Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உலகின் முதல் டி.என்.ஏ- வை அடிப்படையாகக் கொண்ட கோவிட்-19 தடுப்பூசி - “ஜைகோவ்-டி” ( 'ZyCov-D' )

 “ஜைகோவ்-டி” ( 'ZyCov-D' ) என்ற பெயரில் உலகின் முதல் டி.என்.ஏ- வை அடிப்படையாகக் கொண்ட கோவிட்-19 தடுப்பூசியை  (DNA-based Covid-19 vaccine) ஆமதாபாத்தை (குஜராத்) தலைமையிடமாகக் கொண்ட ‘ஜைடஸ் கேடிலா’ ( Zydus Cadila ) நிறுவனம் தயாரித்துள்ளது. 

ஜைகோவ்-டி (ZyCoV-D)   கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு ஜைடஸ் கெடிலா நிறுவனம்  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்  மனு  அளித்துள்ளது. ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 5-வது தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வரும். 

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெருமையும், முதல் டி.என்.ஐ. வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்கு கிடைக்கும். இந்த தடுப்பூசி, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத்துறையின் கீழ்வரும், உயிர்தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்கு பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot