சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் அருகே கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக 3 அடுக்கு உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு, மண் பானை, குவளை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, உழவுக் கருவி, கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், மண் குவளைகள், சுடுமண், கண்ணாடி பாசிகள் கண்டறிப்பட்டன. மேலும் கொந்தகையில் 7-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
பண்டைய காலத்திலேயே கீழடியில் வாழ்ந்த தமிழர்கள் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது போன்ற உறை கிணறுகள் முக்கிய ஆதாரமாக கிடைத்து வருகின்றன. ஆனால், 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. கடந்த ஆண்டு நடந்த 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 38 அடுக்குகளை கொண்ட பெரிய உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.