நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 14-15 April 2021 in Tamil

 நடப்பு நிகழ்வுகள் 14-15 ஏப்ரல் 2021 

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ தமிழகத்தில் 14-4-2021  முதல் 16-4-2021  வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இதனைப் பயன்படுத்தி,  45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

சென்னை, வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 92-ல் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

☞ அரசு நலத் திட்டங்களின் பயனர்கள்  அஞ்சல் நிலையங்களில்  அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கை தொடங்கலாம் என  அஞ்சல் துறை அறிவித்துள்ளது. 

☞ ”ஃபோஷன் கியான்” (Poshan Gyan) என்ற பெயரில்   ஊட்டச்சத்துத் துறையில் பணிபுரிவோருக்கான  அனைத்து தகவல்களுமடங்கிய ஒருங்கிணைந்த இணையதள  சேவையை நிதி அயோக் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் இணைந்து தொடங்கியுள்ளன.  
☞ ’பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) ) எனும்   சாலை இணைப்புகளற்ற அனைத்து கிராமங்களிலும் அனைத்து பருவங்களையும் தாங்கக்கூடிய சாலைகளை அபைப்பதற்கான திட்டத்தை 2020-2021 ஆம் நிதியாண்டில் சிறப்பாக நிறைவேற்றிய   மாவட்டங்களின் பட்டியலில்   ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  உதம்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 
கூ.தக. :  ’பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா’ (Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) )  25-12-2000 அன்று தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்திற்கான செலவினமானது , மத்திய - மாநில அரசுகளால் 60 : 40 என்ற வீதத்தில் (வடகிழக்கு மாநிலங்களில் 90:10) செலவிடப்படுகிறது.  
☞ தங்கத்திலானா கலைப்பொருட்கள் மற்றும் நகைகளுக்கு கட்டாயமாக ஹால்மார்க் (Hallmarking) சான்று பெறும் நடைமுறை 1-6-2021 அன்று முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஹால்மார்க் சான்றிதளை  இந்திய தர வாரியம் (Bureau of Indian Standards) வழங்கும். 
☞ ’ஹைட்ரஜன் பொருளாதாராம் - இந்திய பேச்சுவார்த்தை 2021’ (“Hydrogen Economy- the Indian Dialogue-2021”) என்ற பெயரில் , வளர்ந்துவரும் ஹைட்ரஜன் சார்ந்த ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதற்கான  இணையவழி கூடுகையை   ‘தி எனர்ஜி ஃபாரம்’  (The Energy Forum (TEF)) இந்திய பெட்ரோலிய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு (Federation of Indian Petroleum Industry (FIPI)) மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இணைந்து 15-4-2021 அன்று நடத்தின. 
☞ ”e-SANTA” (Electronic Solution for Augmenting NaCSA farmers' Trade in Aquaculture) என்ற பெயரில்  மீன்வளர்ப்பு விவசாயிகளையும் வாடிக்கையாளர்களையும் இணைப்பதற்கான ஒரு இணையதள சந்தையை   மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்  பியூஷ் கோயல் 13-4-2021 அன்று  தொடங்கியுள்ளார். 
☞ ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.   ரஷியாவிலுள்ள கமலேயா நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியின் செயல்திறன் 91.6 சதவீதம் ஆகும். 
 ஸ்புட்னிக்-வி  பற்றிய இதர தகவல்கள் ...
சேமிப்பு வெப்பநிலை-- மைனஸ் 18 டிகிரி செல்சியஸ்
தடுப்பூசியின் அளவு-- 0.5 மி.லி.
செலுத்தப்படும் காலம்-- 21 நாள் இடைவெளியில் 2 முறை
தடுப்பூசிக்கான வயது வரம்பு-- 18 வயதுக்கு மேற்பட்டோா்
தடுப்பூசியின் விலை-- சுமாா் ரூ.750 (ஒரு தவணை)
☞ அகில இந்திய காங்கிரஸ் கட்சி 'ஐஎன்சி டிவி' (INC TV) என்றப்  பெயரில்  யூடியூப் சேனல் ஒன்றினைத் தொடங்கியுள்ளது. 
☞ கரோனா சிகிச்சைக்குத் தேவையான ‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
☞ “ரைசினா பேச்சுவார்த்தை-2021”  (Raisina Dialogue-2021)  : இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தி அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படும்   ரைசினா பேச்சுவார்த்தையின் ஆறாவது பதிப்பு, 2021 ஏப்ரல் 13 முதல் 16 வரை காணொலி மூலம் நடைபெறுகிறது.   ருவாண்டா அதிபர்  பால் ககாமே மற்றும் டென்மார்க் பிரதமர்  மெட்டே பிரடெரிக்சென் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்ற  இந்த நிகழ்வு "வைரல் உலகம்: தொற்று பரவல், தனித்து நிற்றல் மற்றும் கட்டுப்பாட்டை விட்டு விலகுதல்"  ("#ViralWorld: Outbreaks, Outliers and Out of Control”) என்ற கருப்பொருளில் நடைபெற்றது . 
வெளிநாட்டு உறவுகள் 

☞ இந்திய கடற்படை கப்பலான ‘ஐ.என்.எஸ்.ரான்விஜய்’  நல்லெண்ண அடிப்படையில் 3 நாள் பயணமாக 14-4-2021 அன்று இலங்கை சென்றுள்ளது.இந்த கப்பல், நீர்மூழ்கி கப்பல்களை தகர்க்கவல்லது. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது.

உலகம்

☞ ஈக்குவடார் (Ecuador)  நாட்டின் அதிபராக குல்லெர்மோ லாஸ்ஸோ ( Guillermo Lasso )  என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

☞ ஜப்பானில் விபத்துக்குள்ளான ஃபுகுஷிமா அணு உலையின் கதிா்வீச்சு நீரை சுத்திகரித்து கடலில் கடலில் கலக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

☞ ஜோர்டான் முடியரசின் 100-வது ஆண்டு விழா 13-4-2021 அன்று கொண்டாடப்பட்டதையொட்டி  அந்நாட்டின் அரசர் மேதகு 2ம் அப்துல்லாவிற்கு   பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

பொருளாதாரம் 

☞ விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கான மாதிரி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

☞ 2020-21-ஆம் நிதியாண்டில் மறைமுக வரி (ஜிஎஸ்டி மற்றும் இதரவரிகள்) வசூல் 12.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மறைமுக வரி வசூல் ரூ.9.54 லட்சம் கோடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து, 2020-21-ஆம் நிதியாண்டில் திருத்தப்பட்ட மறு மதிப்பீட்டின்படி, நிகர மறைமுக வரி ரூ. 10.71 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகமாகும்.

நியமனங்கள் 

☞ இந்தியாவின் 24 வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா 13-4-2021 அன்று பொறுப்பேற்றார். 

முக்கிய தினங்கள் 

☞ மாநில திருநங்கையர் தினம்  - ஏப்ரல் 15  (15-4-2008 அன்று, இந்தியாவில் முதல் மாநிலமாக,  திருநங்கையினருக்கான நலவாரியம் தமிழக அரசினால் தொடங்கப்பட்ட தினத்தின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.) 

☞ சர்வதேச தெருவோரக் குழந்தைகள் தினம் (International Day for Street Children)  - ஏப்ரல் 12 

☞ தேசிய தீயணைப்பு சேவைகள் தினம் (National Fire Service Day)   - ஏப்ரல் 14 

☞ அம்பேத்கர் பிறந்த தினம் - ஏப்ரல்  14 

☞ உலக டால்பின் தினம் (National Dolphin Day)   - ஏப்ரல் 14 

தகவல் தொழில்நுட்பம் 

☞ ‘ராஷித்’ என்ற  பெயரில் ஐக்கிய அரபு எமிரேட்டில்,   நிலவில் ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டுள்ள  ரோவர் வாகனனம்  2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

☞ ’Narrow-Line Seyfert 1 (NLS1) galaxy’ என்ற பெயரில் புதிய பால்வெளித் திரளை, உத்திரகாண்டின் நைனிடாலில் அமைந்துள்ள   ஆரியபட்டா அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் (Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES)) விஞ்சானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!