழ்கள், 2 உள்ளூர் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். புதிய கட்சி தொடர்பான ஆட்சேபங்களை 30 நாட்களுக்குள் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். இதன்பிறகு தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

பூடான், நேபாள எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, சஷஸ்திர சீமா பல் (Sashastra Seema Bal) படைப் பிரிவில் 13,000 வீரா்களுடன் புதிதாக 12 குழுக்களை நியமிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கூ.தக. : எஸ்எஸ்பி (SSB- Sashastra Seema Bal)அமைப்பின் தற்போதைய தலைமை இயக்குநா் - குமாா் ராஜேஷ் சந்திரா

‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021 ( Maritime India Summit 2021)-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி, 2-3-2021 அன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோவிட் தடுப்பூசி பயனர்கள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைப் டவுண்லோடு செய்வதற்கு வாதியாக இந்திய அரசின் "ஆரோக்யா சேது" ( ‘Aarogya Setu’) மற்றும் கோ-வின் (Co-WIN) போர்ட்டல் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன .

வெளிநாட்டு உறவுகள்

இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சரக்குப் பெட்டக முனையத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே துறைமுகத்தில் மற்றொரு முனையத்தை மேம்படுத்தும் திட்டத்தை இலங்கை அரசு கடந்த மாதம் ரத்து செய்த நிலையில், இந்த புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட 10 லட்சம் தடுப்பூசிகளை கென்யா நாட்டிற்கு இந்திய அரசினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

”எக்ஸ் டிசர்ட் ஃபிளாக் IV" (EX Desert FLAG VI) என்ற பெயரில் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் விமானப்படையின் மூலம் 21-27 மார்ச் 2021 அன்று நடத்தப்படும் பன்னாட்டு விமானப்படை ஒத்திகையில் இந்திய விமானப்படை பங்கேற்கவுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்புத் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 3-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது . இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 2021 -ல் கையெழுத்தானது.

இந்தியா- ஃபிஜி இடையே வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 3-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் விளையும் "சிவப்பு அரிசி" (‘red rice’) -யின் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான் முதல் சரக்கு ஏற்றுமதி 4-3-2021 அன்று தொடங்கியது. இரும்புச்சத்து நிறைந்த "சிவப்பு அரிசி", அசாமின் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் எந்த இரசாயன உரத்தையும் பயன்படுத்தாமல் வளர்க்கப்படுகிறது. இந்த அரிசி வகை "பாவோ-தான்" (Bao-dhaan) என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியா - நார்வே நாடுகளின் ஒத்துழைப்பில், கடல் இடம் சார்ந்த திட்டமிடுதலுக்கு (Marine Spatial Planning) உகந்த இடங்களாக லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும் வெள்ளை மாளிகை ராணுவ ஆலோசனை அலுவலகத்தின் இயக்குநராகவும் இந்திய-அமெரிக்கரான மஜு வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் உள்ள பாம்பெய் நகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் பழமையான தேர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொட்டலங்களை பயன்படுத்தி மிகப்பெரிய அமீரக தேசியக் கொடி வடிவமைக்கப்பட்ட தற்காக துபாய் இஸ்லாமிய விவகாரத்துறைக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம்

மகள் பெயரில் வீடு வாங்கி யிருந்தாலும் மூலதன ஆதாயத் துக்கான வரி விலக்கு பெற முடியும் என வரி தீர்ப்பு மேல் முறையீட்டு ஆணையம்   உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு நடத்தியது. இந்த ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.77,814 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன. இதில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ஏலத்தில் முன்னிலை நிறுவனமாக உள்ளது. ஏர்டெல் ரூ.18,699 கோடிக்கும், வோடபோன் 1,993.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த ஏலத்தில் 5ஜிஅலைக்கற்றைகள் ஏலத்தில்இடம்பெறும் என எதிர்பார்த்தநிலையில் 4ஜி அலைக்கற்றைகள் மட்டுமே இடம்பெற்றன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.5 சதவீதமாகவே வைத்திருக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.

விருதுகள்

வருடாந்திர சர்வதேச எரிசக்தி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது (CERAWeek Global Energy and Environment Leadership Award) வழங்கப்பட உள்ளது. 1-5 மார்ச் 2021 வரை நடைபெறும் செராவீக் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை 5-3-2021 அன்று சிறப்புரையாற்றுகிறார்.

செராவீக் பற்றி:

டாக்டர் டேனியல் யெர்கின் என்பவரால் 1983-ம் ஆண்டு செராவீக் நிறுவப்பட்டது. அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஹூஸ்டனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, உலகின் முன்னணி வருடாந்திர எரிசக்தி தளமாக கருதப்படுகிறது.

விருது குறித்து:

செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது 2016-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சர்வதேச எரிசக்தியின் வருங்காலம் மற்றும் சூழலியலுக்கான தலைமைத்துவ உறுதியையும், எரிசக்திக்கான அணுகல், குறைந்த விலையில் கிடைக்க செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தீர்வுகள் மற்றும் கொள்கைகள் வழங்குதலையும் இது அங்கீகரிக்கிறது.

நியமனங்கள்

’ஊடக தகவல் அமைப்பின்’ (Press Information Bureau(PIB)) முதன்மை இயக்குநர் ஜெனரலாக (Principal Director General) ஜெய்தீப் பட்நகர் ( Jaideep Bhatnagar) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் (National Safety Day) - மார்ச் 4

உலக செவித்திறன் தினம் (World Hearing Day) - மார்ச் 3

கூ.தக: உலக செவித்திறன் வாரம் 2021 (World Hearing Week) 24-2-2021 முதல் 3-3-2021 வரையில் அனுசரிக்கப்பட்டது.

உலக வன விலங்குகள் தினம் (World Wildlife Day) - மார்ச் 3

விளையாட்டுகள்

இரண்டாவது கேலோ இந்தியா குளிர்காலப் போட்டிகள் 2021 (Khelo India Winter Games) ல் பதக்கப்பட்டியலில் 11 தங்க, 18 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று ஜம்மு காஷ்மீர் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Announcement !
உரையாடலில் சேர் (1)
1 கருத்து உள்ளது
  1. Profile
    பெயரில்லா
    Said: How can I get daily curent affairs in englinsh?
    How can I get daily curent affairs in englinsh?
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!