நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs 11-15 June 2021 in Tamil for TNPSC Exams

 TNPSC Current Affairs 11-15 ஜீன் 2021

தமிழ்நாடு

👉 முதல்வா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் செல்லும்போது பாதுகாப்புப் பணிக்கு பெண் காவலா்களைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

👉  தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.கே.எஸ்.விஜயன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

👉 தமிழகத்தில் தனியாா் மருத்துவமனைகள் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 10 சதவீதம் அளவுக்கு ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

👉 தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவுக்கு டிஐஜியாக எஸ்.லட்சுமி 10-6-2021 அன்று  நியமிக்கப்பட்டாா்.

👉 கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய பயன்படுத்திய கண்ணாடி மணிகள், தண்ணீர் குவளையின் முகப்பு பகுதி ஆகியவை கிடைத்திருக்கின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

👉 தமிழ் நாட்டில் நீட் தோ்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க தமிழ்நாடு அரசு நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமைல் அமைத்த  குழுவில் உறுப்பினா்களாக எட்டு போ் இப்போது நியமிக்கப்பட்டுள்னா்.  இதன்படி, குழுவின் உறுப்பினா்களாக டாக்டா் ஜி.ஆா்.ரவீந்திரநாத், டாக்டா் ஜவஹா் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா், சட்டத் துறைச் செயலாளா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலா், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநா் ஆகியோா் செயல்படுவா்.இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், உறுப்பினா் செயலாளராகவும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தோ்வுக் குழு செயலாளா் செயல்படுவாா்.

இந்தியா

👉  ‘டெல்டா-பிளஸ்’ வகை கரோனா தீநுண்மி :  இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாகப் பரவி வந்த டெல்டா (பி.1.617.2) வகை தீநுண்மி இப்போது டெல்டா-பிளஸ் (ஏஒய்.1) வகையாக உருமாற்றம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வகை தீநுண்மியிலிருந்து புதிய உருமாறிய வகை உருவாகியிருக்கிறது. அது கே417என் உருமாறிய டெல்டா-பிளஸ் தீநுண்மி பி.1.617.2.1 அல்லது ஏஒய்.1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சாா்ஸ்-கொவைட்2 ஸ்பைக் புரதத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த உருமாறிய தீநுண்மி, மனித உடலுக்குள் நுழைந்து திசுக்களை சேதப்படுத்துகின்றன.

👉 இந்தியாவிலுள்ள உள்ள 2.6 கோடி ஹெக்டோ் சீா்கேடு அடைந்த நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் 30 லட்சம் ஹெக்டோ் வனப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் ஒட்டுமொத்த பரப்பில் சுமாா் கால்பங்கானது வனப்பகுதிகளாக உருவாகியுள்ளது எனவும் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கூ.தக. :  பிரதமர் மோடி அவர்கள் தற்போது தலைவராக உள்ள ‘பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தின்  14-ஆவது மாநாட்டின் சிறப்புக் கூட்டத்தில் இந்த தகவலை பிரதமர் தெரிவித்துள்ளார்.

👉 ஆண்-பெண் சமத்துவத்தில் சத்தீஷ்கார் முதலிடம் : கடந்த  2020-2021 ஆம் நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் விவகாரங்களில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் ‘நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண்’ அறிக்கையை ஐ.நா.வுடன் இணைந்து  ‘நிதி ஆயோக்’ அமைப்பு தயாரித்துள்ளது.இதில், ஒட்டுமொத்த செயல்பாட்டில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஆண்-பெண் சமத்துவம் என்ற அம்சத்தில் சத்தீஷ்கார் மாநிலம் 61 புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.

👉 ’அனீமியா முக்த் பாரத் குறியீடு 2020-2021’ (Anemia Mukt Bharat Index 2020-21) ல் முதலிடத்தை மத்திய பிரதேச மாநிலம் பெற்றுள்ளது. இரண்டா மற்றும் மூன்றாம் இடங்களை முறையே  ஒடிஷா மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்கள் பெற்றுள்ளன.

கூ.தக. : அனீமியா நோய்க்கு எதிரான  ’அனீமியா முக்த் பாரத்’ திட்டத்தை 2018 ஆம் ஆண்டு மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐ.நா.குழந்தைகள் நிதியம் ஆகியவை இணைந்து தொடங்கின.

👉 இந்தியாவின் முதலாவது  ‘டிஜிட்டல் சுகாதார மையம்’ (Center for Digital Health) , ’கொய்டா டிஜிட்டல் சுகாதார மையத்தை’ (Koita Centre for Digital Health (KCDH)) என்ற பெயரில்    ஐ.ஐ.டி. மும்பை மற்றும் கொய்டா அறக்கட்டளை இணைந்து அமைத்துள்ளன.

 👉 உலக அளவில் அணு ஆயுதங்களுக்காக அதிக அளவில் செலவு செய்த நாடுகளின் பட்டியல் 2020 - ல் இந்தியா   6 வது இடத்தைப் பெற்றுள்ளது.  International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா நாடுகள் உள்ளன.

👉  உலக ஈகை குறியீடு 2021 (World Giving Index 2021) -ல் இந்தியா 14 வது இடத்தைப் பெற்றுள்ளது.  Charities Aid Foundation (CAF) எனும் அமைப்பு இந்த குறியீட்டை  வெளியிட்டுள்ளது.

👉 ’ஆபரேஷன் ஒலிவியா’ ( operation Olivia ) என்ற பெயரில், ஒடிஷாவில் காணப்படும்  ஒலிவ் ரிட்லே ஆமைகளை  பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய கடலோரக் காவல்படை மேற்கொண்டுள்ளது.

👉 ”நமஸ்தே யோகா மொபைல் செயலி” (‘Namaste Yoga’ Mobile App) : 7வது சர்வதேச யோகா தினத்தை (ஜீன் 21) முன்னிட்டு ”நமஸ்தே யோகா” என்ற பெயரிலான  மொபைல் செயலியை மத்திய அரசு 11-6-2021 அன்று வெளியிட்டுள்ளது.

👉 பாதுகாப்புத் துறையில் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.499 கோடி செலவிடுவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளாா்.

ராணுவத் தளவாட உற்பத்தியில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.35,000 கோடியில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது உள்பட ரூ.1.75 லட்சம் கோடிக்கு வா்த்தகம் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் சரக்கு போா் விமானங்கள், இலகு ரக போா் விமானங்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்பட 101 ஆயுதங்கள் மற்றும் போா்த் தளவாடங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என்று ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

👉 ஜம்முவுக்கு அருகிலுள்ள மஜீன் கிராமத்தில் 62.06 ஏக்கா் பரப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்கு  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

👉 உத்தரபிரதேசத்தில் ‘ஜல் ஜீவன்'திட்டத்தை செயல்படுத்த அம்மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.10,870 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

👉 நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் செலவினங்களை 20 சதவீதம் வரை குறைக்குமாறு துறைகள், அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் மத்திய அரசு இந்த வலியுறுத்தலை வழங்கியுள்ளது.

👉  ’கொரோனா மாதா’ என்ற பெயரில் சிலை உத்தரபிரதேச மாநிலம் சுல்லாப்பூர் கிராமத்தில் அக்கிராம மக்களால் அமைக்கப்பட்டுள்ளது.

கூ.தக. : ’கொரோனா தேவி’ சிலை காமாட்சிபுரி ஆதினம் சார்பில்  கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

👉 உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா் எம்.கே-3 இந்திய கடலோராக் காவல் படையில் 12-6-2021 அன்று  சோ்க்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்பு இந்தியா எனும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ்  இந்த நவீன ஹெலிகாப்டா்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

👉 2022 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 1,50,000 துணை சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் கிராமப்புறங்களில் 1,55,404 துணை சுகாதார மையங்கள், 24,918 ஆரம்ப சுகாதார மையங்களும், நகா்ப்புறங்களில் 5,895 ஆரம்ப சுகாதார மையங்களும் உள்ளன.

துணை சுகாதார மையங்களில் 14 நோய் கண்டறிதல் பரிசோதனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 63 நோய் கண்டறிதல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. துணை சுகாதார மையங்களில் 105 அத்தியாவசிய மருந்துகள், ஆரம்ப சுகாதார மையங்களில் 172 அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

👉 2019-20ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கை ( All India Survey on Higher Education 2019-20 (AISHE 2019-20)) யின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இந்தக் காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2 சதவீதம் அதிகரித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர முக்கிய குறியீடுகள் விவரம் வருமாறு,

2014-15 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio(GER))  24.3 சதவீதமாக இருந்ததாகவும், 2019-20ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயர் கல்வியில் பாலின சரிசமநிலை குறியீடு (Gender Parity Index  (GPI))  1.01 என்பதாக உள்ளது. இதுவே 2018-19ல் 1.00 ஆக  இருந்தது.

உயர் கல்வியில் ஆசிரியர் - மாணவர்  விகதம் (Pupil Teacher Ratio (PTR))  - 26  மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

உயர்க்கல்வி நிறுவனங்களின் அடர்த்தி (Institution Density)   - 30

கூ.தக. : 

ஒட்டுமொத்த  உயர்கல்வி சேர்க்கையில்  49% பெண்கள்.

அதிக எண்ணிக்கையில் உயர்க்கல்வியில் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தை  உத்தரப்பிரதேச மாநிலமும், இரண்டாம் மகாராஷ்டிரமும் , மூன்றாம் இடத்தை தமிழ்நாடும் பெற்றுள்ளன.

👉 உயர்கல்வி சேர்க்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும் (Gross Enrollment Ratio)  மொத்த சேர்க்கை விகிதத்தில் (ஜி.இ.ஆர்) 51.4 சதவீதத்துடன் இந்திய அளவில் மிகப் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தன் முதன்மை நிலையை தக்க வைத்துள்ளது தமிழ்நாடு. அதில் ஆண்கள் சதவீதம் 51.8, பெண்கள் சதவீதம் 51.0ஆக உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக ஆக உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு தற்போதே அதனை கடந்து முன்னோடியாக திகழ்கிறது.

2019-2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் உயர்கல்வி நிலை பற்றிய ஆய்வை வெளியிட்டது  AISHE (உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு). இதில் அதிக மக்கள் தொகை உடைய பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சிக்கிம் (75.8) மற்றும் சண்டிகர் (52.1) மாநிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்திய ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் உயர்கல்வி குறித்தான சில முக்கிய தகவல்கள் :  (நன்றி:  )

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை உடைய மாநிலங்களாக  உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு,மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் முதல் 8 இடங்களை பிடித்துள்ளது.

இந்தியாவில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) 27.1 (புதிய கல்விக் கொள்கையின் மூலம் 2035ல் 50% அடைய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதனை 2020-லேயே எட்டியுள்ளது தமிழ்நாடு).

இந்தியாவில் அதிகப்படியான மாணவர்கள் பி.ஏ, பி.எஸ் சி. மற்றும் பி.காம் ஆகிய படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இளங்கலை அளவில் 32.7% மாணவர்கள் கலை / மனிதநேயம் / சமூக அறிவியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16%, வர்த்தகம் பாடப்பிரிவில் 14.9% மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் 12.6% சேர்ந்துள்ளனர்.

37.27 லட்சம் மாணவர் சேர்க்கையுடன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் படிப்பு இந்திய அளவில் நான்காம் இடம் பெற்றுள்ளது. இதில் ஆண் மாணவர்களின் பங்கு 70.8%,  பெண் மாணவர்களின் பங்கு  29.2%.

இதில் அதிகப்படியாக 9.3 லட்சம் மாணவர்கள் கணினி பொறியியல் துறையிலும், 6.8 லட்சம் மாணவர்கள் மெக்கானிக்கல் பொறியியல் துறையிலும், 6.1 லட்சம் மாணவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறையிலும், 4.8 லட்சம் மாணவர்கள் சிவில் இன்ஜினியரிங் துறையிலும், தகவல் தொழில்நுட்பம் துறையில் 7.67 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்த உயர்கல்வி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் 14.7%, பழங்குடியின மாணவர்கள் 5.6%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை (OBC) சேர்ந்த மாணவர்கள் 37% , 5.5% மாணவர்கள் முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்களாகவும் , 2.3% மாணவர்கள் பிற மத சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களாகவும் உள்ளனர். 

 78.6% க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தனியார் கல்லூரிகளாகவே (அரசு உதவி பெரும் கல்லூரிகளையும் சேர்த்து) உள்ளன; ஆனால் அவற்றின் மொத்த சேர்க்கை விகிதம் 66.3% மட்டுமே.

கூ.தக. : உயர் கல்வியில் மொத்த சேர்க்க விகிதம் (Gross Enrolment Ratio - GER) என்பது பள்ளி கல்வியில் இருந்து கல்லூரி படிப்பான உயர் கல்விக்கு செல்லும் 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்களுக்காக கணக்கிடப்படுகிறது. அதன்படி, 2018-19 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஜி.இ.ஆர். விகிதம் 26.3 சதவீதமாக உள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் 24.3 சதவீதமாக இருந்த ஜி.இ.ஆர். விகிதத்தை 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த தற்போது புதிய கல்விக் கொள்கை 2020இல் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

👉 கரோனா தடுப்பூசியை வீணடிக்கும் மாநிலங்கள் பட்டியலில் 33.95 சதவீத விரயத்துடன் ஜாா்க்கண்ட் மாநிலம் முதலிடம் வகிக்கிறது.   நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் தடுப்பூசிகளை விரையம் செய்யும் மாநிலங்களாக கேரளமும் (மைனஸ் 6.37), மேற்கு வங்கம் (மைனஸ் 5.48) என்ற எதிா்மறை புள்ளிகளைக் கொண்டிருப்பதாக மத்திய அரசின் மே 2021 மாதத்துக்கான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

👉 கடந்த 2019-20 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் படி பாஜக கட்சி ஒரே ஆண்டில் ரூ.750 கோடியை தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாகும். இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.139 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ 59 கோடியையும், திரிணமூல் கட்சி ரூ.8 கோடியையும், சிபிஐ(எம்)  ரூ.19.6 கோடியையும், சிபிஐ ரூ.1.9 கோடியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளன.

👉 நிலம் பாலைவனமாதல் தொடா்பான ஐ.நா. மாநாட்டில்  14-6-2021 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றிகினார். பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தின் (யுஎன்சிசிடி) 14-ஆவது மாநாட்டின் தலைவராக பிரதமா் மோடி உள்ளாா். அதன் சிறப்புக் கூட்டத்துக்கு ஐ.நா. 75-ஆவது பொதுச் சபையின் தலைவா் வோல்கன் போஸ்கிா் அழைப்பு விடுத்துள்ளாா். வரும் 14-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ள அந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.

👉 ’Coursera’ நிறுவனம் வெளியிட்டுள்ள 'உலக திறன் அறிக்கை 2021’ (Global Skills Report 2021) ல் , உலக நாடுகளில், இந்தியா  67 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஆஸ்திரியா நாடுகள் உள்ளது.

👉 ”ஃபிர்மினா’   (Firmina)  என்ற பெயரில் உலகின் மிக நீளமான கடலுக்கடியில் கம்பிவட இணைப்பு  (world’s longest undersea cable)  திட்டம்,  ஆல்பாபெட் (Alphabet) நிறுவனத்தின் கீழ் செயல்படும் கூகிள் (Google)  நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த கம்பிவட இணைப்பு  அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் உருகுவே ஆகிய நாடுகளை இணைக்கும் . இந்த கடலுக்கடியில் உள்ள கேபிள் இந்த பிராந்தியங்களில் இணைய இணைப்பு திறனை அதிகரிக்கும்.

👉  கடந்த 121 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச மழை    மே 2021 இல் பெய்ததாக, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (Indian Meteorological Department (IMD)) தெரிவித்துள்ளது.  மே 2021 ல்  107.9 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானது.   இது  நீண்ட கால மழை சராசரியான 62 மில்லி மீட்டர் என்பதை விட 74% அதிகமாகும்.

👉 ”திஹிங் பட்கா” (Dihing Patkai ) அஸ்ஸாம் மாநிலத்தின் 7 வது  தேசிய பூங்காவாக (National Park)  அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 இந்திய அரசின் ‘வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்கள் திட்டம்’ ( Aspirational Districts Programme (ADP) ) ஒரு மிகச்சிறந்த  உள்ளூர் பகுதி வளர்ச்சி  திட்டம் (local area development) என  ஐ.நா. வளர்ச்சி திட்டம் (United Nations Development Programme (UNDP))  பாராட்டியுள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

 👉  டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு  நைஜீரியா நாட்டில் தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'கூ' செயலியில் நைஜீரியா அரசு அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளது.

👉   நேபாளத்துக்கு ரூ.18 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியா 11-6-2021 அன்று  வழங்கியது. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், வெண்டிலேட்டா்கள் உள்ளிட்டவை அடங்கும்.

கூதக. : நேபாள நாட்டுக்கான இந்தியத் தூதா்  - வினய் மோகன் காவத்ரா

👉 ’அரபு  - இந்தியா எரிசக்தி மன்றத்தின்’ (Arab-India Energy Forum (AIEF)) முதலாவது கூடுகை மெய்நிகர் வழியாக 8-9 ஜீன் 2021 தினங்களில் நடைபெற்றது.  இந்த கூடுகையை இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகள் இணைந்து நடத்தின.

 👉 ”இந்தோ - தாய் கார்பட்” ( India-Thailand Coordinated Patrol (Indo-Thai CORPAT)) என்ற பெயரில் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் கடற்படைகளின் கூட்டு ஒத்திகை  9-11 ஜீன் 2021 தினங்களில்  அந்தமான் கடல் பகுதியில் நடைபெற்றது.

TNPSC குரூப் II, IIA & குரூப் IV,VAO 2021 தேர்வுகளுக்கு

இப்போதே தயாராகுங்கள் !!! 

 

NEW   TEST BATCH ADMISSION GOING ON !

(PDF Files and Online Exams)

TNPSC பாடத்திட்டம் முழுவதையும் குறுகிய காலத்தில் திட்டமிட்டு படித்து பயிற்சி செய்வதற்கான மிகச்சிறந்த Study Plan.

 

TNPSC Group 2, 2A 2021 (Tamil Medium & English Medium)

45 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்)

TNPSC Group 4, VAO 2021 (Tamil Medium)

120 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்)

TNPSC Group 4, VAO 2021 (English Medium)

 100 Tests (100 questions per test)

முதல் தேர்வை இலவசமாக பயிற்சி செய்யுங்கள் !

 To Download Test Batch Schedule / Join

www.portalacademy.in |   8778799470

 

👉 குவைத்தில் வீட்டு வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது. குவைத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச நிகழ்வுகள்

👉 2030 ஆம் ஆண்டிற்குள் எயிட்ஸ் நோயை  முற்றிலுமாக ஒழிப்பதற்கு  ஐக்கிய நாடுகளவையின் பொது சபையின் ((United Nations General Assembly (UNGA))     HIV/AIDS (Human Immunodeficiency Virus/Acquired ImmunoDeficiency Syndrome) தொடர்பான உயர்மட்ட கூடுகையில்    தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

👉 ஏழை நாடுகளுக்கு 2022-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ உலகின் மிகப் பெரிய பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7 மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

👉 ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு   (G7 Summit)  பிரிட்டனில் உள்ள காா்ன்வால் நகரில் ஜூன் 11 முதல் 13-ஆம்  தேதி வரை நடைபெற்றது. இதனை,  பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் 11-6-2021 அன்று  தொடக்கி வைத்தாா்.  சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம்’ என்பது இந்த உச்சி மாநாட்டின் மையப்பொருளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கூ.தக. : இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சனின் அழைப்பை ஏற்று, ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வுகளில் ஜூன் 12 மற்றும் 13 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்றார்.  அப்போது, கரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிா்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே சுகாதார’ அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

ஜி7-க்கு தற்போது தலைமையேற்றுள்ள இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, கொரிய குடியர்சு மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை விருந்தினர்களாக ஜி7 உச்சி மாநாட்டிற்கு அழைத்துள்ளது நேரடி மற்றும் காணொலி ஆகிய முறைகளில் இம்மாநாடு நடைபெறும்.   

ஜி7 கூட்டத்தில் இந்திய  பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொள்வது இது இரண்டாவது முறையாகும். பிரான்சு தலைமையில் 2019-ல் நடைபெற்ற பியாரிட்ஸ் உச்சி மாநாட்டில் “நல்லெண்ண பங்குதாரராக” பங்கேற்ற பிரதமர் ‘பருவநிலை, பல்லுயிராக்கம் மற்றும் கடல்கள்’ மற்றும் ‘டிஜிட்டல் மாற்றம்’ ஆகிய அமர்வுகளில் கலந்துக் கொண்டார்.

 

👉 ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில், 2022 முதல் 2023-ம் ஆண்டு வரை பணியாற்றும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கான  தேர்தலில் அமீரகம், அல்பேனியா, பிரேசில், கானா மற்றும் கபான் ஆகிய 5 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கூ.தக. :

ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில்,  5 நிரந்தர உறுப்பினர்களும், 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களும் உள்ளன. நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள்  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு  தேர்வு செய்யடுகின்றன. 

👉 76 வது ஐ.நா.பொது சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாகித்,  அவரது  முதன்மை செயலராக (Chef de Cabinet)   ஐ.நா. வுக்கான இந்தியாவின் துணை நிரந்தர பிரநிதியான K நாகராஜ் நாயுடு என்பவரை நியமித்துள்ளார்.

பொருளாதாரம்

 👉 அந்நிய செலாவணி கையிருப்பில் ( Forex Reserves) உலகளவில்  நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.  4 ஜீன் 2021 -ன் படி, இந்தியாவில் 605 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது.

👉 கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்ததில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னிலையில் உள்ளது. யெஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நிதியாண்டுகள் வாரியாக இதுவரை  தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன்கள்

2017-18--- ரூ.1.44 லட்சம் கோடி

2018-19--- ரூ.2.54 லட்சம் கோடி

2019-20--- ரூ.1.45 லட்சம் கோடி

2020-21--- ரூ.1.53 லட்சம் கோடி.

கூ.தக. : ஒவ்வொரு நிதியாண்டிலும் வசூல் செய்ய முடியாத கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்து வருகின்றன. வாராக்கடன்களின் மதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபட்டு வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

👉 கோவிட் -19 தொடர்பான  மருந்துகளுக்கு  மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  (நன்றி :தமிழ் இந்து) அதன்படி,

1) நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படுத்தப்படும் "டொசிலிசுமாப்" மருந்துக்கு 5% ஜி.எஸ்.டி வரி வசூல் செய்த நிலையில் தற்போது அவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

2) கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

3) கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துக்கான ஜி.எஸ்.டி 12% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

4) மத்திய சுகாதார அமைச்சகத்தால் கரோனாவுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி 5% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5) மருத்துவ ஆக்சிஜனுக்கு 12% ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்ட நிலையில் அது தற்போது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

6) ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள், வென்டிலேட்டர், வென்டிலேட்டர் மாஸ்க், பிபாப் மெஷின் உள்ளிட்டவற்றிக்கான ஜி.எஸ்.டி.வரி 12%-ல் இருந்து 5% ஆக குறிக்கப்பட்டுள்ளது.

7) கரோனா பரிசோதனை கருவிகளுக்கான ஜி.எஸ்.டி வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

8) பல்ஸ் ஆக்சிமீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி என்பது 12%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

9) சானிடைசர்கள் , உடல்வெப்ப பரிசோதனை கருவிகளுக்கான 18% ஜி.எஸ்.டி வரி என்பது 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

10) தகன எரிவாயு , மின்சார தகனம் உள்ளிட்டவற்றிக்கு 18% ஜி.எஸ்.டி வரியில் இருந்து 5% ஆக குறியக்கப்பட்டுள்ளது.

11) ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 28%-ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

👉 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank (IOB)) மற்றும் செண்ட்ரல் ஃபாங்க் ஆஃப் இந்தியா ( Central Bank of India) ஆகியவற்றை   நடப்பு நிதியாண்டில் (2021-22)    தனியார்மயமாக்க நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.  

👉 ’ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ள , இந்தியவிலுள்ள, உலகளவில்  மிகச்சிறந்த வங்கிகளின் பட்டியலில் (Forbes list of the World’s Best Banks 2021 in India)   சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட DBS வங்கி   முதலிடத்தைப் பெற்றுள்ளது.

👉 ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி   உயர்த்தியுள்ளது. ஊரகப் பகுதிகளில், இதர வங்கிகளின் ஏ.டி.எம்களில் இருந்து மாதத்திற்கு ஐந்து முறை கட்டணமில்லாமல் பணம் எடுக்க அனுமதி தொடர்கிறது. இந்த ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைகளுக்கும் மேலே பணம் எடுத்தால், அவற்றிற்கு இதுவரை அதிகபட்சமாக விதிக்கப்பட்ட 20 ரூபாய் கட்டணம், அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. இந்த 21 ருபாய் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு, இத்துடன் சேர்க்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

21 ரூபாய் கட்டணம் என்பது அதிகபட்ச வரம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் இந்த ரம்பிற்கும் கீழே, தங்கள் விருப்பபடி கட்டணங்களை விதிக்க அனுமதிக்கபடுகிறது. உதாரணமாக எஸ்.பி.ஐ வங்கி தற்போது ஜி.எஸ்.டி வரி தவிர்த்து பரிவர்த்தனை ஒன்றுக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஒரு வங்கியின் வாடிக்கையாளர், வேறு ஒரு வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால், அதற்கு வாடிக்கையாளரின் வங்கி, மற்றொரு வங்கிக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை 15 ரூபாயில் இருந்து ஆகஸ்ட் ஒன்று முதல் 17 ரூபாயாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.

விருதுகள்

👉  ’பென் பின்டர் பரிசு 2021’ (PEN Pinter Prize) ஜிம்பாவே நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர்   சிட்சி தங்கரெம்ப்கா (Tsitsi Dangarembga) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

👉 அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியால் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டபோது அதனை வீடியோ எடுத்த  டார்னெல்லா ஃபிரேசியர் என்ற இளம் பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

👉 ஊடகத் துறைக்கான அமெரிக்காவில் மிக உயரிய விருதான புலிட்ஸா் விருது 2021, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இரு செய்தியாளா்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.   

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தடுப்பு முகாம் குறித்து புதுமையான முறையில் செய்திகள் சேகரித்து வெளிப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளா் மேகா ராஜகோபாலன் இந்தப் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.அமெரிக்காவின் ‘புஸ்ஃபீட் நியூஸ்’ இணையதள செய்தி ஊடகத்தில் அவா் பணியாற்றி வருகிறாா்.

இதுதவிர, டம்பா பே டைம்ஸ் இதழில் பணியாற்றி வரும் நீல் பேடியும் இந்த ஆண்டுக்கான புலிட்ஸா் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா், சக செய்தியாளரான கேதலீன் மெக்கிரோரியுடன் சோ்ந்து இந்தப் பரிசை வென்றுள்ளாா்.

நியமனங்கள்

👉 ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்ச்சி மாநாடு ( United Nations Conference on Trade and development (UNCTAD)) அமைப்பின்  முதலாவது பெண் தலைவராக   கோஸ்டா ரைசா (Costa Rica.)  நாட்டைச் சேர்ந்த   ரெபேக்கா கிரின்ஸ்பான் (Rebecca Grynspan) நியமிக்கப்பட்டுள்ளார்.

கூ.தக. : ஐக்கிய நடுகளவையின் பொது சபையால்  (United Nations General Assembly ) 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.நா. வர்த்தக மற்றும் வளர்ச்ச்சி மாநாட்டின் தலைமையிடம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில் உள்ளது.  இந்த அமைப்பானது  ஐ.நா.பொது சபை மற்றும் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுண்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்கிறது.

👉 இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நாஃப்டாலி பென்னட் (49)(Naftali Bennett)  13-6-2021 அன்று பதவியேற்றாா். இதன்மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

👉 உலக சுகாதார அமைப்பின் கீழ் செயல்படும் உலகளாவிய காற்று மாசு மற்றும் ஆரோக்கியதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கௌரவ உறுப்பினராக இந்தியாவின் கான்பூா், ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியா்   முகேஷ் சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

👉 அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதி திரு சஞ்சய் யாதவை (Justice Sanjay Yadav) , இந்திய அரசியலமைப்பு சட்டம் 217-வது பிரிவின் 1-ம் உட்கூறு தமக்களித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.

👉  மங்கோலியா நாட்டின்  புதிய அதிபராக   உக்னா குரெல்சுக் ( Ukhnaa Khurelsukh) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள்

👉 உலக இரத்த தானம் தினம் (World Blood Donor Day) -  ஜூன் 14 அன்று | மையக்கருத்து 2021 - "உலகத்தை துடிப்பாக வைத்திருக்க இரத்ததானம் செய்யுங்கள்" (Give blood and keep the world beating)

👉 சர்வதேச ஆல்பினிஷம் நோய் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day)  - ஜீன் 13

👉 குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் -  ஜூன் 12 | மையக்கருத்து 2021 - இப்போதே செயல்படுவோம் : குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்  ( ‘Act now: end child labour!’)

கூ.தக. : குழந்தைத் தொழிலாளர் முறை தொடர்பான சம்பவங்களை பொதுமக்கள் பென்சில் (PENCiL - Platform for Effective  Enforcement for  No Child Labour)  (https://pencil.gov.in/)  தளம் அல்லது குழந்தை உதவி எண்ணான 1098 ற்கு புகார் அளிக்கலாம்.

அறிவியல் & தொழில்நுட்பம்

👉 நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக  புதிய கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது.

👉 ”WISA Woodsat” என்ற பெயரில் உலகின் முதல் மரத்திலான செயற்கைக்கோளை (world’s first wooden satellite)  ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency (ESA) ) 2021 ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்தவுள்ளது.

👉 ‘ஜீவன் வாயு’  ('Jivan Vayu') என்ற பெயரில்  மின்சாரமின்றி இயங்கும் நாட்டின் முதல் சிபிஏபி  (power-free CPAP device) கருவியை ஐஐடி, ரோபர்   (IIT Ropar ) உருவாக்கியுள்ளது.  இதை ஆக்ஸிஜன் சிகிச்சையில் பயன்படுத்தும் சிபிஏபி (தொடர் காற்றழுத்தம்)  கருவிக்கு மாற்றாக பயன்படுத்த முடியும். இது மின்சாரமின்றி செயல்படும் நாட்டின் முதல் சிபிஏபி சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஜீவன் வாயு கருவியை ஆக்ஸிஜன் சிலிண்டர்களிலும் பொருத்த முடியும், ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையின் பைப் லைன்களிலும் பொருத்த முடியும். இந்த இரட்டை வசதி தற்போதைய சிபிஏபி கருவிகளில் இல்லை.

👉 எஸ்எச்ஜி-95’  மலிவு விலை முகக் கவசம் : மறு உபயோகத்துக்குப் பயன்படாத ‘என்-95 ’ முகக்கவசங்களுக்கு மாற்றாக எஸ்எச்ஜி-95’   எனும் மலிவு விலை முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது. கோவிட்-19 நிதித் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கவுன்சில் (பிஐஆா்ஏசி ), ஐகேபி நாலேஜ் பாா்க் போன்ற அமைப்புகள், ஹைதராபாத்தில் உள்ள பரிசோதா டெக்னாலஜிஸ் என்கிற தனியாா் மருத்துவ நிறுவனத்திற்கு வழங்கிய தொழில்நுட்ப உதவிகள் மூலம் ‘எஸ்எச்ஜி-95‘ என்கிற வீரியமிக்க பல அடுக்கு முகக் கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 ‘இந்தியாவிலே தயாரிக்கப்போம்’ திட்டத்தில் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள் 90 சதவீதம் மாசு துகள்களிலிருந்தும், 99 சதவீத தீநுண்மி நுண்ணிய கிருமிகளைப் பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதாக காற்றை சுவாசிக்கும் வகையிலும் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. கையால் சுத்தமான பருத்தித் துணியால் தயாரிக்கப்படும் இந்த முகக் கவசங்கள் பல அடுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது.

விளையாட்டுகள்

👉 ஜீலை 2021 ல் நடைபெறும் இலங்கைச் சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் கிஷோர் தேர்வாகியுள்ளார்.

👉 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்  2021 ல் வெற்றி பெற்றோர் விவரம்.

ஆண்கள் ஒற்றையர்  -  நோவக் டிஜோகோவிக் (Novak Djokovic) , செர்பியா 

மகளிர் ஒற்றையர் - பார்போரா  கிரெஜிகோவா ( Barbora Krejcikova) , செக் குடியரசு

ஆண்கள் இரட்டையர் - நிகோலஸ் மாஹட் (Nicolas Mahut ) & பியரி ஹீகஸ் ஹெர்பர்ட் (Pierre-Hugues Herbert) , பிரான்ஸ் 

பெண்கள் இரட்டையர் - பார்போரா  கிரெஜிகோவா & கேத்தரினா சினியகோவா, செக் குடியரசு 

கலப்பு இரட்டையர்  - டெசிரே கிராவ்சிக் (Desirae Krawczyk) , அமெரிக்கா & ஜோ சலிஸ்பரி (Joe Salisbury) , இங்கிலாந்து 

👉 ‘டேக்வாண்டோ’ (Taekwondo) விளையாட்டில்,  பாரா ஒலிம்பிக் போட்டிக்கு  தகுதி பெற்றுள்ள (Tokyo Paralympic Games) முதல் இந்தியர் எனும் பெருமையை அருணா தன்வர் (Aruna Tanwar) பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெறவிருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு இவர் தகுதி பெற்றுள்ளார்.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

👉  “Home in the World: A Memoir” என்ற நூலின் ஆசிரியர்  - அமர்த்தியா சென்

👉  ‘Tiananmen Square: The Making of a Protest’  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - விஜய் கோகலே (Vijay Gokhale)

 

----------------------------------------------------------------------------------

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!