Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs in Tamil 1-2 April 2021

TNPSC Current Affairs 1-2 ஏப்ரல் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் 1-4-2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘உலக பாலின இடைவெளி குறியீடு 2021’ (Global Gender Gap Index) -ல் இந்தியா 140 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum ) வெளியிட்டுள்ள 156 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், முதல் ஐந்து இடங்களை முறையே ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

நான்காவது கட்டமாக பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் 31-3-2021 அன்று இந்தியா வந்தடைந்தன. இந்த 3 விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்த மூன்று விமானங்கள் மேற்குவங்காளத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இணைக்கப்படவுள்ளன.

கூ.தக. : நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், 1-4-2021 அன்று தொடங்கியது.

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்றம் நியமித்த சமரசக் குழு தனது அறிக்கையை மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்துள்ளது. இந்த குழுவில் வேளாண் பொருளாதார நிபுணர் பிரமோத் குமார் ஜோஷி, ஷேத்காரி சங்கடன தலைவா் அனில் கன்வாட், வேளாண் விளைபொருள்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாட்டி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். நான்காவது உறுப்பினரான பூபிந்தா் சிங் மான், தொடக்கத்திலேயே குழுவில் இருந்து விலகிக் கொண்டாா்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசியை சேமித்து வைக்கும் காலத்தை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து இந்திய மருந்துக் கட்டுப்பாடு ஆணையம் அனுமதித்துள்ளது.

முன்னதாக, கோவிஷீல்ட் தடுப்பூசியை இரண்டாம் தவணையாக செலுத்திக் கொள்ளும் இடைவெளியை முதல் தவணை செலுத்தியதிலிருந்து 4 முதல் 6 வாரங்கள் என்பதை 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க மாநில அரசுகளை மத்திய சுகாதாரத் துறை அண்மையில் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

' உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு' (Production Linked Incentive Scheme for Food Processing Industry) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 31-3-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய இயற்கை வளங்களுக்கு ஏற்ற சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பொருட்களை ஆதரிப்பதற்கும் ரூ 10,900 கோடி மதிப்பிலான இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலமாக உணவுப்பதப்படுத்துதல் திறன் ரூ 33,494 கோடியாக விரிவடையும்.

2026-27-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அகில இந்திய அளவில் திட்ட செயல்படுத்தும் முகமை ஒன்றின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

2026-27 வரையிலான ஆறு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழான ஊக்கத் தொகை வழங்கப்படும்.

வெளிநாட்டு உறவுகள்

”ஷந்திர் ஓக்ரோசேனா 2021” (SHANTIR OGROSHENA 2021 (Front Runner of the Peace) ) என்ற பெயரில் பன்னாட்டு கூட்டு இராணுவ ஒத்திகை வங்காளதேசத்தினால் 4-12 ஏப்ரல் 2021 தினங்களில் நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா, பூட்டான், இலங்கை மற்றும் வங்காளதேச நாடுகளின் இராணுவங்கள் கலந்துகொள்கின்றன.

நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் 1 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்கி உள்ளது.

இந்தியாவில் இருந்து மீண்டும் சா்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது . இதன்மூலம் இந்தியாவில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று சுமாா் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவை பாகிஸ்தான் கைவிட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

‘காா்னிவாக்-கோவ்’ (Carnivac-Cov Vaccine) என்ற பெயரில், உலகிலேயே முதல்முறையாக கரோனா தொற்றிலிருந்து மிருகங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான தடுப்பூசியை ரஷியா பதிவு செய்துள்ளது. அந்தத் தடுப்பூசியை விலங்குகளுக்குச் செலுத்தினால், 6 மாதங்களுக்கு கரோனாவிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

பொருளாதாரம்

☞ இந்தியாவில் உள்ள ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களின் முழு அளவிலான வணிக நடவடிக்கைகளுக்கும் கடன்களை வழங்குவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான வங்கியுடன் (Japan Bank for International Cooperation (JBIC)) 1 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் 31-3-2021 அன்று கையெழுத்திட்டுள்ளது.

நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாா் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

விருதுகள்

‘சரஸ்வதி சம்மன் விருது 2020’ (Saraswati Samman 2020) , மராத்திய எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே (Dr Sharankumar Limbale) என்பவருக்கு, அவர் எழுதிய ‘சனாதன்’ (“Sanatan”) என்ற நாவலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : சரஸ்வதி சம்மன் விருது 1991 ஆம் ஆண்டு முதல் KK பிர்லா பவுண்டேசன் (KK Birla Foundation) மூலம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளில் வெளியான மிகச்சிறந்த இலக்கியங்களுக்காக வழங்கப்பட்டுவருகிறது.

51வது தாதா சாகேப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த விருது முன்பு தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குநரும், தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குநர் ஆடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நியமனங்கள்

பொதுத் துறை நிறுவனங்கள் தோ்வு வாரியத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.தனியாா் துறையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் பிஇஎஸ்பி வாரியத்தின் தலைவராக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இவர் டாஃபே ( (TAFE - Tractors and Farm Equipment Limited) ) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிா்வாக இயக்குநராக உள்ளார்.

முக்கிய தினங்கள்

 சர்வதேச மாற்றுப்பாலினத்தவர்களுக்கான கவன தினம் (International Transgender Day of Visibility)

- மார்ச் 31

3 கருத்துகள்:

  1. Hiii I'm your registered aspirant can I get current affairs PDF in English... because I'm preparing for tnpsc group 4 (English medium)

    பதிலளிநீக்கு
  2. hi as if now, we do current affairs in tamil only ... regret for the inconvinience

    பதிலளிநீக்கு
  3. Vanakam. I couldn't find the options to download the Current Affairs (TAMIL). If there is any possible ways to download, kindly guide me for the same.

    பதிலளிநீக்கு

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.