TNPSC Current Affairs 16-20 April 2021

TNPSCPortal.In
0

TNPSC Current Affairs 16- 20 ஏப்ரல் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்றத்தில், மத்திய அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராவதற்காக உதவி சொலிசிட்டா் ஜெனரலாக ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விவேக் (59), மாரடைப்பு காரணமாக 17-4-2021 அன்று காலமானார் . 1961-ம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்த நடிகர் விவேக், 1987-ம் ஆண்டில் பாலச்சந்தர் இயக்கத்தில் 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் விவேக் அறிமுகமானார். 1986-92 வரை தலைமைச் செயலக ஊழியராகவும் பணியாற்றினார்.

தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையுடன் சேர்ந்து சமூகக் கருத்துக்களையும் தொடர்ந்து பேசிவந்தவர். அதனால் 'சின்ன கலைவாணர்' என்ற பெயரையும் அவர் பெற்றார்.

நான்தான் பாலா, வெள்ளைப்பூக்கள் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றிருந்தார்.

‘பிங்க் வாட்ஸ்ஆப்’ (Pink watsup ) என்ற பெயரில் புதிய வைரஸ் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

☞ சமூக நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக ‘இன்டராக்டிவ் ஃபோரம் ஆன் இந்தியன் எகானமி’ அமைப்பு சாா்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு ‘சேம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ விருது வழங்கப்பட்டது.

இந்தியா

தேசிய காலநிலை பாதிப்பு அறிக்கையை ( National Climate Vulnerability Report) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி, ஜார்க்கண்ட் மிக உயர்ந்த பாதிப்புக்குள்ளான குறியீட்டை 0.67 பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மிகக் குறைவான பாதிப்புக் குறியீட்டை 0.42 பெற்றது. இதன் பொருள் ஜார்க்கண்ட் காலநிலை மாற்றத்திற்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது மற்றும் மகாராஷ்டிரா குறைந்தது பாதிக்கப்படக்கூடியது.

மிக உயர்ந்த பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் முதல் ஐந்து இடங்களை முறையே ஜார்க்கண்ட் , மிஷோராம், ஒடிஷா, சட்டிஸ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகியவைப் பெற்றுள்ளன.

தமிழ்நாடு 25 வது இடத்தைப் பெற்றுள்ளது (காலநிலை மாற்றத்திற்கு குறைவாகப் பாதிக்கப்படக்கூடியது) .

‘உள்ளடக்கிய இணைய குறியீடு 2021’ (‘Inclusive Internet Index 2021’ ) ல் , 120 நாடுகளில் இந்தியா 49 வது இடத்தைப் பெற்றுள்ளது . (49 வது இடத்தை இந்தியாவுடன், தாய்லாந்தும் பகிர்ந்து கொண்டுள்ளன.) பேஸ்புக் நிறுவனம் மற்றும் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘Economic Intelligence Unit’ அமைப்பு வெளியிட்டுள்ள, இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் நாடுகள் பெற்றுள்ளன.

இந்த பட்டியலின் படி, குறைந்த செலவில் இணையசேவை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 20 வது இடத்தைப் பெற்றுள்ளது.

கூ.தக. : இந்த அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 687.6 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர். இந்தியாவில் இணைய பயனர்களின் எண்ணிக்கை 2025 க்குள் ஒரு பில்லியனை எட்டும்.

பாரத் பயோடெக்கிலிருந்து (Bharat Biotech) , ‘கோவாக்சின்’ (COVAXIN) எனப்படும், கோவிட்-19 தடுப்பூசித் தொழில்நுட்பத்தை மும்பையைச் சேர்ந்த ஹாஃப்கைன் நிறுவனத்திற்கு (Hafkine Institute) பகிர்ந்துகொள்ள இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கூ.தக. கொரோனா நோய்க்கெதிராக 81% செயலாற்றும் திறன் கொண்டதும், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதுமான கோவாக்ஸின் (COVAXIN) தடுப்பூசியானது 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படுகிறது.

“மானாஸ் மொபைல் செயலி” (MANAS (Mental Health and Normalcy Augmentation System) App) என்ற பெயரில், இந்தியாவில் மனநலத்தை மேம்படுத்துவதற்கான செயலியை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் K.விஜய்ராகவன் (K. VijayRaghavan) வெளியிட்டுள்ளார். இந்த செயலியின் மூலமாக, மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தொலைதொடர்பு ஆலோசனையை (tele consultation) பொதுமக்கள் பெறமுடியும்.

"ஹைட்ரஜன் பொருளாதாரம் - புது தில்லி பேச்சுவார்த்தை 2021” (‘The Hydrogen Economy-New Delhi Dialogue 2021’ ) 15 ஏப்ரல் 2021 தினங்களில் மெய்நிகர் வாயிலாக நடைபெற்றது.

’ஹென்லே பாஸ்போர்ட் குறியீடு 2021’ ( Henley Passport Index 2021) -ல் இந்தியா 84 வது இடத்தைப் பெற்றுள்ளது . இந்த பட்டியலில் முதலிடத்தை ஜப்பான் நாடும், இரண்டாமிடத்தை சிங்கப்பூர் நாடும் மூன்றாம் இடத்தை ஜெர்மனி மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்தும் பெற்றுள்ளன.

கரோனா சிகிச்சையின்போது அளிப்பதற்காக 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மாதந்தோறும் இலவசமாக விநியோகிக்கவுள்ளது.

1 மே 2021 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது . கடந்த 16 ஜனவரி 2021 தேதி முதல் இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவை இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1 மார்ச் 2021 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் 8 மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி அமலாகியுள்ளது . இதன்படி, கீழ்கண்ட மருத்துவ பொருட்கள், மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒழுங்குப்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுப்படி,கீழ்க்கண்ட பொருட்களை இறக்குமதி/உற்பத்தி செய்ய, இறக்குமதியாளர்கள்/ உற்பத்தியாளர்கள் இறக்குமதி/உற்பத்திக்கான உரிமத்தை மத்திய உரிமம் ஆணையம் அல்லது மாநில உரிமம் ஆணையத்திடம் இருந்து 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் பெற வேண்டும்.

உடலில் பொருத்தக்கூடிய அனைத்து மருத்துவ சாதனங்கள் (All Implantable Medical Devices)

சி.டி ஸ்கேன் கருவி (CT scan equipment)

எம்ஆர்ஐ கருவி (MRI equipment)

டெஃபிபிரிலேட்டர்கள் (Defibrillators)

பிஇடி சாதனம் (PET Equipment)

டையாலிசிஸ் இயந்திரம் (Dialysis Machine)

எக்ஸ்-ரே இயந்திரம் மற்றும் (X-Ray Machine)

எலும்பு மஜ்ஜை செல்-ஐ பிரிக்கும் கருவி (Bone marrow cell separator)

ரயில் நிலையத்திலும், ரயிலில் பயணிக்கும்போதும் முகக் கவசம் அணியாமல் இருப்பது ரயில்வே சட்டத்தின் கீழ் குற்றமாக சோ்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 500 வரை அபராதம் விதிக்க முடியும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ரயில்வே எடுத்துள்ளது.இந்த நடைமுறை இப்போது ரயில்வே சட்டம் 2012-இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் துப்புபவா்கள் மற்றும் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) பயனாளா்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து 40 சதவீதத்தை ஓய்வூதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது . இதன் மூலமாக பயனாளா்களுக்கு இனி முழு ஓய்வூதியப் பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

இதன்படி, ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்கள், பணி ஓய்வு பெறும்போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்வதற்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது. இதுவரை ரூ.2 லட்சம் வரை சேமிப்புத் தொகை கொண்ட பயனாளா்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

அசோக் லேலண்ட் நிறுவனம் லாக்கீட் மாா்ட்டினுடன் இணைந்து தயாரித்த குண்டு துளைக்காத இலகு ரக வாகனம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் லாக்கீட் மாா்டின் ‘சிவிஎன்ஜி’ வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

வெளிநாட்டு உறவுகள்

இத்தாலி நாடு, இந்தியாவில், தனது முதலாவது மெகா உணவு பூங்கா திட்டத்தை (mega food park project) குஜராத் மாநிலத்தின் மெக்சனா மாவட்டத்திலுள்ள ஃபானிதார் (Fanidhar) எனுமிடத்தில் அமைத்துள்ளது.

‘கடல்சார் சுற்றுச்சூழலில் நெகிழி பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நகரங்கள்' என்ற தலைப்பில் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மனி நாட்டின் சுற்றுச்சூழல் இயற்கை மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை 19-4-2021 அன்று கையெழுத்திட்டுள்ளன.

நெகிழிப் பொருட்கள் கடல்சார் சுற்றுச்சூழலில் கலப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் தேசிய அளவில், உத்தரப் பிரதேசம், கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், கான்பூர், கொச்சின், போர்ட் பிளேயர் ஆகிய நகரங்களிலும் மூன்றரை ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.

மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் 15-4-2021 அன்று கையெழுத்தானது. அதன்படி, இந்திய விண்வெளி வீரா்களுக்கு பிரான்ஸில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பில் பணிபுரிபவா்களும் பிரான்ஸில் பயிற்சி பெறவுள்ளனா். திட்டம் தொடா்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், விண்வெளி வீரா்களுக்கான உணவு உள்ளிட்டவற்றைத் தயாா் செய்வதில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை கவுரவிக்கும் வகையிலான தீர்மானம் ஒன்றை இந்திய வம்சாவளி எம்.பி. ரோ கன்னா தாக்கல் செய்துள்ளார்.

வங்கிகளில் 14 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

முதல் முறையாக ‘ஐக்கிய நாடுகளவையின் உணவு முறைமை உச்சிமாநாடு 2021’ (United Nations Food Systems Summit 2021 ) செப்டம்பர் 2021ல் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (National Aeronautics and Space Administration (NASA)) அடுத்த தலைவராக பில் நெல்சன் (Bill Nelson) என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பரிந்துரைத்துள்ளார்.

இஸ்ரேலில் பெரும்பாலானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, அந்த நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து வருவது இனி கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார் . ராவுல் காஸ்ட்ரோவின் இந்த அறிவிப்பால் கியூபாவில் 60 ஆண்டுகாலம் ஆட்சியில் இந்த காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. 1959ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து சர்வாதிகாரி பாடிஸ்டுடாவின் ஆட்சி அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிடல் காஸ்ட்ரோ கியூப அதிபரானார். கடந்த 2006ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்ட ராவுல் கேஸ்ட்ரோ 2008ல் முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 2011ம் ஆண்டு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ஏழைநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக நியூசிலாந்து அரசு ஏழைநாடுகளில் 8 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

பொருளாதாரம்

நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் 22.58 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, முந்தைய 2019-2020-ஆம் நிதியாண்டில் இறக்குமதியான 2,823 கோடி டாலா் (ரூ.2 லட்சம் கோடி) தங்கத்துடன் ஒப்பிடுகையில் 22.58 சதவீதம் அதிகமாகும்.

கூ.தக. : ஆபரணங்களுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதையடுத்து நம் நாட்டில் ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்யப்படுகிறது.

மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரியை 12.5 சதவீதத்திலிருந்து குறைத்து 10 சதவீதமாக (7.5 சதவீதம் சுங்கவரி + 2.5 சதவீதம் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி) நிா்ணயித்துள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த சிட்டிபேங்க் இந்தியாவில் நுகா்வோா் வங்கிச் சேவையிலிருந்து வெளியேறவுள்ளதாக 14-4-2021 அன்று அறிவித்துள்ளது.

விருதுகள்

’GD பிர்லா அறிவியல் ஆராய்ச்சிக்கான விருது’ (GD Birla Award for Scientific Research) ஐ.ஐ.டி. காரக்பூர் பேராசிரியர் சுமன் சக்ரவர்த்திக்கு (Suman Chakraborty) அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் (Small Industries Development Bank of India (SIDBI)) தலைவராக சிவசுப்ரமணியன் ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

உலக கல்லீரல் தினம் (World Liver Day) - ஏப்ரல் 19

உலகப் பாரம்பரிய தினம் (World Heritage Day) - ஏப்ரல் 18

உலக ஹீமோஃபிலியா தினம் (World Hemophilia Day) - ஏப்ரல் 17

உலக கலை தினம் (World Art Day) - ஏப்ரல் 15

அறிவியல் & தொழில்நுட்பம்

’லூனா 25” ( Luna 25 ) என்ற பெயரில் அக்டோபர் 2021 ல் நிலவிற்கு செயற்கைக் கோள் அனுப்பும் திட்டத்தை ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் (Roscosmos) அறிவித்துள்ளது.

மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை சார்ந்து தானியங்கி துணை ஆக்சிஜன் விநியோக முறை யை (SpO2 based Supplemental Oxygen Delivery System) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation (DRDO)) பெங்களூருவில் அமைந்துள்ள ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ளது. இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும். தற்போதைய கொவிட்-19 காலக்கட்டத்தில் இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்புமுறை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் செவ்வாய் கிரகத்தில் இன்ஜினிட்டி (Ingenuity) ஹெலிகாப்டர் வெற்றிகரமாக பறக்கவிடப்பட்டு உள்ளது . இந்த ஹெலிகாப்டர், ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் இயங்குவதை விட அதிக வேகமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த இன்ஜினிட்டி (Ingenuity) என்ற பெயருடைய இந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.

நாசாவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து 3வது முறையாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பவுள்ளது.

விளையாட்டுகள்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா 86 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

உஸ்பெகிஸ்தான் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டா் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 25.11 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா்

மான்டி காா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் ஆனாா்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா ஸ்னாட்ச் பிரிவில் 69 கிலோ, கிளீன் அன்ட் ஜொ்க் பிரிவில் 88 கிலோ என மொத்தமாக 157 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றாா்.

கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் (மகளிா் 53 கிலோ எடைப் பிரிவில்), அன்ஷு மாலிக் (மகளிா் 57 கிலோ எடைப் பிரிவில்) ஆகியோா் தங்கம் வென்றனா்.

கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தொடா்ந்து 2-ஆவது முறையாக தங்கம் வென்றுள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“Believe — What Life and Cricket Taught Me” என்ற பெயரில் தனது சுயசரிதையை இந்தியி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா எழுதியுள்ளார்.

‘The Christmas Pig’ என்ற புதிய, குழந்தைகளுக்கான நாவலை ஹாரிபாட்டர் புகழ் நாவலாசிரியர் J.K. ரவுலிங் (J.K. Rowling) வெளியிடவுள்ளார்.

“Being Gandhi” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - பாரோ ஆனந்த் (Paro Anand)

Post a Comment

0 Comments

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top