நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 21-26 April 2021

TNPSC Current Affairs 21-26 ஏப்ரல் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு அவசர உதவிக்கு 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மேற்படி கட்டுப்பாட்டு அறைக்கு 044 - 24321438, 044 - 24321408 ஆகிய அவசர உதவி எண்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

இந்தியா

உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2021 (World Press Freedom Index 2021) - ல் இந்தியா 142 வது இடத்தைப் பெற்றுள்ளது. Reporters Without Borders எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே நார்வே, ஃபின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் பெற்றுள்ளன.

உலக ஆற்றல் மாற்ற அட்டவணை 2021 (Global Energy Transition Index 2021) ல் இந்தியா 87 வது இடத்தைப் பெற்றுள்ளது . உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஸ்வீடன், நார்வே மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.

கூ.தக. : 2020 ஆம் ஆண்டில் இந்தியா இப்பட்டியலில் 74 வது இடத்தைப் பெற்றிருந்தது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 1.6 இலட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் அம்மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சுவாமித்வா திட்டத்தின் (SWAMITVA -Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) கீழ் சொத்து விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் (e-property cards) விநியோகத்தை பிரதமர் மோடி அவர்கள் அன்று தொடங்கி வைத்தார்.

சுவாமித்வா திட்டம் குறித்து:

கிராமங்களின் ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் எனும் சுவாமித்வா திட்டம், சமூக பொருளாதார அளவில் அதிகாரமளிக்கப்பட்ட, தற்சார்பு மிக்க கிராமப்புற இந்தியாவை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது.

கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல் கட்டமாக , மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.

பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund (PM CARES Fund) ) என்ற அறக்கட்டளை நிதியின் கீழ் நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்க கொள்கை ரீதியிலான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : பி.எம்.கேர்ஸ் நிதி ((PM CARES Fund)) தொடங்கப்பட்ட தினம் - 27 மார்ச் 2020

☞கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகா் ராஜன் மிஸ்ரா(70) 25-4-2021 அன்று தில்லியில் காலமானாா்.

உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம்.சந்தானகவுடர் நுரையீரல் தொற்று காரணமாக 25-4-2021 அன்று காலமானார் . அவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஆக்சிஜனுக்கான கலால் வரியை ரத்து செய்வதாக பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி விலையை பாரத் பயோடெக் நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுக்கு ஒருடோஸ் கோவாக்சின் தடுப்பூசி 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு ஒருடோஸ் கோவாக்சின் தடுப்பூசி 1,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே மத்திய அரசுக்கு ஒருடோஸ் கோவாக்சின் தடுப்பூசி விலை 150 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசிற்கு அதே 150 ரூபாய் விலையிலேயே தடுப்பூசி தொடர்ந்து விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் மே 1-ம் தேதி முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருகிறது . 2 டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் உள்ளூர் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. தமிழுக்கான மொழிபெயர்ப்பு இடம் பெறவில்லை.

கூ.தக. : தேசிய கல்விக் கொள்கை என்பது 1968-ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

1986, 1992-ம் ஆண்டுகளில் கல்விக் கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2016-ல் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் சில திருத்தங்கள் செய்து தாக்கல் செய்தது. இதற்கிடையே 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்து. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதுவே தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மயூர் ஷெல்கே : மகாராஷ்டிர மாநிலத்தில் வாங்கனி ரயில் நிலையத்தில் 17-4-2021 அன்று பார்வையற்ற தனது தாயுடன் நடந்து வந்து கொண்டிருந்த 6 வயதுச் சிறுவன் திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தபோது, மயூர் ஷெல்கே என்னும் ரயில்வே ஊழியர் தனது உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார்.

நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு மே, ஜூன் 2021 மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யூரியா உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கு மானியம் வழங்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பத்தில் யூரியாவை தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை நாட்டிலேயே முதல் முறையாக தால்சோ் உர உற்பத்தி நிறுவனம் பயன்படுத்த உள்ளது. அந்நிறுவனத்துக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

உயா்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமாா் 57 லட்சம் வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காண ஓய்வுபெற்ற நீதிபதிகளை தற்காலிக முறையில் நியமிக்க ஏதுவாக புதிய வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது .

இதன் மூலம் மிகவும் அரிதான வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 224-ஏ பிரிவைப் பயன்படுத்தி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமனம் செய்ய வழிவகுக்கிறது.

ஒருங்கிணைந்த கட்டண தளத்தின்(Unified Payment Interface(UPI)) மூலமாக ஒரு மில்லியன் பணப்பரிமாற்றங்கள் எனும் இலக்கை எட்டிய முதல் நிறுவனம் எனும் பெருமையை பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஃபோன்ஃபே’ (PhonePe) நிறுவனம் பெற்றுள்ளது.

இந்திய வங்கி சீர்திருத்தங்களின் தந்தை (Father of Indian Banking reforms) என அழைக்கப்படும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்வர் எம்.நரசிம்மம் (Maidavolu Narasimham) 20-4-2021 அன்று ஹைதராபாத்தில் காலமானார்.

உலகின் 10-ஆவது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பிரியங்கா மோஹிதே . இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியப் பெண் அவர்.இமய மலைத் தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ள சிகரம் அன்னபூர்ணா. இது 8,091 மீட்டர் உயரம் கொண்டது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது அளிக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து மீதான இறக்குமதி வரிக்கு மத்திய அரசு விலக்களித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுநலன் கருதி மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிகழாண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று ' தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

உலக நகரங்கள் கலாச்சார மன்றத்தில் (World Cities Cultural Forum) 2021 இல் இந்தியாவின் சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார். லண்டன், டோக்கியோ மற்றும் நியூயார்க் உள்ளிட்ட 40 உலக நகரங்களை உள்ளடக்கிய இந்த மன்றத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான கூடுகையை லண்டன் மாநகரம் நடத்தவுள்ளது.

☞நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட ’இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின்’ (OPCW) (Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW)) அயல் கணக்கு தணிக்கையாளராக (External Auditor) இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்(Comptroller and Auditor General (CAG)) கிரிஸ் சந்த்ர முர்மு (Girish Chandra Murmu) நியமிக்கப்பட்டுள்ளார்.

☞சிங்கப்பூரில் உள்ள ’சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (Singapore Indian Chamber of Commerce and Industry (SICCI) )’ தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய தொழில்நிறுவனங்களை உருவாக்குதலை ஊக்குவிப்பதற்கான ’ ஸ்டார்ட்-அப் மையத்தை’ (Start-up Incubation and Innovation Centre ) ஐ.ஐ.டி-கான்பூரின் அமைப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் வர்த்தகத் தீர்வுகளின் தலைமை இயக்ககம் Director General of Trade Remedies), வங்கதேசத்தின் வர்த்தகம் மற்றும் கட்டண வீத ஆணையம் (Bangladesh Trade & Tariff Commission) ஆகியவற்றுக்கு இடையே கடந்த 27-3-2021 -ஆம் தேதி டாக்காவில் கையெழுத்தான வர்த்தகத் தீர்வு நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்னேற்பு ஒப்புதல் 20-4-2021 அன்று வழங்கப்பட்டது.

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்திற்கும் (Institute of Chartered Accountants of India (ICAI)), ஆஸ்திரேலயா மற்றும் நியூசிலாந்து பட்டாய கணக்காளர்கள் நிறுவனத்திற்கும் (Chartered Accountants Australia and New Zealand (CA ANZ)) இடையேயான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 20-4-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய போட்டி ஆணையத்திற்கும்(Competition Commission of India (CCI)), பிரேசில் பொருளாதார பாதுகாப்புக்கான நிர்வாக கவுன்சிலுக்கும் (Administrative Council for Economic Defense of Brazil (CADE)) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 20-4-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கூ.தக. :

இந்திய போட்டி ஆணையம், தனது கடமைகளையும், பணிகளையும் செய்வதற்காக, எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்ய போட்டி சட்டம், 2002-ன் 18வது பிரிவு அனுமதிக்கிறது. அதன்படி, இந்திய போட்டி ஆணையம் கீழ்கண்ட ஆறு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது:

1. கூட்டு வர்த்தக ஆணையம் மற்றும் நீதித்துறை (அமெரிக்கா) (Federal Trade Commission (FTC) and Department of Justice (DOJ), USA)

2. போட்டி தலைமை இயக்குனர், ஐரோப்பிய ஒன்றியம்(Director General Competition, European Union)

3. கூட்டாட்சி ஏகபோகத்துக்கு எதிரான சேவை, ரஷ்யா (Federal Antimonopoly Service, Russia)

4. ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (Australian Competition and Consumer Commission)

5. போட்டி அலுவலகம், கனடா (Competition Bureau, Canada)

6. பிரிக்ஸ் போட்டி ஆணையங்கள் (BRICS Competition Authorities)

5வது உலக காசநோய் தடுப்பூசி மன்றத்தின் (5th Global Forum on TB Vaccine,) கூடுகையில் 20-4-2021 அன்று காணொளி வழியாக கலந்து கொண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்த்தன் அவர்கள் உரையாற்றினார்.

“வருணா - 2021” (Exercise ‘VARUNA-2021’) என்ற பெயரில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் கடற்படைகளின் 19வது கூட்டு ஒத்திகை 25-27 ஏப்ரல் 2021 தினங்களில் அரபிக்கடல் பகுதியில் நடைபெறுகிறது.

இந்தியாவில் கரோனா சிகிச்சையின்போது அளிப்பதற்காக சவூதி அரேபியாவில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .அதானி குழுமம், லிண்டே நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் மற்றும் கன்டெய்னர்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்ய ராணுவ மருத்துவ சேவைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. பிற இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையிலான 23, ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு ராணுவ மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும்.ஒவ்வொரு கருவியும், நிமிடத்துக்கு 40 லிட்டர், ஒரு மணிக்கு 2,400 லிட்டர்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் படைத்தவை. இவற்றின் மூலம் 20 முதல் 25 நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் ஆக்ஸிஜன் கொடுக்க முடியும்.

‘ஆக்சிஜன் மைத்ரி’ : இந்தியாவில் கரோனா சிகிச்சையின்போது நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையை பூா்த்தி செய்வதற்கு ‘ஆக்சிஜன் மைத்ரி’ என்ற திட்டத்தின் கீழ் ஆக்சிஜன் டேங்கா்கள், ஆக்சிஜன் சிலிண்டா்களை பெறுவதற்காக பல்வேறு நாடுகளை மத்திய அரசு அணுகியுள்ளது.

☞1914-ஆம் ஆண்டு முதல் 1918 வரை நடைபெற்ற முதல் உலகப்போரில் வீர மரணமடைந்த 50,000-க்கும் அதிகமான இந்திய வீரா்கள் இனப் பாகுபாடு காரணமாக இதுவரை நினைவுகூரப்படாததற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் மன்னிப்பு கோரினாா்.

கூ.தக. முதல் உலகப்போரின் போது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த, இப்போதைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இந்தியாவிலிருந்து 14 லட்சம் வீரா்கள் போருக்கு அனுப்பப்பட்டனா். இதில் 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் போரில் வீரமரணமடைந்தனா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 40 நாடுகள் பங்கேற்ற 2 நாள் சா்வதேச பருவநிலை குறித்த உச்சி மாநாடு 22-23 ஏப்ரல் 2021 தினங்களில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 2030 ஆம் ஆண்டுக்கு நமது ஒட்டுமொத்த வேகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலக தலைவர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, 2030-க்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தயாரிக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார் . "எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்!" என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளையும் பிரதமர் மோடி அவர்கள் தனது உரையின்போது பயன்படுத்தினார்.

கூ.தக. : ‘பருவநிலை மாற்றம்’ பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொண்டன.

நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் 22-4-2021 அன்று வழங்கப்பட்டன.

’காஞ்சர்’ (‘Khanjar’ ) என்ற பெயரில் இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளின் கூட்டு இராணுவ ஒத்திகை கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் 16-4-2021 அன்று தொடங்கி இரண்டு வாரங்கள் நடைபெறுகிறது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக 4 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன .பிரான்ஸின் மெரிக்னேக்-போா்டியாக்ஸ் விமானப் படைத் தளத்தில் 21-4-2021 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு 5 நாள் பயணமாக சென்றுள்ள இந்திய விமானப் படை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா பங்கேற்று விமானங்களை கொடியசைத்து இந்தியா அனுப்பிவைத்தாா்.

கூ.தக. : பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போா் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 14 ரஃபேல் போா் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் 4 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐ.நா. சமூக, பொருளாதார கவுன்சிலின் 3 முக்கிய அமைப்புகளில் உறுப்பினராக இந்தியா தோ்வாகியுள்ளது.

இந்த கவுன்சிலின் ஒரு பிரிவான குற்றவியல் நீதி மற்றும் குற்றத் தடுப்புக்கான ஆணையத்தின் (Commission on Crime Prevention and Criminal Justice (CCPCJ)) உறுப்பினராக இந்தியா தோ்வாகியுள்ளது. ஆஸ்திரியா, பஹ்ரைன், பெலாரஸ், பல்கேரியா, கனடா, பிரான்ஸ், கானா, லிபியா, பாகிஸ்தான், கத்தாா், தாய்லாந்து, டோகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவதாக, ஐ.நா.வின் பாலின சமத்துவம் - பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடா்பான ஆணையத்தின் (Executive Board of the UN Entity for Gender Equality and Empowerment of Women (UN Women))உறுப்பினராகவும் இந்தியா தோ்வாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கேமரூன், கொலம்பியா, டோமினிக் குடியரசு, எகிப்து, காம்பியா, கயானா, கென்யா, மொனாக்கோ, போலந்து, தென்ஆப்பிரிக்கா, தாய்லாந்து, துா்க்மேனிஸ்தான், உக்ரைன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மூன்றாவதாக, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட வாரியத்தின் (Executive Board of the World Food Programme (WFP)) உறுப்பினராகவும் இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், கானா, தென்கொரியா, ரஷியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 3 அமைப்புகளிலும் வரும் ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி 3 ஆண்டுகளுக்கு உறுப்பினராக இந்தியா அங்கம் வகிக்கும்.

சர்வதேச நிகழ்வுகள்

பிராந்திய ஒட்டுமொத்த பொருளாதார கூட்டமைப்பின் ( Regional Comprehensive Economic Partnership (RCEP)) திறந்த வர்த்தக ஒப்பந்தத்தை ( Free Trade Agreement) நடைமுறைப்படுத்துவற்கு முதல் நாடாக சிங்கப்பூர் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 50 முதல் 52 சதவீதம் வரை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை 55 சதவீதம் குறைக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

அமெரிக்காவின் இணை அட்டா்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் 53 பேருடன் சென்ற அந்நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் பாலி தீவு அருகே ஜாவா கடலில் மாயமான நிலையில் , மாயமான தங்களது நீா்மூழ்கிக் கப்பல் நொறுங்கிய நிலையில் கண்டறியப்பட்டதாகவும் அதிலிருந்த 53 பேரும் உயிரிழந்ததாகவும் இந்தோனேசிய ராணுவம் அறிவித்துள்ளது.

☞அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோ்ந்த ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவினை குற்றவாளி என அறிவித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

தென் கொரியாவின் புதிய பிரதமராக கிம் பூ-கியும் (Kim Boo-kyum) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி வால்டர் மண்டேல் (வயது 93) மரணம் அடைந்தார் . இவர் ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதியாக இருந்தபோது (1977-81) துணை ஜனாதிபதியாக இருந்தார்.

கியூபாவில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கு அதிபர் மிகுவல் தியாஸ் கேனல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அங்கு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைப்பதவிக்கு பிடல் காஸ்டிரோ குடும்பத்தினர் அல்லாத ஒருவர் வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசி 90 சதவீதம் தொற்றை தடுக்கக்கூடியது என்றும், மேலும் மருந்தை உடலில் செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை இறப்பு பதிவு செய்யப்படவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி, உடலில் அதிக நாட்கள் ஒட்டிக்கொள்வதன் மூலம் சிறந்த எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் அந்த தடுப்பூசியானது 90 சதவீதம் நோய் தொற்றை தடுப்பதில் அதிக ஆற்றல் உடையது.

நியமனங்கள்

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (National Anti Doping Agency(NADA)) இயக்குநர் ஜெனரலாக சித்தார்த் சிங் லாங்க்ஜம் (Siddharth Singh Longjam) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் சங்கத்தின் (National Association of Software and Services Companies(NASSCOM)) முதல் பெண் தலைவராக அக்சஞ்சர் இந்தியா (Accenture India) நிறுவனத்தைச் சேர்ந்த ரேகா மேனன் (Rekha Menon ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 48-ஆவது தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா 24-4-2021 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

முக்கிய தினங்கள்

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day) - ஏப்ரல் 23

ஐக்கிய நாடுகளவையின் ஆங்கில மற்றும் ஸ்பானிஸ் மொழிகளின் தினம் - ஏப்ரல் 23

உலக ஆய்வக விலங்குகள் தினம் (World Day for Laboratory Animals ) - ஏப்ரல் 24

உலக புவி தினம் (World Earth Day) - ஏப்ரல் 22

12 வது தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (National Panchayati Raj Day) - ஏப்ரல் 24

கூ.தக. : 24-4-1993 அன்று பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1992 (அரசியலமைப்பின் 73 வது திருத்தம்) அமல்படுத்தப்பட்ட தினத்தின் நினைவாக தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.

73 ஆவது திருத்தம் 1992, அரசியலமைப்பில் பகுதி IX (Part IX) என்ற ஒரு ஒரு புதிய பகுதியை "பஞ்சாயத்துகள்" என்ற தலைப்பில் உருவாக்கியது. சரத்துக்கள் 243 முதல் 243 (ஓ) வரை கொண்ட இந்த பகுதியானது பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளைக் குறித்த 29 பொருளடக்கங்களைக் கொண்டதாக உள்ளது.

உலக அறிவு சார் சொத்துரிமை தினம் (World Intellectual Property Day) - ஏப்ரல் 26

உலக தடுப்பூசி வாரம் 2021 (World Immunization Week 2021) - 24 - 30 ஏப்ரல் 2021 தினங்களில் ’தடுப்பூசி நம்மை நெருங்கிவரச் செய்கிறது’ (“Vaccines bring us closer”) எனும் மையக்கருத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம் (International Girls in ICT Day ) 2021 - ஏப்ரல் 23 ( ஏப்ரல் மாதம் நான்காவது வியாழக்கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது.)

ஐக்கிய நாடுகளவையின் சீன மொழி தினம் (UN Chinese Language Day) - ஏப்ரல் 20

பன்முகத்தன்மை மற்றும் சமாதானத்திற்கான இராஜதந்திரத்திற்கான சர்வதேச தினம் (International Day for Multilateralism and Diplomacy for Peace) - ஏப்ரல் 24

குடிமைப் பணிகள் தினம் (Civil Services Day) - ஏப்ரல் 21 (1947 இல் இந்த நாளில், அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் பேட்ச் இந்திய குடிமைப் பணி அதிகாரிகளுடன் உரையாற்றினார்)

உலக மலேரியா தினம் (World Malaria Day) - ஏப்ரல் 25 | மையக்கருத்து 2021 - பூஜ்ஜிய மலேரியா என்ற இலக்கை எட்டுதல் (Reaching the Zero Malaria target)

உலக படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு தினம் (World Creativity and Innovation Day) - ஏப்ரல் 21

அறிவியல் & தொழில்நுட்பம்

”#FOSS4GOV” (Free and Open-Source Software (FOSS) for Government) என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் எனப்படும் ‘திறந்த மூல மென்பொருள்களின்’ கண்டு பிடிப்பை ஊக்குவிப்பதற்கான போட்டியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்வு அமைச்சகம் அறிவித்துள்ளது.

☞சீ னாவின் முதலாவது செவ்வாய் கோளுக்கான ரோவருக்கு, அந்நாட்டின் பாரம்பரிய நெருப்பு கடவுளின் பெயரில், ‘சுரோங்’ (Zhurong) எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமாக நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் 3 நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

2025-ம் ஆண்டுக்குள் சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

கூ.தக. : தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதில் கைகோர்த்தன. மேற்கூறிய நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடா்பாக பிற நாடுகளுடன் ரஷியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டுடன் காலாவதியாகிறது. அதற்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல், தனி ஆய்வு நிலையம் அமைக்க ரஷியா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டா் எனும் பெருமையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு பொ்சிவரன்ஸ் விண்கலத்துடன் (Perseverance Rover) இணைத்து அனுப்பியுள்ள ‘இஞ்சினிட்டி’ (Ingenuity) ஹெலிகாப்டா் பெற்றுள்ளது.

விளையாட்டுகள்

இந்தியாவின் 68வது செஸ் கிராண்ட் மாஸ்டராக (Chess GrandMaster(GM)) தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ஜீன் கல்யாண் (18) உருவாகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் (Chennai Super Kings Cricket Limited) இயக்குநர் மற்றும் தலைவர் எல்.சபாரெத்னம் (L Sabaretnam) தனது 80 வது வயதில் 25-4-2021 அன்று காலமானார்.

ஜொ்மனியில் நடைபெற்ற போா்ஷ் கிராண்ட் ஃப்ரீ டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பா்ட்டி சாம்பியன் ஆனாா்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

“The Living Mountain” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - அமிதப் கோஷ்

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!