நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs 30-31 March 2021

TNPSC Current Affairs 30-31 மார்ச் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

’ஆபரேசன் திருவள்ளூர்’ (“Operation Thiruvallur”) என்ற பெயரிலான, இந்திய இராணுவத்தின் நடவடிக்கையின் மூலம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளில் பல ஆண்டுகளாக கவனக்குறைவாக சேகரிக்கப்பட்டிருந்த 10 டன் வெடிக்காத போர்தளவாடங்கள் ( unexploded ordnance) பாதுகாப்பாக அகற்றப்பட்டது.

சிலப்பதிகார ஆராய்ச்சியாளர் புலவர் நா. தியாகராசனார் காலமானார் . மயிலாடுதுறை மாவட்டம் மேலப்பெரும்பள்ளம் என்னும் சிற்றூரில் பிறந்த இவர், தம் வாழ்நாள் முழுவதையும் பூம்புகார்ப் பற்றிய வரலாற்று, தொல்லியல் ஆய்வுகளுக்கே அர்ப்பணித்தார். 1959 –ஆம் ஆண்டும் ’மாதவி மன்றம்’ என்ற ஒன்றினைத் தொடங்கி அதன் வாயிலாக, சதாசிவ பண்டாரத்தாரை ஆசிரியராகக் கொண்டு ‘காவிரிப் பூம்பட்டினம்’ என்னும் நூலை வெளியிட்டார். மேலும், ‘பூம்புகார்ப் பண்பாட்டு மையம்’ என்ற ஒன்றினையும் தொடங்கி நடத்தி வந்தார். சிலப்பதிகாரத்தைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்ட பெருமைக்குரியவர். இதனால் இவர் ‘சிலம்புத் தென்றல்’ என்ற பட்டம்பெற்றுப் போற்றப்பட்டார். பூம்புகார்த் தமிழ்ச்சங்கச் செயலாளராகவும் இருந்து வந்தவர். ’பூம்புகாரில் வரலாற்று எச்சங்கள்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்காக சென்றவர்களில் மாநிலவாரியாக தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. அந்த வகையில் நாட்டிலெயே அதிகமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற மாநிலத்தவர்களாக கேரளவாசிகள் முதல் இடத்தையும், தமிழர்கள் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.3வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் உள்ளது. ஜனவரி 2016 மற்றும் மார்ச் 18, 2021ம் ஆண்டுகளுக்கிடையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து 1.3 கோடி பேர் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றிருப்பதாகவும், இதில் கேரளத்தவர் 19 லட்சம் பேர் என்றும், தமிழர்கள் 13.1 லட்சம் பேர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா

தில்லி தேசிய தலைநகர் பிரதேச (திருத்தம்) மசோதா, 2021 (National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021) க்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 28-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டத்தின் படி, தில்லி சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள ‘அரசு’ என்ற சொல் லெப்டினன்ட் கவர்னரை ( குறிக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் எல்லைக்கு வெளியே வரும் விஷயங்களில் விதிகளை உருவாக்க எல்ஜிக்கு இது அதிகாரம் அளிக்கிறது.

தென்னிந்தியாவின் முதல், முழுமையாக செயல்படும் இணையான ஓடுபாதைகளைக் கொண்ட விமான நிலையமாக பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (Kempegowda International Airport) உருவாகியுள்ளது.

சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2021 ( Mines and Minerals (Development and Regulation) Amendment Bill, 2021)விற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் அவர்கள் 28-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 -ன் மீது திருத்தங்களை மேற்கொள்ளும் இந்த சட்டத்திருத்தமானது, இந்தியாவில் சுரங்கத் துறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திருத்தமானது, மாவட்ட கனிம அறக்கட்டளையால் பராமரிக்கப்படும் நிதிகளின் அமைப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான வழிமுறைகளை வெளியிடுவதற்கு இது மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

புதிய சர்வதேச காட்டிலாகா அதிகாரி விருது (New International Ranger Award) உத்தரக்காண்டின் ராஜாஜி புலிகள் காப்பகத்தில் (Rajaji Tiger Reserve) பணியாற்றும் காட்டிலாகா அதிகாரி மகிந்திர கிரி ( Mahindra Giri) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பிற்கான ஒன்றியம் (International Union for Conservation of Nature (IUCN)) மற்றும் உலக பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான குழு (World Commission on Protected Areas (WCPA)) ஆகியவை இணைந்து இந்த விருதை வழங்கியுள்ளன.

கூ.தக. : 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சர்வதேச இயற்கைப் பாதுகாப்பிற்கான ஒன்றியத்தின் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டின் கிளாண்ட் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக , இரண்டு பசுமை திறன் நகரங்களைக் கொண்டுள்ள மாநிலம் எனும்பெருமையை பீகார் பெற்றுள்ளது. அம்மாநிலத்தின் ராஜ்கிர் (Rajgir) மற்றும் போத்கயா (BodhGaya) ஆகிய இரண்டு நகரங்களும் பசுமை திறன் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நகரங்களை நடத்துவதற்குத் தேவையான பசுமை எரிசக்தி விநியோகத்தை இந்திய சூரிய ஆற்றல் கழகம் (Solar Energy Corporation of India (SECI)) தயாரித்து வழங்கும்.

கூ.தக. : புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்திய சூரிய சக்தி நிறுவனத்தின் ( Solar Energy Corporation of India (SECI)) தற்போதைய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக ஜதிந்திர நாத் ஸ்வைன் (Jatindra Nath Swain) உள்ளார்.

“ஆனந்தம் : மகிழ்ச்சி மையம்” ( Ā nandam: The Center for Happiness) எனும் மையத்தை ஜம்முவிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் மத்திய அரசு அமைத்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட இராணுவ பண்ணைகளை (Military Farms) இந்திய இராணுவம் அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது . இந்த இராணுவ பண்ணைகள் பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் பல்வேறு படைகளில் கட்டப்பட்ட துருப்புக்களுக்கு சுகாதாரமான பசுவின் பால் வழங்குவதற்கான ஒரே தேவையுடன் அமைக்கப்பட்டன. முதல் இராணுவ பண்ணை 1889 ஆம் ஆண்டில் அலகாபாத்தில் வளர்க்கப்பட்டது.

' உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு' (Production Linked Incentive Scheme for Food Processing Industry) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 31-3-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய இயற்கை வளங்களுக்கு ஏற்ற சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பொருட்களை ஆதரிப்பதற்கும் ரூ 10,900 கோடி மதிப்பிலான இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட, குறைந்தபட்ச விற்பனையுடன் கூடிய உணவு தயாரிப்பு நிறுவனங்களை ஆதரித்து, அவற்றின் திறனை அதிகரிப்பதற்காக குறைந்தபட்ச மற்றும் குறிப்பிட்ட முதலீட்டை செய்தல், வலிமை மிகுந்த இந்திய வணிகப்பெயர்களை உருவாக்குவதற்காக வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களை பிரபலப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரெயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது என இந்திய இரயில்வே அறிவித்துள்ளது. மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளில் இயங்கும் மொத்த வாகனங்களில் 4 கோடி வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் 70 லட்சம் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 கோடி பழைய வாகனங்களில் 2 கோடிக்கும் அதிகமானவை 20 ஆண்டுகளுக்கு மேலானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

“டோனரே” ( Tonnerre) மற்றும் “சுர்கோஃப்” (Surcouf) என்ற பெயரிலான இரண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் கொச்சிக்கு 30-31 மார்ச் 2021 தினங்களில் நல்லெண்ணப்பயணமாக வந்தடைந்துள்ளன.

’வஜ்ரா பிரகார் 2021’ (VAJRA PRAHAR 2021) என்ற பெயரில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான 11 வது கூட்டு சிறப்பு படைகளின் ஒத்திகை ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள பாக்லோக் (Bakloh) எனுமிடத்தில் மார்ச் 2021 ல் நடைபெற்றது.

இந்தியா-மொரீஷியஸ் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் (India-Mauritius Comprehensive Economic Cooperation and Partnership Agreemen) 1 ஏப்ரல் 2021 முதல் நடைமுறைக்கு வருகிறது . 22 பிப்ரவரி 2021 அன்று செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தமானது, ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாட்டோடு இந்தியா கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும்.

2021-ம் ஆண்டுக்கான ஆசியாவின் இதயம் அமைச்சர்கள் மாநாடு (Ministerial Conference of Heart of Asia) தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் (Dushanbe) 30-3-2021 அன்று நடைபெற்றது. இந்தியாவின் சார்பாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் கலந்துகொண்டார்.

கூ.தக. : உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் சமாதான முன்னெடுப்புகளை எடுப்பதில் பிராந்திய நாடுகளிடம் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக கடந்த 2011 ஆண்டு நவம்பர் மாதம் துருக்கியில் ‘‘ஆசியாவின் இதயம்’’ என்ற பெயரில் ஆசிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே முதல் மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

சர்வதேச நிகழ்வுகள்

அமெரிக்காவின் சுகாதரத்துறையின் உயர் பதவியான ‘சர்ஜன் ஜெனரல்’ (Surgeon General) பதவிக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விவேக் மூர்த்தி (Vivek Murthy) நியமிக்கப்பட்டுள்ளார்.

’ஆம்னஸ்டி இண்டர்நேசனல்’ ( Amnesty International ) அமைப்பின் பொது செயலராக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆக்னஸ் காலமார்ட் ( Agnes Callamard) நியமிக்கப்பட்டுள்ளார்.

கூ.தக. : 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் தலைமையிடம் லண்டன் நகரில் அமைந்துள்ளது.

“எக்கோ” ( Echo) மற்றும் “பிஃப்ரோஸ்ட்” (Bifrost) என்ற பெயரில் இரண்டு கடலுக்கடியிலான கம்பிவட இணைப்பின் மூலம் சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வட அமெரிக்காவை இணைக்கும் திட்டத்தை ஃபேஷ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தவுள்ளன. ஆசிய மற்றும் அமெரிக்க கண்டங்களில் இணையதள சேவையை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியதாக உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவர்கிவ்வன் (Ever Given) சரக்கு கப்பல் : சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் 23-3-2021 அன்று சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு வார கடும் முயற்சிகளுக்குப் பிறகு கப்பல் 29-3-2021 அன்று மீண்டும் மிதக்கத் தொடங்கியது.

பொருளாதாரம்

உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி மசோதா, 2021 (National Bank for Financing Infrastructure and Development (NaBFID) Bill, 2021) -ற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அவர்கள் 28-3-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டத்தின் படி, இந்தியாவில் உள்கட்டமைப்பு நிதியுதவிக்கான முதன்மை அபிவிருத்தி நிதி நிறுவனமாக நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (National Bank for Financing Infrastructure and Development (NBFID) ) எனும் அமைப்பு , ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்படும். இந்த நிறுவனத்தின் 100% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கும், பின்னர் அது 26% வரை குறைக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் 2021-22 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரிவடையும் என ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் கணித்துள்ளது.

நியமனங்கள்

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக (Principal Scientific Advisor) பதவி வகிக்கும் K. விஜய்ராகவன் (K. VijayRaghavan) அவர்களின் பதவிக்காலம் மேலும் ஒராண்டுகளுக்கு (ஏப்ரல் 2022 வரையில்) நீட்டிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

புவி மணிநேரம் (Earth Hour) 2021 - மார்ச் 27 (மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்ப்பட்டது. | மையக்கருத்து - "பூமியைக் காப்பாற்ற காலநிலை மாற்றம்" (“Climate Change to Save Earth”)

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“Name Place Animal Things” எனும் புத்தகத்தின் ஆசிரியர் - தரிபா லிண்டெம் ( Daribha Lyndem) 

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!