நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs in Tamil 3-4 April 2021

TNPSC Current Affairs 3-4 ஏப்ரல் 2021

Click Here to Subscribe for Current Affairs PDF

(Registered Aspirants will get current affairs PDF files to your email ID)

தமிழ்நாடு

☞ ‘நீலக் கழுகு’ நடவடிக்கை : வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம், பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க ‘நீலக் கழுகு’ நடவடிக்கை என்ற பெயரில் விமான நிலைய, துறைமுக சரக்ககப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனைகளை சென்னை மண்டல சுங்க இலாகா நடத்தியது.

இந்தியா

‘அரியவகை நோய்க்கான தேசிய கொள்கை 2021’-க்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் 30-3-2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளாா். அரிய வகை நோய் சிகிச்சைக்கு ஆகும் செலவை குறைக்கும் நோக்கத்தோடு மட்டுமின்றி, அரியவகை நோய் குறித்த உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த தேசிய கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், இந்த கொள்கையில் குரூப்-1 இன் கீழ் பட்டியலிடப்பட்டிருக்கும் நோயால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ராஷ்டிரீய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்படும்.

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினா் மட்டுமின்றி, ‘பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜ்னா’ திட்டத்தின் கீழ் தகுதிபெறுபவா்களில் 40 சதவீதம் பேரும் இந்த மருத்துவ நிதியுதவித் திட்டத்தால் பயன்பெற முடியும்.

ரிசா்வ் வங்கியின் மிக மூத்த துணை ஆளுநா் பி.பி. கனுங்கோ ஓய்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் பணி ஓய்வைத் தொடா்ந்து, ரிசா்வ் வங்கியில் அண்மையில் நியமனம் செய்யப்பட்ட மகேஷ் குமாா் ஜெயின், மைக்கேல் பத்ரா, ராஜேஷ்வா் ராவ் ஆகிய மூவா் துணை ஆளுநா்களாக உள்ளனா்.

கோவேக்ஸின் தடுப்பூசியை இரண்டு தவணைகளுக்குப் பதிலாக மூன்று தவணைகள் செலுத்தி பரிசோதிப்பதற்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது.

கூ.தக. : கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துவருகிறது. தற்போது, அத்தடுப்பூசியானது 28 நாள்கள் இடைவெளியில் இரு தவணைகளாக மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

”ULPIN” என்பதன் விரிவாக்கம் - Unique Land Parcel Identification Number (தனித்துவமான நில அடையாள எண்), இது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிலத்திற்கும் வழங்கப்பட்டுள்ள 14 இலக்க தனிப்பட்ட அடையாள எண்ணாகும். ULPIN என்பது இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டத்தின் (Digital India Land Records Modernisation Programme (DILRMP)) ஒரு பகுதியாகும்.

கூ.தக. : 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Digital India Land Records Modernisation Programme (DILRMP) திட்டத்தின் முக்கிய நோக்கம் நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதல் மற்றும் மையப்படுத்தப்பட்ட நில பதிவு மேலாண்மை முறையை உருவாக்குதலாகும்.

இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அறிக்கையை (Women and Men in India report) தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office) வெளியிட்டுள்ளது . அவ்வறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு,

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் கணிக்கப்பட்ட மக்கள் தொகை - 136.13 கோடி.

பாலின விகிதம் 2001 ல் 933 ஆக இருந்தது 2011 ல் 943 ஆக உயர்ந்துள்ளது.

பாலின விகதம் அதிகரிப்பு வீதத்தில் தில்லி முதலிடத்தையும், சண்டிகார் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளன.

பாலின விகிதம் வீழ்ச்சியில் டாமன் மற்றும் டையு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 2014 இல் 39 ஆக இருந்தது, 2018 இல் 32 ஆக குறைந்துள்ளது.

தாய் இறப்பு விகிதம் (Maternal Mortality Rate) 2007-09ல் 212 ஆக இருந்தது, 2016-18ல் 113 ஆக குறைந்தது.

கிராமப்புற இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 2018 இல் 2.3 ஆக இருந்தது. இது 2018 இல் நகர்ப்புறங்களில் 1.7 ஆக இருந்தது.

1000 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு விகிதம் 2017 ல் 0.07 ஆக இருந்தது 2019 ல் 0.05 ஆக குறைந்துள்ளது

இந்தியாவின் கல்வியறிவு விகிதம் (literacy rate) 2011 ல் 73 ஆக இருந்து 2017 ல் 77.7 ஆக உயர்ந்துள்ளது.

கல்வியறிவு விகிதங்களில் பாலின இடைவெளி மிக அதிகமாகவுள்ள மாநிலங்களாக ராஜஸ்தான் , பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

15 வயதுடைய பெண்களில் 8.3% மட்டுமே பட்டப்படிப்பு முடித்திருக்கிறார்கள். மறுபுறம், அதே வயதுடைய ஆண்களில் 12.8% பேர் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்கள்.

8% பெண் மாணவர்கள் பத்தாம் வகுப்பு வரை கல்வியைத் தொடர்ந்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் ( floating solar power plant) தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் (Ramagundam) அமைக்கப்பட உள்ளது. 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் மே 2021 அன்று திறக்கப்படவுள்ளது.

பொருளாதாரம்

☞HSN/SAC Code (Harmonised System of Nomenclature Code/Service Accounting Code) : 5 கோடி ரூபாய்க்கு மேலான வர்த்தக நடவடிக்கைகளுக்கான விலைப்பட்டியலில் 6 இலக்க HSN/SAC (பெயரிடப்பட்ட குறியீடு / சேவை கணக்கியல் குறியீட்டின் ஒத்திசைவான அமைப்பு) எண் பெறுவதை ஏப்ரல் 1, 2021 முதல் மத்திய நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
☞டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில், 2020 ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளதாக ACI Worldwide மற்றும் GlobalData நிறுவனங்களின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
☞”NPCI Bharat BillPay Ltd” என்ற கிளை நிறுவனத்தை இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனம் (National Payments Corporation of India (NPCI)) 1-4-2021 அன்று தொடங்கியுள்ளது.
கூ.தக. : 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டதுமான இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனத்தின் தற்போதைய மேலாண் இயக்குநராக திலிப் ஆஸ்பே (Dilip Asbe) உள்ளார்.

நியமனங்கள்

அரசு தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் (Employees’ State Insurance Corporation (ESIC)) பொது இயக்குநராக முக்மீத் S பாட்டியா ( Mukhmeet S Bhatia ) நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

☞உலக ஆட்டிச நோய் விழிப்புணர்வு தினம் (World Autism Awareness Day) - ஏப்ரல் 2

அறிவியல் & தொழில்நுட்பம்

அதிநவீன ஆகாஷ் ஏவுகணைகளை, 96 சதவீத உள்நாட்டுப் பொருட்களுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்து உருவாக்கியுள்ளது. அதிகபட்சம் 20 கி.மீ. உயரத்தில் 25 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடிய திறன் பெற்றவையாக ஆகாஷ் ஏவுகணைகள் உள்ளன.ஐதராபாத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ், இந்திய ராணுவத்துக்கும், விமானப் படைக்கும் இந்த ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.

ஆகாஷ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய மந்திரிசபை அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான முயற்சிகளிலும் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுகள்

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருந்த இந்த போட்டிகள் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதன் எதிரொலியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சேலஞ்சா் போட்டியில் அமெரிக்காவின் டோட் ஹாரிட்டி சாம்பியன் பட்டம் வென்றாா்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

 

‘Agriculture in India: Contemporary Challenges – in the Context of Doubling Farmers Income’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மோகன் காண்டா(Mohan Kanda)
Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!