நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 5-8 April 2021

 TNPSC Current Affairs 5-8 ஏப்ரல் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞இந்தியாவில் முதல்முறையாக சூரிய ஒளியில் இயங்கும் சோலார் கோழிக்குஞ்சு பொரிப்பான் இயந்திரத்தை ((சோலார் இன்குபேட்டர்) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.  இந்த இன்குபேட்டர் மின்சார சக்தியில் இயங்கும். ஒரே நேரத்தில் 100 முட்டைகளை அடைகாக்க முடியும். அதில் சராசரியாக 80 சதவீத கோழிக்குஞ்சுகளானது ஆரோக்கியமாக வெளிவரும்.

☞காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் எஸ். மாதேஸ்வரன்  நியமிக்கப்பட்டுள்ளார். 
☞தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கூ.தக. : சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த வழக்குகளை விசாரிக்க, தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வு உருவாக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சென்னை, கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் தீா்ப்பாயத்தின் மண்டல அமா்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. 
☞தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
☞நடந்து முடிந்த 16வது சட்டமன்ற தேர்தலில்,  தமிழகம் முழுவதும் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.  அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள  பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதம் பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகியுள்ளது.
☞மாரப்ப கவுண்டர் : 1952 முதல் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தவறாது வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளார் 105 வயதான கோவை, கருப்பராயன் பாளையத்தைச் சேர்ந்த மாரப்ப கவுண்டர்.

இந்தியா

☞’ஏ-வெப்’ என்னும்  தேர்தல் ஆராய்ச்சி இதழின் (A-WEB Journal of Elections)  முதல் பிரதியை தலைமை தேர்தல் ஆணையர்  திரு. சுனில் அரோரா 5-4-2021 அன்று  வெளியிட்டார். 

☞உயர் திறன் வாய்ந்த சூரிய சக்தி ஒளிமின்னழுத்த  மாட்யூல்களில் ஜிகாவாட் திறன் உற்பத்தியை அடைவதற்காக உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி மாட்யூல்களுக்கான தேசிய திட்டத்திற்கு ('National Programme on High Efficiency Solar PV Modules')  ரூ. 4,500 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் முன்மொழிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் 7-4-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

☞இந்தியாவில் நோய் கண்காணிப்புக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளத்தை (Integrated Health Information Platform (IHIP)) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் 5-4-2021 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம், மேம்பட்ட டிஜிட்டல் நோய் கண்காணிப்பு முறையை (Advanced Digital Disease Surveillance System) அமல்படுத்தியுள்ள  உலகின் முதல் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
☞“SUPACE” (Supreme Court Portal for Assistance in Court’s Efficiency) என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தின்  செயற்கை நுண்ணறிவு உதவியுடனான இணையதள சேவையை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அவர்கள் 6-4-2021 அன்று தொடங்கி வைத்தார். 
☞PM-KUSUM (Pradhan Mantri-Kisan Urja Suraksha evam Utthan Mahabhiyan) திட்டத்தின் கீழ் பண்ணை அடிப்படையிலான சூரிய மின் திட்டத்தை ஆணையிடும் முதல் மாநிலமாக ராஜஸ்தான் உருவாகியுள்ளது. 
கூ.தக. : 
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினால் (New and Renewable Energy (MNRE)) 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட PM-KUSUM திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் விவ்சாயத்தில் பெருமளவில் சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்குள் 25, 750 MW அளவிற்கு சூரிய ஆற்றல் திறனை விவசாயத்திற்கு பயன்படுத்தலாகும். 
☞2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள்  பட்டியலை போர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அதில், சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன்  3 ஆம் இடத்திலும், அவன்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர். கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5 ஆம் இடத்திலும் உள்ளனர்.
☞இந்தியாவில் தேசிய அளவில் சிறு சேமிப்பு திட்டத்தில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது. மொத்த சிறு சேமிப்பில்  மேற்கு வங்க மாநிலம் மட்டும் 15%  பங்களிக்கிறது.  2,3,4 மற்றும் 5 ஆம் இடங்களை முறையே உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் தமிழ்நாடு (5வது) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. 
☞மாநிலத்திலுள்ள அனைவருக்கும் சுகாதார காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள  ‘சிரஞ்சீவி சுகாதார காப்பீடு திட்டத்தின்’ ((Mukhyamantri Chiranjeevi Swasthya Bima Yojana))மூலம் மாநிலத்திலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும்  ரூ.5 இலட்சம் வரையிலான சுகாதார காப்பீடு வழங்கப்படவுள்ளது. 

வெளிநாட்டு உறவுகள்

☞இந்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகம், ஜப்பானின் கியோடோவில் உள்ள கியோடோ பல்கலைக்கழகத்தின் நீடித்த மனிதமண்டல ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை 7-4-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிர்தலுக்கான இந்த ஒப்பந்தம், இந்தியாவில் 2020 நவம்பர் 4 அன்றும், ஜப்பானில் 2020 நவம்பர் 11 அன்றும் கையெழுத்திடப்பட்டு தபால் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

☞26 நாடுகளில் உள்ள தேர்தல் மேலாண்மை அமைப்புகள் மற்றும் மூன்று சர்வதேச அமைப்புகளுக்காக சர்வதேச காணொலி தேர்தல் பார்வையாளர்கள் நிகழ்ச்சி 2021 (International Virtual Election Visitors Programme (IEVP) 2021 for Election Management Bodies (EMBs) /Organisations) -ஐ இந்திய தேர்தல் ஆணையம் 5-4-2021 அன்று நடத்தியது.
☞’சந்திர் ஆக்ரோசேனா 2021’ (SHANTIR OGROSHENA 2021) என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு இராணுவ ஒத்திகையை வங்காளதேச நாடு 4-12 ஏப்ரல் 2021 தினங்களில் பங்கபந்து சேனானிபாஸ் (Bangabandhu Senanibas) எனுமிடத்தில் நடத்துகிறது. இந்த ஒத்திகையில், இந்தியா, இலங்கை, பூட்டான் மற்றும் வங்காளதேச இராணுவங்கள் பங்கேற்கின்றன. வங்கதேச தந்தை என அழைக்கப்படும் சேக் முஜிபிர் ரஹ்மான் அவர்களின் 100வது பிறத்தநாள் கொண்டாட்டம் மற்றும் வங்கதேசம் விடுதலையின் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த இராணுவ ஒத்திகை நடத்தப்படுகிறது. 
 ☞பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக ஐக்கிய நாடுகளின் அறக்கட்டளை நிதிக்கு இந்தியா 500,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இதுவரை இந்த நிதிக்கு இந்தியா 1,050,000 அமெரிக்க டாலர்களை வழங்கி தனது பங்களிப்பை ஆற்றியுள்ளது.
☞இந்தியத் தயாரிப்பு கரோனா தடுப்பூசியான கோவேக்ஸினை பயன்படுத்த மெக்ஸிகோ அரசு அனுமதி அளித்துள்ளது.  கோவேக்ஸின் தடுப்பூசியானது ஹைதராபாத்தைச் சேர்ந்த  பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முழுமையான இந்தியத் தயாரிப்பாகும்.
☞ஐ.நா. பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரமளித்தல் UN Entity for Gender Equality and the Empowerment of Women)  நிறுவனத்திற்கு இந்தியா 300,000 அமெரிக்க டாலர் (ரூ.2 2.2 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளது.

உலகம்

☞ஸ்மார்ட்போன் தயாரிப்புத் துறையில் கடும் இழப்பு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, செல்லிடப்பேசி தயாரிப்பு பணியிலிருந்து முற்றிலும் விலகுவதாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் அறிவித்துள்ளது.

☞ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இங்கிலாந்து, சீனா, ரஷியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் அமெரிக்காவும் இணைந்து உள்ளது.  முன்னதாக, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்    ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்த நிலையில், தற்போதைய அதிபர் ஜோ பிடன் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
கூ.தக. : ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதார தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
☞கொசோவா (Kosovo) நாட்டின் அதிபராக விஜோசா ஓஸ்மானி சத்ரியு (Vjosa Osmani-Sadriu) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
கூ.தக. : கொசோவா நாட்டின் தலைநகர் - பிரிஸ்டினா (Pristina) , பிரதமர் - ஆல்பின்குர்டி (AlbinKurti) 
☞”E9 முன்னெடுப்பு” (E9 initiative) பற்றி ... :  யுனெஸ்கோ அமைப்பின், அனைவருக்கும் கல்வி எனும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக 1993-ல் புது தில்லியில் தொடங்கப்பட்ட  ’E9’ அமைப்பில் பிரேசில், வங்காளதேசம், சீனா, எகிப்து, இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், மெக்சிகோ மற்றும் நைஜீரியா ஆகிய 9 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 

☞ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2036 ஆம் ஆண்டுவரையில்  ஆட்சியில் தொடரும் வகையிலான அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்துள்ளனர்.  ரஷ்ய அரசியலமைப்பின் பிரிவு 81 ன் படி, ரஷ்யாவில் ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். அதே நபர் தொடர்ந்து இரண்டு முறைகளுக்கு மேல் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது. ஆனால்,  விளாடிமிர் புடின் 2012 ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், மீண்டும் 2018 இல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், தற்போதைய திருத்தச் சட்டத்தின் மூலம் 2036 வரையில் அப்பதவியில் தொடரவுள்ளார். 

பொருளாதாரம்

☞2021-22ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. 

☞உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது என  போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகளவில், பணக்காரர்களின் பட்டியலில், அமேசான் நிறுவர் ஜெப் பெசாஸ் முதலிடத்திலும், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இரண்டாமிடத்திலும், மூன்றாவது இடத்தில் எல்விஎம்எச் தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், நான்காவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்சும், ஐந்தாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கும் உள்ளனர்.
 இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி 50.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சர்வதேசப் பட்டியலில் 24ஆவது இடத்தில் இருக்கிறார்.பில்லியன் டாலருக்கு மேல் சொத்து படைத்த பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 140 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் அதிக பணக்காரர்களை  கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. 724 பில்லியனர்களைத் தன்வசம் வைத்துள்ள அமெரிக்கா பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு இரண்டாம் இடம். அங்கு மொத்தம் 698 பில்லியனர்கள் உள்ளனர். ஜெர்மனி நான்காம் இடத்திலும், ரஷியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

நியமனங்கள்

☞அடல் கண்டுபிடிப்பு திட்டத்திற்கான (Atal Innovation Mission (AIM)) திட்ட இயக்குநராக சிந்தன் வைஷ்ணவ் (Dr Chintan Vaishnav) நியமிக்கப்பட்டுள்ளார். 

கூ.தக. : நிதி ஆயோக்கின் திட்டமான  அடல் கண்டுபிடிப்பு திட்டமானது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், இந்தியாவில், புதுமை மற்றும் தொழில்முனைவு கலாச்சாரத்தை மேம்படுத்துவதாகும். 

☞உச்சநீதிமன்றத்தின்  48-ஆவது தலைமை நீதிபதியாக  என்.வி. ரமணா (Nuthalapati Venkata Ramana) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரியாவாா்.    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உள்பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்ற நீதிபதியான என்.வி.ரமணாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா். 
☞இந்திய சிறு தொழில்கள் மற்றும் மேம்பாட்டு வங்கியின் (Small Industries and Development Bank of India) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக எஸ்.ராமன் (S Raman)  நியமிக்கப்பட்டுள்ளார். 5,600MW  உற்பத்தி திறன் கொண்ட இந்த அணுமின் நிலையத்தை தென்கொரியாவைச் சேர்ந்த Korea Electric Power Corporation (KEPCO) உருவாக்கியுள்ளது. 

முக்கிய தினங்கள்

☞உலக சுகாதார தினம் (World Health Day) - ஏப்ரல் 7 | மையக்கருத்து 2021 - ஒரு சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குதல் (Building a Fairer, Healthier World)

☞சர்வதேச வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம்  (International Day of Sport for Development and Peace ) - ஏப்ரல் 6 

☞தேசிய கடல்சார் தினம் (National Maritime Day) - ஏப்ரல் 5 
☞சர்வதேச மனசாட்சி தினம் (International Day of Conscience) - ஏப்ரல் 5 
☞உலக காப்புபிரதி தினம் (World Backup Day) - மார்ச் 31 (டிஜிட்டல் ஆவணங்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அனுசரிக்கப்படுகிறது.) 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

☞செவ்வாயில் தரையிறங்கியது ‘இன்ஜெனுயிட்டி’ ஹெலிகாப்டர் (Ingenuity Helicopter) : செவ்வாய்க் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தரையிறங்கியது. இந்நிலையில் அந்த விண்கலத்தோடு பொறுத் தப்பட்டிருந்த ‘இன்ஜெனுயிட்டி’ என்ற சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி யுள்ளதாக  நாசா அறிவித்துள்ளது. 

விளையாட்டு

☞பாகிஸ்தான், சாத் ஆகிய நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களை இடைநீக்கம் செய்து சா்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா நடவடிக்கை எடுத்துள்ளது.

☞இந்திய கிரிக்கெட்டின் முதல் பெண் வர்ணனையாளர் சந்திரா நாயுடு காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே. நாயுடு. அவருடைய மகளான சந்திரா நாயுடு கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றியுள்ளார்.
☞அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி மீண்டும் சாம்பியன் ஆனார்.

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!