Type Here to Get Search Results !

TNPSC Current Affairs in Tamil - 5-10 June 2021

0

தமிழ்நாடு

👉 முதல்-அமைச்சர் முக ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதல் அமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம்  (cmcell.tn.gov.in)  புதிதாக தொடங்கபப்ட்டுள்ளது.  தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம். 

👉  "ஆபரேஷன் விண்ட்” (Operation Wind)  : தமிழகத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில் "ஆபரேஷன் விண்ட்' (Operation Wind) என்ற பெயரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

👉 மாவட்டந்தோறும் மகளிா் சுய உதவிக் குழுக்களிடம் உள்ள குறைபாடுகளை களைய   மாநில அளவில் உதவி அழைப்பு மையம் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ளார். 

👉 மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (State Development Policy Council ) வின் துணைத் தலைவராகபேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராக செயல்படுவார். இவருடன் பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து இ.ஆ.ப (ஓய்வு), டி.ஆர்.பி ராஜா, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் (திருநங்கை) உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவின் முக்கிய பணிகள், மாநில வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுத்தல் குறித்து ஆலோசனை வழங்குதல் போன்றவை.

 இக்குழுவில் உள்ளவர்களுக்குத் துறை  கீழ்க்கண்டவாறு ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

1. ஜெயரஞ்சன்‌ - விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடல்,

2. ஆர்.சீனிவாசன்‌ - திட்ட ஒருங்கிணைப்பு,

3. சி.விஜயபாஸ்கர் ‌- கல்வி மற்றும் வேலைவாய்ப்பு,

4. சுல்தான்‌ அஹ்மத்‌ இஸ்மாயில்- நிலப் பயன்பாடு,

5. எம்.தீனபந்து (ஓய்வு ஐஏஎஸ்) - ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடல்,

6. டி.ஆர்.பி.ராஜா (சட்டப்பேரவை உறுப்பினர்)- விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடல்,

7.மல்லிகா சீனிவாசன் (தொழிலதிபர்) - தொழிற்சாலை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து,

8. மருத்துவர் ஜெ.அமலோற்பவநாதன்‌ - சுகாதாரம் மற்றும் சமூக நலன்,

9.சித்த மருத்துவர் கு. சிவராமன்‌ - சுகாதாரம் மற்றும் சமூக நலன்,

10. நர்த்தகி நடராஜ் -சுகாதாரம் மற்றும் சமூக நலன்.

மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (State Development Policy Council ) பற்றி ...

கடந்த 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் 2017-2018 பட்ஜெட்டில்மாநில திட்டக் குழு (State Planning Commission) என்ற அமைப்பின் பெயர் "மாநில வளர்ச்சி கொள்கைக் குழு (State Development Policy Council )" என மாற்றப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சரைத் தலைவராகவும், ஒரு துணைத் தலைவர், ஒரு நிரந்தர உறுப்பினர் மற்றும் 12 பகுதி நேர உறுப்பினர்களுடன் இந்த குழு முதல் முறையாக இந்த குழுவானது 23.04.2020ல் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது, இந்த குழுவின் துணைத்தலவராக C.பொன்னையன் நியமிக்கப்பட்டிருந்தார்.

கூ.தக. :  (நன்றி:விக்கிபீடியா) 

 முனைவர் நர்த்தகி நடராஜ்  புகழ்பெற்ற திருநங்கை பரதநாட்டிய கலைஞராவர். இவருக்கு, தமிழ்நாட்டில் திருநங்கை என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர், கடவுச் சீட்டு பெற்ற முதல் திருநங்கை, முதன் முதலில் மதிப்புறு முனைவர் மற்றும் கலைமாமணி விருது பெற்ற திருநங்கை  என்ற பெருமைகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் பதினொன்றாம் வகுப்பு தமிழ் பாடநூலில் நர்த்தகி நடராஜ் வாழ்க்கை பாடமாக உள்ளது.

👉 இந்திய அளவில் மிக பிரபலமான ஓவியரான இளையராஜா கரோனா தொற்றால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.  கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவ  இவர், 2009ஆம் ஆண்டு திராவிடப் பெண்கள் என்ற தலைப்பில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சி மிகவும் பிரபலமானது. 

👉 மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 மருத்துவப் பொருள்களுக்கான விலையை தமிழக அரசு  8-6-2021 அன்று நிர்ணயித்துள்ளது.மேலும் இந்த 15 மருத்துவப் பொருள்களை அத்தியாவசியப் பொருள்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, என்-95 முகக் கவசத்தை ரூ. 22-க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 3 வெவ்வேறு சர்ஜிகல் முகக் கவசங்களை முறையே ரூ. 3, ரூ. 4, ரூ. 4.50-க்கு விற்க வேண்டும். 200 மில்லி சானிடைசர் ரூ. 110-க்கு விற்பனை செய்ய வேண்டும்.

இதுதவிர, பிபிஇ உடை (1 யூனிட்) - ரூ. 273, பல்ஸ் ஆக்சிமீட்டர் ரூ. 1,500, ஆக்சிஜன் முகக் கவசம் (1 யூனிட்) - ரூ. 54 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

👉 நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் குழு : நீட் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரி செய்யும் வழிமுறைகள், மாற்று சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.  

👉  நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 8-6-2021 அன்று தொடங்கி வைத்தார்.   இந்த திட்டத்தின் படி, தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதி உதவி திட்டத்தின் கீழ், 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தலா 500 நலிந்த கலைஞர்கள் வீதம் மொத்தம் 1,000 நலிந்த கலைஞர்கள் பயனடைவார்கள். மேலும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை ரூ.2,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 6,600 அகவை முதிர்ந்த செவ்வியல் மற்றும் கிராமியக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

👉 பேரிடர் காலங்களில் பொது மக்கள் ஆபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ்ஆப் எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.தங்களது பகுதிகளில் நிகழும் பேரிடர்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு 94458 69848 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் மட்டுமல்லாது, இணையம் உபயோகிக்காத மக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

👉 தமிழக அரசுத்துறைகளின் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை என்பது மனிதவள மேலாண்மை துறை என்று மாற்றப்படுகிறது. வேளாண்மைத்துறை என்பது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என்று மாற்றப்படுகிறது. கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை என்பது கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று மாற்றப்படுகிறது.சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என்பது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை என்று மாற்றப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை என்பது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்படுகிறது. சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை என்பது சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை என்று மாற்றப்படுகிறது. 

👉 சென்னை விருகம்பாக்கம், கருணாநிதி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள  5½ ஏக்கர் நிலத்தை   ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து சமய அறநிலையத்துறை  மீட்டுள்ளது

👉 கரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் / கிராமங்களில், 2020 ஜன. 1ஆம் தேதி முதல் நிகழ்ந்த பிறப்பு / இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமதக் கட்டணத்தை வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவித்தல் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம், 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-ன்படி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்திற்குப் பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ.100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் காலதாமதக் கட்டணம் ரூ.200/- ஆகவும், ஓராண்டிற்கு மேல் காலதாமதக் கட்டணம் ரூ.500 ஆகவும் உள்ளது.

பெருந்தொற்றினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொதுமக்களுக்கு விலக்களிக்கவும், அந்தக் காலதாமதக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

👉 தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞராக அசன் முகமது ஜின்னாவை நியமித்து, தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

👉 கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.  

👉 கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் 'கவிக்கோ விருது’ பாவலர் அறிவுமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

👉 சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில்  9 வயதுடைய நீலா என்னும் பெண் சிங்கம் கொரோனா தொற்றால் உயிரிழந்தது. மேலும், ஆய்வு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை முடிவின்படி, 9 சிங்கங்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின்  அவர்கள் 7-6-2021 அன்று உயிரியல் பூங்காவில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

இந்தியா

👉 இந்திய ராணுவத்தில் போர் ஹெலிகாப்டர் விமானிகளாக பயிற்சி பெறுவதற்காக இரு பெண் ராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது இந்திய ராணுவத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவாக கருதப்படுகிறது.  அவர்கள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவத்தின் போர் விமான பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறுவர். பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு அடுத்த ஆண்டு ஜூலையில் அவர்கள் இருவரும் விமானிகளாக இணைவார்கள்.

கூ.தக. : கடந்த 2018-இல், இந்திய விமானப் படை அதிகாரியான அவனி சதுர்வேதி தனியொருவராக போர் விமானத்தை இயக்கிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அவர் "மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை இயக்கினார்.

👉 இந்தியாவில் 100% கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் கிராமம் எனும் பெருமையை ஜம்மு காஷ்மீா், பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள வேயான் (Weyan) என்னும் குக்கிராமம் பெற்றுள்ளது. அங்குள்ள 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

👉 இந்தியாவின் முதல் ’ஹைட்ரஜன் விநியோக நிலையம்’ (Hydrogen dispensing station) இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடட் (Indian Oil Corporation Ltd (IOCL)) நிறுவனத்தின் உதவியுடன்    குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் அமையவுள்ளது.  

👉 இந்தியாவின் முதல் ‘சர்வதேச கடல்சார் சேவைகள் திரள்’  (international maritime services cluster) குஜராத் கடல்சார் வாரியத்தின்  (Gujarat Maritime Board (GMB)) மூலம்  ஆமதாபாத்திலுள்ள குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

👉 2021 ஆம் ஆண்டின் இந்திய சுற்றுச்சூழல் அறிக்கையின்படி, ஐ.நா. நிலையான வளர்ச்சி இலக்குகளை (Sustainable Development Goals (SDGs) ) அடைவதில்  உலக நாடுகளில்,  இந்தியா    117 வது இடத்தைப் பெற்றுள்ளது. 

👉 நாட்டில் கரோனா பாதிப்பு சூழல் குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி 7-6-2021 , 5PM மணிக்கு உரையாற்றினார். அப்போது,    ஜீன் 21 முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் எனவும், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana)  தீபாவளி வரை நீட்டிக்கப்படுவதன் மூலம், ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவிகிதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்கும். மீதமுள்ள 25 சதவிகித தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 👉 ஐ.என்.எஸ் சந்தயக் (INS Sandhayak)  என்ற பெயரிலான,   இந்திய கடற்படையின் மிகப் பழமையான ஹைட்ரோகிராபிக் சர்வே    கப்பல் ( Hydrographic Survey Vessel) 40 ஆண்டுகள் சேவைக்குப்பின், விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல்துறை வளாகத்தில்  4-6-2021 அன்று  ஓய்வு பெற்றது. 

👉 ‘சுரக்‌ஷித் ஹம் சுரக்‌ஷித் தும்’ (எங்களுக்கும் பாதுகாப்பு, உங்களுக்கும் பாதுகாப்பு’) (Surakshit Hum Surakshit Tum Abhiyaan) என்ற பெயரில் அறிகுறியற்ற மற்றும் மிதமான கொவிட் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, வீட்டுக்குச் சென்று பராமரிப்பு உதவிகளை அளிப்பதில் மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவதற்கான திட்டத்தை 112 இலக்கு மாவட்டங்களில் நிதி ஆயோக் மற்றும் பிரமல் அறக்கட்டளை  8-6-2021 அன்று தொடங்கியன. 

இந்த கொவிட் பாதுகாப்புத் திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில், 1000 உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒரு லட்சம் தொண்டர்களுக்கு, தொலைபேசி மூலம் கொவிட் நோயாளிகளுடன் இணைப்பில் இருப்பது  குறித்து பயிற்சி அளிக்கும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொண்டர்களுக்கு பயிற்சி அளிப்பதில் உதவ, பிரமல் அறக்கட்டளை மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றும். 

👉 2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டை (Performance Grading Index (PGI) 2019-20)  மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். மாநிலங்களின் செயல்பாடு அடிப்படையில் தரவரிசை A, A+, A++ என வகைப்படுத்தப்படுகின்றன.  அதில்,2019-20 ஆம் ஆண்டில் பஞ்சாப் (929 மதிப்பெண்கள்) , சண்டிகர் (912 மதிப்பெண்கள்), தமிழ்நாடு  (906 மதிப்பெண்கள்), அந்தமான் நிக்கோபார் தீவுகள்  (901 மதிப்பெண்கள்) மற்றும் கேரளா ( 901 மதிப்பெண்கள்) ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மிக உயரிய மதிப்பீடான ஏ++ ( A++ ) ஐ‌ பெற்றுள்ளன.  

கூ.தக. : மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மதிப்பிட்டு கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் இந்த தரவரிசை குறியீடு முதல்முறையாக வெளியிடப்பட்டது.

👉 பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இந்தியாவின் இலக்கு 2030-க்கு பதிலாக 2025 ஆக முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு  இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

கூ.தக. : 

உலக அளவில் அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் 1 முதல் 1.5 சதவீதம் எத்தனால் கலப்பை செயல்படுத்தி வந்த இந்தியா தற்போது 8.5 சதவீதம் எத்தனால் கலந்து வருகிறது. இந்த இலக்கை அடுத்த ஆண்டுக்குள் 10 சதவீதமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு  ஏற்கனவே திட்டமிட்டு இருந்த  நிலையில் அந்த இலக்கை அடைவதற்கான கால அளவு தற்போது  குறைக்கப்பட்டுள்ளது. 

எத்தனால் கலப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலில் சிறந்த தாக்கம் ஏற்படுவதுடன், விவசாயிகளுக்கு இது மற்றொரு வருமான வாய்ப்பையும் வழங்குகிறது. எத்தனால் கொள்முதல் 8 மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் நாட்டின் கரும்பு விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.

👉 முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும் சேஜ் (SAGE( Seniorcare Ageing Growth Engine) )இணையதளத்தை  மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை  அமைச்சர் திரு.தவார்சந்த் கெலாட்  4-6-2021 அன்று தொடங்கிவைத்தார்.    இந்த சேஜ் இணையதளத்தில் முதியோர் பராமரிப்புக்கான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும், மற்றும் தொடக்க நிறுவனங்கள் அளிக்கும் நம்பகமான சேவைகளையும் பெற முடியும்.

கூ.தக. :  மூத்த குடிமக்கள் நல நிதி ( Senior Citizen Welfare Fund )  கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

👉 ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா 117-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் சரிவைச் சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 100 புள்ளிகளில் இந்தியா 61.9 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

கூ.தக. :  வறுமையை ஒழித்தல், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 17 இலக்குகளை 2030-ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 193 நாடுகளும் கையெழுத்திட்டன. அந்த இலக்குகளை அடைவதற்காக ஒவ்வொரு நாடும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அந்நாடுகளை யாலே பல்கலைக்கழகம் வரிசைப்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் 2021-ஆம் ஆண்டுக்கான அறிக்கையை அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதில் பூடான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகள் இந்தியாவை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

👉 சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியா 168 வது இடம் : சுற்றுச்சூழல் நலன், பருவநிலை மாறுபாடு, காற்று மாசுபாடு, சுகாதாரம், குடிநீா், உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு, 180 நாடுகளில் கணக்கிடப்பட்ட சுற்றுச்சூழல் குறியீட்டில் இந்தியா 168-ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக யாலே பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 148-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. 

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து தங்கள் மக்களை ஒவ்வொரு நாடும் எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதை அறிவதற்கான குறியீட்டில் இந்தியா 172-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

👉 பிராஜக்ட் -75 என்ற திட்டத்தின் மூலம்,  6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கூ.தக. :இந்தியக் கடற்படையில் உள்ள ஒரே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சக்ராவின் குத்தகைக் காலம் முடிவடைந்ததால் அந்தக் கப்பல் ரஷியாவுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் அகுலா 2 என்ற நீர்மூழ்கிக் கப்பலை, இந்தியா கடந்த 2012ம் ஆண்டு 10 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருந்தது. 8 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட அந்தக் கப்பல் ஐஎன்எஸ் சக்ரா 2 என்ற பெயருடன் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

👉 29 துறைகளில் சேவைகளை வழங்குவதற்கான மக்கள் சாசனம்/கட்டமைப்பின் மாதிரி பஞ்சாயத்து மக்கள் சாசனத்தை  (Model Panchayat Citizens Charter) மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்  4-6-2021 அன்று வெளியிட்டார். செயல்பாடுகளை உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் இணைக்கும் இந்த சாசனம், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்துடன் இணைந்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

👉 இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு அனுமதி அளித்துள்ளது. முதல்கட்டமாக 40 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. 

👉 ஜூன் 21 முதல் இந்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கப்படும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

👉 ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பரிசோதனைக்காக உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்புக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல் அளித்து உள்ளது. இந்தியாவில்  ஏற்கனவே அமலில் உள்ள கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய  இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்பொழுது, ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியானது 91.6 சதவீதம் அதிக திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தகக்து. 

 வெளிநாட்டு உறவுகள்

👉 இந்திய-தாய்லாந்து கடற்படைகளின் 3 நாள் கூட்டு ரோந்து அந்தமான் கடலில் 9-11 ஜீன் 2021 தினங்களில் நடைபெறுகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல், இந்தியாவும், தாய்லாந்தும் தங்கள் நாட்டு சர்வதேச கடல் எல்லைகளை ஒட்டி ஆண்டுக்கு இருமுறை இந்த ரோந்தை மேற்கொண்டு வருகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு கண்காணிப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் இதர உதவிகளை இந்தியக் கடற்படை செய்து வருகிறது.

👉 ஐ.நா. பொருளாதார கவுன்சில் உறுப்பினராக,ஆசிய பசிபிக் நாடுகளின் பிரிவில்,  இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே பிரிவில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் தேர்வு செய்யப்பட்டன. 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்த பதவியில் இந்தியா இருக்கும்.

கூ.தக. : 

ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமைப் பொறுப்பை வரும் ஆகஸ்ட்  2021 மாதம் இந்தியா ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய  3 பரிமாணங்களில்   நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

 54 உறுப்பு நாடுகளில், ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படும்.

 ஐ.நா. பொருளாதார கவுன்சில்  ஐ.நா. அமைப்பின் இதய பகுதியாக கருதப்படுகிறது. மேலும் ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறும் உச்சி மாநாடுகள் மற்றும் இதர மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்துவதில் இந்த கவுன்சில் முக்கிய பங்காற்றுகிறது. 

👉 ’ரைமோனா ரிசர்வ் காடுகள்’ (Raimona reserve forest) அஸ்ஸாம் மாநிலத்தின் ஆறாவது தேசிய பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள மற்ற ஐந்து தேசிய பூங்காக்கள்,  காசிரங்கா தேசிய பூங்கா,மனஸ் தேசிய பூங்கா,நமேரி தேசிய பூங்கா,ஒராங் தேசிய பூங்கா மற்றும்திப்ரு-சைகோவா தேசிய பூங்கா ஆகியவையாகும். 

👉 ’அறிவு பொருளாதார திட்டம்’ (Knowledge Economy Mission) என்ற  பெயரில் தனது மாநிலத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. 

உலகம்

👉 மெய்நிகா் நாணயமான பிட்காயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூா்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாா் அங்கீகரித்துள்ளது.

👉 ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்காக அன்டோனியோ குட்டெரெஸ் பெயரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 8-6-2021 அன்று பரிந்துரைத்துள்ளது.தற்போது ஐ.நா. பொதுச் செயலராக இருக்கும் குட்டெரெஸ், 2-ஆவது முறையாக அந்தப் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளாா்.

கூ.தக. :ஐ.நா.வின் 9-ஆவது பொதுச் செயலராக இருக்கும் அன்டோனியோ குட்டெரெஸ் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்.  கடந்த 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக ஐ.நா. பொதுச் செயலா்  இருந்து வருகிறாா். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பா் 31, 2021-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

👉 டிக் டாக், வீ சாட் போன்ற சீன செயலிகளுக்கு தடை விதிக்க டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை  அமெரிக்க அரசு நீக்கியுள்ளது. 

👉 ’ஐ-ஃபேமிலா’ (“I-Familia”) என்ற பெயரில்  சர்வதேச அளவில் காணாமல் போனவர்களை, டி.என்.ஏ. (DNA) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடிப்பதற்கான  உலகளாவிய தரவு தளத்தை ( global database )  இண்டர்போல் (INTERPOL) அமைப்பு உருவாக்கியுள்ளது. 

👉 12 வது தூய்மை எரிபொருள் அமைச்சரவை (12th Clean Energy Ministerial - CEM 12) மற்றும் 6 வது  புதுமைகள் திட்ட அமைச்சரவை (Mission Innovation Ministerial (MI-6)) 31-5-2021 முதல் 6-6-2021 வரையில் மெய்நிகர் வாயிலாக சிலி நாட்டினால் நடத்தப்பட்டன. 

👉 சர்வதேச நைட்ரஜன் முன்னெடுப்பின் (International Nitrogen Initiative (INI) )  8வது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநாடு    31-5-2021 முதல் 3-6-2021 வரையில் மெய்நிகர் வாயிலாக நடத்தப்பட்டது. 

👉 இந்திய அமெரிக்க அருண் வெங்கடராமனை (Arun Venkataraman) , அமெரிக்காவின்  வெளிநாட்டு வணிக சேவை மற்றும் வர்த்தக சேவைகளின்  இயக்குநர் ஜெனரல் மற்றும்  உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராக    (Director General of the United States and Foreign Commercial Service and the Assistant Secretary for Global Markets)   அமெரிக்க அதிபர் ஜோ பிடன்  அறிவித்துள்ளார்.

👉 சீனாவில் 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.  சீன நிறுவனமான சைனோவேக் உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு ’கொரோனாவேக்’ என்று பெயர்.  அதற்கு சீன நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.

👉 இஸ்ரேல் நாட்டில், பொது மக்கள்   இனி  முக கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

👉 நைஜீரிய அதிபர் முகமது புகாரியின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதை தொடர்ந்து நைஜீரியாவில் டுவிட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. 

👉 ஐக்கிய நாடுகளவையின் 2021-22க்கான  பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

👉 ராணுவ கட்டமைப்புகளைக் கண்காணிப்பதற்கு வழிவகுக்கும் சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது. இதன் மூலம் ரஷியாவின் ராணுவ கட்டமைப்புகளை மற்ற நாடுகள் கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டில்  அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தில்  அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகள்  கையெழுத்திட்டன. 

கூ.தக. : இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷியா நடந்து கொண்டதாகக் கடந்த ஆண்டில் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிா்வாகம், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது.அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் என்று ரஷியா எதிா்பாா்த்தது. ஆனால், இந்த விவகாரத்தில் அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காத நிலையில், சா்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷியா அறிவித்தது. 

👉 கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் செயல்திறன் 81 சதவீதம் ஆகும்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனேகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல்திறன் 70 சதவீதம்.

👉 மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு, ரூ.60 லட்சம் பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில்   7 ஆண்டுகள் சிறைத்   தண்டனை விதித்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம்   தீர்ப்பளித்துள்ளது.

👉 உலகம் முழுவதும் கரோனா தொற்றை பரவச் செய்ததற்காக அமெரிக்காவுக்கு சீனா 10 டிரில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.72 லட்சம் கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று முன்னாள் அதிபா் டிரம்ப் கூறியதை சீனா நிராகரித்துள்ளது.

👉 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரி விதிக்கும் வகையில் சர்வதேச வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் ஜி-7 நாடுகள் 5-6-2021 அன்று கையெழுத்திட்டுள்ளன .பொருளாதார வளா்ச்சியில் முன்னணி வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த கூட்டமைப்பின் 46-வது உச்சிமாநாடு இங்கிலாந்தில்  11 - 13 ஜீன் 2021 தினங்களில்  பிரிட்டனின் காா்ன்வால் மாகாணம், பாா்பிஸ் பே நகரில் வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.  நடைபெற உள்ளது. 

👉 அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஃபேஸ்புக் (முகநூல்) கணக்கை இரு ஆண்டுகள் நிறுத்திவைப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம்

👉 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி  ( மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி) 8.3 சதவீதமாகவும், அதுவே 2022-ஆம் ஆண்டு 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்று உலக வங்கியின் சா்வதேச பொருளாதார அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 

👉 2021 ஆம் நிதியாண்டில்,  இந்தியாவில் அதிக அளவு  வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (Foreign Direct Investment(FDI)) செய்துள்ள நாடுகளின் பட்டியலில்   முதல் ஐந்து இடங்களை முறையே சிங்கப்பூர், அமெரிக்கா, மெளரீசியஸ், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் கேமேன் ஐலண்ட் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.  இந்த தகவலை  மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ( Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) தெரிவித்துள்ளது. 

அதிக அளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்த துறைகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே கணினி சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்(computer software and hardware) ,   கட்டுமானத்துறை - உட்கட்டமைப்புகள் (construction – infrastructure activities) மற்றும்  சேவைகள் துறை (services sector) ஆகியவை பெற்றுள்ளன. 

👉 உலக அளவில் வேலைவாய்ப்பின்மை ,  2021 ஆம் ஆண்டில் 6.3% ஆகவும், 2022 ஆம் ஆண்டில் 5.7% ஆகவும் இருக்கும் என சர்வதேச தொழிலாளர் நிறுவனம்  (International Labour Organisation(ILO)) கணித்துள்ளது.

👉 கோவிட்-19 தொடர்பான அத்தியாவசிய பொருட்கள் , மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு  ஜி.எஸ்.டி. வரி சலுகை அல்லது விலக்கு வழங்கலாமா என முடிவெடுக்க 8 பேர் கொண்ட  மாநில அமைச்சர்கள் குழுவை  மேகாலயா மாநில முதலமைச்சர் கோன்ராட் கொங்கால் சங்மா ( Conrad Kongkal Sangma) தலைமையில் ஜி.எஸ்.டி.கவுண்சில் (Goods and Services Tax (GST) Council ) அமைத்துள்ளது. 

கூ.தக. : தற்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு 5% ஜி.எஸ்.டி. வரியும்,   கோவிட்-19 மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு 5% ஜி.எஸ்.டி. வரியும் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

👉 நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்துள்ளது.

மேலும், 2021-22-இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 9.5% ஆக இருக்கும்  எனவும் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 2021-22-ல் 5.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  ரிசர்வ் வங்கி எதிர்பார்ப்பதாக ஆளுநர் கூறியுள்ளார்.

முன்பு பொருளாதார வளா்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக மதிப்பீட்டை ஆா்பிஐ குறைத்துள்ளது.

👉 வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, 

இந்திய ரிசா்வ்  வங்கியிடமிருந்து (ஆா்பிஐ) வங்கிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) மாற்றம் செய்யப்படவில்லை எனவும், வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும் எனவும் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

அதேபோல், ரிசா்வ் வங்கியில் மற்ற வங்கிகள் வைத்துள்ள சேமிப்புகளுக்கு ஆா்பிஐ வழங்கும் வட்டியிலும் (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) மாற்றம் செய்யப்படவில்லை. அது 3.35 சதவீதமாகத் தொடரும் என்று ஆா்பிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ரெப்போ வட்டி விகிதம் 1.15 சதவீதம் குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

👉 வருமான வரித் துறை ஆன்லைன் மூலமாக வருமான வரி ரிட்டர்ன்படிவத்தை தாக்கல் செய்வதற்கு  www.incometax.gov.in என்ற புதிய தளத்தை  மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இணையதளத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கைத் தாக்கல் செய்வதற்கான வலைதளத்தையும் இன்ஃபோசிஸ் நிறுவனமே உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

👉 வங்கிகளில் விவசாய நகை கடன் வாங்கி முறையாக திரும்ப செலுத்தியவர்களுக்கு 3 சதவீதம் வட்டி தொகை மானியமாக வழங்கப்படும் என்று நபார்டு வங்கி  அறிவித்துள்ளது.  

👉 கரோனா பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்துறையை புத்துயிரூட்ட ரூ. 3,650 கோடி (50 கோடி டாலா்) திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது. இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள 5,55,000 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.  

அறிவியல் தொழில்நுட்பம்

👉 புயல் ஏற்பட இருப்பதை செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் அதனைக் கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை  காரக்பூா் ஐஐடி விஞ்ஞானிகள் ஜியா ஆல்பா்ட், விஷ்ணுப்பிரியா சாகு மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோா் கண்டறிந்துள்ளனா். இவா்களின் ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் கீழ் உள்ள பருவநிலை மாற்ற திட்டம் உதவியது. 

👉 கார்பன் நானோகுழாய்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புதிய வழிமுறையை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் (MIT - Massachusetts Institute of Technology)  சேர்ந்த பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

👉 ”AmB tablet” என்ற பெயரில், நானோ ஃபைபர் அடிப்படையிலான வாய்வழி உட்கொள்ளக்கூடிய  ( nano-fibre based oral tablets) ஆம்போடெரிசின் பி  (Amphotericin B)    மாத்திரைகளை  ஐ.ஐ.டி. ஐதராபாத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.   கொரோனா நோய் தாக்கத்திற்கு பின்னர் ஏற்படக்கூடிய   பூஞ்சைத் தொற்று குணமாக இந்த மருந்து உதவும்.   மேலும் இந்த கண்டுபிடிப்பை அறிவு சார் சொத்துரிமை கட்டுப்பாடுகளற்றதாக  அறிவித்துள்ளனர். இதன் மூலம் இதனை யார் வேண்டுமானாலும் பெருமளவில் உற்பத்தி செய்ய இயலும். 

👉 ’பிராணா’ (Prana), ’வாயு’ (VaU) மற்றும் ’ஸஸ்தா’ ( Svasta) என்ற பெயரில் மூன்று வகையான  குறைந்த விலையிலான வெண்டிலேட்டர்களையும், ‘ஷ்வாஸ்’ (Shwaas) என்ற பெயரிலான ஆக்சிஜன்  செறிவூட்டிகளையும் (oxygen concentrator)   இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விக்ரம் சரபாய் விண்வெளி மையம் (Vikram Sarabhai Space Centre (VSSC)) உருவாக்கியுள்ளது. 

👉 ’ஈஸ்ட்’ (‘Experimental Advanced Superconducting Tokamak (EAST)’ ) என்ற பெயரில்  செயற்கை சூரியனை (‘Artificial Sun’) சீனா வெற்றிகரமாக சோதித்துள்ளது.  இந்த சோதனையில் 160 மில்லியன் டிகிரி செல்சியஸ்  / 288  மில்லியன் டிகிரி ஃபாரன்ஹீட் அளவிலான  வெப்பத்தை (சூரியனை விட 10 மடங்கு வெப்பத்தை)   உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

👉 ”SPAG9” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கட்டிகளுக்கெதிரான ஆண்டிஜனுக்கு  (எதிர்ப்புத் திறனூட்டி) (Tumour Antigen)  டிரேட் மார்க் (Trademark) வழங்கப்பட்டுள்ளது.  இதனை மத்திய அரசின்  உயிரி தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான தேசிய நோயெதிர்ப்பு ஆராய்ச்சி  நிறுவனம்  (National Institute of Immunology (NII)) மற்றும் சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனை (Cancer Institute, Adyar)   இணைந்து தயாரித்துள்ளன. 

கூ.தக. :இந்தியாவின் முதல் உள்நாட்டு கட்டி ஆன்டிஜென் SPAG9 ஐ 1998 ஆம் ஆண்டில் டாக்டர் அனில் சூரி கண்டுபிடித்தார் . 

புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 8.51 லட்சம் மக்களைக் கொல்கிறது (புற்றுநோய் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை 2020).  10 இந்தியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை எதிர்கொள்வார்கள், மேலும் 15 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 

👉 மும்பை டாடா மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு  (Chimeric Antigen Receptor T-cell (CAR-T) therapy) உயிரிதொழில்நுட்பத்துறை ஆதரவு வழங்கியுள்ளது. 

மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை, மும்பை ஐஐடி குழு ஆகியவை இணைந்து, புற்றுநோய்க்கான  முதல் சிஏஆர்-டி செல்  சிகிச்சையை, எலும்பு மஞ்சை மாற்று மையத்தில் கடந்த , 4 மே 2021ம் தேதி வெற்றிகரமாக மேற்கொண்டன.இது ஒரு வகையான மரபணு சிகிச்சை. இதற்காக சிஏஆர்-டி செல்கள் மும்பை ஐஐடியின் உயிரி அறிவியல் மற்றும் உயிரிபொறியியல் துறையில் (BSBE) உருவாக்கப்பட்டன.

இந்த ஆய்வுப் பணிக்கு உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின்(BIRAC) பேஸ் திட்டத்தின் கீழ் ஒரு பகுதி நிதியுதவி அளிக்கப்படுகிறது.  இந்தக் குழுவினர் தங்கள் ஆய்வு திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது கட்டப் பரிசோதனைகளை மனிதர்களிடம் மேற்கொள்ள, உயிரி தொழில்நுட்ப துறை மற்றும் பிராக் ஆகியவை தேசிய பயோபார்மா திட்டம் மூலம் ரூ.19.15 கோடி நிதியுதவி அளிக்கின்றன. இந்த மரபணு சிகிச்சை இந்தியாவில் முதல் முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

👉 ’ஆர்ட்டெமிஸ் 2’  திட்டம் என்ற பெயரில், நிலவுக்கு   மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் முக்கிய பொறுப்பிற்கு தமிழகத்தின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.  வரும் 2024-ம் ஆண்டுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக ஓரையன் என்ற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.   நாசா மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இதற்கான  ராக்கெட்டை தயாரிக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக போயிங்நிறுவன குழுவின் மேற்பார்வையாளராக  சுபாஷினி அய்யர்  செயல்படுகிறார். 

விருதுகள்

👉 ’ரஞ்சித்சிங் திசாலே’ (Ranjitsinh Disale) என்ற மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்  உலக வங்கியின் 12  கல்வி ஆலோசகர்களில் ஒருவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜீன் 2021 முதல் டிசம்பர் 2024 வரையிலான காலக்கட்டத்தில் அந்த பொறுப்பில் இருப்பார். 

கூ.தக. : ’ரஞ்சித்சிங் திசாலே’ (Ranjitsinh Disale)  ‘உலக ஆசிரியர் விருது 2020’ (Global Teacher Prize 2020) ஐ வென்ற முதல் இந்தியர் ஆவர்.   

👉 ’சர்வதேச புக்கர் பரிசு 2021’ (International Booker Prize 2021) பிரஞ்சு எழுத்தாளர்  டேவிட் டியோப் (David Diop) என்பவருக்கு அவர் எழுதிய  “At Night All Blood Is Black” (‘Frere d’ame’ என்ற பெயரில் பிரஞ்சு மொழியில் எழுதப்பட்டது)  என்ற புத்தகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசைப் பெறும் முதல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நியமனங்கள்

👉 இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக திரு அனூப் சந்திர பாண்டே  9-6-2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் திரு ராஜிவ் குமார் ஆகியோர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமைப்பில் இரண்டாவது தேர்தல் ஆணையராக திரு பாண்டே இணைந்துள்ளார்.

கூ.தக. : இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக   12-4-2021அன்று சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார்.  சுசில் சந்திரா, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ந்தேதியில் இருந்து தேர்தல் ஆணையாளராக பணியாற்றி வருகிறார்.  அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 14ந்தேதி முடிவடைகிறது.

👉 எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக உள்ள எம்.ஆா்.குமாரின் பதவிக்காலத்தை 9 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

👉 உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத் தலைவராக  கென்யா நாட்டைச் சேர்ந்த டாக்டர்.பேட்ரிக் அமோத் (Dr Patrick Amoth) என்பவர் ஒராண்டு காலத்திற்கு  நியமிக்கப்பட்டுள்ளார்.   முன்னதாக இப்பதவியிலிருந்தவர்  இந்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்த்தன் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய தினங்கள்

👉 உலக பெருங்கடல் தினம் (World Oceans Day)  - ஜீன் 8 

👉 உலக மூளைக்கட்டி தினம் (World Brain Tumour Day)  - ஜீன் 8 

👉  உலக உணவு பாதுகாப்பு தினம்  (World Food Safety Day) - ஜீன் 7 | மையக்கருத்து 2021 -   உணவு பாதுகாப்பு, ஒவ்வொருவரின் கடமை ( “Food safety, everyone’s business”)

👉 உலக பூச்சிகள் தினம் (World Pest Day)  - ஜீன் 6 

கூ.தக. :     உலக வேளாண் நிறுவனத்தின் (Food and Agriculture Organisation (FAO)) அறிக்கையில், உலகளவில் 40% வேளாண் உற்பத்தி பூச்சிகளினால் சேதத்திற்குள்ளாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

👉 சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலுக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing) -  ஜீன் 5 

👉 உலக சுற்றுசூழல் தினம் (World Environment Day)  - ஜீன் 5 | மையக்கருத்து 2021 -  (மறுபடி கற்பனை செய், மறுபடி உருவாக்கு, மீண்டும் உருவாக்கு’ (Reimagine. Recreate.Restore) 

👉 சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலுக்கு எதிரான போராட்டத்திற்கான சர்வதேச தினம் (International Day for the Fight against Illegal, Unreported and Unregulated Fishing) -  ஜீன் 5 

👉 உலக சுற்றுசூழல் தினம் (World Environment Day)  - ஜீன் 5 | மையக்கருத்து 2021 -  (மறுபடி கற்பனை செய், மறுபடி உருவாக்கு, மீண்டும் உருவாக்கு’ (Reimagine. Recreate.Restore) 

விளையாட்டு

👉 மகளிர் 10,000 மீ. ஓட்டத்தில் எதியோப்பியாவின் லெட்சென்பெட் கிடி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர், நெதர்லாந்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் 10,000 மீ. ஓட்டத்தில் லெட்சென்பெட் கிடி மகளிர் 10,000 மீ. ஓட்டத்தை 29:01.03 நிமிடங்களில் கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

👉 சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் உலக தரவரிசை 2021 (International Hockey Federation (FIH) world rankings 2021) -ல்  இந்தியாவின் ஆண்கள் அணி 4 வது இடத்தையும் பெண்கள் அணி 9வது இடத்தையும் பெற்றுள்ளன.  ஆண்கள் அணிகளில்  உலகளவில் முதலிடத்தை பெல்ஜியம் அணியும், பெண்கள் அணிகளில் உலகளவில் முதலிடத்தை நெதர்லாந்து அணியும் பெற்றுள்ளன. 

👉 சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் பணியகத்தின்  ( International Swimming Federation (FINA) Bureau) உறுப்பினராக  (2021-2025 ஆண்டுகளுக்கு) வீரேந்திர நானாவதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

👉 மறைந்த திரு. அருண் ஜெட்லி நினைவாக அமைக்கப்படும், அருண் ஜெட்லி  பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள் வளாகம்  (Arun Jaitley Recreation cum Sports Complexes) ஜம்மு ஹிராநகர் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. அகமதாபாத், கொல்கத்தா ஈடன் கார்டன் ஆகிய விளையாட்டு வளாகங்களுக்கு  அடுத்ததாக மிகப் பெரிய மனமகிழ் மற்றும் விளையாட்டு வளாகங்களில் ஒன்றாக இது இருக்கும்.மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்த மையம் 37 ஏக்கர் நிலத்தில் கட்டப்படுகிறது.

புத்தகங்கள்

👉 “Skill It, Kill It” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - ரோணி ஸ்க்ரீவாலா (Ronnie Screwvala) 

Post a Comment

0 Comments